1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘. 🙂
தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்
2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) – சரண்
விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:
- IRS constitution-க்கு எதிரானது
- நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,
பொருத்தமான இடங்களில் வீடியோ சுட்டிகள், கட்டுரை தொடுப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதைக்கு சில கேள்விகள்:
- வருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா?
- வசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?
- இராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்?
- தற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா?
- அமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா? அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா?
இவரைக் குறித்த முந்தைய இடுகை: ரான் பால் – நியூஸ்வீக்
இந்த லிபரடேரியர்களை புரிந்து கொள்ளவே முடியலியே 😀
செம விளையாட்டு மாமே!! 😉
எல்லாரையும் பின்னிட்டமில்ல!!!
நல்ல கேள்விகள்தான்!!
சரண்… ஏதும் பதில் கிடைக்குமா?
Pingback: டாக்டர். ரான் பால்: சில கேள்விகள் « *** சும்மா ***
எனது பதிவில் இந்த கேள்விகளுக்கு பதிலலித்திருக்கிறேன்.
அட பயங்கரவேகமா இருக்கு.. அங்க வந்து பாக்கிறேன்…
நன்றி சரண்..!
அங்கு இட்ட மறுமொழி…
—என்னைப் பொருத்தவரை சட்ட விரோதமாக வருபவர்களுக்கு எந்த உரிமையும், வேலையும், சலுகைகளும் சலுகைகளும் கொடுக்கக்கூடாது—
அமெரிக்காவில் பொருளாதாரத்தை நிலை நிறுத்துபவர்களே இவர்கள்தான். குறைந்தக் கூலியை வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பதால்தான், சமூகத்தில் பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்கிறது.
இப்படி பயன்படும்வரை உபயோகித்துவிட்டு சக்கையாக தூக்கி எறிவது சரியல்ல.
‘அமெரிக்கா என்பது அமெரிக்கர்களுக்கு மட்டுமே’ என்றால், சீனாவின் ஏற்றுமதியைத் தடுப்பது முதல் அமெரிக்காவே கண்டுகொள்ளாமல் நுழைத்துக் கொள்ளும் முறையற்ற குடிபுகல் வரை எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படி திருட்டுத்தனமாக வருபவர்களை அமெரிக்க நிஜமாகவே தடுத்துவிட்டால், ஊதியம் எக்கச்சக்கமாக கொடுக்க நேரிட்டு, சிறுவர்த்தகர்கள் முதல் பெருவணிகர்கள் வரை எல்லாருக்குமே செலவு எகிறிடும்!
வரவு இல்லாமல், இப்படி ஊதியத்துக்கு நிறைய விரயமாவதால், பொருள்களின் விலை எக்கச்சக்கமாகும். அவற்றை எவராலும் வாங்க முடியாததால், அந்தப் பொருள் தேக்கமடைந்து, நஷ்டத்தில் இயங்கும் இந்த ஸ்தாபன்ம் மூடப்படும். வேலையின்மை இன்னும் அதிகரிக்கும்!
தயாரிப்பதற்கான பணம் அதிகரித்துப் போவதால், வேலைகள் அனைத்தும் சீனா, இந்தியா, தாய்லாந்து, மத்திய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகி விடும்.
அப்பொழுது அதிகம் படிக்காத ஆனால் வேறு திறமைகள் நிறைந்தவர்களுக்கு அமெரிக்கவில் எந்தவித வழியும் இருக்காதே!?
இப்படி நாயாய் பேயாய் உழைப்பவர்களுக்கு, உண்மையாக் வியர்வை சிந்துபவர்களுக்கு குடியுரிமை வேண்டாம். அவர்களின் அடுத்த தலைமுறைக்காவது வாய்ப்பை வழங்கவேண்டும்.
—சட்டதிற்குட்பட்டு வருபவர்களை விட சட்ட விரோதமாக வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள்—
இது ரொம்ப அநியாயம். வயது முதிர்ந்த காலத்தில் மெடிகேர் கிடையாது; சோஷியல் செக்யூரிட்டி கிடைக்காது. உடல்நல பாதுகாப்பு திட்டம் இல்லை… சுருக்கமாக எதுவும் கிடைக்காதவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறீர்கள்?
—அவர் எதிர்பார்த்தது பின் லேடனை குறிவைத்துத் தாக்குவதைத்தான்—
அதாவது… சில போர்கள் சரி; சில சண்டைகள் தவறு!
பின் லாடென் இராக்கில் இருக்கிறான் என்றால், இராக்குக்கும் ஒப்புதல் அளிப்பார். நாளைக்கே எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில் குண்டு வெடித்து, அதற்கு காரணம் இரானின் சில சில்மிஷக்காரர்கள் என்று எவராவது சொன்னால், இரான் மீதும் போர் தொடுக்க ஒகே வழங்குவார்.
அப்புறம், அவருக்கும் புஷ்ஷுக்கும் என்ன வித்தியாசம்?
————————————————————————
வீடியோக்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபிறகு இதற்கு பதில்கள் கிடைக்கலாம்.
எனினும், உங்கள் பார்வையில் விடைகளை அறியும் ஆவலில் எழுப்பியுள்ளேன் 🙂
//அமெரிக்காவில் பொருளாதாரத்தை நிலை நிறுத்துபவர்களே இவர்கள்தான். குறைந்தக் கூலியை வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பதால்தான், சமூகத்தில் பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்கிறது.//
பணவீக்கதிற்கும், சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் கூலிக்கும் எப்படி சம்பந்தம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் மட்டுமில்லை, இப்போது போட்டியிடும் எந்த வேட்பாளர்க்கும் (of course.. ரான் பால் தவிர) பணவீக்கதிற்கான காரணம் தெரியவில்லை. உற்பத்திக் குறைவும், வரம்புக்கு மீறிய செலவுகளும், அளவுக்கதிகமான கடனும், இவற்றை சமாளிக்க வட்டி விகிதத்தை வரலாறு காணாத அளவு குறைப்பதும், அதை சமாளிக்க வெற்று காகித பணத்தை எந்த மதிப்பும் இல்லாமல் அச்சடிப்பதும்தான் பணவீக்கத்திற்குக் காரணம்.
//இப்படி பயன்படும்வரை உபயோகித்துவிட்டு சக்கையாக தூக்கி எறிவது சரியல்ல.//
நீங்கள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பற்றி கூறுகின்றீர்கள் என்றால், சரிதான். தூக்கி எறிவது என்பது சரியல்ல. அதே சமயம் ‘சட்ட விரோதம்’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் இந்த நாட்டிற்குள் வருவதற்கு வேலி எழுப்பியும், தாண்டி வருபவர்களை கொன்று குவித்தும், இவற்றையெல்லாம் தாண்டி வர ஊக்குவிப்பதும் அதைவிட கொடூரமான செயல். ஏற்கனவே உள்ளே வந்தவர்களை மனிதாபமான முறையில் தத்தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதுதான் முறை.
//‘அமெரிக்கா என்பது அமெரிக்கர்களுக்கு மட்டுமே’ என்றால், சீனாவின் ஏற்றுமதியைத் தடுப்பது முதல் அமெரிக்காவே கண்டுகொள்ளாமல் நுழைத்துக் கொள்ளும் முறையற்ற குடிபுகல் வரை எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். //
ஒப்புக்கொள்கிறேன். ரான் பால் இலவச ஏற்றுமதிக்கொள்கைக்கும் ஆதரவும், அமெரிக்கா இப்படி மற்ற நாடுகளுக்கு தடை விதிப்பதுமான கொள்கைகளுக்கு எதிராகவும்தான் செயல்பட்டு வருகிறார்.
//இப்படி திருட்டுத்தனமாக வருபவர்களை அமெரிக்க நிஜமாகவே தடுத்துவிட்டால், ஊதியம் எக்கச்சக்கமாக கொடுக்க நேரிட்டு, சிறுவர்த்தகர்கள் முதல் பெருவணிகர்கள் வரை எல்லாருக்குமே செலவு எகிறிடும்!//
அதற்காக திருட்டுத்தனத்தை ஆதரிக்க வேண்டுமென்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
//இப்படி நாயாய் பேயாய் உழைப்பவர்களுக்கு, உண்மையாக் வியர்வை சிந்துபவர்களுக்கு குடியுரிமை வேண்டாம். அவர்களின் அடுத்த தலைமுறைக்காவது வாய்ப்பை வழங்கவேண்டும்.//
நாயாய் பேயாய் ஏன் திருட்டுத்தனமாக இன்னொரு நாட்டுக்குச் சென்று உழைக்க வேண்டும்?
//இது ரொம்ப அநியாயம். வயது முதிர்ந்த காலத்தில் மெடிகேர் கிடையாது; சோஷியல் செக்யூரிட்டி கிடைக்காது. உடல்நல பாதுகாப்பு திட்டம் இல்லை… சுருக்கமாக எதுவும் கிடைக்காதவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறீர்கள்?//
இவையெல்லாம் “திருட்டுத்தனமாக” வருபவர்களுக்குக் கொடுக்க வேண்டுமா? அப்போது சட்டத்திற்குட்பட்டு வரும் நம்மைப் போன்றோர்க்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்படித் “திருட்டுத்தனமாக” வருபவர்களால் தான் அமெரிக்கர்கள் நம்மையும் தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு கொடுக்கிறது.
//பின் லாடென் இராக்கில் இருக்கிறான் என்றால், இராக்குக்கும் ஒப்புதல் அளிப்பார். நாளைக்கே எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தில் குண்டு வெடித்து, அதற்கு காரணம் இரானின் சில சில்மிஷக்காரர்கள் என்று எவராவது சொன்னால், இரான் மீதும் போர் தொடுக்க ஒகே வழங்குவார்.//
கண்டிப்பாக இல்லை.
//வீடியோக்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபிறகு இதற்கு பதில்கள் கிடைக்கலாம். //
MTV forum வீடியோவில் இந்த கேள்விக்கான ரான் பாலின் பதில் இருக்கிறது.
சரண்… நன்றி!