டிஸ்னியுடன் சேர்ந்த பிறகு பிக்ஸாரின் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதல பாதாளத்திற்குச் செல்ல ஆரம்பித்தன, அதன் உச்சகட்ட தீவிரமாக சமீபத்திய படத்தைச் சொல்லலாம்.
கடந்த படமான “டர்னிங் ரெட்” (சிவப்பாக மாற்றம்) – பெரும் ஏமாற்றம். இந்தப் படம் அதன் அடுத்த கட்டம்.
எல்லோரையும் திருப்தி செய்யும் விதமாக கதை எழுத முடியாது! அனைவரையும் உள்ளடக்கி பூர்வகுடி முதல் பல்லுயிர் பேணல் வரை வோக் கலாச்சாரமாக சர்வ ரோக நிவாரணியாக சினிமா எடுக்கக் கூடாது. லத்தீன் அமெரிக்கர்கள், இஸ்லாமிய மதப் பற்றாளர்கள், ஐரிஷ் வந்தேறிகள், ஆஃப்கன் அன்னியமாக்கப்பட்டவர்கள், தெற்காசிய அயல்வாசிகள் – எல்லோரையும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர் – நெருப்புக்காரர்கள்.
வெள்ளையர்கள் போல் தண்ணீர்காரர்கள். அவர்கள் இயல்பாக அவர்களின் நாடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கலை, பண்பாடு என்று செழுமையாக்கிக் கொண்டிருப்பவர்கள். நதி போலே ஓடிக் கொண்டிருப்பவர்கள். வளைந்து கொடுப்பவர்கள்.
வழக்கம் போல் சுவாரசியமான வசனங்கள். பிரமிப்பான ஜவலிப்புகள். ரசனையான பின்னணி அணிகலன்கள். அர்த்தபுஷ்டியான கதாமாந்தர்கள். நுணுக்கி செதுக்கப்பட்ட சின்னச் சின்ன வர்ணணைகள். எல்லாமே பிக்சார் தரம்.
எல்லாவற்றிலும் வென்று உச்சத்தை எட்ட விரும்பும் பொறியும் + ஏதொவொன்றில் திருப்திப்பட்டு கிடைத்த வாழ்க்கையில் திருப்தியுறும் ஓடையும் – ஒரு குடித்தனத்தில் மணமுடிக்க இயலுமா!?
இதெல்லாம் வைத்து கலக்கியிருக்க வேண்டாமா அனிமேஷன் படம்? இந்த பின்பிலத்தைக் கொண்டு பிக்சார் பின்னி சிம்மாசனமிட்டிருக்கலாமே!
ஆனால் – அன்னியோன்யம்? மனதில் நிற்கும் சித்தரிப்பு?? உள்ளுணர்வை உரசி சிந்தையை ஆக்கிரமித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்வு பூர்வமான கொந்தளிப்பு!? எல்லாம் கோட்டை விடுகிறார்கள்.
ஒரு காலத்தில் பாரதிராஜா என்றால் நம்பிக்கையாகப் போவேன். என்னுயிர் தோழன். புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் என்று தொடர் சறுக்கல்களில் ‘சரக்கு தீர்ந்து போச்சு மாஸ்டர்!’ என்று விட்டு விட்டேன். அது போல் பிக்சரும் தங்களின் காயல்கல்பத்தை காற்றில் தொலைத்து இன்னும் தங்களின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக மென்று கடித்து துப்பியிருக்கிறார்கள்.
சற்றே இலகுவாக, ஜாலியாக, உண்மையாக லேசாக்கி ஊதியிருக்கலாம்.
நான் அமெரிக்காவில் கால் பதித்த பிறகுதான், இந்த நாள், மார்ட்டின் லூதர் கிங் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1983இலேயே கால்கோள் இடப்பட்டு, 1986இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவினாலும், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் 2000ஆவது ஆண்டில்தான் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை எம்.எல்.கே. தினம் என்று அனுசரிக்கத் துவங்கினார்கள்.
இந்தியாவில் எங்கு திரும்பினாலும் மகாத்மா காந்தி சாலை. தமிழகத்தில் அண்ணா தெரு. அமெரிக்காவில் 730 நகரங்களில் இவர் பெயரைத் தாங்கிய தெருக்கள் இருக்கின்றன.
கடந்த வருடம் வெளியாகிய ‘செல்மா’ படத்தின் இயக்குநருடன் உரையாடும் பகுதியை கீழே பார்க்கலாம்:
வாக்குரிமைக்காக போராட்டம். சம உரிமைக்காக குரல் எழுப்புதல். காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்தல். வன்முறையில் இறங்க விரும்புவோரை வலியுறுத்தி சத்தியாகிரகத்தில் ஈடுபட வைத்தல். கிறித்துவ மதத்தின் அடிப்படையிலான சமூக அறத்தையும் புதிய ஏற்பாட்டில் இருந்து அன்பையும் எடுத்துக் கொண்டாலும், அதை கிழக்கத்திய சித்தாந்தங்களான காந்தியின் அரசியல் எழுத்தையும் புத்தரின் ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினத்தோடு ஒன்றி ஒருங்கிணைந்து வாழும் மதக் கோட்பாடுகளையும் தன் சொற்பொழிவுகளில் முன்வைத்தல்.
1. அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல: கோழைகளால் தைரியமாக இயங்க முடியாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் மட்டுமே, சத்தியாகிரகத்தில் ஈடுபடவும். வெறும் பயத்தினாலோ, ஆயுதம் கிடைக்காததாலோ, வன்முறையின்மையை நீங்கள் கடைபிடிக்கக் கூடாது.
2. எதிரியை தாழ்வாகக் காட்ட நினைப்பதோ தோற்கடிப்பதோ அகிம்சையின் நோக்கம் அல்ல: எதிரியை நட்புறவு பேணவைத்து, எதிரியாக நினைக்கவைக்காமல், நம்முடைய நிலையைப் புரிய வைப்பதுதான் வன்முறையின்மையின் நோக்கம் ஆகும். பகிஷ்கரிப்பதும் ஒத்துறையாமை இயக்கமும் நம்முடைய வழிமுறை ஆகும். ஆனால், அந்தப் பாதையில் நம் நோக்கம் நிறைவேறியவுடன் எதிரியின் அகம் திறந்தவுடன் அவருடன் கைகோர்த்து வாழ்வதற்குப் பழக வேண்டும். அகிம்சாமுறை சத்தியாகிரகத்தின் இறுதியில் அன்பார்ந்த சமூகம் உருவாகி இருக்கும். துப்பாக்கி எடுத்து நடக்கும் வன்முறையின் முடிவில் பழிவாங்கும் வெறுப்பு மேலோங்கியிருக்கும்.
3. நம்முடைய எதிரி — தீவினைகளின் ஏவுகணைகள் அல்ல; அந்தப் பொல்லாத்தனமான வழிமுறை மட்டுமே நம் எதிரியாகும்: எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன்? எங்கோ, எவரோ தீங்கான செய்கைகளை வழிவகுத்து, அந்தத் தீவினைகளுக்கு காரியகர்த்தாவாக களத்தில் வேறொருவரை ஏவுகிறார்கள். நம்முடைய குறிக்கோள் அந்தப் பொல்லாத சித்தாந்தத்தை முறியடிப்பது மட்டுமே. இனவெறி என்பதைத் தாண்டி, இந்தப் பிரச்சினை அக்கிரமத்திற்கும் தர்மநீதிக்கும் நடுவே நடக்கும் போராட்டமாக அகிம்சாவாதி உணர்வான். வெள்ளைக்காரனை வீழ்த்துவது அல்ல குறிக்கோள். வெளிச்சத்தின் பாதையில் அனைவரையும் இட்டுச்செல்வதே நம் குறிக்கோள்.
4. தப்பித்துச் செல்லாமல் இருப்பது: ஜெயில் தண்டனையோ… லத்தியடியோ… அதைத் தாங்கும் மனோதிடம் வாய்த்தவரே அகிம்சாவாதி. எப்படி திருப்பி அடிக்கலாம் என்று எண்ணாதே!
5. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை: குண்டு வீசி எதிரியை அழிக்க நினைப்பது புறவயமான வன்முறை. அதே சமயம், மனத்தினுள்ளே வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டெரிவது அகவயமான வன்முறை. வெறுப்பைக் கக்கும் பிரச்சாரங்களையும் அடுத்தவரை அழிக்கத் தூண்டும் கோபதாபங்களையும் அகிம்சாவாதி தூண்டமாட்டான். அவன் வழி அன்புமயமானது. குறள்மொழியில் சொல்வதானால்
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
பொருள் : அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
காதலியிடம் அன்பு பாராட்டுவது போல், தோழமையிடம் நட்பு பாராட்டுவது போல், நம்மை வெறுத்து ஒதுக்குபவரிடம் எவ்வாறு பாசமாகப் பழகுவது? அது இயலாத செயல் அல்லவா?
இங்கு Agape எனப்படும் கிரேக்கத் தத்துவத்தை மார்டின் லூதர் கிங் ஜூனியர் முன்வைக்கிறார். இவ்வாறு விரும்புவதற்கு எவ்விதமான லாபநோக்கங்களும் கிடையாது. எதிரியின் மீதான விருப்பம் கொள்வதற்கு அவர் மீதான பற்றோ, அல்லது அவரின் பொருள் மீதான வாஞ்சையோ காரணம் கிடையாது. இது பற்றற்ற பாசம். அவரின் மீது பரிதாபம் கலந்த பாசம். அடுத்தவரின் நன்மைக்காகவே நாம் உருவாக்கி கொள்ளும் பாசம். பாசம் வைப்பதால் நமக்கு நயா பைசா நன்மை கிடைக்காது. எனினும், அந்தத் தருவாயிலும் பாசம் மட்டுமே தோன்ற வைக்கும் அகவயமான அகிம்சையை நீங்கள் உங்கள் எதிரியின் மீது பாய்ச்ச வேண்டும்.
பௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார். உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும்.
6. நீதி சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது: உங்களுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அறவழியில் போராடுவீர்கள். இப்போது அடிவாங்கினாலும், நாளை நமதே என்னும் விசுவாசம் இருந்தால் மட்டுமே உடனடியாக தடியெடுத்து எதிராளியை அடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மதநம்பிக்கை வேண்டாம். ஆனால், நல்லது மட்டுமே வாழ்வாங்கு வாழும்; அகிலத்தில் தீயது அழிந்து பொசுங்கும் என்று உணர்வீர்களானால் அகிம்சையின் பக்கம் நிற்பீர்கள். அதற்கு என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரம்மம் என்றுகூடச் சொல்லலாம்.
பெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.
இதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.
“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே? நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே? காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே?” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.
“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா!” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.
“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா? பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா? கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா?” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.
எல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்?
தமிழில் ஒலியும் ஒளியும் மாதிரி ஹிந்தியில் சித்ரஹார். தொண்ணூறுகளில் மனதைக் கவர்ந்து தொடர்ந்து நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் பட்டியல்.
1. I Love My India – Pardes
சிஸ்டத்திற்குள் இருந்தே சிஸ்டத்தை முறியடிப்பது போல், இந்தியா பிடிக்கும் என்று சொல்லி அமெரிக்க தேசி மாமனாரை வீழ்த்தும் மஹிமாவா… குடியரசு தின ஸ்பெஷலா…
2. Man Mohini – Hum Dil De Chuke Sanam
ஹீரோயினுக்கு மழைப்பாடல் கொடுப்பார்கள்; சின்னச் சின்ன ஆசை கேட்பார்கள். ஆனால், துள்ளல் எண்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ராய்.
3. Mehndi Lagake Rakhna – Dilwale Dulhania Le Jayenge
விடிஞ்சா கல்யாணம்; மாப்பிள்ளையின் முன்னிலையில் காதலியுடன் கொஞ்சம் டூயட்; துளி பயம்; நிறைய ஆட்டம். நடிப்புக்கு கஜோல்.
4. Rangeela Re – Rangeela
ராம் கோபால் வர்மாவின் முதல் இந்தி படிக்கட்டு; ஏ ஆர் ரெஹ்மானின் ஆஸ்கார் பாய்ச்சல்; ஊர்மிளாவின் அலட்டலில்லாத பாங்கு; எல்லாவற்றையும் மிஞ்சும் கனவும் நம்பிக்கையும் கொப்பளிக்கும் அர்த்தமுள்ள வரிகள்.
5. Ek Ladki Ko Dekha To – 1942 A Love Story
இரண்டு நிமிடம் முன்னால் விழுந்த பனி போல் மெத்து மெத்தான ஒளித்தொகுப்பு.
6. Aati Kya Khandala – Ghulam
இறுக்கமான நேரத்தில் இயல்பாக்கி, விவகாரமான கேள்வியை விளையாட்டாக கொக்கி போடும் லாவகம்.
7. Jadoo teri nazar: Dar
தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்து, துணை நடிகராக உயர்ந்து, வில்லனாகக் கலக்கி இன்று ரா #1, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!
8. Phir Bhi Dil Hai Hindustani – Title Song
விளம்பரம் எடுப்பவர், திரைப்பாடலுக்கு காட்சியமைப்பு கொடுத்தால், இப்படித்தான் சௌக்கியமாக அமையும்.
9. Ramta jogi – Taal
ஐஷ்வர்யா ராய்க்கு நடிப்பு வராவிட்டாலும், ஆட்டம் அமர்க்களம்.
10. Pehla Nasha – Jo Jeeta Wohi Sikander
பக்கத்து வீடு; சின்ன வயது துவங்கி தோழி; முதல் காதல்; பதின்ம வயதில் கல்லூரியில் சகாக்களுடன் பார்த்த காட்சியின் நினைவு மீட்டல்.
அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.
மேற்கோள் மூலை
ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:
அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.
ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’
ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:
அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.
ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.
ஆறு வித்தியாசங்கள்
இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.
ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.
வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.
விமர்சனம்
சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.
குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.
oOo
காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.
இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.
அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.
1. Teenager murdered for writing love letter to girl of higher caste – Times Online: “Prakash Louis, a sociologist based in Bihar, said ∑ “Caste-based atrocities are common here: rapes, murders, beatings. The privileged prey on the weak,” said Uday Kumar, a director of the Bihar-based Dalit Association for Social and Human Rights Awareness. Similar abuses are reported regularly across India. Alamelu, the leader of a group of Dalit women in the southern state of Tamil Nadu, said:”
2. Boy thrown in front of train for falling in love – India – The Times of India: “Lalita Devi alleged that cops had told her to settle the dispute ‘outside the police station’ when she, along with her son, went to them for help after the boy was tonsured and paraded around the market. She said the accused assaulted her and her son outside the police station and dragged them to a railway track. Despite her repeated pleas for her son’s life, the killers threw the boy in front of a train on the Gaya-Mughalsarai section.”
மகளுடன் (மனைவியுடனும்) இரண்டு படங்கள் மீண்டும் பார்த்தேன்.’திருடா திருடா’ இன்னும் முடிக்கவில்லை. எஸ்.பி.பி. சீக்கிரமே நடிக்க வந்திருக்க வேண்டும்.
இருவர்: ‘இந்தப் படம் இம்புட்டு நல்லா இருக்குமா?’ என்று நான் குசேலன் பார்த்தபிறகு ஆச்சரியப்பட்ட மாதிரி மனைவி அசந்து போனாள். நிறுத்தி நிதானமாக எம்ஜியாரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆரம்பித்து ஜெயலலிதாவின் சுய வரலாறு எழுதிய கதை வரை பின்னணியோடு படம் பார்த்தாள். நிறையக் கேள்வி கேட்டாள்; நிறைய அளக்க முடிந்தது. படம் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது:
எம் ஆர் ராதா சுட்டாரா? ஏன்?
வி என் ஜானகி முதல் மனைவி இல்லையா?
மு க.வுக்கு எத்தனை மனைவி? முக முத்து படத்தில் உண்டா?
கனிமொழிக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதில் வருகிறது? என்ன அர்த்தம்?
ப்ரூக்ளின் ஆஸ்பத்திரி சென்றதெல்லாம் வரவில்லையே
ரிக்ஷாக்காரனா? கட்சி சின்னம் வருமா?
அண்ணா யார்? பெரியார் எங்கே?
ஆர் எம் வீரப்பனா அல்லது அமைச்சர்களுமா?
அஞ்சலி: மணி ரத்னம் என்றாலே போர் என்ற மகளை நிமிர்ந்து உட்கார வைத்தது. Of course, அழுது விட்டோம்.
மகளுடன் அமெரிக்க அரசியல்: பக்கத்து பென்ச் தோழி மெகயின் ஆதரவாளராம். இரண்டு காரணங்கள் – டினா ஃபே; அப்புறம் ஜான் வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கிறாராம்.
உருளைக் கறி: நாலு கிழங்கை எடுத்தோமா; குக்கரில் வேக வைத்தோமா; தோசைக் கல்லில் ரென்டு பெரட்டு பெரட்டினோமா என்பது என் பாணி. மனைவியோ மைரோவேவ் பயன்படுத்தி நாலு நாழி வேக வைக்கிறார். அதன் பிறகு தோலை உறிக்கிறார் (ஐய்யோ! அய்யய்யோ!!! சத்தெல்லாம் போவுதே); அதற்குப் பிரகு நான் ஸ்டிக் தவ்வா அழுமளவு ரோஸ்ட் நடக்கிறது. பசி வயத்தைப் பிடுங்க எந்த ஷேப்பில் காய் இருந்தாலும் கபளீகரம் ஆகிறது.
ஸீக்வல்: எனக்குத் தெரியாத டேட்டாபேஸா என்று மிதப்போடு வகுப்புக்கு சென்றால் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். கற்றது மைக்ரோசாஃப்ட் அளவு; கல்லாதது ஓபன் சோர்ஸ் அளவு!
கட்டாந்தரையில் அண்ணாமலை: ஆர்வக்கோளாறில் டென்ட் அடித்து தூங்குவது போல் மெத்தையை வீட்டு கீழே படுத்து பார்த்ததில் முதுகு பேந்துவிட்டது. அடுத்த நாள் படுக்கையில் புரண்டு கூட உறங்க முடியாத அவஸ்தை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் இதான் அர்த்தமா?
கல்யாணம், காதல்: முஸ்லீம்களுக்கு நடுவில் நிலவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்து என்.பி.ஆர் புலம்பல் கலந்த பழைய பல்லவியை ஒப்பித்தது. புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், போக்குவரத்தில் சிக்கிய காலைப்பொழுதில் கேட்டு வைத்தேன். ‘உங்களிருவருக்கும் காதல் உண்டா?’ என்று கொக்கி போட்டு தொக்கி நிற்கவிட்டார்கள். இந்தக் காதல் என்றால் என்ன?
வெள்ளி இரவு வெளியில் சாப்பிடுவது
அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்வது
அவ்வப்போது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொண்டு ஆச்சரிய சந்தோஷம் அளிப்பது
எதிர்பாராத நேரத்தில் முத்தமோ சில்மிஷமோ நடத்துவது
கண்ணீரைத் துடைத்து விடுவது
பெற்றோரை நினைத்து ஏங்க வைக்காத சூழலை உருவாக்குவது
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் என்று மறக்காதது
எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாதது
தமிழ் சங்கமும் ஹாலோவீனும்: பாஸ்டன் தமிழர்கள் மாறுவேடப் போட்டி நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சூனியக்கார கிழவியும் இளவரசிகளும் (சாரா பேலினும்தான்) ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’ சென்றால் இவர்கள் ஔவையார், கண்ணகி, வள்ளுவர், பாரதி, கட்டபொம்மன் கேட்கிறார்கள். நான் ‘பெரியார்’ ஆக போகட்டும். கவனம் திருப்புவாள் என்று நினைத்தேன். மனைவியோ ‘சிலப்பதிகாரம்’ என்று வசனத்திற்காக தேட என்னுடைய பதிவே கூகிளில் விடையாக வந்தேற ‘கொடும… கொடும என்று கோவிலுக்குப் போனா.. அங்கே’ என்று சொலவடைத்தாள்.
ஒட்டுக்கேட்டல்: அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். நான் முதன் முதலாக சென்ற உணவகத்தில் சரியான க்யூவில் நான் நின்றிருக்க, அவனோ தவறான க்யூவில் நின்றிருந்தான். கூட வந்திருந்தவள் (ஐம்பது இருக்கும்) அவனை என் பின்னே நிற்க சொன்னாள். அவர்களுடன் முப்பது பிராயத்தை பத்தாண்டுகள் முன்பு கடந்தவளும் வந்திருந்ததை என் அருகில் உள்ள இருக்கைகளில் அவர்கள் அமரும்போதுதான் கவனித்தேன்.
அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’
அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’
அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’
நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.
கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde