Tag Archives: TN

What I like about Tamil Nadu?

நியு இங்கிலாந்து கலை இலக்கிய மன்றத்தின் பதினான்காவது சந்திப்பின் போது உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை அங்கீகரித்தனர்.

  1. முட்டை பரோட்டா சவுண்ட்
  2. வேஷ்டி டப்பாகட்டு
  3. தெருவோர இட்லி கடை
  4. காலை ஹோட்டலில் ஊதுபத்தி
  5. டீக்கட பென்ச்
  6. கோவில் திருவிழா
  7. காலையில் கிராமத்தில் ஃபர்ஸ்ட் ட்ரிப் பஸ்ஸில் காயகறி ஒரு டிக்கெட்டாக வருவது
  8. யாரையும் அக்கானு கூப்பிடறது
  9. ஓட்டல் ஆர்டரில் சர்வரே நாம என்ன சாப்புடனம்னு சொல்லுறது
  10. பழைய பேப்பர் கட
  11. மாட்டு வண்டி சவாரி
  12. தெருநாய்
  13. டிராஃபிக் கான்ஸ்டபிள் காடும் சைகையையும் புரிந்து கொண்டு இடிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள்
  14. வாய்க்கால்
  15. மசாலா பால்
  16. வெத்தல
  17. சிதறு தேங்கா
  18. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கும் தியேட்டரில் எப்ப வேணும்னாலும் உள்ளார போயிட்டு வரது
  19. ஆட்டோ வாசகங்கள்
  20. முட்டை போண்டா
  21. வேப்பமரம்
  22. மரத்தடி பிள்ளையார் கோவில்
  23. நுங்கு
  24. தெருவோர கட்சிக் கூட்டம்
  25. மல்லிகப்பூ
  26. சந்தைக்கு காத்திருப்பது
  27. கனகாம்பரம்
  28. பதநீர்
  29. கொடுக்காபுளி
  30. தாவணி
  31. பாண்டிச்சேரி சரக்கு
  32. பட்டுப் பாவாட
  33. சாம்பார் வடை
  34. ரயில் சத்தம்
  35. இடியாப்பம்
  36. வயலோர வெளிக்கி
  37. புளியோதரை
  38. அய்யங்கார் கோவில் தூண் பிசுக்கு
  39. அடை அவியல்
  40. அக்ரஹாரத்து மடிசார் மாமி
  41. இட்லி தோசை
  42. கொசுறு வாங்குவது
  43. அல்வா
  44. வாழைமரம்
  45. கோலம்
  46. மார்கழி மாசப் பூசணிப்பூ
  47. அய்யர் கோவில் பொங்கல்
  48. மாரியம்மன் கூழ்
  49. பன்னீர்
  50. பட்டு புடைவை
  51. வாழையில சாப்பாடு
  52. பறை சாவு மேளம்
  53. ரஜினிகாந்த்
  54. சில்க் ஸ்மிதா
  55. ரேடியோ மிர்ச்சி சுசித்ரா
  56. சரோஜ் நாராயணசாமி
  57. அண்ணாச்சி கடையில் சாக்கு மடித்து உட்கார்வது
  58. குருவி ரொட்டி
  59. ஆரஞ்சு மிட்டாய்
  60. ராஜராஜ சோழன்
  61. கல் கோனான்
  62. இலந்தை வடை
  63. கோமணம்
  64. மாடுக் கொம்புக்கு கட்சிக் கொடி வண்ணம் போட்டிருப்பது
  65. பல்லவன்
  66. தலைப்பாக்கட்டு
  67. சந்திரலேகா
  68. சுக்கா வறுவல் & ஆட்டுக்கறிக் குழம்பு
  69. பலாப்பழம்
  70. மௌன ராகம்
  71. நவ்வாபழம்
  72. ‘கொஞ்சம் கவனித்தால்’ சகலமும் நடந்தேறும் சுமூகம்
  73. ப்ளாட்பாரத்தில் கிடைக்கும் உலகம்
  74. இலந்தப் பழம்
  75. சாயந்தரம் கோவில் நடைபாதையில் சுத்தம் செய்த துணிகள்
  76. ஏவியெம்
  77. சாயரட்சை நாதஸ்வரம் & தவில்
  78. நரசூஸ் காபி
  79. பொன்னியின் செல்வன்
  80. கொழுக்கட்டை
  81. குமுதம் நடுப்பக்கம்
  82. பிள்ளையார் எறும்பு
  83. ஆடிப் பெருக்கு, ஆடிப் பதினெட்டு – சித்ரான்னம்
  84. ஏர் கலப்பை உழுதல்
  85. ம.பொ.சி. மீசை
  86. தட்டச்சு சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் கைவிரல்
  87. எம்.ஜி.ஆர் தொப்பி
  88. ரேஷன் க்யூ
  89. ஆதிமூலம்
  90. புன்னகை அரசி
  91. விவேகானந்தர் பாறை
  92. தமிழ்99
  93. பெயருக்கு முன் பட்டப்பெயர்
  94. சீரணி அரங்கம்
  95. சரோஜாதேவி
  96. டேப் ரிகார்டரில் இளையராஜா
  97. முன் ஜாக்கிரத்தை முத்தண்ணா
  98. ஆடிவெள்ளிக்காக திறந்த அரங்கில் திருமால் பெருமை
  99. புரியாத மொழியில் கோவில் கல்வெட்டு
  100. தந்தை ஈ.வெ.ரா. பெரியார் லை
  101. மொய் 101
  102. எல்லாரையும் தல போடுவது
  103. திருக்குறள்
  104. விஸ்வநாதன் ஆனந்த்
  105. கைலி
  106. கஷ்டமோ, நஷ்டமோ… ஓடோடி வரும் சுற்றுப்புறமும் சொந்த பந்தமும்
  107. உலகெலாம் பல்கிப் பெருகுவது
  108. ஸ்தோத்திரம் 108
உங்களுக்கு என்ன பிடிக்கும்?

