What are you doing right now? “ok – have weapon if I need it – but don’t plan on any confrontation with it – about to go in,” tweeted David Prager, an executive of Revision3, from his home at about 4 a.m. Wednesday morning. Yes, dude was Twittering while panicking, as an intruder entered his house and went into the bathroom. “This is someone who needs to get out of Silicon Valley,” says Business Insider. The dazed and confused intruder was harmless enough to try napping on Prager’s bed—as Prager’s Ustream video of the incident shows (Best line: “How did you get here? You’re a random dude in my bed.”) Call the cops? Naw. “Our array of omnipresent blinking gadgets has officially rendered us totally incapable of normal human action,” gawks Gawker. “Now we think this whole thing has to be fake. Right? Twitter makes people weird,” says Flavorwire.
Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”
Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.
Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.
1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.
அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.
அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.
இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.
எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!
மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.
ஒரு வாரம் கழிகிறது.
ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.
கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.
பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!
அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?
~oOo~
3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?
இது விவாகரத்து கேஸ்.
கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.
கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.
ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.
சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.
~oOo~
4. வாடிக்கையாளர் அட்டை
ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.
என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.
ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?
வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.
உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.
ஆல் க்ளியர்!
~oOo~
6. கூகிள் சக்தி
உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?
“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.
மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.
நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.
4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர். – narain
5. NAAN KADAVUL passed 12A: The BBFC gave the Tamil language film NAAN KADAVUL a rating of 12A on Fri, 06 Feb. This.. http://tinyurl.com/b9e4lp – bbfc
6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர் பொங்குகிறார் – Potteakadai
7. Saw Naan Kadavul. watchable once. heavy plot. too sad. his earlier three movies touched me better. bala has to reinvent his hero characters. – ravidreams / ரவி
8. found this line “Bala can ask Danny Boyle (Slumdog Millionaire director) to take a walk” in Naan Kadavul review http://tinyurl.com/csfmsb – DK
9. A H A M B R A H M A S I….. A must watch movie from Bala – anenth
10. A friend of mine whos a bigtime Bala fan watched the movie. He says the movie is a ‘Thooo’ . I’m still gonna watch it. – benly
11. Sify review – Outstanding. Indiaglitz calls it “a movie to cherish and celebrate” & says Bala’s gone to greater heights.
ஒன்பதாண்டுகள் கழிதந்த பின் திண்ணை.காம், வார்த்தை என்னும் அச்சிதழாக உருவெடுத்த மாதிரி தமிழ்மணத்தின் பூங்கா அச்சாக்கம் காண இன்னும் ஏழாண்டு காலம் காத்திருக்க வேண்டுமா? அதுவரை ட்விட்டர் பதிவர்களை விழுங்காதிருக்குமா!
கையில் நகச்சுத்தி. ஆங்கிலத்தில் நகச்சுத்திக்கு என்ன பெயர்? ஏன் எலுமிச்சை வைக்கிறோம்?
உளறல்.காம் புதிய வோர்ட்ப்ரெஸில் இயங்குகிறது. ஒவ்வொரு புதிய வெளியீட்டிலும் மிரட்டாமல் எளிதாக்கி அசத்துகிறார்கள்.
இவையெல்லாம் சமீபத்தில் ட்விட்டியது:
அக்காலத்தில் காபி கடை பெஞ்சில் இலவசமாக தினசரி படித்தார்கள். இன்றும் அதே காபி கடையில் அமர்ந்து இலவசமாக இணையத்தில் செய்தி வாசிக்கிறாங்க.
I presume Guru peyarchi is smiling on Asia and frowning on USA while utterly confused with EU.
குயிலப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்; காரை கொடுத்து தங்க நாற்சக்கர நெடுஞ்சாலையும் தந்து ஸ்பீட் லிமிட்டும் போடுகிற உலகம்!
மனக்கிலேசங்களை கருத்தாக சொல்ல விரும்பி பதிவாக்குவது இயல்பு. அப்பதிவிற்கு கேள்விகளால் எதிர்வினையும் டிஸ்க்ளெய்மர்களால் பதிலும் நிறைவது மரபு.
கம்யூனிஸ்ட்டில் ம்யூஸ் (muse) இருக்கிறது. கேபிடலிஸ்ட்டில் கேடலிஸ்ட் (catalyst) இருக்கிறாரே. முந்தையது கலையூக்கி; இது செயல் ஊக்கி?
அடுத்தவர்களின் வாழ்க்கையை ட்விட்டியே ட்விட்டாளனின் பொழுதுபோகிறது. அவர்களிடம் ‘எழுதாமல் வாழ்வாயாக’ என்று சொல்ல லௌகீகவாதிகள் மறந்துபோனார்கள்.
எதுவும் படிக்காமல் சும்மா இருந்தால் சிந்தனை ஊறுகிறது. வாசித்தால் அறிவு விசாலமாகிறது. சிந்திக்காத அறிவுக்கூர்மையா? அறிவில்லாத சிந்தனையா?
சூழலும் தூண்டுதலும் இல்லாமல் தேடல் இல்லை. வீட்டு நாய்க்கு கறி வராவிட்டால், ரெண்டே நாளில் முயலைத் தேடி வேட்டையாடும்.
கூலிக்கு மாரடித்தவனின் நிரலியை நிறுவனம் விற்று லாபமடையும். எழுத்தாளனின் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்பினால், எழுதியவனுக்கு என்ன கிடைக்கும்?
Where did மொக்கை come from? I Mock -> Mock I -> மொக்+ஐ -> 2ஆம் வேற்றுமை உருபு Object ஆனது. #Grammar
தம்மடிக்கும் போது தப்பான திசை நோக்கி பிறர் முகத்தில் புகை விடுவது போல் சாலையை கடனே என்று பார்த்துவிட்டு காரை கவனியாமல் கடக்க ஆரம்பித்தான்.
பஜாமாவிலும் பட்டன், ஜட்டியிலும் பட்டன் என்றிருந்தால், ஒரு பொத்தானை இன்னொரு குழியில் இடம் மாற்றித் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.
கன்றுக்குட்டி ‘ம்மா’ என்று கத்துவது போல் கதறலுடன் குசு ஒன்று வெளிப்பட்டது.
கனவுகள் மேஜிகல் ரியலிசமாய் இருப்பது ஏன்? ஒபாமா போல் எனக்கொரு செல்லப்பிராணி வந்தது. மீடியம் சைஸ் புலியை சிவாவா போல் கையில் கொண்ட துயில்.
கிளவுஸ் போட்டிருக்கிறவளுக்கு கல்யாணமாயிடுச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
நாலு பதிவு எழுதறத விட நாலு பாட்ட எம்பி3ஆ பகிர்ந்தால் எட்டு கமென்ட்டு ‘நன்றி’ சொல்லி வருதே. பேசாம ‘மோகன்குமார்’ ஆயிடலாமா!
ராவுக்கு என்னதான் வயித்துக்கு தீனி போட்டாலும், காத்தால எழுந்தா ஏதாவது கேட்கும். நேத்து பூ வாங்கிக் கொடுத்திருந்தா, அது நேத்தே வாடிப் போயாச்.
டிவி சீரியல் மாதிரி மத்தவன் புலம்பலைக் கேட்பது ‘following’. யூ-ட்யுப் போல் உன்னுடைய கருத்தைக் கேட்பவன் follower. நான் TiVo கட்சி
பொதுவாக என் உடம்பு இரும்பு! உன்னைப் பார்த்தால் ஆகுமே கரும்பு! எதிரிகளெல்லாம் எனக்கு துரும்பு! என்னிக்கும் வச்சுக்காதே வம்பு! #Rajni
உன் கம்ப்யூட்டரில் நான் உலாவியா? ஸ்க்ரீன் ஸேவரா? உன் உலாவியில் நான் புத்தகக்குறியா? Add-onஆ?
41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை
56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)
61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை
66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே
71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே
76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு
86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது
nchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉 …12:38 AM Nov 14th
writerpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்] …1:38 AM Nov 14th
nchokkan வை. கபிலன்(?) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா …1:34 AM Nov 14th
nchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ …1:52 AM Nov 14th
nchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉 …1:59 AM Nov 14th
vickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி !! …3:26 PM Nov 15th
வேர் இஸ் தி பார்ட்டி?
KishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது …9:54 PM Nov 17th
ஐ.எஸ்.ஓ. லொள்ளு
writerpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்? …12:32 AM Nov 18th
writerpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா? …2:27 AM Nov 17th
writerpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா? …2:26 AM Nov 17th
writerpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்? …1:52 AM Nov 17th
elavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok? …2:29 PM Oct 2nd in reply to dynobuoy
anbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி …about 20 hours ago
சட்டம் என் கையில்
srikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd …9:18 PM Nov 13th…9:16 PM Nov 13th in reply to rozavasanth
உங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க
mohandossஅன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே! …1:39 AM Nov 14th from web டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே! விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள் …1:41 AM Nov 14th
அய்யா! எனக்கொரு சந்தேகம்
ajinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார்? சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார்? பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே … …1:19 PM Nov 14th from BeTwittered
suratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது. …2:08 AM Nov 17th
surathaபுலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா? மில்லியன் டாலர் கேள்வி …about 20 hours ago
surathaபிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று …3:32 AM Nov 5th
rozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி …1:30 PM Nov 19th
rozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும். …5:08 AM Nov 19th
solitaryreaper 1.Attacks on The Hindu 2.Rajiv Gandhi statue Damaged 3.Srilankan Mission stoned 4. Swamy office vandalized 5.Two Rail Bogies set on fire .. 2:23 PM Oct 24th
nchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே …9:29 PM Nov 19th from web in reply to elavasam
கால்பந்து
nchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive …about 15 hours ago
பொருளாதாரம்
bseshadri International investors have already pulled out 1,00,000 crore Rs. in the last year out of Indian stock market. Which is the main reason behind 1 USD = 50+ INR about 22 hours ago in reply to dynobuoy
rarunach Stephen Colbert:”Arguing that regulation is not required because banks have self-interest is like arguing traffic signals are not required.” about 3 hours ago
rselvaraj I was NOT worried until the banks+401Ks started sending mail not to worry! 9:18 AM Oct 11th
nchokkan ஒரு டிஷர்ட்டில் பார்த்தது: Prove Me That Money Doesn’t Bring Happiness 1:02 PM Sep 24th
தொழில்நுட்பம்
ajinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர். …12:19 PM Sep 10th
ajinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம். …9:36 AM Sep 11th
ajinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும் …4:15 PM Sep 10th
நரி இடம் போனா என்ன? வலம் போனால் என்ன?
anathai What is right? – Dogmatic, preserve status co, exclusive, less govt, for corporate, believe birth, survival of fittest, believe subjucation 8:53 PM Nov 14th
anathai what is left? – Free, equaletarian, liberal, progressive, inclusive, for govt , anti corporate, green, believe nurture, support powerless 8:49 PM Nov 14th
அமெரிக்க அரசியல்
vikrambkumar I met an african-american who voted for McCain yesterday and a Microsoft corp strategist using gmail/ipod today. Will I see an elf 2mro? about 3 hours ago
தலித் அரசியல்
rozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து) …4:27 PM Sep 6th
தமிழக அரசியல்
nchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது …1:11 PM Sep 15th
சினிமா அரசியல்
mohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா? …2:12 AM Oct 1st
nchokkan நண்பர் சொன்ன ஜோக்(?): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉 …12:16 PM Sep 25th
அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு
Aravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..? …about 15 hours ago
தத்துவம்
ajinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான் …9:20 AM Sep 15th
ev Email: “Your domain name (twitter.com) has been found online. Please let us know your price.” (And people say we can’t make money!) about 12 hours ago
ev Dear coffee shops of America: Let’s just assume no one needs a receipt, unless we’re told otherwise. 1:02 PM Nov 18th from txt
நகைச்சுவை
gchandra A Tamilian call up sardar and asks ” tamil therima??” Sardar got mad, angrily replied…. “Hindi tera baap!!!” 1:56 PM Nov 13th from web
கவிதை
arunsundar It rains & my friend asks an old lady if she needs an umbrella. She smiles & replies “Thanks honey, I can walk between the rain drops!” 10:35 AM Nov 13th
neotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா! ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂 …2:05 AM Oct 9th
solitaryreaper I reiterate that Chess Positions are like poetry. When u understand them, you get the same ecstacy as understanding the sub-text of a poetry 1:38 PM Sep 6th
பயணங்கள் முடிவதில்லை
rozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம். …3:38 PM Nov 11th
மடப்பள்ளி
nithyas Falling in love with Brazilian coffee and drinking several cups every dayy. 3:14 PM Oct 23rd
solitaryreaper As soon as I returned from gym,I sat on the couch&requested my wife 2 bring dinner&water saying I cant walk.Consequence of exercising:-)) 9:22 PM Sep 25th
chenthil Play school fees – Rs. 7500.00 admission fee and Rs. 5500.00 term fees for a 9.00 AM-12.00 PM Montessory school. Need a loan for school fees 7:57 AM Oct 7th
ட்விட்ட ஆரம்பித்து இரண்டாயிரம் தாண்டியாகிவிட்டடது. 101 பக்கங்களில் இருந்து இப்பொழுது பிடித்து இருப்பவை.
சில வரைமுறை:
அவ்வப்பொழுது பத்து பத்தாக தொகுக்கலாம்.
சுட்டி கொடுத்து பொருள் விளக்கினால் தவிர்த்து விடேன்?
சொந்தக் கதையாக இருக்கட்டுமே!
மொழி மாற்றாதே.
School vacation week for my daughter. Looks like when I am working from home, I am more sincere to my job. Twittering is part of sincerity. 9:13 AM Apr 21st from web
Finding Nemo moment – Kids love their moms more than their dads. Can it be generalized to Indian parents or applicable only to curt dads? 12:55 PM Apr 22nd from web
Kendall square is my favorite Train station in Boston, Why? Thats where junta gets off the train and I can start to breathe. 9:17 AM Apr 25th from web
once I mixed up Hooters, crabs and lotz of beer. After that incident filled nite, I never mixed all 3 again. 3:18 PM Apr 25th from web in reply to cvalex
Sifting thru Junk mail and finding an Inbox mail is nirvana. 4:11 PM Apr 26th from web
(பின் தொடர்ந்தால்:) It is pretty difficult for the hair cutter, if you lot of spots to cover. 4:43 PM Apr 26th from web
மகளுடன் (மனைவியுடனும்) இரண்டு படங்கள் மீண்டும் பார்த்தேன்.’திருடா திருடா’ இன்னும் முடிக்கவில்லை. எஸ்.பி.பி. சீக்கிரமே நடிக்க வந்திருக்க வேண்டும்.
இருவர்: ‘இந்தப் படம் இம்புட்டு நல்லா இருக்குமா?’ என்று நான் குசேலன் பார்த்தபிறகு ஆச்சரியப்பட்ட மாதிரி மனைவி அசந்து போனாள். நிறுத்தி நிதானமாக எம்ஜியாரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆரம்பித்து ஜெயலலிதாவின் சுய வரலாறு எழுதிய கதை வரை பின்னணியோடு படம் பார்த்தாள். நிறையக் கேள்வி கேட்டாள்; நிறைய அளக்க முடிந்தது. படம் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது:
எம் ஆர் ராதா சுட்டாரா? ஏன்?
வி என் ஜானகி முதல் மனைவி இல்லையா?
மு க.வுக்கு எத்தனை மனைவி? முக முத்து படத்தில் உண்டா?
கனிமொழிக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதில் வருகிறது? என்ன அர்த்தம்?
ப்ரூக்ளின் ஆஸ்பத்திரி சென்றதெல்லாம் வரவில்லையே
ரிக்ஷாக்காரனா? கட்சி சின்னம் வருமா?
அண்ணா யார்? பெரியார் எங்கே?
ஆர் எம் வீரப்பனா அல்லது அமைச்சர்களுமா?
அஞ்சலி: மணி ரத்னம் என்றாலே போர் என்ற மகளை நிமிர்ந்து உட்கார வைத்தது. Of course, அழுது விட்டோம்.
மகளுடன் அமெரிக்க அரசியல்: பக்கத்து பென்ச் தோழி மெகயின் ஆதரவாளராம். இரண்டு காரணங்கள் – டினா ஃபே; அப்புறம் ஜான் வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கிறாராம்.
