போதையில் அமிழும் சீனாவும் வேலையில்லா திண்டாட்டம் நிறை கியூபாவும்

1. Self-immolation as protest

உடன்கட்டை ஏறின ‘சதி’ காலம் முதல் தீக்குளிப்பது இந்திய கலாச்சாரம். ஈழத் தமிழருக்காக முத்துக்குமாரின் அர்ப்பணிப்பு வீணாகியது. ஆனால், டுனீசியாவில் ஜனாதிபதி போய், பிரதம மந்திரி ஆட்சி பிடித்துள்ளார்.

இந்தக் கட்டுரை ஹங்கேரி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலும் நடக்கும் தீக்குளிப்பை கேள்வி கேட்கிறது. நியாயமான கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொள்வது அறமா?


2. Cuba Issues Thousands Of Self-Employment Licenses

தமிழ்நாட்டில் ஆட்சி மாறி அதிமுக அரியணை ஏறினால், அரசு ஊழியருக்கு கெடுபிடி அதிகமாகும். ஆனால், காஸ்ட்ரோ ஆட்சி மாறாவிட்டாலும் கியூபாவில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது சோஷலிஸம்.

கவர்ன்மென்ட் பணிநீக்கத்தை ஈடுகட்டுவதற்காக 75,000 புதிய தொழில் முனைவர்களுக்கான உரிமங்களைக் கொடுக்கிறது கம்யூனிச க்யூபா. ஏற்கனவே, கள்ளச்சந்தையில் அதிகாரபூர்வமற்று செயல்பட்டவருக்கே, அத்தனை லைசன்சும் சென்று விட்டது. அதனால், அரசுக்கு வரி கட்டவேண்டும் என்பது தவிர, புதிதாய் பிசினஸ் முளைக்காது.

திடீரென்று பத்து சதவிகித பாட்டாளிகள் ரோடுக்கு அனுப்பப்பட்டால் என்னவித விளைவுகள் நேரும்?


3. Trash hotel

குப்பையை வைத்து உருவாக்கிய பொருட்களை ‘பாய்ஸ்’ படப் பாடல் ‘பூம் பூம்’ போல் உதவாக்கரை விஷயங்களை வகித்தே உருவான ஹோட்டல்.


4. Cameroon battles brain drain

80களில் படித்த இந்தியாவின் பெருங்கவலைகளில், ‘ப்ரெயின் ட்ரெயின்’ முக்கிய இடம் பிடித்தது. இன்று அமெரிக்காவே அவுட்சோர்சிங் பேதியும் கணினி ஏற்றுமதி பீதியிலும் அல்லலுறுகிறது. ஆனால், கேமரூனின் பதினைந்து சாலர் சம்பளத்தை விட்டுவிட்டு, மருத்துவர் கப்பலேறிப் போய்விடுகிறார்களாம்.


5. Drug use growing in China

வளர்ந்த நாட்டுக்கான அறிகுறி என்ன?
அ) 1.76 லட்சம் கோடி ஊழல்
ஆ) போதை ஏற்றுமதி பிரச்சினையை விட இறக்குமதி விசுவரூபம் எடுப்பது
இ) அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதை விரும்பாதது


6. A 2000-year-old business

நாடி ஜோசியம், ஏடு பார்த்தல் வரிசையில் தாயாதி முறை, செட்டியார் ஒன்பது வீடு தொடர்ச்சியாக தங்களின் 72 குடும்பத்தினரின் கிளைகளை யேசு கிறிஸ்து பிறந்த காலத்தில் இருந்து பாதுகாத்து, மெயின்டெயின் செய்து வருபவர்களின் கதையை சொன்னார்கள்.


விகடன் விருதுகள் – 2010

விகடன் அவார்ட்ஸ் 2008

துவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.

அவற்றில் சில:

1. சிறந்த கதை – வசந்தபாலன் :: அங்காடித் தெரு

2. சிறந்த வசனம் – சற்குணம் :: களவாணி

3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்

யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகத்தை நிழ்த்தும் எஸ்.எழில்வேந்தன்

முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்

சிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்

4. சிறந்த நாவல் – மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)

5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)

6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு  (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)

7. சிறந்த மொழிபெயர்ப்பு – ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)

உலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.

பத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.

8. சிறந்த வெளியீடு – தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)

9. சிறந்த பின்னணிப் பாடகர்: பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)

10 Similes between Politician Rahul Gandhi & Actor Rajinikanth

ராகுல் காந்தி ரஜினிகாந்த்
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு ஹீராவாக நடிக்கும் வயசு
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர்
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப்
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார்
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர்
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ்
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார்
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்?

முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

தலைப்பை விட சிறிய பதிவு. மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். அவள் எழுதிய கடிதத்தின் முதல் வரி:

நான் பெபொ த்த டம்ர்ல பனன் ர்கன்

அவள் படித்துக் காட்டியது:

நான் இப்பொழுது இதைத் தமிழில் பண்ணி இருக்கிறேன்.

முந்தைய பதிவுகள்:
1. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?
2. இந்தியாவைப் பற்றி வரைக
3. வெற்றிகரமான நூறாவது நாள்
4. ஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்
5. Dasavatharam – Eight Year old’s Take

மீண்டும் இகாரஸ் பிரகாஷ்

குமுதம் விகடனில் முக்கியமானவர் சுஜாதா; ஆனால், சூட்சுமகர்த்தா ரா கி ரங்கராஜன். காலச்சுவடு உயிர்மைகளில் சுந்தர ராமசாமியும் மனுஷ்யபுத்திரனும். இணையத்தில் ரோசாவசந்த் அண்ட் பிரகாஷ்.

கருநீலப் புடவை. கழுத்திலே சாஃப்ட்வேர் தாலி எழுதி ரி-என்ட்ரி தந்திருக்கிறார் ஐகாரஸ்.

நண்பரை சந்திச்சப்ப சொன்ன விஷயமும் நினைவுக்கு வந்தது.

‘முன்ன எல்லாம் பஸ் ஸ்டாண்டில் பொண்ணப் பார்த்தா “லட்சணமா இருக்காளே”ன்னு தோணும், அன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு நிக்கிறப்போ, “இவ வீடு எங்கே இருக்கோ? பத்திரமா போய் விடுவாளா?”ன்னு தோணிச்சு. கொஞ்சம் பெருமையாகவும் உடனே இருந்துச்சு. நமக்கும் வயசுக்குரிய சிந்தனை வருது. சாரு மாதிரி இன்னும் இளமையா மைனர் லுக் விடலியேன்னு ஏக்கமும் வந்தது’

‘கல்கி வளர்த்த தமிழ்’ படிக்கிறேன். அதில் வரும் கவலைகளும் நிகழ்வுகளும் சிந்தனைகளும் இன்றும் பொருந்துகின்றன. நமக்கு பல்லவன்; அவருக்கு டிராம்.

சிறுகதை மாதிரி எழுத முயன்றதாலோ; அல்லது ஒரு வருட அஞ்ஞாதவாசமோ அவரின் துள்ளல் நடை மிஸ்ஸிங்.

ஒரெயொரு பொதுப்படையான அபிப்பிராயம்:
‘என்பது’, ‘என்று’ – என்பது கெட்ட வார்த்தை; நாம் நிறைய போடுகிறோம். தவிர்க்கலாம்.

வாழ்த்துகள்.

இகாரஸ் குறித்த முந்தைய சில:
1. Chat Meet – Icarus Prakash
2. குணச்சித்திரம் : ஐ(இ)காரஸ் பிரகாஷ்
3. Icarus Prakash Notes from RKK – Rayar Kaapi Klub
4. குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?

அகவை – உடல்நலமும் தேடல்வயமும்

“அம்மாவிற்கு உடம்பு சரியில்லை.”

“எவ்வளவு வயாதாகிறது?”

வயோதிகத்தை சொல்வதற்கு வயது பயன்படும்.

விருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்?’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது?’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.

“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.

“எம்புட்டு வயசு?”

கேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…

“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது?”

விட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.

சம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.

உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை

இயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா? ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி!’ ஆணையிடுகிறது மனது.

எனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்தானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.

Separated at Birth: Venkat spl.

இன்றைய இரட்டையர்களை காட்டிக் கொடுத்தவர்: வெங்கட்

அ) நடிகை த்ரிஷா & கேமரான் டயஸ்


ஆ) பட்டிமன்ற பேச்சாளர் ராஜா & மனோபாலா


இ) எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன் & திலீப் குமார்


முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர் | அரசியல் | Thx to Blogeswari

பாட்டாவின் நதி – ஜெயமோகன்

ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியான இதழ்: மே, 1987

இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.

பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.

அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.

எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.

Aa Eraa Venkata Chalapathy – Interview Questions

கொஞ்ச காலம் முன்பு A.R. Venkatachalapathy (Professor of History, Madras Institute of Development Studies) சந்திக்கும் சமயம் கீழ்க்காணும் கேள்விக்கான பதிலை வாங்கித் தொகுத்துப் போடும் எண்ணம் இருந்தது. நேர்கண்ட பொழுதெல்லாம், பிற சுவாரசிய உரையாடலில் சென்றதினால், வினாக்கள் மட்டும் இங்கே…

1. அகாடெமிக்கில் இருப்பவர்கள் இலக்கியம் பக்கம் ஒதுங்குவது ரொம்பக் குறைவு. நீங்கள் எப்படி இரு பக்கமும் குதிரையோட்டுகிறீர்கள்?

2. கல்வித்துறை, ஆராய்ச்சியாளர்களின் கவனமும் நவீன தமிழிலக்கியம் மீதான ஆர்வமும் எந்த நிலையில் இருக்கிறது? வருங்காலப் போக்கு எப்படி இருக்கும்?

3. காலச்சுவடு ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாக பணியாற்றுகிறீர்கள். உங்களின் பங்களிப்பு, சாதனை என்ன? இன்னும் என்ன செய்ய திட்டம்? இன்னும் இதை செய்யமுடியவில்லையே என்று வருத்தம் ஏதாவதுண்டா?

4. தங்கள் புனைவுகள் அதிகம் வெளியானதில்லை. சிறு வயதில் கதை/கவிதை எழுதியதுண்டா? நாவல், சிறுகதை பக்கம் எட்டிப்பார்க்கும் திட்டமுள்ளதா? ஏன் தாங்கள் இன்னும் அந்தப் பக்கம் தலைவைக்கவில்லை?

5. லஷ்மி ஹால்ம்ஸ்ட்ராமுக்கு இயல் விருது கிடைத்தபோது எழுந்த கருத்துகளுக்கு தாங்கள் எந்த ஊடகவெளியிலும் பதிலளிக்கவில்லை. விருதுக்குழுவின் நடுவர்கள் தங்களின் தேர்வுமுறைகளுக்கான முடிவுகளைப் பொதுவில் பகிர்வதில் தவறில்லையே?

6. உங்கள் எழுத்துகளைப் படித்ததில், கேட்டதில், ‘மென்மையான கருத்துகளை முன்வைப்பவர்; பிரச்சினைகளுக்குள் செல்லாமல் விவகாரமான விஷயங்களை அலசுபவர்’ என்னும் எண்ணம் எழுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது? எங்காவது வம்பில் மாட்டிக் கொண்டதுண்டா?

7. மேற்கத்திய உலகின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். காலையில் பேட்டி கொடுக்கிறார்கள். புத்தகங்களையும் விற்று சிந்தனைகளையும் அலசி சவுன்ட் பைட்களும் தூவிச் செல்கிறார்கள். தமிழகச் சூழலில் டிவி கருத்தரங்கங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

8. ஆராய்ச்சி எழுத்தாளர்கள் என்றறியப்படுபவர், தன் புத்தகத்தைத் தொடர்ந்து, அதைக் காட்சிப்படுத்தலுக்கு கொண்டு செல்கிறார்கள். அதே போல், ஆஷ் கட்டுரை, வ.உ.சி. புத்தகம், புதுமைப்பித்தன் தொகுப்பை ஆவணப்படமாக எடுப்பது சாத்தியமா? திட்டம் உள்ளதா?

9. குழந்தைகள் விரும்பும் fairy taleகளையும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் மீள்பார்வை கொடுத்து, கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தோ, மாற்றுக் கருவுருக்காமோ செய்வார்கள். அதே போல் கலாச்சார, சமூக, அரசியல் சரித்திரத்தை, புகழ்பெற்ற தலைவர்களின் கோணத்தில் வித்தியாச வரலாறாக செய்யும் எண்ணம் உண்டா? அப்படி உருவாக்கினால் எவரது பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்?

10. வரலாற்றாராய்ச்சி எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது? இன்னும் தமிழ் பண்பாட்டு ஆய்வில் என்ன என்ன இடங்களில் தொக்கி நிற்பதாக தாங்கள் கருதுகிறீர்கள்?