தமிழக மீனவர் போராட்டமும் அறமும்

டுநீசியாவில் தீக்குளிப்பதால் ட்விட்டர் கூட்டம் நிறைகிறது. பிரதிபலிப்பாக, எகிப்தில் புரட்சி வெடிக்கும் அபாயம் தெரிகிறது. தொடர்ச்சியாக, சூயஸ் கால்வாயில் எண்ணெய்ப் போக்குவரத்து சஞ்சலப்படுவதால், விலைவாசி எகிறுகிறது. அதனால், பெட்ரோல் விலையை விட ஜாஸ்தியான தக்காளி, ஏரோப்ளேனில் உட்காருகிறது. ட்விட்டர் புரட்சியில் சீமானும் தமிழக மீனவருக்காக குதிக்கிறார்.

இதற்கு பட்டாம்பூச்சி விளைவை சந்தேகம் கொள்ள வேண்டாம். கேள்வி இதுதான்:

உங்களுக்கு வாக்களித்து மாற்றம் விளைவதில் நம்பிக்கையா? தன்னார்வலராக தண்டல் எடுத்து கிரியா ஊக்கி செயல்பாட்டில் ஈடுபாடா?

டுனீசியாவில் எகிப்தில் நடப்பது இரண்டாம் வகை. தமிழக மீனவருக்கு நடக்கும் போராட்டம் முதல் வகை. வினவு பதிவு எழுதுவார்; பெயரிலி மறுமொழிக் குரல் எழுப்புவார்; எஸ்.எம்.எஸ் அஞ்சல் மறுஒலிபரப்பு தொடரும்; வைகோ கடிதம் எழுதுவார்; நிருபமா நாவ் சுற்றுலா செல்வார்; பா.ம.க. கூட்டணி வைப்பார் கலைஞர்.

இது நிச்சயமாக பட்டர்ஃப்ளை எஃபக்ட்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ -> எனவே 49 ஓ போடு என்னும் ஞாநியும்; ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மாற்று அதிமுக ஜெயலலிதா மட்டுமே என்னும் ‘துகளக்’ சோ இராமசாமியும்; அறம் என்பது கூட முதலாளித்துவத்துவத்தின் இசைக்குதான் என்னும் ஜெயமோகனும் சிறு துரும்பைப் போட்டு இருக்கிறார்கள்.

நான் மிகவும் மதிக்கும் அமெரிக்க விழுமியங்களாக
i) Volunteering
ii) Aspiration
iii) Transparency
சொல்வேன்.

ஒளிக்கற்றை பேரத்தில் எவரெல்லாம் ஈடுபட்டார்கள்? யாருக்கு, எப்பொழுது காசு கொடுத்தார்கள்? ஏன் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? சட்டத்தை எவ்வாறு மாற்றலாம்? மாறுவதை எப்படி தடுக்கலாம்? – இதெல்லாம் அறிய முடிவது வெளிப்படைத்தன்மை.

எம்.எல்.சி.ஆக, உள்ளூரில் வால் – மார்ட் வராமல் வழிசெய்வது தொடங்கி, அரசாங்க பொக்கீடு பற்றாக்குறை நிவர்த்தி செய்வது வழியாக அடுத்த குடியரசுத் தலைவராவது எங்ஙனம் வரை வளர, உயர ஆசைப்பட வைத்து பாதை காட்டுவது பதவியும் பொறுப்பும் கூடிய மேன்மைத்தன விழைதல்.

அரியணையில் அமர பயமா? பணம் செலவழிக்க இயலாமையா? தன்னார்வலராக, செயல் வீரராக பயணத்தைத் துவங்க வைப்பதோடு, நேர்மைத் திறமும், நெஞ்சில் உரமும் கொண்ட சுத்தமான பயணம் மேற்கொள்ளவைக்கும் தொணடர் வழியில் ஆட்டோவும் வராது; அவப்பெயரும் தராது.

தமிழகத்தில் இயங்கும் புகழ்பெற்ற, கவனிப்பும் பெருமளவில் கிடைக்கும் சிந்தனையாளர் எல்லோருமே நிந்தனையாளராகவோ மந்தையாளராகவோ விளங்குவது இருத்தலிய பிரச்சினை. அப்படி இயங்காத, மூன்று சிந்தனையாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஊன்றுகோல் ஞாநி

கைத்தடியை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. மேடையேற சிரமப்படும் எண்பது வயது பாலச்சந்தர், இன்னொருவரின் கையைத் துணைக்கழைக்கிறார். நேரடியாக தள்ளுவண்டிக்கு மாறிவிட்டார் கலைஞர். ஞாநியின் பேச்சுக்களை அதிமுகவும் ரசிக்காது; திமுகவும் விரும்பாது.

உடனடி அரசியல் மட்டுமே ஈடுபாடு என்பதால் செய்தித்தாள் விசிறிகளின் ஹீரோ; மேக்ரோ பார்வையில் அறச்சீற்றம் என்பதால் நடுத்தர வர்க்கத்தின் ஆதர்சம்.

வழிகாட்டி சோ

ரஜினி ரசிகர் முதல் அரசியல் தரகர் வரை அறிவுஜீவியாக தோற்றமளிக்கிறார் ‘துக்ளக்’ சோ. நோ சொல்ல வேண்டிய இடத்தில் so…so…வாக மழுப்பிவிடுவதால் சோ என்பது காரணப்பெயர். வேதம் குறித்துப் பேசுவதால் இவரின் எழுத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்வோர் பலர்.

கலங்கரை விளக்கம் ஜெயமோகன்

ஞாநியின் மதிப்பீடு சின்ன கோடு என்றால், ஜெமோ, பெரிய கோடாக மேக்ரோ பார்வை. சீனாவையும் தொலை நோக்கலாம். அயன் ராண்டையும் இழுக்கலாம்.

உதாரணத்திற்கு அறம் சிறுகதையில் கூட இரு சாராரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும்.

அ) எழுத்தாளரின் ஊதியமும் பதிப்பாளரின் பற்றாக்குறையும்
ஆ) ஊழியர் கை ஓங்குவதும் பதிலுக்கு நடுத்தெருவில் சத்தியாகிரகமும்
இ) விக்கிரமன் பட உச்சகட்ட காட்சி சுபமஸ்து முடிவு

ஆனால், இன்றும் ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வதும், எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வதும், எழுதிய பிரதி ‘பத்திரமாக இருக்கிறது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, கேட்கும்போது தொலைந்து போனதாக சொல்லி விடுவதையும் நேரடியாக எழுதினால், இன்னும் உக்கிரமாக, ஒருதலை பட்சமாகி விடும் என்பதால்… இரு தரப்பையும் நேர்மையாக அணுகும் தர்க்கமுறை தேவைப்படுவதால், ‘புனைவு’ என்னும் வட்டத்துக்குள் சுருண்டுவிடுகிறார்.

நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு போல் அமெரிக்காவில் கருத்தாளர்களை ஓய்வாக சந்திக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள பல்லாயிரம் டாலர் செல்வாகும். அவ்வாறு பணம் கறக்காமல், வெகு சல்லிசாக அணுகக் கூடியவராக இருப்பவர். அப்புறம் ஏன் இதை சக்தியாக (power), கொடையாக (wealth), அறிவியக்கமாக (intellectual) மாற்றவில்லை?

ஒரு காலத்தில் காந்தி வழிகாட்டினார். அப்புறம் உதயமூர்த்தி, டாடா, டெண்டுல்கர், அம்பானி, ராகுல் என்று நெடிய பாரம்பரியம் வந்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் இலட்சிய புருஷர்கள் எவ்விதம்? நிம்மதியை நாடி எங்கே செல்கிறார்? 9 டு 5 ஜோலிகாரர், தன் சிதறுண்ட கவனத்தையும் தவிக்கும் சிந்தையையும் எவ்வாறு நெறியாள்கிறார்?

1. கார்பரேட்/கமண்டல சாமியார் (நித்தியானந்தா, ஜக்கி, சங்கர மடம்)
2. படைப்புலக கர்த்தா (ஜெய மோகன், சாரு, ‘எந்திரன்’ ஷங்கர், பட்டிமன்ற லியோனி)
3. கேளிக்கை (ஃபேஸ்புக், விளையாட்டு, குடி)

இப்பொழுது தமிழ்நாடு மீனவர் கேப்பிடலிசத்தின் செல்லப்பிள்ளை. வெப்சைட் துவங்கலாம். தமிழக மீனவர் ஃபேஸ்புக் சுயவிரும்பிகளின் இலட்சிய வார்த்தை. கவனிப்பு கோரும் விளையாட்டு. குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின் அளவுகோல்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. Ethics – India Calling: An Intimate Portrait of a Nation’s Remaking By Anand Giridharadas
2. தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்

கலைஞர் மு கருணாநிதியும் தர்மதுரை ரஜினிகாந்த்தும்

Original

கலைஞர் கருணாநிதி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி (2010)

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் நம் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
ஆசை மட்டும் போவதில்லை
அடிக்கும் பணம் ஓடிவிடும் பதவி விட்டுப் போவதில்லை

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தாலும் சொத்து சுகம் தேவையிங்கே
ஆட்சி விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே
பா.ம.க. மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சாலும் நாற்காலி சுகம் போல் ஏதுமில்லே

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமுண்டு
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

 

Mylapore Kapaliswarar Temple Golu: Navarathri Celebrations

Chennai Golu: Navarathri Greetings

Golu Photos - Tamil Nadu: Navarathri: Dussehra in Chennai

கந்தசாமி: பாடல்

Related Song Lyrics from Kandhasamy: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை?

Araleya-Cats-Dogs-Lick-Flickr-Images-Cleanமில்க்கை தேடும் பூனை
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை!

1. நம் இதயம் ஒண்ணு
2. நம் உடல்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

1. உன் பார்வை ஒண்ணு
2. அதில் அர்த்தம் இரண்டு
3. அது சொல்லத் தூண்டும் வார்த்தை மூணு

~oOo~

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு நான் புதுசு

மோதலுக்கு நான் பழசு
காதலுக்கு நான் புதுசு

1. நம் மெத்தை ஒண்ணு
2. அதில் தூக்கம் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

1. உன் இடுப்பு ஒண்ணு
2. அதில் உடுப்பு ரெண்டு
3. அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

~oOo~

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு

ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

1. நம் முத்தம் ஒண்ணு
2. அதில் எச்சில் ரெண்டு
3. அந்த போதையில் மறக்கும் காலம் மூன்று

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் தேனீ ரெண்டு
3. கொட்டும் நானே ஹனி மூணு


இந்தப் பாட்டை மாற. உல்டாப்பா குழந்தைகளுக்கு பாடினால்:

vivetmart_Flickr-Yokviv_Photos-Cats-Dogs-Bulldogலொள் லொள் நாய்
அட…
லொடக்கு இல்லா நாய்
காவல் காக்க நிக்கறியே
காலங்கார்த்தால டோய்

எலும்பைத் தேடும் நாய்
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
ஓநாய் மேல பொய்!

1. நம் மூக்கு ஒண்ணு
2. நம் மோப்பம்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா பிடிப்போம் தாணு

1. உன் முகரை ஒண்ணு
2. அதில் கண்ணு இரண்டு
3. அது கவனிக்காட்டா ஆகும் காலு மூணு

~oOo~

திட்டலுக்கு நான் பழசு
இலக்கியத்துக்கு நான் புதுசு

பொட்டைக்கு நான் பழசு
கொட்டைக்கு நான் புதுசு

1. நம் வண்ணம் ஒண்ணு
2. அதில் காந்தல் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் முகப்பூச்சு மூனு

1. உன் வாலு ஒண்ணு
2. அதில் கருத்து ரெண்டு
3. அதில் பேப்பர் போட்டா அர்த்தம் ஆகும் மூன்று

~oOo~

ரேபிஸுக்கு லீவு கொடு
ரேப்பிஸ்ட்டுக்கு நோவு கொடு

போகரை தூர விடு
சேகரோடு சேர விடு

1. நான் வளர்ப்பது ஒண்ணு
2. அதில் லாபம் ரெண்டு
3. பசிச்சா வாய்க்குள் பறந்துபோகும் காணு

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் சேஷ்டை ரெண்டு
3. கொட்டும் பேஷ்டை மூணு

~oOo~

Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

நன்றி: விவசாயி

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எளந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..

இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, நல்ல புருசன், கள்ளப்புருசன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,கொழுந்தியா, மூதாரு, பாட்டி, போட்டி, அக்காப்பொண்ணு, அத்தைப் பொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல,சம்பந்தி, முறை மாமன், முறைப் பொண்ணு, தலைச்சன் புள்ளை, இளைய புள்ளை,மூத்த தாரம், இளையதாரம், தொடுப்பு, ஒன்னு விட்டது, ரெண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்…

இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெயிலியர், எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், பட படப்பு,பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுத்தல், பொறாமை, கிண்டலு, எளப்பம், எச்ச புத்தி, இறுமாப்பு, சகுனி வேலை, சதிச்செயல் ,கோல்மூட்டல், குறுக்குப்புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய், புளுகுமூட்டை, டகுல் வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து,கொள்ளிக்கண்ணு, குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊள உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜக்கடித்தல்,திருட்டுத்தனம், தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு

குப்புசாமி, கோவிந்தசாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராசாமி, கண்ணுசாமி, கருப்பசாமி, மலைச்சாமி, பழனிசாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுசாமி, அழகுசாமி, அப்பாசாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவசாமி, சீனுசாமி, சடையசாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரைசாமி, பொன்னுசாமி, அய்யாசாமி, அண்ணசாமி, நல்ல சாமி..

இதெல்லாம் டூப்பு, கந்தசாமி டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, கந்தசாமிதான் டாப்பு

சென்னை இராஜாங்கம்: V

அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.

H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே

சென்னை ராஜாங்கம் – 2

நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.

கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.

நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.

உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.

வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.

1. What Makes Us Happy? – The Atlantic (June 2009): “Is there a formula—some mix of love, work, and psychological adaptation—for a good life?”

2. What You Don’t Know Makes You Nervous – Happy Days Blog – NYTimes.com: “Happy Days is a discussion about the search for contentment in its many forms — economic, emotional, physical, spiritual — and the stories of those striving to come to terms with the lives they lead.”

‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.

Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.

‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.

Where-is-prabhakaran-LTTE-Nakkeeran-Cover-Storyதமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.

1. உயிருடன் உள்ளார் பிரபாகரன்

2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்?

3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?: பி.இரயாகரன்

கடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:

TV Artists Union President passed away. http://bit.ly/vo1ud
12:06 PM May 19