Daily Archives: பிப்ரவரி 10, 2008

மெக்கெய்னுக்கு 'வலது' கை தேவை

இன்றைய முன்னோட்டத் தேர்தல்களில் பராக் ஒபாமா பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இது நாடு முழுவதுமாக அவரது பரப்பு விரிவதைக் காட்டுகிறது. ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்டது என்பதால் ஹில்லரி கிளிண்டனுக்கு ஏமாற்றம் அதிகம் இருக்காது.   மறுபுறம் இன்னும் முடிவுகள் வராத நிலையில் மெக்கெய்ன் திணறிக்கொண்டிருக்கிறார்.  ஹக்கபீ தொடர்ந்து விளையாடிக்கொண்டிருப்பதில் நியாயம் இருப்பதைப்போலத்தான் தோன்றுகிறது. இன்றைய முடிவுகளின் பாடம் என்று ஒன்று இருந்தால் அது மெக்கெய்ன் பொதுத்தேர்தலுக்குத் தயாராக தீவிர வலதுசாரி போக்குகொண்ட  நபரைத் துணைஅதிபருக்கு அறிவிக்க வேண்டும்.  இந்தத் தேர்தலில் இவாஞ்சலிக்கல், கருக்கலைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட பல குழுக்கள் மெக்கெய்னுக்கு எதிராக இருக்கின்றன.  இவற்றைச் சமாளிக்க அவருக்கு ஒரு வலதுகரம் தேவை.  இன்னொருபுறத்தில் மெக்கெய்ன் எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விழுவதால் ஹக்கபீ முன்னேற்றம் காணுவதைப் போல இருக்கிறது.  ஆனாலும் அவர் நீண்ட தூரம் போயாக வேண்டியிருக்கிறது.   

நான் ஏன் ஒபாமாவை ஆதரிக்கிறேன் – லாரென்ஸ் லெஸ்ஸிக்

தொழில்நுட்பச் சட்டத்துறையின் முதன்மையானவர்களுள் ஒருவரான லாரென்ஸ் லெஸ்ஸிக் நான் ஏன் ஒபாமாவை ஆதரிக்கிறேன் என்று 20 நிமிடங்களில் விவரிக்கிறார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரான லெஸ்ஸிக் தளையறு வகையில் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், மேம்படுத்தவும் வழிவகுக்கும் Creative Commons அமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர்.  

விடியோவின் உரைவடிவம் இங்கே கிடைக்கிறது.  

முந்தைய கருத்துப்பரிமாறல்

இந்தக் கூட்டுப் பதிவைத் துவக்கக் காரணமாக இருந்த வெங்கட்டின் இந்தப் பதிவையும் அதற்கான மறுமொழிகளையும் வாசிப்பதிலிருந்து இந்தத் தளத்தில் செயற்பாடுகளைத் துவங்கலாம்.