சென்ற பதிவின் தொடர்ச்சி
2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி
நிச்சயம் இல்லை.
ஏதேனும் ஒரு பெண் வேட்பாளர் இருக்க கூடிய சாத்தியம் மட்டுமே இருக்க முடியும். சாராவிற்கு கிடைத்தது எதிர்பார்க்காத பரிசு, ஹிலரியின் ஆதரவு வாங்குகளை பெற மெக்கெயின் போட்ட ஒரு கணக்கு.
இங்கே அரசுத்துறையில் பெண் அதிபர்கள் வருவது இன்னமும் பரவல் ஆகவில்லை. அப்படி ஆகும் என்றும் எனக்கு தோன்றவில்லை. என்னை பொருத்தவரை அதிபராக நிர்வாக திறமைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் அல்லாது genderக்கு அல்ல.
எனக்கு சாராபேலின் பல கொள்கைகள் உடன்பாடில்லை, பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ஆதரிக்க முடியாது.
3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?
தற்போதைய ஆட்சியை அதிகம் குறை சொல்லாமல் அதிலும் சமீபத்திய பொருளாதார சரிவுக்கிடையில் சமாளிக்கும் முதிர்ச்சி. முட்டை ஓட்டின் மேல் நடப்பது போன்ற கவனத்துடன் கையாளும் நகைச்சுவை கூடிய பிரச்சாரம்.
4. உதட்டுச்சாயம், பன்றி மொழியைப் பரவலாக இரு ஆண் ஜனாதிபதி வேட்பாளரும் பயன்படுத்துகிறார்களே. சாரா பேலினையும் ஹில்லரி க்ளின்டனையும் இவர்கள் குறிப்பிடவில்லை என்றாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு பொருத்தமான அடைமொழி பயன்படுத்தி இருக்கலாமோ? முகஞ்சுளிக்க வைக்கிறதா? வேறு பேச்சுகள் ஏதாவது அதிர்ச்சி அடைய வைத்ததா?
அரசியல் என்றில்லை, பொதுவாகவே அலுவலகங்களில் கூட சில சமயங்களில் (குறிப்பாக பெண்கள் தலை பொறுப்பேற்கும்) இது போன்ற பிரயோகங்கள் சகஜமாக பயன்படுத்தப்படுகின்றன. முன்போல அல்லாமல், பெண்களும் பேசக்கேட்பது சகஜம், இங்கே (நியுஜெர்சி) நகரசபை கூட்டங்களில் சில சமயங்களில் இன்னமும் கேவலமாக பேசுவது மட்டும் இல்லாமல்,கைகலப்பில் எல்லாம் முடிந்திருக்கிறது.
ஆகக்கூடி பொதுவாழ்க்கை வருபவர்கள் ஆணானாலும் பெண்னானாலும் தடித்த தோலுடனான வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இதில் முகம் சுளிக்க வைக்கவோ சினம் கொள்லவோ எதுவும் இல்லை. When you know it’s a pissing match, be ready with an umbrella is a common phrase!!
5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?
தொடரும்…
இங்கே குறிப்பிட மறந்தது, நிறைய பெண் அரசியல்வாதிகள் county, Municipality க்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சதவிகிதம் அவர்களுக்கு கிடைக்கும் பொறுப்பு நிதி, கல்வி, மற்றும் உடல்நலம் தவிர்த்த சில கமிட்டிகளே. காண்டலீனா, கிரிஸ்டி, ஹிலரி போன்ற முக்கியத்துவம் பெற்றவர்கள் வெகு சிலரே.
பொதுவாக நிறுவனங்களிலேயும் கூட பெருவாரியாக பெண்களுக்கு நிர்வாகப்பொறுப்பு கிடைத்தால், முக்கியம் அல்லாத திட்டங்களே கிடைக்கும். இதுகுறித்த புள்ளிவிவரங்களோடான என் பழைய பதிவொன்று கிடைத்தால் தருகிறேன். அமெரிக்காவில் பெண் தலைவர் என்பது நடவாத காரியம்.
//அமெரிக்காவில் பெண் தலைவர் என்பது நடவாத காரியம்.//
அப்படி ஒரேயடியாக மட்டையடி அடிக்க முடியுமா என்று தெரியவில்லை. உங்கள் புள்ளிவிவரங்கள் பாத்தால் மேலும் தெளிவு பெறலாம்.
இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஒன்றும் பெண்கள் நிலைமை பெரிதாக முன்னேற்றம் அடையவில்லை. ஆனாலும் மார்கிரெட் தாட்சரும், இந்திரா காந்தியும் (தற்போது சோனியா காந்தி) வெற்றி பெறத்தான் செய்தார்கள்.
நிச்சயமாக வரும் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் பங்கு அதிகமாக இருக்கப்போகிறது. வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு குடிபுகுவது அவரவர் தேர்தல் பிரச்சாரத்தை கையாளுவதைப் பொறுத்தது என்றுதான் தோன்றுகிறது. திறமைக்கு கூட பெரிதாக மதிப்பு இருப்பதாக தெரியவில்லை.
Take for example Massachusetts. All the Governors use the Lt. Gov as an adornment and they never get elected as Governor eventually.
Let it be the case prior election Shannon O’Brian (democrat) or the recent one GOP’s Kerry Healey… This prejudice cuts across parties.
//This prejudice cuts across parties.//
Dont be prejudiced about the prejudices 🙂
ஸ்ரீதர்
இந்தியாவில் இந்திராவோ, ஜெயலலிதாவோ வெற்றி பெற்றார்கள் என்றால் ஒருவருக்கு நேருவின் ஆதரவாளர்கள் இன்னொருவருக்கு எம்ஜியார். இந்திரா நேருவின் மகளாக இல்லாதிருந்தால் , காமராசரின் ஆதரவு இல்லாதிருந்தால் பிரதமாராக வெற்றி பெற்றிருப்பார் என்று சொல்வதற்கில்லை.
அமெரிக்க அரசியல் பெருவாரியானவர்கள் நினைப்பது போல நம் ஊரைவிட மேலானது இல்லை. இங்கேயும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதும் நாள்காலிகள் வீசப்படுவதும், குண்டர்கள் கொண்டு காலை உடைப்பதும் இன்ன பிறவும் உண்டு. ஹெதர் ஹோவர்டை உடல்நல கமிஷனாராக்கவே நியுஜெர்சியில் நிறைய அரசியல் இருந்தது. காண்டலிசா ரைஸ் பற்றியே பேச்செதுவும் இல்லை, பேலின் திடீரென உதவி தலைவராக்க பட என்ன காரணம் இருக்க கூடும் என்று நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்கள் பெண் தலைவரை கொண்டிருக்கின்றன?
//அமெரிக்க அரசியல் பெருவாரியானவர்கள் நினைப்பது போல நம் ஊரைவிட மேலானது இல்லை.//
நான் நிச்சயமாக அப்படி நினைப்பவன் இல்லை.
//இந்திரா நேருவின் மகளாக இல்லாதிருந்தால் , காமராசரின் ஆதரவு இல்லாதிருந்தால் பிரதமாராக வெற்றி பெற்றிருப்பார் என்று சொல்வதற்கில்லை//
நிச்சயமான உண்மை. அதே சமயம் மொரார்ஜி தேசாய் ‘சோக்ரி சுன்தி பீ நஹி ரே’ என்று பொதுவிலேயே இந்திராவைப் பற்றி சொன்னதும் உண்டு. 🙂
காமராஜரும் சும்மா ஆதரவு கொடுத்துவிடவில்லையே. நேருவின் legacy-ஐ தொடர முடியும் என்று நம்பினார். இந்திராவின் முதல் பதவிக்காலம் பல்வேறு தவறுகளால் (blunders) நிறைந்ததுதான். ஆனால் அவருடைய பங்களாதேஷ் போரின்போது எடுத்த முடிவுகளும் சரண்சிங்கை உபயோகித்து எதிர்தரப்பை சிதறடித்ததும் அவருடைய அனுபவ முதிர்ச்சி. நிற்க!
பேலின் போன்ற தேர்வுகள் இனி தவிர்க்க முடியாதவையே. ஆட்கள் மாறலாம். முன்னிறுத்தப்படும் சிலர் பாதியில் காணாமல் போகலாம். ஆனால் திறமையான பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். 2012-ல் நிச்சயம் ஒரு பெண் வேட்பாளராவது இருப்பார் என்றுதான் தோன்றுகிறது. Atleast at the primary level.
ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக பரிதாபப் படுவதும், முன்னேறிய பெண்களைப் பார்த்து ‘எப்படி மேல் வந்திருப்பான்னு தெரியாதா என்ன’ என்று புறம் பேசுவதும், ஒரு பெண்ணின் கீழ் வேலை பார்ப்பதா என்று ஈகோ பார்ப்பதும், பெண்களுக்கு உதவினால் ‘வேறு பலன்’ உண்டா என்று வக்கிரமாக சிந்திப்பதும் எல்லா நாட்டிலும் நடப்பதுதான்.
சுருக்கமாக சொல்லப் போனால் ‘ஆம்பிளை புத்தி’ :-))
Pingback: அடுத்த அதிபருக்கு Action Plan - பத்மா அர்விந்த் « US President 08
Gender and Race: The Battle Rages Beneath the Surface – Harvard Business Online's HBR Editors' Blog: Why do women leaders provoke more anxiety than men — black or white?