Daily Archives: பிப்ரவரி 11, 2008

ஜனநாயகக் கட்சி – என்ன நடக்கிறது?

  • அரிசோனோ, கலிஃபோரினியா போன்ற இடங்களில் அதிகம் வாழும் லத்தினோ (ஸ்பானிய அல்லது போர்ச்சுகீசிய மொழி பேசும் மக்கள்; பெரும்பாலும் மத்திய/தென் அமெரிக்காவிலிருந்தோ மெக்சிகோவிலிருந்தோ குடியெர்ந்தவர்கள்) வாக்கு வங்கியைப் பெற காரணமாயிருந்ததாக டாயில் (Patti Solis Doyle) மாற்றப்பட்டிருக்கிறார்.
  • லத்தீனோக்கள் அதிகம் வாழும் டெக்சாஸில், தற்போதைய நிலையில் ஹில்லரி கிளின்டன் முன்னிலை வகித்தாலும், இந்த மாற்றம் சறுக்க வைக்கலாம்.
  • எனினும், ஆப்பிரிக்க – அமெரிக்கரை, தலைமைப் பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒபாமாவின் கறுப்பின வாக்குகளை சிதறடிக்க முடியும்.
  • மனைவி மிஷேல் வேண்டுகோளுக்கு செவிமடுத்த பராக் ஒபாமா, தன்னுடைய புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயன்று கொண்டிருக்கிறார்.
  • ஜான் எட்வர்ட்ஸின் ஆதரவைப் பெற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். கடந்த வியாழன் அன்று ஹில்லரி சந்தித்திருந்தார்; இன்று ஒபாமாவின் மண்டகப்படி.
  • நாளைய ப்ரைமரிக்குப் பிறகு க்ளின்டனின் பிரதிநிதிகள் எண்ணிக்கையை ஒபாமா எட்டிப்பிடித்து விடுவார் என்கிறார்கள்; எனினும், மார்ச் மாசத்தில் நடக்கும் டெக்சாஸ், ஒஹாயோ மாகாணங்களில் தற்போதைக்கு ஹில்லரி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்று கணித்திருக்கிறார்கள்.
  • குடியரசுக் கட்சியைப் போலவே ஜனநாயகக் கட்சியும், விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கெல்லாம் போட்டு சமநீதி வழங்காமல், வெற்றி பெற்றவருக்கே அனைத்து பிரதிநிதிகளையும் வழங்கி வந்திருந்தது. 1988 -ல் நடந்த ஜெஸ்ஸி ஜாக்ஸன் x மைக்கேல் டுகாகீஸ் போட்டிக்கு பிறகே இந்த முறை, தற்போதுள்ள நடைமுறைக்கு மாறியிருக்கிறது.
  • எம்.எல்.ஏ/எம்.பி. போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கட்சி பெருசுகள் நிறைந்த பெரிய பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் சூப்பர் டெலகேட்ஸ் கையில்தான் இப்போதைக்கு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • பெரிய பிரதிநிதிகளைக் கவர்வதிற்கான போட்டியில் ‘யார் மெக்கெயினுக்கு சரியான போட்டி’ என்று நிரூபிப்பதில் இரு வேட்பாளர்களும் கவனம் செலுத்துகிறார்கள். ‘நான் இதுவரை சந்தித்த அளவு அவதூறுகளை ஒபாமா அனுபவித்ததில்லை’ என்று ஹில்லாரியும்; ‘என் அளவுக்கு பணந்திரட்டும் சக்தியும், தெற்கு மாகாணங்களில் புதிய வாக்குகளையும் சேகரித்து வெல்லக்கூடியவர் எவருமில்லை’ என்று ஒபாமாவும் கட்சிப் பெரியவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முயல்கிறார்கள்.
  • கொசுறு: முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டனையும் ஜிம்மி கார்டரையும், சிறந்த ‘பேசும் புத்தகத்திற்கான’ க்ராமிப் போட்டியில் ஒபாமா வென்று, முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

பாலாஜி

ஹில்லாரி க்ளின்டனின் பிரச்சா இயக்குநர் மாற்றம்

முன்னாள் பிரச்சார இயக்குநர்:
Hillary campaign Manager - NYT (AP)

இன்னாள் பிரச்சார இயக்குநர்:
LA Times - Maggie Williams

செய்தி: Maine to Obama; Clinton Replaces Campaign Leader – New York Times

பாலாஜி

வாரயிறுதி ப்ரைமரி முடிவுகள்

ஜனநாயகக் கட்சி:

மெயின் – பராக் ஒபாமா: 59%; ஹில்லரி க்ளின்டன்: 40%

லூயிஸியானா – பராக் ஒபாமா: 57%; ஹில்லரி க்ளின்டன்: 36%

வாஷிங்டன் – பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 31%

நெப்ராஸ்கா – பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 32%

குடியரசுக் கட்சி:

கன்ஸாஸ் – மைக் ஹக்கபீ: 68%;ஜான் மெக்கெயின்: 24%; ரான் பால்: 11%

லூயிஸியானா – மைக் ஹக்கபீ: 43%;ஜான் மெக்கெயின்: 42%

வாஷிங்டன் – ஜான் மெக்கெயின்: 26%; மைக் ஹக்கபீ: 24%; ரான் பால்: 21%

பாலாஜி