உருளைக் கறி: நாலு கிழங்கை எடுத்தோமா; குக்கரில் வேக வைத்தோமா; தோசைக் கல்லில் ரென்டு பெரட்டு பெரட்டினோமா என்பது என் பாணி. மனைவியோ மைரோவேவ் பயன்படுத்தி நாலு நாழி வேக வைக்கிறார். அதன் பிறகு தோலை உறிக்கிறார் (ஐய்யோ! அய்யய்யோ!!! சத்தெல்லாம் போவுதே); அதற்குப் பிரகு நான் ஸ்டிக் தவ்வா அழுமளவு ரோஸ்ட் நடக்கிறது. பசி வயத்தைப் பிடுங்க எந்த ஷேப்பில் காய் இருந்தாலும் கபளீகரம் ஆகிறது.
ஸீக்வல்: எனக்குத் தெரியாத டேட்டாபேஸா என்று மிதப்போடு வகுப்புக்கு சென்றால் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். கற்றது மைக்ரோசாஃப்ட் அளவு; கல்லாதது ஓபன் சோர்ஸ் அளவு!
கட்டாந்தரையில் அண்ணாமலை: ஆர்வக்கோளாறில் டென்ட் அடித்து தூங்குவது போல் மெத்தையை வீட்டு கீழே படுத்து பார்த்ததில் முதுகு பேந்துவிட்டது. அடுத்த நாள் படுக்கையில் புரண்டு கூட உறங்க முடியாத அவஸ்தை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் இதான் அர்த்தமா?
கல்யாணம், காதல்: முஸ்லீம்களுக்கு நடுவில் நிலவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்து என்.பி.ஆர் புலம்பல் கலந்த பழைய பல்லவியை ஒப்பித்தது. புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், போக்குவரத்தில் சிக்கிய காலைப்பொழுதில் கேட்டு வைத்தேன். ‘உங்களிருவருக்கும் காதல் உண்டா?’ என்று கொக்கி போட்டு தொக்கி நிற்கவிட்டார்கள். இந்தக் காதல் என்றால் என்ன?
வெள்ளி இரவு வெளியில் சாப்பிடுவது
அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்வது
அவ்வப்போது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொண்டு ஆச்சரிய சந்தோஷம் அளிப்பது
எதிர்பாராத நேரத்தில் முத்தமோ சில்மிஷமோ நடத்துவது
கண்ணீரைத் துடைத்து விடுவது
பெற்றோரை நினைத்து ஏங்க வைக்காத சூழலை உருவாக்குவது
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் என்று மறக்காதது
எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாதது
தமிழ் சங்கமும் ஹாலோவீனும்: பாஸ்டன் தமிழர்கள் மாறுவேடப் போட்டி நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சூனியக்கார கிழவியும் இளவரசிகளும் (சாரா பேலினும்தான்) ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’ சென்றால் இவர்கள் ஔவையார், கண்ணகி, வள்ளுவர், பாரதி, கட்டபொம்மன் கேட்கிறார்கள். நான் ‘பெரியார்’ ஆக போகட்டும். கவனம் திருப்புவாள் என்று நினைத்தேன். மனைவியோ ‘சிலப்பதிகாரம்’ என்று வசனத்திற்காக தேட என்னுடைய பதிவே கூகிளில் விடையாக வந்தேற ‘கொடும… கொடும என்று கோவிலுக்குப் போனா.. அங்கே’ என்று சொலவடைத்தாள்.
ஒட்டுக்கேட்டல்: அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். நான் முதன் முதலாக சென்ற உணவகத்தில் சரியான க்யூவில் நான் நின்றிருக்க, அவனோ தவறான க்யூவில் நின்றிருந்தான். கூட வந்திருந்தவள் (ஐம்பது இருக்கும்) அவனை என் பின்னே நிற்க சொன்னாள். அவர்களுடன் முப்பது பிராயத்தை பத்தாண்டுகள் முன்பு கடந்தவளும் வந்திருந்ததை என் அருகில் உள்ள இருக்கைகளில் அவர்கள் அமரும்போதுதான் கவனித்தேன்.
அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’
அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’
அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’
நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.
கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.
sureshkannan70 @bsubra //இளையராஜா இசையில் // நினைவிலிருப்பது ” உன்ன விட” (விருமாண்டி) சேதுக்கப்புறம் எதுவுமே பிடிக்கலையே? இணையத்துல உதைக்கப் போறாங்க. …about 15 hours ago
sureshkannan70பாலாவிற்கு போட்டிக் கேள்வி: ரகுமானின் இசையில் கடைசியாய் நன்றாக அமைந்திருப்பதாக தோன்றின பாடல் எது? எனக்கு ‘மருதாணி” (சக்கரகட்டி) about 15 hours ago
icarusprakash@donion even i thought so. but u shud spend some time listening to the BGM scores of julie ganapathy and athu oru kana kalam. about 14 hours ago
rarunach @bsubra My last ilaiyaraja favorite was “Onna vida” from Virumandi. (Used Imdb for ilaiyaraja’s filmography!). Kaasi, how about you? about 10 hours ago
2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது.
3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ செய்யமாட்டார்கள். “காலியான பற்பசையை இரண்டாக அறுத்து, பிதுக்கி, பாக்கி இருக்கும் க்ளோஸ் – அப்பை ‘நீ பாதி… நான் பாதி’யாக மக்கட்செல்வத்துக்கு பகிர்ந்தளித்தேன்” போன்ற பணவீக்கத்திற்கேற்ற துப்புகள் அளிக்கவேண்டும்.
4. அது என்ன ‘ஃபாலோ’ செய்வது? ஒருவரின் கொள்கையை பின்பற்றுவதா? ஆர்குட்டில் ‘நண்பன்’; ஃபேஸ்புக்கில் ‘விசிறி’; ஃப்ரெண்ட்ஃபீட்டில் ‘சந்தாதாரர்’. தளங்கள் தோறும் வாசகராக சேர்த்துக்கொள்வது வித்தியாசப்படும். அதுபோல், இன்னாரை பின் தொடர்ந்து அவரின் செய்கைகளை, தகவல்களை ட்விட்டர் கொண்டு அறிய விரும்பினால் ‘ஃபாலோ’.
5. ட்விட்டரில் தத்துவம், வாழ்க்கை அவதானிப்பு, பொதுமைப் படுத்துதல் செய்யலாமா? செய்யலாம்.
6. அது தவிர வேறு என்ன செய்யலாம்? நான் தொடரும் சிலர் எழுதியதில் இருந்து உதாரணங்கள். வலைப்பதிவுக்கு முன்னோட்டமாக சில குறிப்புகளை ரத்தின சுருக்கமாக எடுத்து வைக்கலாம். கூகிள் அரட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
7. 140 எழுத்துக்களுக்குள் என்ன கருத்து சொல்லிவிட முடியும்? நவீன உலகின் திருக்குறள் எனப் போற்றப்படுவது குறுந்தகவல். மனதில் நினைப்பதை நச்சென்று சுருக்கமாக சொல்லமுடியாவிட்டால், நாகரிக உலக வாசகரின் கவனம் சிதறிப் போகலாம். அப்படி சிதறாது என்றால், இருக்கவே இருக்கிறது வலைப்பதிவு.
8. மௌனமொழியாக புகைப்படங்களை ஏற்றுமதி செய்யலாமா? பத்ரி ஷோஜு (Shozu.com) உபயோகிக்கிறார். ஸ்னாப்ட்வீட் மற்றுமொரு புகழ்பெற்ற சேவை. செல்பேசியில் இருந்தே படங்களை அனுப்ப Twitxr -உம் உண்டு. என்னோட பரிந்துரை: ட்விட்பிக்.
9. இந்தியாவிலும் வேலை செய்யுமா? Vakow உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள். நேரடியாகவும் 5566511 அல்லது 5566595 மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றாலும் ‘வாகோவ்‘தான் இந்தியர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.
10. அப்படியானால் ட்விட்டரில் செய்தி அனுப்ப செல்பேசி அவசியம் வேண்டுமா? தேவையே இல்லை. நேரடியாக வலையகத்தில் இருந்தே குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.
