Ethanol: alternative fuel – Oil & energy TheKa


பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான்

முந்தைய பகுதி 1 | இரண்டு

3. எத்தனால்: உணவுப்பண்டங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இது சுட்டப்படுகிறது. இது கோளாறான கோட்பாடுதானா? இதன் பின்னும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்குத்தான் உங்கள் ஆதரவா?

சில மாதங்களுக்கு முன்னால் பூதகரமாக உணவு தட்டுப்பாடு சில நாடுகளில் ஏற்பட்டதை மறப்பதற்கில்லை. ஒபாமாவே இந்த எத்தனால் எரிபொருள் தயாரிப்பை தனது மாநிலத்தில் அதிகமாக சோளம் விளைகிறது என்கிற மற்றொரு காரணத்திற்காகவும்தான் இதனை ஆதரிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பில் அதிக ஆர்வம் குடியரசுக் கட்சிக்காரர்களை விட ஜனநாயக கட்சிக்காரர்களுக்கு அதிகமே உண்டு என்பதில் இந்த அலாஸ்கா எண்ணெய் தோண்டுதலுக்கு எதிர்ப்பு பல வருடங்களாக ஜனநாயக கட்சி தெரிவித்து வருவதிலையே தெரிய வரும். இந் நிலையில், ஆரம்ப கட்டத்தில் பெருமளவில் எத்தனால் ஊக்குவிப்பு இது போன்ற தானியங்களை வைத்து நிகழ்த்துவதாக அமைந்தாலும் போகப் போக மாற்றுத் தாவர இனங்களைக் கொண்டு உற்பத்திக்க முடியும், உணவுக்கு பயன்படும் தானியங்களை பயன்படுத்தி எத்தனால் தயாரிப்பிலிருந்து விலகி.

ப்ரேசில் ஒரு காலத்தில் இது போன்று ஃபாசில் ஃப்யோலை நம்பித்தான் காலத்தை தள்ளிக் கொண்டிருந்தது, ஆனால், இன்றைய நிலையோ முழுக்க முழுக்க எத்தனால் எரிபொருளில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவே தோணச் செய்கிறது. தன் நாட்டிற்கு எஞ்சிய விவசாய நிலங்களை உணவு உற்பத்திக்கு பயன்படுத்தியது போக எஞ்சியுள்ளவற்றில் முழுக்கவுமே கரும்பு பயிரிட்டு தன் நாட்டிற்கு தேவையான எரி பொருளை உற்பத்தித்து கொள்கிறது இன்று.

இன்று உடனடியாக வேறு எது போன்ற மாற்று எரிபொருளும் தனது பார்வைக்கு எட்டாத வண்ணம் இருக்கும் பொழுது, இது போன்ற கொஞ்சமே உணவு பயன் பாட்டிற்கு இருக்கும் பண்டங்களை சுழற்சி செய்து இயற்கையுடன் சற்றே ஒத்து இருப்பது உணவு பற்றாக்குறையைத் தாண்டி நலம் பயக்கலாம்.

இருப்பினும் சாப்பாட்டிற்கு பயன் படும் உணவு பொருட்களை தட்டுப்பாட்டு நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டு மும்முரமாக எத்தனால் தயாரிப்பை முடிக்கி விடுவதில் எனக்கு அவ்வளவு உவப்பு இல்லை. இருந்தாலும், கடலில் தோண்டுதல், கையே வைக்கக் கூடாத ஆர்டிக், அண்டார்டிக் போன்ற கண்டங்களில் எண்ணெய்க்காக தோண்டுவது என்பதெல்லாம் ஒட்டு மொத்த உலத்தின் இயற்கை சமநிலையை விரைந்து குழைப்பதாகத்தான் அமையும்.

ஆக மொத்தத்தில், முரட்டுத்தனமான கடல் மற்றும் அலாஸ்கா தோண்டுதலைக் முடிக்கி விடுவதைக்காட்டிலும் மாற்று எரிசக்தி கண்டுபிடிப்பில் ஓபாமா அதிக முதலீடு பண்ணுவேன் என்று கூறுவது நல்ல விசயமே.


2 responses to “Ethanol: alternative fuel – Oil & energy TheKa

  1. //கையே வைக்கக் கூடாத ஆர்டிக், அண்டார்டிக் போன்ற கண்டங்களில் எண்ணெய்க்காக தோண்டுவது//

    கையே வைக்கக் கூடாத – அப்படி எதாவது இருக்கிறதா என்ன? அதனால் என்ன அபாயம்? அந்த அபாயத்தை தவிர்த்து நமக்கு தேவையான எரிபொருளை உருவாக்கிக் கொள்ள முடியாதா?

  2. ஆர்க்டிக், அன்டார்க்டிக் யாருக்கு சொந்தம்? கனடாவின் எல்லை எங்கே ஆரம்பிக்கிறது? ருசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மீண்டும் பனிப் போர் என்றில்லாமல், நிஜப் போருக்கு கூட இது இட்டு செல்லும்.

    அங்கே போய் நேரடியாக நச்சை கக்கி, புவிவெப்பத்தை அதிரடியாக ஊக்குவிப்பதால், Waterworld ஆவதும் துரிதப்படும்.

    ஏன் Drill baby Drillஇலிலேயே குறியாக இருக்கிறார்கள்?

    என்.எஃப்.எல் டைரக்ட் டிவியில் வந்தால் அதற்காக டிஷ் வாங்கிறோம். சன் டிவிக்கு இன்னொரு டிஷ். பக்கத்தில் சூரிய சக்திக்கு டிஷ் வைக்க வேண்டும்.

    65+ வேகத்தில் செல்ல பேட்டரி கார் தயார். 2010ல் இருந்து அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சட்டமாக்கினால் என்னவாகும்?

    ப்ளாஸ்டிக் போன்ற பிற அயிட்டங்களுக்கு பெட்ரோல் மட்டும்தான் தேவையா?

    இணையம் வந்ததால் புத்தம்புதிய நிறுவனங்களும் சந்தை எழுச்சியும் வந்தது. அடுத்த ‘இணையம்’ எது?

    ஒபாமாவின் எண்ணம் ‘சக்தி’. மாற்று சக்தி.

    பொதுஜனத்திற்கும் சக்தி கொடுத்த வலை போல், இயற்கை சக்தியை வைத்து சரிந்த பொருளாதாரத்திற்கு க்ளூகோஸ் ஏற்றும் திட்டம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.