அமெரிக்காவின் தேர்தல் சுவாரசியங்கள்


எல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்

“You seem like a nice enough guy. Why do you want to go into something dirty and nasty like politics”

இங்கு தேர்தல் பிரச்சார நேரத்தில் தனி மனித தாக்குதல், முன்பு கூறிய கருத்தை ஆதரவின்மையால் மாற்றிக் கொண்டது என நிறைய கூத்துக்கள் நடந்தேறின. குறிப்பிடதக்க விடயமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமை வழங்கலாம் என ஹிலாரி கூறினார். அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் தான் அவ்வாறு கூற வில்லை என்று உடனே மாற்றிக் கொண்டார். ராம்னி அதை விட காமெடி. அவரது எந்தக் கருத்து மாறாத கருத்து என்று ஆராய்ந்தால் எதுவும் கிடைக்காது.

இந்தியாவில் சாதியும், மதமும் தேர்தலில் முக்கியம் என்றால் அமெரிக்காவில் மத நம்பிக்கைகளும், இனரீதியான வாக்களிப்பு முறையையும் பெரும்பாலும் காணக்கூடியதாக உள்ளது.

குடியரசுக் கட்சியில் மத ரீதியான நம்பிக்கைகள் முக்கிய தேர்தல் பிரச்சனையாக கூட உள்ளது. ஹக்கூபீக்கு அதிகளவில் evalengical கிறுத்துவர்கள் வாக்களிக்கிறார்கள். ராம்னீ mormon மத நம்பிக்கையை கொண்டவர் என்பதால் அவர்களின் வாக்கு ராம்னீக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக ஹக்கூபீ அயோவா (Iowa) தேர்தலில் வெற்றி பெற்றார். ராம்னீ நேவேடா (Nevada) தேர்தலில் வெற்றி பெற்றார். அது போல அதிகளவில் Conservatives கொண்ட தென் மாநிலங்களில் ஹக்கூபீ குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகிறார். மெக்கெயின் தடுமாறுகிறார்.

ஒபாமாவிற்கு பெருமளவில் கறுப்பர்கள் வாக்களிக்கிறார்கள். தென் கரோலினாவில் ஒபாமா சுமார் 80% கறுப்பர்களின் வாக்குகளை பெற்றார். கடந்த 2004 முன்னோட்ட தேர்தலில் அங்கு வெற்றி பெற்ற ஜான் எட்வேர்ட்ஸ் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. கறுப்பர்களின் மத்தியில் பெரும் ஆதரவு கொண்டிருந்த ஹிலாரி கிளிண்டன் கறுப்பர்கள் மத்தியில் கொண்டிருந்த செல்வாக்கினை இழந்தார். ஒபாமாவின் தோல் நிறம் கறுப்பர்களின் வாக்குகளை பெற உதவியது. என்றாலும் பில் கிளிண்டனின் “நாக்கும்” ஒபாமாவிற்கு உதவியது 🙂 . பில் கிளிண்டன் கொஞ்சம் பேச்சை குறைத்திருக்கலாம். தோல்விக்கு பிறகு அதைத் தான் செய்தார்.

35வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக ஒபாமா இருக்கிறார். இன ரீதியான பாகுபாடுகள் கடந்து ஒபாமா பின் இளைஞர்கள் அணிவகுப்பது தான் ஒபாமாவை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாடுகள் அதிகளவில் இல்லாதது ஒரு முக்கிய காரணம்.

ஹிலாரி கிளிண்டன் வருவாய் குறைவாக உள்ள ஜனநாயக்கட்சியினரின் வாக்குகளை அதிகளவில் பெறுகிறார். தவிரவும் பெண்கள் வாக்குகள் கிளிண்டனுக்கு கிடைக்கிறது. ஆனால் கறுப்பர் இன பெண்கள் ஒபாமா பக்கம் சாய தொடங்கி விட்டனர். அது போல 35வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஒபாமாவின் பக்கம் மாறத் தொடங்கி இருக்கின்றனர். இது தான் கிளிண்டனுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. லேட்டினோ அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு ஆதரவாக உள்ளனர்.

தென் கரோலினா தேர்தல் உச்சகட்டத்தில் ஹிலாரிக்கும், ஒபாமாவிற்கு ஏற்பட்ட உச்சகட்ட மோதல் நம்மூர் கலைஞர்-ஜெயலலிதா வாக்குவாதம் என்ற அளவிற்கு சென்றது. ஒபாமா ஹிலாரிக்கு கைகொடுக்காமால் முகம் திரும்பிக் கொண்டு சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மாற்று அரசியலை தான் கொண்டு வரப்போவதாக கூறிய ஒபாமாவின் மாற்று அரசியல் இது தானா என்ற கேள்விகள் எழுந்தன.

obama snubs clinton

ஆனால் கலிபோர்னியா விவாதம் ஓரளவிற்கு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தது. இருவரும் நட்புறவாக உரையாடியது ஜனநாயக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் அளித்தது.

calijpeg.jpg

தற்போதைய முன்னோட்ட தேர்தலை விட இறுதி தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது தான் முக்கியம். குடியரசு கட்சியில் மெக்கெயின் தான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் ஜனநாயக் கட்சியில் இன்னமும் இழுபறியாக உள்ளது அமெரிக்க அரசியலில் குடியரசு கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றம் வேண்டும் என நினைக்கும் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிலாரியா, ஒபாமாவா என்பதை விட நவம்பர் தேர்தலில் மெக்கெய்னை யார் தோற்கடிப்பார்களோ அவர்களே ஜனநாயக கட்சியில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் ஒபாமா தான் மெக்கெய்னை தோற்கடிக்க கூடும். ஹிலாரி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்களில் தோல்வி அடைந்து வீட்டிற்கு செல்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது. ஆனால் பிரச்சனை ஆகஸ்ட் வரை கூட முடிவுக்கு வராது போல் தான் தெரிகிறது.

7 responses to “அமெரிக்காவின் தேர்தல் சுவாரசியங்கள்

  1. இந்த இழுபறி நல்லதுக்கே என்றுதான் தோன்றுகிறது. சென்ற முறை கெர்ரி வெகு விரைவிலேயே முடிவானதால், குடியரசு கட்சியினால், அவதூறுகளை பரப்ப நிறைய நேரம் கிடைத்தது. தற்போதைய நிலை, மெகெயினுக்கு எவரைத் தாக்குவது என்று குழப்பமும் விளைவிக்கும்.

    ஒபாமாவை விமர்சித்தால் ஹில்லாரி சந்தோஷப்படுவார்; அதையும் மீறி ஜனநாயக வேட்பாலர் ஒருவர் மீதான எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துப்போனால், அவருக்கு பதிலாக இன்னொருவர் தயாராக நின்று கொண்டிருப்பார்.

    மேலும் புத்தம்புதுசாக புத்தாடை போன்ற மணம் இரண்டு மாதங்களுக்குத்தான் என்னும்போது, ஒபாமா – க்ளின்டன் இடையிலேயே செல்லப் பிணக்குகள் தொடரட்டும். கட்டாங்கடைசியில், ஒருவர் உப ஜனாதிபதியாக மாறினால், இரட்டைக் குழல் துப்பாக்கியாகும் வாய்ப்பும் கிடைக்கும்.
    ———————————————————————

    —ராம்னி அதை விட காமெடி. அவரது எந்தக் கருத்து மாறாத கருத்து என்று ஆராய்ந்தால் எதுவும் கிடைக்காது.—

    இந்தக் கூத்தையும் மீறி, தீவிர வலதுசாரி ஊடகங்கள் (நேஷனல் ரிவ்யூ போன்றவை) அவருக்கு ஆதரவளித்து, முன்னிறுத்தின. தன்னுடைய வாழ்விலேயே இரண்டே இரண்டு முறை மட்டுமே துப்பாக்கி ஏந்தியவர், ‘எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் வேட்டையாடுதல் முக்கியமானது’ என்று அவர்களுக்கு விருப்பமானதைப் பேச முயற்சித்தது; இரு வருடம் முன்பு ஆளுநராக போட்டியிட்டபோது முன்வைத்த/நடத்திய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானதை தடாலடியாக மாற்றிக் கொண்டது…

    எனினும், இவையெல்லாம் அவர் தோற்றதற்கு காரணமில்லை. தற்போது ஹில்லரி இறங்கிமுகமாக இருப்பதற்கு சொல்லப்படும் ‘மக்களின் இதயத்தைத் தொடுமாறு அணுக்கமாக இல்லாதவர்’ என்பதுதான் பிரச்சினை.
    ————————————————————————
    —ஹிலாரி கிளிண்டன் வருவாய் குறைவாக உள்ள ஜனநாயக்கட்சியினரின் வாக்குகளை அதிகளவில் பெறுகிறார்.—

    குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது; வேலையில்லாதவர்களுக்கான பஞ்சப்படியை பாதுகாத்து நிதி ஒதுக்கலை கூட்டுவது; போன்ற திட்டவட்டமான அறிவிப்புகளும் சென்ற பில்(லரி) ஆட்சியும் கவர்ந்திழுக்கிறது?

  2. தனிப்பட்ட வகையில் குடியரசு கட்சியின் சார்பாக ராம்னி வெற்றி பெற வேண்டும் என நான் நினைத்தேன். அப்பொழுது தான் ஜனநாயக கட்சி கொஞ்சம் சுலபமாக வெற்றி பெற முடியும் என்ற ஆசை தான் 🙂

    ஹிலாரி வெற்றி பெற்றால் ஒபாமா துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒபாமா வெற்றி பெற்றால் ஹிலாரியை துணை ஜனாதிபதியாக விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். காரணம் “மாற்றம்” தேவை என்று கூறி விட்டு ஹிலாரியை கொண்டு வந்தால் எப்படி எடுபடும் ? எட்வேர்ட்ஸ் துணை ஜனாதிபதியாக கூடுமோ என்னவோ…

  3. //தென் கரோலினா தேர்தல் உச்சகட்டத்தில் ஹிலாரிக்கும், ஒபாமாவிற்கு ஏற்பட்ட உச்சகட்ட மோதல் நம்மூர் கலைஞர்-ஜெயலலிதா வாக்குவாதம் என்ற அளவிற்கு சென்றது//

    சசி, என்ன இருந்தாலும் ஹிலாரி, ஒபாமாவை “கலைஞர்-ஜெயலலிதா” அளவுக்கு தரம் தாழ்திருத்திருக்க கூடாது… 😉

    //இந்த இழுபறி நல்லதுக்கே என்றுதான் தோன்றுகிறது. சென்ற முறை கெர்ரி வெகு விரைவிலேயே முடிவானதால், குடியரசு கட்சியினால், அவதூறுகளை பரப்ப நிறைய நேரம் கிடைத்தது. தற்போதைய நிலை, மெகெயினுக்கு எவரைத் தாக்குவது என்று குழப்பமும் விளைவிக்கும்.//

    பாலாஜி, இவுங்க சண்டையில மறுபடியும் “புஷ் ஆட்சி” மூன்றாவது முறை வந்திரப் போகுது…. 😉

  4. Whether Democrats or Republicans, one thing is certain. The next President is going to be more centrist or more of Democrat agenda.

    As a matter of fact, George McCain’s position and voting records are more left and that is the key reason, the Conservatives don’t like him at all. He is more of a ‘democrat’ in Republican party. He was against tax cut, pro immigration, pro choice etc., The conservatives are ganging against him only to FORCE him to choose a conservative VP. That way the conservatives we at least have our “own” guy to keep a tab on McCain.

    Two things are getting intersting— One you know all- who is going to Democrat nominee and the seond is VP choic e of republicans.

    McCain has two options—–

    He may choose a conservative (some one like Huccabe) to keep the republican party united.
    or
    He may choose a Democrat (some one like Joe Libermann) and get into Democrat votes [and at least the state of Connecticut.]. In this case the he may think Conservatives have no choice but to vote for him.

    of course the third choice is a centrist like the Florida governor and get at least the battle ground state of Florida. This will not anger the conservatives but they will be unhappy.

    What would be my thinking if i were to step into Mccain
    s shoes?–perhaps the third choice. [This will help him consolidate the Hispanic votes also. The one negative here is that both the President and VP candidates are from South. [ the only time when both southerners won — Bill Clinto’s time— both Clinton and Gore are southerners from two small states and beat against all the odds]….

  5. தென்றல்,

    கலைஞர்-ஜெயலலிதாவுடன் ஒப்பிடவில்லை. ஆனால் தனிமனித தாக்குதல் அந்த அளவுக்கு சென்றது.

    விவாத மேடையிலேயே இருவரும் காரசாரமாக விவாதித்து கொண்டது, இத்தகைய அரசியலை தான் நான் வெறுக்கிறேன் என ஒபாமா கூறியது போன்றவற்றை முன்வைத்தே இவ்வாறு கூறினேன்.

    தவிரவும் ஒபாமா போதை மருந்துகளை சிறு வயதில் பயன்படுத்தியதை கிளிண்டன் அணியைச் சார்ந்த BET தொலைக்காட்சி உரிமையாளர் பாப் ஜான்சன் ஒரு மேடையில் விமர்சித்தது போன்றவையெல்லாம் மிக உச்சகட்ட தனிமனித தாக்குதல் என்றே நான் நினைக்கிறேன்.

  6. இப்போழுது கிளிண்டனின் “டாப்” TOP priority “TOP” தான். அதாவது டெக்ஸாஸ்-T, ஒகையோ O, பென்சில்வேனியா P தான். அங்குள்ள தற்போதைய நிலவரம் பின்வருமாறு:

    அவருக்கு ஒரு நல்ல செய்தி:

    டெக்ஸாஸ்வில் பத்து பாயிண்ட் ஒபாமை விட அதிகம்.
    ஒகையோவில் பதினேழு சதவிகதம் அதிகம்.
    பென்சில்வேனியாவில் பதினாறு சதவிகதம் அதிகம்.

    இதுபோன்ற latest opinion poll தகவல்களுகு நீங்கள் செல்ல வேண்டிய இடம்:
    http://www.realclearpolitics.com/.
    This site collects all the opinion polls and present the same.

  7. இங்கேயும் வெகு விவரமாய், அனைத்து கருத்துக்கணிப்புகள், ஆய்வு, அலசல் என்று கச்சிதமாய் தொகுக்கிறார்கள்:

    Pollster.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.