பத்து நாள்களும் இருநூறு பதிவுகளும்


நவம்பர் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமையோடு அமெரிக்க தேர்தல் மேளா இனிதே முடிகிறது. இன்னும் பத்து நாள்கள் கூட இல்லை.

இதுவரை இந்த வலைப்பதிவும் வலைவிவரங்களும்:

இடுகைகள்: 200
பகுப்புகள்: 36
குறிச்சொற்கள்: 757
மறுமொழிகள்: 594

மொத்தப் பார்வை: 21,160
மிக அதிக வருகையாளர் வந்த தினம்: நேற்று, அக். 24
எண்ணிக்கை: 879

வருகையாளர்களுக்கும் விஐபி விருந்தினர்களுக்கும் நன்றி!

9 responses to “பத்து நாள்களும் இருநூறு பதிவுகளும்

  1. பாலா
    உங்களின் ஆர்வமும் இடைவிடாமல் பதியும், பல செய்திகளை சேகரிக்கும் அக்கறைக்கும் பாராட்டுக்கள்

  2. பாபா, நீங்க பார்வையாளரா இருக்கும் போதே இப்படின்னா நீங்க போட்டியில் இருந்தா…. 🙂

  3. நிறையச் செய்திகளை இந்தப் பதிவு மூலமே அறிந்து கொண்டுள்ளேன். தமிழில் ஒரு சிறப்புப் பதிவை ஏற்படுத்தி இச்செய்திகளை மிகச் சிரத்தையெடுத்து உடனுடக்குடன் அளித்து வந்த பாபாவின் உழைப்பு பாராட்டுக்குரியது.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

  4. கொத்ஸ் __/\__ 🙂

    சங்கரபாண்டி, ஊக்க வார்த்தைகளுக்கு நன்றிகள் பல. இதைத் தொடக்கி கொடுத்து உற்சாகமும் ஊட்டிய வெங்கட்டுக்கும் பெரும்பங்கு உண்டு

  5. பாபா: பிறரை வழிமொழிகிறேன். பதிவு கிங், ஸ்னாப்ஜட்ஜ் என்று உலகமே உங்களை அறிந்தாலும், இந்தப் பதிவில், மேட்டரும் சேர்த்துப் போட்டு விளையாடியுள்ளீர்கள்.

    இந்த அளவுக்குத் தரமாக அடுத்து வரப்போகும் இந்தியத் தேர்தல் பற்றியும் செய்தால் சந்தோஷப்படுவேன்.

    இந்தப் பதிவுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருந்ததுபோல இல்லாமல், அந்தப் பதிவுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

  6. பத்ரி, நன்றி __/\__

    —-இந்தப் பதிவில், மேட்டரும் சேர்த்துப் போட்டு விளையாடியுள்ளீர்கள்.—-

    😛

    இந்தப் பதிவும் பெரும்பாலும் வெட்டி, (மொழிபெயர்த்து) ஒட்டல் கலையிலேயே ஓடியது.

    மொத்தமாக கருத்தாக பொழிந்திருந்தால், வாசகர் ஈடுபாடும் குறைந்திருக்கும்; எழுதுபவர்களுக்கும் திரும்பத் திரும்ப ஒரே மேடைப் பேச்சு பேசுவது போல் ஆகியிருக்கலாம்.

  7. ஒத்த ஆளா நின்னு ஆடி இருக்கீங்க. நான் எல்லாம் பதியாததுக்குக் காரணம் புதரகத்தோட வரலாறு புவியியல் தெரியாமத்தான். ஆனாலும் பேட்டிகள் அருமை. “America for Dummies”ன்னு படிக்கிற என்னை மாதிரி மக்களுக்கு ரொம்ப பயனா இருந்துச்சுங்க.

  8. இளா, நன்றி 🙂

    —-ஒத்த ஆளா நின்னு ஆடி இருக்கீங்க.—-

    இந்தப் பதிவில் சொந்தமாக நான் எழுதியது 50க்கும் குறைவாக இருக்கும்.

    பிறர் எழுதியது, விருந்தினர் பதிவுகள் நூற்று சொச்சம் என்றால், ஒளிப்படங்களும் ஊடக செய்திகளும் மிச்சத்தை ரொப்பும் 😀

Padma arvind -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.