11. பதிவுகளைப் படிக்க கூகிள் ரீடர், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ட்யூப்தமிழ், என்பது போல் ட்விட்டர் தகவல்களை வேறு வழியில் படிக்க, கோர்க்க இயலுமா? நீங்களே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்று ட்விட்டர் API கொடுத்திருக்கிறது. அதை உபயோகித்து பல நிரலிகள் புழகத்தில் இருக்கின்றன
ட்வீட் டெக்: புதுசு கண்ணா புதுசு; தமிழ் வராது; வகைப்படுத்தல் வசதி இருக்கிறது
ட்விட்டர் ஃபாக்ஸ்: ஃபயர் ஃபாக்சுடன் ஒட்டி உறவாடும்; நம்பகமானது இல்லை.
ட்விட்டர் பார்: இனிமேல்தான் உபயோகிக்க வேண்டும். ஃபயர் ஃபாக்ஸ் பயனர்களுக்கானது.
ட்வஹிர்ல்: உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், உபயோகத்தில் எளிதானது. பல பயனர் கணக்குகளை ஒருங்கே மேய்க்கலாம். என்னுடைய தேர்வு.
12. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இருக்கிறது. அங்கே கேட்கும் ‘What are you doing right now?’க்கு பதில் சொல்லித்தான் வழக்கம்! ஒன்றும் பிரச்சினையில்லை. இணைத்துவிடலாம்.
13. என்னிடம் ‘டைப் பேட்’ வலைப்பதிவு இருக்கிறது. இணைக்க முடியுமா? முடியும்.
14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.
15. அங்கே இருந்து ட்விட்டருக்கு வந்தாச்சு. இப்போ, ட்விட்டரில் இருந்து, ப்ளாகர், வோர்ட்பிரெஸ் போன்ற வலைப்பதிவுகளுக்கு கொண்டு செல்வது எவ்வாறு? இப்படி.
16. இது வார்ப்புருவில், பக்கவாட்டில் மட்டுமே இடுகிறது. என்னுடைய பதிவே அன்றாட ட்விட்டர்களில் இருந்து தயாராக்க முடியுமா? உங்களுக்குத் தேவை லவுட் ட்விட்டர்.
17. எனக்கு ‘தசாவதாரம்’ குறித்த தகவல் அனைத்தும் தெரிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? ட்ராக்கிங் வசதியைக் கொண்டு செல்பேசியில் ‘தசாவதாரம்’ வார்த்தை வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பெறலாம். எனக்கு சம்மைஸ் கொண்டு தேடி, தேடல் முடிவுகளின் ஓடையைப் பெற்றுக் கொள்ளுதல் தோதுப்படுகிறது.
18. அட… ட்விட்டரில் தேட முடியுமா? சம்மைஸ் கொண்டு இதுவரை கதைத்ததை தெரிந்து கொள்ளலாம். அதுதான் என்னுடைய பெரும்பாலான தேடல்களுக்கு பயனாகிறது என்றாலும், ட்வீட் ஸ்கான் கூட தேவலாம்தான்.
19. என் நண்பர்கள், எதிரிகள், முன்னாள் காதலிகளைக் கண்டு கொள்வது எப்படி? இவர்களை மட்டுமல்ல. அறியவேண்டிய சகாக்களை ட்வெலோ அடையாளம் காட்டுகிறது.
20. இவர்களை எல்லாம் பின்பற்றி என்ன பிரயோசனம். ஏதாவது சுட்டி மாட்டுமா? விஷயம் புகழ்பெறுவதற்கு முன்பே ட்விட்டரில் உரையாடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, ட்விட்டரில் அதிகம் சுட்டப்படும் உரல்களைத் தொகுத்து, தகவல் யுகத்தின் நுனிக்கே செல்லலாம்.
21. இம்புட்டு விஷயமா! எவ்வளவு தகவல் கிட்டுகிறது! ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’ என்னும் குறளை படிக்காதவங்க சிலரும் ட்விட்டரில் சுற்றுவதால் கவனம் தேவை. எளிதில் வதந்தி உலாவும் இடம் இது.
22. நான் எல்கியவாதி. ட்விட்டரின் கட்டுப்பாடுகள் எனக்கு ஒத்துவராது! யாராக இருந்தாலும் டக்கென்று பதில் வாங்குவது முதல் சட்டென்று வாசகரை கவர்ந்திழுக்க செல்பேசி புரட்சிக்கு தயாராக இருக்கோணும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde