பழம் நழுவி பாலில் விழுந்து நான் பார்த்தது இல்லை. ஆனால், தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கும் வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.
முள்கிரீடம், அம்பு படுக்கை, பாம்பு புற்று மேல் அரியாசனம் – இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்தப் பதவி அப்படிப்பட்ட பதவி.
சனி வக்கிரமாகி குரு நீசமாகி கஷ்டதசையில் அமெரிக்கா வலம் வந்த காலம். கடந்த தடவை பொருளாளராக பதவி வகித்தவர், அவருடைய வீட்டிற்கு செய்த சிசுருஷைகள் கண்டு சுற்றுப்புறத்தாரும் அண்டைவீட்டாரும் பொங்கி எழுந்த காலம். பசும்புல்லின் வளர்ச்சி ஆறரை இன்ச் அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறுபது டாலர் அதிகம் தர விரும்பாத காலம்.
நிதிப் பற்றாக்குறை, கூட்டுக் களவாணி ராஜ்ஜியம், கொள்ளையடிக்கும் நிர்வாகம் எல்லாவற்றையும் தனி மனிதனாக தட்டிக் கேட்க புறப்பட்டேன். குலதெய்வங்களான இண்டெர்னெட் போராளி வினவு, சிறுபத்திரிகை தீவிரவாதி செயமோகன், சினிமா தளபதி விஜய் எல்லோரையும் வணங்கி வீராவேசமாக உள்ளே புகுந்தேன்.
சினிமாவை விமர்சிப்பது சுலபம். எடுப்பது கஷ்டம் என்பது போல் வரவு செலவு கணக்கை லகானுக்குள் அடக்குவது பெரிதினும் பெரிய கஷ்டம்.
ஒரு பக்கம் எங்கள் வீட்டில் கூரை ரிப்பேர். வாசலில் பூசணிப்பூ முளைக்கவில்லை. அண்ணந்து உயர்ந்த மரம் எங்கள் தலையில் விழுவதற்கு முன் நீக்கு. சிறார்கள் விளையாட பூங்கா அமை. சூப்பர் ஃபாஸ்டாக ஓட்டுபவர்களை மிதவாதியாக்க வேகத்தடை வை என்று விண்ணப்ப மயம்.
இன்னொரு பக்கம் எதிர் வீட்டு நாய் என்னைக் கடிக்க வருகிறது. பச்சை கேட் மாமி என் வீட்டை எட்டிப் பார்க்கிறாள். அவர்கள் சமையலில் இந்திய மசாலா என்னை குமட்ட வைக்கிறது என்று புகார் மயம்.
‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வந்து இரு பக்கமும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம். விசுவை அழைத்து வந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று நாடகம் போட வைக்கலாம். குறைந்த பட்சம் மணி ரத்னம் வந்தால் ‘அஞ்சலி’யாவது எடுப்பார்.
எங்களுக்கு எடுபிடியாக வேலை செய்யும் ப்ராபெர்டி மேனேஜரும் லேசுப்பட்டவர் இல்லை. எலெக்ட்ரிசீயன் பல்ப் மாற்றினதற்கு ஐநூறு டாலர். புல் பிடுங்கியதற்கு ஆயிரம் டாலர் என்று செமையாக கணக்கு காட்டிக் கொண்டிருந்தார்.
தட்டிக் கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மனாக, ‘எங்களுடன் வயலுக்கு வந்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா? அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா?’ என வக்கணையாக பேசினார்.
அவ்வாறே கேட்டதெற்கெல்லாம் இல்லை, முடியாது, இயலாது, இப்பொழுது நேரம் சரியில்லை, அப்புறம் பார்க்கலாம், ஆகட்டும் யோசிக்கலாம் என்று மன்மோகனாமிக்ஸ் கடைபிடித்து மௌனம் சாதித்தேன்.
அப்படியும் ஏதாவது கூடி வரும் போல் தெரிந்தால், ஷரத்து போட்டாச்சா, அந்த வேலை செய்வேன் என்றாரே… அது காண்டிராக்டில் இல்லையே என்று ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடித்தேன்.
இப்படியாக ஈராண்டுகள் இனிதே கழிந்தன.
சுத்தமான கை. கறாரான நடவடிக்கை. கண்கட்டி பாம்பான இறுக்கிப்பிடி பட்ஜெட். இம்மியளவும் இடம் கொடுக்காத மேற்பார்வை. எனக்கே மூச்சு முட்டுமளவு மைக்ரோ…அல்ல… நேனோ மேனேஜ்மெண்ட்.
நல்ல வேளை. என் கீழே பணியாளர்கள் யாரும் அலுவலில் வேலை பார்க்கவில்லை. ஒரே வாரத்திலோ, ஒரே நாளிலோ ஓடியே போயிருப்பார்கள்.
ஆனால், இடை விடாத கேள்விகளும், அந்த கேள்விகளுக்கான விடைகளிலும் சில விஷயங்கள் புரிந்தன.
முக்கியமான மூன்றை மட்டும் பட்டியலிடலாம்.
முதலாவதாக, ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு லட்சியம்தான். தங்கள் வீடும், தங்கள் வீட்டின் சுற்றுப் புற பசுமைகளும் சிறப்பாக கவனிக்கப் பட வேண்டும்.
கூடவே காசும் பார்க்க வேண்டும். மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா, தேவாலயத்தில் கூட தொழும் தோழர் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை பிடித்து தரவேண்டும்.
கடைசியாக தெரிந்து கொண்டது: நியாயமாகவும், நிதானமாகவும், துளி நகைச்சுவை உணர்வுடனும் செயல்பட்டால், சங்கடமான வினாக்களையும் இயல்பான பட்டிக்காட்டான் போன்ற அக்கறையுடன் எழுப்பினால், அனைவரையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினரையாவது தன்மயமாக்கலாம்.
பதவிக்காலம் போன வாரத்தோடு முடிவிற்கு வந்தது. ஆசை என்னை விடவில்லை. மறுபடியும் நிற்கத் தூண்டியது. ஜெயிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.
இருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகினால், ஆடுகளத்திற்கு போகாத சேவலாக கருதப்படுவேன் என்னும் சுய அபிமானம் கலந்த பெருமிதம் வேறு நெய் ஊற்றி வளர்ந்தது.
ஐந்து பேர் குழுவிற்கு எட்டு பேர் போட்டி. எதிர்த்து நின்றவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். எனக்கோ, ‘இல்லை… இல்லை’ என்று சொன்னவர்களிடம் போய் நிற்பதா என்னும் நம்பிக்கையான அச்சம், படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரை துணைக்கு அழைத்தது.
அப்பொழுதுதான் ஒபாமாவை நினைத்தால் பெருமையாக இருந்தது. சுற்றிவர அவரை கெக்கலி இடும் ரிபப்ளிகன் காங்கிரஸ். ஒரு காரியத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடும் குடியரசு கட்சி எம்.பி.க்கள். அப்படி இருந்தும் மீண்டும் வாக்கு கேட்கிறார்.
‘ஒன்றுமே செய்யவில்லை’ என்று சொல்வோரிடம் செய்ததையும் செய்யாமல் விட்ட போர்களையும் விளக்குகிறார். அதற்கு தன்னம்பிக்கையும் வேண்டும். செயலூக்கமும் வேண்டும். போயும் போயும் உள்ளூர் சங்கத் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது ரொம்பவே அதிகம்தான். எனவே, நான் ஒபாமா போல் திண்ணக்கமாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.
தேர்தல் நாளில் பதற்றமாக இருந்தது. தோற்றவுடன் முகத்தை எவ்வாறு புன்முறுவலுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகினேன். கூட உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றியுரையை தயாரித்தேன்.
எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு நிஜமாகவே துடிப்புடன் கூடிய ஆர்வம் மிகுந்தது. இனி முழு வேகத்துடன் தட்டிக் கேட்கலாம். கடுமையாக புழுதி பறக்க தொடை தட்டி முழங்கலாம். உள்ளே நடந்த குழாயடித் தகராறுகளையும் தகிடு தத்தங்களையும் வெட்ட வெளிச்சமாக்கலாம். எல்லோரின் சங்கதியும் அம்பலம் ஏறும். என் கை மட்டுமே சுத்தமான கை என்று அன்னா ஹசாரேயாக அலம்பல் செய்யலாம்.
நான் மீண்டும் ஜெயித்தவுடன், ‘என்னை அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே’ என சொல்லவில்லை. ஆனால், அடுத்த எலெக்சனுக்குள் தனி வளை பார்த்து போய் சேரவேண்டும்.
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
Laichana Laichana Ithay
Lavangam Lavangam Kaadichana
Inichana Inichana
Vaai Madalil Kadala Thanichanaa
Køzhukana Møzhukana
Nalla Payuthu Payuthu Thalukanaa
Èlachaana Køzhachaana
Rømba Šethuki Šethuki Ozhachana
Nee Šengiskana Ini Un Kiss Thana
Naan Mangøøse Thanaa
Un Kayil Kachakasthana
Irukaana Idupirukaana Illaiyana Illiyana
Un Èdaithaanaa Inba Kadaithanaa
Mel Èdaithandi Kudaithanaa
Ada Ikani Mukani Mugadu
Naan Thutha Naga Thagudu
Un Uthatukul Èthana Uthadu
Onnu Kudu Kudu
Adi Anjana Manjana Mayilu
Nee Kanjan Janga Railu
Un Iduppae Aaram Viralu
Nee Killu Killu
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
====================
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
Dance by youth members from North Carolina, Wisconsin, Connecticut, Virginia, and Maryland performing to parts of various Tamil kuthu songs such as “Sonna Puriyathu,” “Kalasala,” “Kadhal Vandhale,” “Irukaanaa,” “Pidikale,” “Mannarkudi,” and ending with beat segment from “Dia Dole” song. Performed at FeTNA Silver Jubilee Convention at Baltimore, MD.
kallaasala kalasala.. kalaasala kalasala
vadake ketu paaru enna pathi solluvaan
jardha beeda pole en perathaan melluvaan
Vidya Vandana Singing – Nee Ninaindhaal at FETNA 2012
வித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா!
ஆடல் கலையே தேவன் தந்தது
’அது… இது… எது!’ சிவகார்த்திகேயன்
நீயா… நானா! அரட்டை அரங்கம்
பரதநாட்டியம்
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.
வீணை இசை
Dance Program – Nannarae Nannarae
இளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது! இடி இடிக்குது!! வேட்டைக்காரன்!!!
தமிழிசை
FETNA 2012 Charlotte Silambam
மேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae
Thanthana Thana Thanthana…
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
———————————————————————————————————
ஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..
பொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
ஏ சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஏ வேட்டி கட்ட பிடிக்கல
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல
எனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இணையத்தில் தேடினால், ‘Whats the worst that could happen’ என்று விளக்கும் பதிவுகள் முதலில் தென்படுகின்றன. அவற்றில் இருந்து என் புரிதல்:
1. கேரளாவிற்கு அருகில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு போல் பிரச்சினைக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் இடம் தோதுப்படாது.
2. ராஜீவ் காலத்திலேயே கையெழுத்திட்டதால், தற்போதைய எம்.பி.க்களுக்கு கையூட்டு கிட்டவில்லை.
3. இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத சக்திகள் அடக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தானில் இருந்து முஜாஹிதீன் யாராவது கள்ளத் தோணியில் வெடிகுண்டு போடுவார்கள்.
4. இந்த மாதிரி பயங்கரவாதக் குழுக்களும், அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவமும், ராணுவத்திடமிருந்து மக்களை பாதுகாக்க காவல் படையும் குவிவதால், நிலநடுக்கம் ஏற்படலாம்.
5. முன்னாடி லெமூரியா கண்டம் இருந்ததே இன்னும் ருசுப்படவில்லை. இந்த லட்சணத்தில் குமரிக் கண்டமும் திராவிடர்களுக்கு இல்லாமல் சுனாமிக்கு இழக்கலாமா!
6. தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களுக்கும், போராட்டக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள உதயகுமார் அவர்களுக்கும் முறையே 54 கோடி ரூபாயும், உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாயும் வந்தது வெறும் முன்பணம் மட்டுமே. முழுப்பணம் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை.
7. இப்போதாவது தினசரி 550 ரூபாய் கிடைக்கிறது. மின் உற்பத்தி துவங்கி விட்டால், இந்த வருவாயும் நின்றுவிடும். தேர்தலும் இல்லாத தரிசு காலத்தில், கூட்டத்தில் நிற்போரின் தினப்படியை கொடுக்கவிடாமல், வாயில் அடிப்பது நன்றாக இல்லை.
8. உலகமே இன்னும் கொஞ்ச நாளில் இருளில் மூழ்கிவிடும். அப்போது தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க, இப்போதில் இருந்தே பழக்கப்படுத்தும், சூரிய ஒளியை மட்டும் நம்பி வாழவைக்கும் திட்டம்.
9. வைகோ போன்ற பேச்சாளர்களுக்கு பேச, உணர்ச்சி உரை ஆற்ற ஒரு விஷயம் குறைந்து போகும் அபாயம்.
10. நெய்வேலியில் இன்னும் கரி இருக்கிறதே! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் இருக்கிறதே!! இலையில் இருந்து எண்ணெய் கொடுக்க ராமர் பிள்ளை கண்ட அறிவியல் தமிழ்நாட்டில் அணுசக்தி எதற்கு!!!
The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)
Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.
இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்
1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.
3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்
4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.
5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.
6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦
இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:
மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்
சூப்பர் ஸ்டார்ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.
ஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.
ருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.
மஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.
நூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.
ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.
சிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.
அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.
சொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது! டும்!! டும்!!! : தீவிரவாதம் / பயங்கரவாதம்.
நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.
ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.
இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.
ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.
பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.
தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.
பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.
படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.
இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.
இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை
ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.
அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.
திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.
அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.
குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.
இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.
பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.
மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.
அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.
மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?
இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?
முதலில் புள்ளிவிவரம்:
கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.
2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.
2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.
1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.
அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.
இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.
இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?
முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.
இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?
Political crisis in Egypt
எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde