-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Tag Archives: JeMo
July 25 Jeyamohan meet in Washington DC
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Announcements, Authors, Banners, DC, JeMo, Jeyamohan, JM, Meets, POSTERS, Washington, Writers
ஜெயமோகனின் தொராண்டோ வருகை
எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)
எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.
- எழுத்தாளர் முத்துலிங்கம்
- மகாலிங்கம்
- காலம் செல்வம்
இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).
காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..
அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).
பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.
- மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
- எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
- குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).
இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.
தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.
அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.
அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.
“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”
எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.
(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)
நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.
இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.
சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).
அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –
- இலக்கியம்,
- மரபு,
- இவடிவம்,
- காவியம்,
- புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
- அறிவியல் புனைவுகள்
போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.
எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.
கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.
அன்புடன்
வெங்கட்
தொராண்டொ
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது A Muthulingam, A Muttulingam, Authors, ஆங்கிலம், ஜெயமோகன், பரிந்துரை, வாசிப்பு, Blogs, Books, Cool, Faces, Faves, Ilakkiyam, Issues, Jayamogan, Jayamohan, JeMo, Jeyamogan, Jeyamohan, JM, Kaalam, Library, Life, Lit, Literary, Literature, Meets, Muthulingam, Muttulingam, Names, Notes, Observations, People, Philosophy, Politics, Read, Readers, Selvam, Tamils, Toronto, Venkat, Writers
ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்
ஜெயமோகனை சந்தித்த கதை தொடர்கிறது.
நான்: இப்போ எழுதறதில் எதையாவது படிச்சு ரெஃபர் பண்ணுகிற மாதிரி உங்களுக்கு யாராவது இருக்காங்களா? உங்களைக் கவர்ந்தவர்கள்?
“நெறைய பேரு இருக்காங்க. அப்பப்ப சொல்லிடுவேன். உங்களுக்கு அறிமுகமானவர்களில் சேதுபதி அருணாச்சலத்தையும் அரவிந்தன் நீலகண்டனையும் தற்காலத்தின் மிகச் சிறந்த வளரும் எழுத்தாளர்களாக நான் கருதுகிறேன். அந்த வயதில் நான் வாசித்ததை விட, இவர்களின் அகலமும், ஆழமும் நீளமும் அதிகம்.
சொல்லப் போனால், அ.நீ. குறிப்பிடத்தக்க படைப்பாளியாக, தமிழிலக்கிய கர்த்தாவாக வரவேண்டியவர்; வந்திருக்கக் கூடியவர். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருடைய முனைப்பெல்லாம், தன்னார்வத் தொண்டில் இருப்பதும் நல்லதே.
சுய உதவிக் குழு, மகளிர் நலன், விவேகானந்தா கேந்திரா என்று அயராது உழைக்கிறார்.
எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் இவர்கள் இருவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
நேசகுமாரை…”
ட்ரெயின் வரும் சத்தத்தில் ஜெயமோகன் உரையாடல் முற்றுப் பெற்று வெங்கட் சாமிநாதனுக்கு தாவிவிட்டது.
“வெங்கட் சாமிநாதனின் நகையுணர்வு மெலிதானது; பிரசித்தி பெற்றது. யாத்ராவில் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் போடுகிறார்.
‘இந்தப் புத்தகத்தில் 13 வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- ஆசிரியர் பெயர்
- பக்கங்கள்
- பதிப்பகம்
- விலை
- அச்சிட்டவர்
- புத்தகத் தலைப்பு
இப்படி போகிறது.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ’35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’
இன்றைய அளவிலும் கறாரான கருத்துக்கு சொந்தக்காரர்.
வெ.சா. விமர்சனத்தை தனியாகவும், சொந்த வாழ்க்கையில பிரதிபலன் பார்க்காம உதவறதையும் தனித்தனியா வத்திருந்தார். அவர் நேர்மையாக, கடுமையாக விமர்சித்த பலருக்கு தனிப்பட பலப் பல விஷயங்கள் செய்திருக்கார்.
அதை வெளியில் யாருக்கும் சொன்னதுமில்லை. உதவி பெத்துண்டவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்!
நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்.”
நான்: அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே! சுஜாதாவைப் சந்திச்சவங்க சொன்னதில் இருந்து எனக்கு பயம் வந்துடுச்சு.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aravanidan, Aravindan, Aravindhan Neelakandan, Aravinthan, Arunachalam, Authors, அ.நீ., அநீ, அரவிந்தன், அரவிந்தன் நீலகண்டன், அருணாச்சலம், எழுத்தாளர், சாமிநாதன், சேதுபதி, சேதுபதி அருணாசலம், சேதுபதி அருணாச்சலம், நீலகண்டன், படைப்பாளி, வெங்கட் சாமிநாதன், வெசா, JeMo, Jeyamogan, Jeyamohan, JM, Neelakandan, Neelakantan, Nilakandan, Nilakantan, Saminathan, Sethupathi, Sethupathy, Sethupathy Arunachalam, Venkat Saminathan, VeSa, VeSaa, Writers
ஜெயமோகனை சந்தித்த கதை
இதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.
எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!
இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.
ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.
இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.
பாம்பு சேஸ்.
ஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.
சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.
பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.
நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.
இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.
“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”
“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.
வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.
அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.
பச்சை சட்டை. துரத்தல்.
“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.
இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.
ஜெயமோகன்: சில குறிப்புகள்
இணைய அறிமுகம், சிறுகுறிப்பு, தகவல் கட்டுரை: Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction « Tamil Archives
வார்த்தைகளின் விளிம்பில்: எழுத்து – ஜெயமோகன் – தொடர்
இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.
இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.
குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:
- சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
- அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
- இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
- கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
- சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
- எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
- அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
- நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
- பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
- சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.
இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.
- சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
- சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
- சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
- அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
- பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
- தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
- Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
- நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
- தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
- ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.
அமெரிக்காவில் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304
அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM
சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.
அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Angaadi Theru, Angadi Theru, Authors, இலக்கியம், உரையாடல், எழுத்தாளர், சந்திப்பு, ஜெயமோகன், நான் கடவுள், பேச்சு, Bala, Jayamohan, JeMo, Jeyamogan, Jeyamohan, Kasthoori Maan, Kasthuri Man, Meet, Naan Kadawul, Tours, Trips, US, USA< America, Vasantha Balan, Visits, Writers










