ஹாலிவுட்டில் சமீபத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடைபெற்று சமாதானம் ஆகி முடிவுக்கு வந்தது. அதற்கு பல மூல காரணங்கள் இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த காரணம்:
“புஷ்கர் – காய்த்ரி” போன்று சுழல், வதந்தி போன்ற குறுந்தொடர்களைத் துவக்குபவர்கள், அந்தத் தொடரின் கடைசி பாகம் வரை, உறுதுணையாக கவனம் செலுத்தி, திரைக்கதைக்கு பக்கபலமாக நின்று; இறுதியாக வெளியிடப்படும் பிரதியிலும் — தங்களின் முத்திரை பங்களிப்பை நல்குவார்கள்.
இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. எனினும் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது.
துவக்கம் அமர்க்களமாக இருக்கும். அதன் பிறகு, அடுத்தடுத்து சில பளிச். பின்… எப்படி தொடர்வது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “பாதாள் லோக்” (Paatal Lok – அமேசான் ப்ரைம்) எப்படி முடிப்பது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “ஹ்யுமன்” (Human – டிஸ்னி+ / ஹாட்ஸ்டார்)
எனினும், பெரும்பாலானவை முதல் பகுதியை ஒட்டியே செல்லும். சடாரென்று திசை திரும்பாது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயக்குநரால் கொணரப்பட்டாலும் அந்தத் தொடரிழை அறாது தொடரும்.
இதற்கு சிறந்த உதாரணம் – பஞ்சாயத் (Panchayat – அமேசான் ப்ரைம்)
உங்கள் மனதில் ”சேக்ரெட் கேம்ஸ்” (Sacred Games – நெட்ஃப்ளிக்ஸ்) நிழலாடுவதை உணர்கிறேன். அது எல்லாத் தொடருக்கும் பாட்டி. அதைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அந்தத் தொடர் ஒரு தனித்துவமான முயற்சி. அது இந்திய மக்களை, பெருங்கூட்டத்தை, பார்வையாளர்களைச் சென்றடடைந்ததா என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு செட்ஃப்ளிக்ஸும் விழித்துக் கொண்டுவிட்டது.
இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் டிவியில் வரும் நெடுந்தொடர் எல்லாமே ஒரே வார்ப்புரு — பழைய சோற்றில் ஒரே மாதிரியான சோடையான வடகறி சம்பவங்களைக் கொண்டு காய்கறியாக நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எவ்விதச் சுவையும் ரசனையும் இல்லாமல் உவ்வேக் என ஓட வைக்கிறார்கள்.
ஆனால், அமேசான் ப்ரைம் ஒவ்வொரு சீரியலிலும் “அட… பேஷ்!” போட வைக்கிறார்கள். காதல், இந்துஸ்தானி, நிஜ நாடக ரியாலிடி டிவி என அரைத்த மாவாகும் அபாயம் இருந்தாலும் ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) எட்டிப் பார்த்த போதெல்லாம் புன்முறுவலையும் துருபத் ஆலாபனையையும் கவனிக்க வைத்தது.
இவ்வளவு பீடிகை எதற்கு?
பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ‘குட்நைட்’ மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், “மத்தகம்” – நெட்ஃப்ளிக்ஸ் தொடர் போன்று பல்லிளிக்கும் பித்தளையாகாமல், பிரைம் டிவி தொடர் போல் ஜொலிக்கிறது.
இதில் வரும் கதாபாத்திரங்களை ரொம்ப நாளாக பார்த்து வருகிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் வில்லன்களாக. பா. ரஞ்சித் படங்களில் கதாபாத்திரங்களாக. மேலும் வடசென்னை மண்ணின் மணம் கமழும் படங்களில் நாயகர்களாக. மத்தகம் தொடரில் இவ்வளவு அதிகமாக தேய்வழக்காகி விட்டவர்களை புத்தம்புதிய முலாம் பூசி ஒவ்வொருவருக்கும் முன் கதை சுருக்கம் கொடுத்து, பொருத்தமான முகவெட்டும் உடல்மொழியும் ஆடை அணிகலனும் போட்டு நம்ப வைக்கும் திருப்பங்களில் உபயோகிக்கிறார்கள்.
இளவரசு, வடிவுக்கரசி, டிடி திவ்யதர்ஷினி, நந்தினி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் என பல தெரிந்த முகங்கள். பொருந்தி நடிக்கிறார்கள். இனி இவர்களில் சிலரை, ‘மத்தக’த்தில் நடித்தாரே என்று சொல்லும் அளவு இயல்பாக வந்து போகிறார்கள்.
வெப் சீரீஸுக்கேயுரிய இழுவைகள் உண்டு. தமிழ் சினிமாவுக்கேயுரிய மாறா குணச்சித்திரங்கள் உண்டு. இருந்தாலும், இவர்களின் இருளுலுக்கிற்குள் எழுத்தின் வழியாக சென்றவர்கள் குறைவு. பா. ராகவனின்ஓரிரண்டு நாவல்களில் சற்றே உள்நுழையலாம். அதன் பிறகு இந்தத் தொடர்.
சரி… ‘விக்ரம் – வேதா’வை எதற்கு இதில் இழித்தேன்? அந்தப் படத்தின் பாணியில் இரண்டு முக்கிய நபர்கள். இருரையும் நேர் எதிராக நிறுத்தி அவர்களுக்கிடையிலான திருடன் – போலீஸ் கதை அமைத்து, இருவருக்கும் சரியான போட்டியாக அமைத்தது இந்த ‘மத்தக’த்தை ரசிக்க வைக்கிறது.
நாயகர் காவல்துறை அதிகாரிக்கு மனைவி மேல் பெரிதாக பாசம் இல்லை. அல்லது, மனைவியாகி விட்டார் என்பதால் குடும்பத்தில் ஏற்படும் அசுவாரசியம் எனலாம். இன்னொரு பக்கம் வில்லனுக்கு காதலி மட்டுமே இலட்சியம். அவளுடன் அமைதியாக வாழ்வதிலே நாட்டம். உருகோ உருகு என்று பாசமழையைக் கொட்டுகிறார்.
இந்த மாதிரி முரண்கள் நிறைந்த நிழலுலகத் தொடர். பாரதிராஜா முடிவிற்குள் அகப்படாமல் இருப்பாராக என எல்லாம்வல்ல பாடிகாட் முனியை வேண்டுகிறேன்.
The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)
Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.
இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்
1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.
3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்
4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.
5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.
6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦
தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”
பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.
பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.
மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.
இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல வேளை.
‘கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:
மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்
1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”
2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.
புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.
இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”
இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?
பாலியல் குற்றவாளி – Sex Offender
சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.
மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்
அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.
ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்கஎன்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.
‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.
‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.
தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்
பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.
2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.
3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?
3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”
பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!
நான் அமெரிக்கா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு ஏர் ஃபிரான்ஸ் விமானம் நடுவானில் காணாமல் போனது. என்னை வழியனுப்ப, சொல்லிக் கொள்ள, ஆசீர்வதிக்க வந்த அனைவருமே, ஏனோ இந்த செய்தியை எனக்கு சொன்னார்கள்.
எங்கள் வீட்டிலும் தி ஹிந்து வாங்குகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேச்சைத் துவக்கினார்கள்.
நானும் அவர்களுக்கு அமெரிக்க மாமா கதையை அலுக்காமல் சொல்லி ஆறுதல் அளித்தேன்.
ஹைவேயில் வேகமாகப் போகிறோம். சடாரென்று கொஞ்ச தூரத்தில் போலீஸ் கார் தென்படுகிறது. ஒன்றும் தெரியாத பூனைக்குட்டி போல் இரண்டு அப்பாவி கார்களுக்கு நடுவில் சொருகிக் கொண்டு, பம்மி, பாவனையாகக் கடக்கிறோம்.
அடுத்த பத்து, இருபது மைல்களுக்கு கவலை வேண்டாம். உடனடியாக இன்னொரு காவல்துறை வண்டி இருக்காது. திருப்பத்திற்கொரு போக்குவரத்து காவலர் இருக்கமாட்டார் என்பது விதி அல்ல; சம்சயம்.
அதே போல் காலாண்டுக்கு ஒரு விமான விபரீதம்தான் நிகழும் என்பது ஒருவிதமான மனப்பிராந்தி ப்ராபபிளிடி.
ஆனால் விதி வலியது.
இப்படி நினைத்து வேகமூட்டும்போது, கையுங்களவுமாகப் பிடிக்கப்பட்டு $300 தண்டம் அழுததுண்டு.
சாமான் வாங்கிவர சந்தைக்கு செல்லும் வேலைக்காரர் அரக்க பரக்க ஓடி வருகிறார்.
‘பெண்ணைக் கண்டேன்… பேயைக் கண்டேன்’
‘ஒழுங்கா சொல்லுடா!’
‘நீ சாவப் போறேன்னு மரணதேவதை சொல்லிடுச்சு. நான் ஓடி ஒளியணும்.’
அந்தக்காலத்தின் அதிகாரபூர்வ நடராஜா சர்வீசுக்கு பதிலாக, தன் குதிரையைக் கொடுத்து வேலைக்காரரை எழுபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் சமரா நகருக்கு துரிதகரமாக அனுப்பி வைக்கிறார் வியாபாரி.
அப்படியே சந்தைக்கும் சென்று காலதூதரை கண்டுபிடித்து ‘ஏன் சின்னப் பையனை பயமுறுத்தினாய்?’ என்று குறுக்கு விசாரணையும் நடக்கிறது.
‘இன்னிக்கு ராத்திரி அவனை சமராவில் நான் கொல்லணும். இன்னும் இங்கேயே இருந்தா எப்படி! அதனால்தான் போக வைத்தேன்…’ என்கிறது எமன்.
சின்ன வயதில் இந்த மாதிரி கதையொன்றை இந்து மதக் குறியீடுகளைக் கொண்டு கேட்ட ஞாபகம்…
சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
‘நாளை வருவேன்’ என்று விநாயகரிடம் சனி ஏமாந்ததும், ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர்களும் தவிர இப்படி துரத்தி செலுத்தப்பட்டவர் எவரேனும் இருக்கிறாரா?
சென்னை எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் முன்பெல்லாம் மணல் இருக்கும். இப்பொழுது சிறிய மீன்களும், செதில்களும், இருக்கின்றன. மணல் வீட்டுக்கு பதிலாக leftover மீன் குழம்பு வைத்து சிறார் விளையாடுவார்.
காலையில் தெரிந்த முகத்தினரின் அணிவகுப்பு சொல்ப அதிகம். தாமதமான ஏழரைக்குக் கூட சாருஹாஸன், செய்தி வாசிப்பாளர், நெடுந்தொடர் தம்பதியினர் கூட்டம்.
கூட்டுத்தொழுகை, பிரார்த்தனை க்ளப், அரசியல் பேச்சுக்கு வரும் லாரிக் கூட்டம் போல் ஒரு சேர உடற்பயிற்சி பாவ்லா காட்டுவது தமிழருக்கு மனமகிழ்வு தருகிறது. முகமன் கூறிக்கொள்கிறார்கள். சேர்ந்து இளநீர் சாப்பிடுகிறார்கள். நேற்றைய செய்தியைத் தாங்கிய ‘தி ஹிந்து’வை உரையாடி மகிழ்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர், குறுஞ்செய்தி என்று குறுகி, தொடர்பை கைவிட்ட தலைமுறை அல்ல அவர்கள். கூட்டுப்புழு சமுதாயத்தில் நேரடி சந்திப்பை மதிப்பவர்கள்.
மதியம் மனமகிழ் மன்றத்தில் கேரம், மாலை கன்ட்ரி க்ளபில் ஐபிஎல்லுடன் ராயல் சேலஞ்சர் என்று வழக்கப்படுத்திக் கொண்ட உயர்வட்ட கூட்டம். காலையில் ஐஸ் ஹவுசில் இருந்து லைட் ஹவுஸ் வரை நடந்துவிட்டு பதநீர், இளநீர், வறுகடலை, தர்பூசணி, கிர்னிப்பழம் என்று அப்பிடைசர் அருந்தி, ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் மசாலா தோசையும் பூரி மசாலாவும் அடித்து துவம்சிப்பவர்கள்.
