Daily Archives: பிப்ரவரி 20, 2008

ஹில்லரி க்ளின்டன் – பன்முகம் :)

Hillary Clinton “இது ரஜினி ஸ்டைல்மா… ‘கொக்கு பறபற'”


Obama - Hillary ‘என்ன சொல்றே! ஒகாயோ… சல் கயாவா?’


Clinton Campaign ‘ஒஹாயோ… ஒபாமா… ரெண்டுமே ஒரே எழுத்தில்தான் தொடங்குது’ என்று பேசுவதெல்லாம் டூ மச்.


Facial Expressions ‘நான் யானை இல்ல… குதிர!’


Bill & Hillary ‘ஜான் மெகெயினுக்கு துணை ஜனாதிபதியாறீங்களான்னு என்னைக் கேட்கிறாங்க!’


Hillary Clinton ‘பேரரசுகிட்ட இருந்து பராக் கடன் வாங்கிப் பேசுகிறாரே!’


Debate Pictures ‘மக்களுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு; வண்டு விட்டு வண்டு தாவற மாதிரி ஒபமாவுக்கு மாறிட்டாங்க’


Images, Photos ‘ஷங்கரின் ரோபோவில் நடிச்சா முதல்வராகலாமேன்னு இப்படி கெட்டப்’


clinton_hillary.jpg கடைசியில் சிரிக்கப் போவது யாரு?


புகைப்படத் தொகுப்புக்கு நன்றி: The Many Faces of Hillary Rodham Clinton « Illseed Blog

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒபாமா முன்னிலையில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெற்றால் அவர் பெறும் 9வது தொடர் வெற்றியாகும்.

இது ஹில்லரி கிளிண்டன் நிச்சயம் தோல்வி அடையக்கூடும் என்பதன் திட்டவட்டமான அறிகுறியாகவே தெரிகிறது. காரணம் ஹில்லரி கிளிண்டனுக்கு சாதகமான வாக்களார்கள் அதிகம் கொண்ட மாநிலமாக விஸ்கான்சின் கருதப்பட்டது.

விஸ்கான்சின் தோல்வி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி ஒபாமா தான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சியின் சார்பாக விஸ்கான்சின் மாநிலத்தில் மெக்கெய்ன் வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு…

அமெரிக்க தேர்தல் இன்றைய சர்ச்சைகள்

பராக் ஒபாமாவின் எட்டு தொடர் வெற்றிகளுக்கு ஈடு கொடுக்க கிளிண்டன் அணி நாளொன்றுக்கு புது சர்ச்சைகளை பெரிதாக்கி வருகிறது. ஒபாமா அணியும் இதற்கான வாய்புக்களை தருகிறது.

 சர்ச்சை 1: பராக் ஒபாமா தன் நண்பர், மாசசூசெட்ஸ் கவர்னர் டெவால் பாட்ரிக் பேசிய வார்த்தைகளை அப்படியே தன் பேச்சில், தன் பேச்சாகவே சேர்ததது.

ஒபாமா தன் பேச்சில் இது ஏற்கனவே ஒருவர் பேசிய பேச்சு என்னும் குறிப்பில்லாமல் பேசியது காப்பி அடிப்பது என ஹிலரியின் பக்கம் குற்றம் சாட்டுகிறது. ‘உங்கள் பிரச்சாரம் வார்த்தைகளாலானதென்றால் அது உங்களின் சொந்த வார்த்தைகளாக இருக்கட்டும்.’ (If your campaign is based on words let the words be yours’ – not exact) என்பது ஹிலரி பிரச்சாரத்தின் வாக்கியம். குடியரசுக் கட்சி ஒபாமாவை ‘Copycat Candidate‘ என அழைத்துள்ளது.

ஒபாமா ‘காப்பி அடித்த’ வரிகள். “I am not asking anybody to take a chance on me. I’m asking you to take a chance on your own aspirations.”

டெவால் 2006ல் பேசியது வீடியோ

ஒபாமாவின் ‘காப்பி’ வீடியோ.

Massachusetts governor defends Obama from plagiarism charge 

சர்ச்சை 2: ஒபாமாவின் மனைவி கூட்டமொன்றில் பேசுகையில் விபரம் தெரிந்த பின்பு முதன்முதலாக அமெரிக்காவை குறித்து பெருமைப்படுவதாக கூறியது.

ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா தன் கணவருக்கான ஆதரவை முன்வைத்து இதை சொல்லியிருக்கிறார். அவர் பேசியது “Hope is making a comeback and, let me tell you, for the first time in my adult life, I am proud of my country. Not just because Barack is doing well, but I think people are hungry for change,”

At last, Michelle Obama proud of America – Boston Herald
Cindy McCain responds to Michelle Obamaproud” comments – FOXNews