11. வாசகராகவோ இரசிகராகவோ இருந்து இலக்கியம் பற்றிய அடிப்படைகளின் மேல் நின்று விமர்சிப்பதற்கும், முனைவராகவோ பேராசிரியராகவோ இருந்து வரலாற்றுப் போக்கில் மதிப்பிடுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளனவா?

12. தமிழருக்கு என்று பல குணாதிசயங்கள் உரித்தாவதாக பண்டிதர்களும் அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். தங்கள் பார்வையில் தமிழ்நாட்டுக்கும் திராவிட இனத்திற்கும் சொந்தமான கண்டுபிடிப்புகள், அரிய அதிசயங்கள், சமூக முன்னெடுப்புகள், கலாச்சாரத் தாக்கங்கள் என்ன?

13. திராவிட இயக்க ஆய்வு குறித்த பல புத்தகங்களில் முக்கியமானதும், நம்பகத்தன்மை கொண்டதாக தாங்கள் பரிந்துரைப்பது எது?

14. உங்களை உருவாக்கியவர்களில், உங்கள் ஆதர்சங்களில் சிலருடனான அனுபவங்களைப் பகிர முடியுமா?

15. லன்டன், சிகாகோ, பாரிஸ்… பல ஊர்கள். உலகெங்கும் மனிதர்களிடையே சிந்தனையில் ஒற்றுமை உள்ளதா? கலாச்சாரமும் சமூக அமைப்பும் மாறுபடுவதால் குணங்களும் வேறுபடுகிறதா?

16. தங்கள் வசித்த, விசிட் அடித்த நகரங்களில் பிடித்த ஊர் எது? ஏன்?

17. மற்றவர்களின் கடுமையான விமர்சனங்கள் தங்களை எப்படி பாதிக்கிறது? பத்து வருட உழைப்புக்கு கிடைக்கும் பதிலடிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

18. சங்கப்பாடல்கள் குறித்தும், பழந்தமிழ் பாக்கள் குறித்தும் தங்கள் அவ்வப்பொழுது புதிய பரிமாணங்களை நயம்பட எடுத்துவைக்கிறீர்கள். இதைத் தொடராக, வெகுசன இதழ்களில் எழுதும் எழுதலாமே?

19. வைரமுத்துவிற்காக ‘காக்கை – நரி – வடை – கதை’ எழுதும் வெங்கடாசலபதியை காண முடிவதில்லையே? எப்பொழுது அடுத்து தென்படுவார்?

20. நாள்தோறும் ஐநூறு வார்த்தை பதிவுகளை எழுதும் தமிழ் வலையுலகத்திற்கு நடுவே, அவ்வப்போது மட்டுமே எழுதுவது ஏன்? அவ்வாறு நெடிய இடைவெளி விட்டு வெளியாகும்போது காணாமல் போகும் அபாயம் இருக்கிறதா?

21. தமிழிணையம் வாசிப்பதுண்டா? எந்த வலைத்தளங்கள் தாங்கள் அன்றாடம் செல்கிறீர்கள்?

22. Kindle, Nook, iPad என்று கையடக்கக் கணினி எங்கும் நிறைந்திருக்கும் இக்காலத்தில் தமிழில் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் குறித்த தங்கள் கணிப்பு என்ன?

23. அமெரிக்காவில் இப்பொழுதுதான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இங்கிருக்கும் அரசியல், பொது நிறுவனங்களின் கட்சி விளம்பரத்துக்கான காணிக்கை, பெரும் பொருட்செலவில் அரங்கேறும் தேர்தல் நிதிவசூல், கூடவே மக்கள் வரிப்பணமும் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கும் சட்டதிட்டம் ஆகியவை குறித்து இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

24. தங்கள் மாணவர்களின் ஆராய்ச்சிகளில் எதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறீர்கள்? அடுத்த பெரிய பிராஜக்ட் என்ன?


சிறுகுறிப்பு

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’ ‘முச்சந்தி இலக்கியம்’ போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக ‘புதுமைப்பித்தனின் சிறுகதைகளை’ கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்’ புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும்: தாழம்பூ குவாசாரும் டெலஸ்கோப் பிரும்மாவும்

அறிவியல் நிகழ்வு

2007ஆம் வருடம். அண்டவெளியில் பச்சையாக பெரியதாக மிதப்பதை கண்டுபிடிக்கிறார்கள். என்னது, ஏது எதுவும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட பூமியின் பால் வீதி அளவு கொண்டது. டட்ச் மொழியில் ‘ஹானியின் பொருள்’ அர்த்தம் வருமாறு பெயர் வைத்தார்கள்: ஹானியின் வூர்வெர்ப். இது விண்மீன் மண்டலம் கிடையாது. வெறும் வாயு மட்டுமே.

அப்படியானால் எங்கிருந்து அந்தப் பச்சை நிறம் வருகிறது?

ஹானியின் பொருளுக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தன் ஒளியை, குவாசார் அனுப்பி விட்டிருக்கிறது.

“நூறு மில்லியன் ஆண்டுகளுக்கொரு முறை முறை குவாசார் (quasar) கண் சிமிட்டும் என்று இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், இதன் மூலம் மில்லியன் ஆண்டுகளுக்கொரு தடவை என்று தெரிகிறது”, என்கிறார் கீல்.

என்.பி.ஆர்

புராணக் கதை

மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற சண்டைவந்தது. இருவரும் சிவபெருமான் முன்பு போய் நின்றனர். “உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் ஜெயிப்பவர்களே.. சிறந்தவர்கள்..” என்றார் சிவன்.

மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமான் போடும் பந்தயத்திற்காக காத்திருந்தனர். சிவன் திடீரென ஆதியும், அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியாக விஸ்வரூபம் எடுத்தார்.

“உங்கள் இருவரில் யார் என்னுடைய முடியையோ, அடியையோ முதலில் காண்கிறீர்களோ, அவரே எல்லோரையும் விட பெரியவர்” என்று கூறினார் சிவன்.

பிரம்மாவும், விஷ்ணுவும் போட்டிக்குத் தயாரானார்கள்.

“நான் சிவனின் திருவடியைக் காண்கிறேன்” என்று பெருமாள் பன்றியாக (வராகம்) உருமாறி பூமியைத் தோண்டி, உள்ளே சென்றார்.

சிவனின் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே சென்று கொண்டிருந்தது. கோவிந்தர் ஒவ்வொரு பாதாளமாக போய் கொண்டிருந்தார்.

பிரும்மா?

சிவபெருமானின் திருமுடியைக் காண்பதற்காக பிரம்மா வானுலகில் பறந்து, பறந்து சென்றார். சிவனின் திருமுடியோ அகண்ட முகடுகளைப் பிளந்து மேலே சென்று கொண்டே இருந்தது. எவ்வளவு உயரம் போயும் பிரம்மாவால் சிவனின் முடியைக் காண முடியவில்லை.

ஒருவேளை, இந்நேரம் மகாவிஷ்ணு சிவனின் அடியைக் கண்டிருப்பாரோ என்று அச்சம் வேறு. அப்போது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.

பிரம்மன் அதை தாவிப் பிடித்து,”எங்கேயிருந்து வருகிறாய்? என்று கேட்டார்.

தாழம்பூ பதில் சொன்னது. “நான் சிவனின் தலைமுடியில் இருந்து தவறி விழுந்து பல யுகங்கள் ஆகிவிட்டன. கீழேவிழுந்து கொண்டிருக்கிறேன்.”

பிரம்மா சோர்ந்து போனார். தந்திரமாய் ஒரு வேலை செய்தார். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. அதனால் தாழம்பூவுடன் ஓர் ஒப்பந்தம் போட்டார்.

அதன்படி தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு (பொய்) சாட்சி சொல்லும் படியும் தாழம்பூவிடம் கேட்டார். தாழம்பூ ஒப்புக்கொள்ள, சந்தோஷமாய் கீழே இறங்கினார் பிரம்மா.

மிக்ஸிங் ஞானம்

பிரும்மா தலையைத் தேடிப் போனது ரஜோ குணம். விஷ்ணு அடக்கமாக கீழே சென்றது – தமோ குணம்

ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம்; தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன. இந்த இரண்டிலும் கடவுளின் தரிசனம் நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் சத்வ குணத்தில் ஞானம் விருத்தி. சத்வ குண்ம் என்றால் அன்பு. அடி முடி தேடுவது என்பது இயற்கையில் பல ரகசியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. அவற்றை விஞ்ஞான பூர்வமாக அலச அலச பல புது விதமாக பிரச்சினைகள் முளைக்கின்றன. இதுவே இயற்கையின் சூட்சுமம்.