பாரம்பரிய லுங்கி முதல் மாறனின் அதிகாரபூர்வ ஆடையான பருத்தி அரைக்கால் சட்டை வரை எல்லாவிதமும் பார்க்கக் கிடைக்கிறது. தொடையோடு இறுக்கமான ஷார்ட்ஸ், டெரிலின் ஷர்ட் + முழுக்கால் சட்டை என்று டை கட்டாத குறையோடு தங்கள் நாகரிக அனுபவத்தை பறை சாற்றுபவர் அன்றாட வரவு போல் அத்யந்தமாக சூரிய நமஸ்காரம் செய்கிறார். குர்தி & நீல ஜீன்ஸ் அணியும் ஒருத்தரே ஒருத்தரும் வந்திருந்தார்.
பெண்களுக்கு 33% சதம் வேண்டாம். 3% கூட தேறமாட்டார்கள். ஓடுபவர்கள் 1%. ஓடுபவர்களை விட குதிரை போலீஸ் அதிகம். பீச் ரோடில் இருந்தே பார்த்தசாரதி அழைக்கிறார். கூடிய சீக்கிரமே மேல்மருவத்தூர் சக்தி பீடம் பிரான்ச், சத்யசாய்பாபா சத்சங், காஞ்சி ஜெயேந்திரர் மட கிளை எல்லாம் அலங்கார வளைவுடன் அரோகரா போட வைக்கலாம்.
தம்பதியினருக்கு பாந்தமான இடம். பிரச்சினைகளை மனம்விட்டு பேச காலைப் புத்துணர்ச்சியுடன் தனிமையும் கிடைக்கும் இடம். கூட்டுக் குடும்பத்திலிருந்து தப்பிக்க தினசரி தேனிலவு தரும் தலம். நிறைய நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்ட மாதிரிதான் தெரிகிறது.
அமெரிக்காவின் கடற்கரையை எதிர்நோக்கும் சாலைகளில் பல்வேறு பொருளை விற்கும் பேரங்காடி வணி வர்த்தக மையங்கள் நிறைத்திருக்கும். இல்லையென்றால் விநோதமான வடிவமைப்புடன் ஏதாவது பெருநிறுவனம் 99 வருட குத்தகை எடுத்து 98வது மாடியில் போர்ட் மீட்டிங் நடத்திக் கொண்டிருக்கும். அதுவும் லேது என்றால், மடோனாவும் மரியா கரேவும் குடித்தனம் செய்யாமல் காலியாகப் பூட்டி வைத்திருக்கும் மாட மாளிகை அமைந்திருக்கும். இங்கே அரசினர் கட்டிடங்கள், முக ஸ்டாலின் புகுந்து தடுத்தாட்கொண்ட இராணி மேரி கல்லூரி, மாணவர்களே பூட்டிக் கொள்ளும் பிரெசிடன்சி காலேஜ். தொட்டுக்க அரசினர் முன்மாதிரி (மாடல்) மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.
கோவிலுக்கு சென்றால் இதே நடை பயிலலாம். இன்னும் உக்கிரமாக, வேகமாக புண்ணியம் வரவழைக்கும் வீரியத்துடன் சுழலலாம். ஆனால், சுலோகமோ, நாமாவளியோ முணுமுணுக்க வேண்டும். நாலாவது வெளிப்பிரகார சுற்றுக்குப் பின் ‘என்ன வேண்டுதலோ?’ என்று மூணாம் வீட்டு பச்ச கேட் மாமி கண்ணால் விசாரிப்பாள். எட்டாவது சுற்று முடிந்தவுடன் ‘என்னடீயம்மா பிரச்சினை?’ என்று நேரடியாகவே பிக்கல் பிடுங்குவாள்.
பீச்சில் அதெல்லாம் கிடைக்கமாட்டாது.
சென்னையின் முக்கிய சாலைகளில் நடக்க இயலவில்லை. எப்பொழுதுமே பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தராத நகரம். நடராசா சர்வீஸில் செல்பவர்களை கீழே வீழ்த்துவது இருசக்கர வாகனவோட்டிகளின் முக்கிய கடமை. இப்பொழுது அது நாற்சக்கர காலம். ஹோண்டா சிடியும் டொயோட்டா இன்னோவாவும் ஸ்கோடாவும் முட்டி மோதி விளையாடும் 99.999% ஸிக்ஸ் ஸிக்மா சென்னையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் மெரினா வாக்கிங்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde