Tag Archives: ஆசியா

Cultural identity, family relationships & the complexities of Intergenerational Communication

கதைசொல்லி சீனத்து பாட்டி. அவளுக்கு பிழையற்ற ஆங்கிலம் வாராது. எனவே, அவளின் கொச்சை மொழியிலேயே சம்பவங்களைச் சொல்கிறாள். அவளின் அமெரிக்க மகளின் பார்வையில், அந்தப் பாட்டி மோசமான குழந்தை காப்பகர். பாட்டிக்கு மாப்பிள்ளை புருஷ லட்சணமாக வேலைக்குப் போகவில்லையே என்னும் அங்கலாய்ப்பு. பொண்ணாக பொட்டி பாம்பாக பேத்தியை வளர்க்க எண்ணும் இறுமாப்பு.

முழுக்கதையும் சொல்லப் போவதில்லை. #சொல்வனம் இதழில் வாசியுங்கள்.

அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.

இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:

  1. “Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
  2. “The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
  3. “The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்

எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.

#Solvanam தளத்தில் படிக்கலாம்

Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.

தம்மகாயா சரணம் கச்சாமி

அசப்பில் பார்ப்பதற்கு அக்‌ஷர்தாம் போல் பிரும்மாண்டமாக இருக்கிறது. கோபுர கலசத்தில் மட்டும் மூன்று இலட்சம் தங்க புத்தர்களை இழைத்திருக்கிறார்கள். மேற்கூரையிலும் கோவில் விமானத்திலும் ஏழு லட்சம் தங்கத்தகடுகள் மின்னுகின்றன. குஜராத்தில் அஷர்தாம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால், தாய்லாந்தில் வளரும் பையனாக தம்மகாயா பௌத்தம் தழைக்கிறது.

ஹீனயானா, மகாயானா என்றெல்லாம் புத்தரை சம்சாரத்தில் இருந்து நிர்வாணமின்றி முன்னர் பிரித்திருந்தார்கள். இப்பொழுது தம்மகாயர்கள் லோகாயத கர்மாவிற்கு அழைக்கிறார்கள். கொடை கொடுத்தால் நற்பயன் கிட்டும். அவர்கள் கோவிலுக்கு தானம் வழங்கினால், ஏழேழு ஜென்மங்களுக்கும் பணம் குவியும் என வாக்குறுதி தருகிறார்கள். உலகெங்கும் முப்பது நாடுகளில் கிளை விட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல், பௌத்தர்களுக்கு தம்மகாயம் என்கிறார்கள்.

ஆசையை மறப்பது இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு உகந்த வேதம் அல்ல. அத்தனைக்கும் ஆசைப்படு; அதை அடைய எங்களுக்கு நிறைய காசு கொடு என்பது தம்மகாயத்தின் தாரக மந்திரம். கூடவே, கொசுறாக தியானத்திற்கும் அழைக்கிறார்கள். கண்ணை மூடினால், பளிங்குப்படிகம் தெரியும். அதை அப்படியே, நிஷ்டை வழியாக மூக்கின் வழியாக தலைக்குள் நுழைக்க வேண்டும். மேலும் யோக மார்க்கம் சித்தித்தால், உந்திக்குக் கொணர்ந்துவிடுவோம். பூரண ஞான சமாதி நிலையாக, அந்த ஸ்படிகத்தை, அப்படியே உந்திக்கு இரண்டு கணுவிரல் மேலே நிறுத்திக்கொண்டால் பாவனை கைகூடுகிறது.

ஒரே சமயத்தில் இங்கே ஒரு மில்லியன் பேர் தியானிக்கலாம். இந்த மாதிரி கூட்டுப் பிரார்த்தனையால் இஸ்ரேல் தங்கள் மீது குண்டு மழை பொழியாது என நம்புகிறார்கள். சிலர் வாழும் நரகமான, பாலஸ்தீனத்திற்கே ஸ்தூல உடலை விட்டு விட்டு சென்று திரும்பியிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு நாளைய லாட்டரி எண்கள் கண்களில் விளங்கியிருக்கிறது.

மசாஜுக்கு புகழ் பெற்றிருந்த தாய்லாந்து, இப்பொழுது மதத்திற்கான தரகிலும் வருவாய் ஈட்டுகிறது.

9/11: பத்தாண்டு பலன்

இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.

செப்டம்பர் 11, 2001.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?

  1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்
  2. இஸ்லாமிய வெறுப்பு
  3. பொருளாதாரப் பின்னடைவு

இஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்

  • 88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
  • 83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.

  • அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.

அயல்நாட்டுப் போர்

  • ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
  • இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.

  • இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
    • வேலைவாய்ப்பின்மை
    • மருத்துவ சிகிச்சை தராமை
    • குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
    • மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
  • போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?

பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை

இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

  • இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
    • ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
    • அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!

அமெரிக்காவில் எகிப்து வருமா? சூடான் ஆகுமா?

இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை

ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.

அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.

திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.

அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.

‘அவள் ஏழை. அதனால்தான் எடுக்கிறாள்’ என்கிறாள் பணக்காரி.

குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.

இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.

பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.

மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.

அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.

மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?

இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் புள்ளிவிவரம்:

கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.

2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.

2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.

1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.

இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.

  • இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
  • இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
  • எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?

முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.

இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?

Unrest in Arab countries

Political crisis in Egypt

எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.

1848 -இல் ஃப்ரெஞ்சு போராட்டத்திற்கும் அரபு நாடுகளின் எழுச்சிக்கும் முடிச்சுப் போடுகிறது ‘தி வோர்ல்ட்’.

இந்தோனேஷியாவில் 1998 பொங்கி எழுந்த ஏழை வறியோரின் கோபத்தையும் எகிப்தின் போராட்டமும் ஒரு விதத்தில் சரி நிகர் என்கிறது என்.பி.ஆர்.

1989களில் சோவியத் ருஷியா துண்டாடியதும், செக்கோஸ்லோவேகியா பிரிந்ததும், பில் கிளின்டனின் போஸ்னியா போரும் ஒப்பிடத் தக்கது. – அல் ஜஸீரா.

தலைப்புக்கு நிஜமாகவே வந்து விடலாம்.

இனப் போராட்டத்திற்குள்ளான சூடான் இரண்டாகப் பிரிகிறது. அமெரிக்கா இரண்டாகப் பிரியுமா?

சவூதி அரேபியா போல் இஸ்லாமிய நாடாகவும் பிரஸ்தாபிக்காமல், லெபனான் போல் சுதந்திரமும் புழங்காமல் இருக்கும் எகிப்தில் படித்தவர்கள் போராட்டத்தை முன்வைக்க, வறியோர்கள் பின்னெடுத்து செல்கிறார்கள். அமெரிக்காவிலும் ஜீஸஸ் அருளுடன், வீடற்றோர் பொங்கியெழும் ‘டீ பார்ட்டி’ புரட்சி எழுமா?

இந்தியாவைப் பாருங்கள்… உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
சீனாவைப் பாருங்கள்… நீங்கள் உபயோகிப்பவை அனைத்தும் அங்கேதான் தயாராகிறது.

இந்தியனை… வெளியேற்று; சீனாவை… தூக்கியெறி!

பணக்கார ஆசியர் பி.எ.டபில்யூவிலும் லெக்சசிலும் பவனி வரும்போது, அண்டியிருக்க ஓலைக்குடிசைக்கு கூட வக்கிலாதவர்களுக்கு கோபம் வரும். அதுவும், வேற்று நிறத்தவனாகவும் இருந்துவிட்டால்…

உகாண்டாவில் நடந்தது; ஃபீஜியில் நடக்கும்; ஏன் நடக்காது என்பது இன்னொரு நாளைக்கான மேட்டர்.

தொடர்புள்ள நூல்கள்:

1. The Mendacity of Hope: Barack Obama and the Betrayal of American Liberalism by Roger D. Hodge

2. Ill Fares the Land by Tony Judt

Malaysia, Affirmative Action, Ethnicity, Religion & Election Results

பிபிசி செய்தி: பினாங் மாநிலத்தில் இந்திய இனத்தவருக்கு சாதகமான முடிவு

மலேசியா வாழ் இந்திய இனத்தவர்களை விட மலாய் இனத்தவர்களுக்கு, பெருஞ்சலுகைகள் வழங்கும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை தாங்கள் இனி மேலும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று மலேசியாவின் பினாங் மாநிலம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் பிரதமர் அப்துல்லாஹ் படாவிக்கும், அவரது ஆளும் கூட்டணிக்கும், பலத்த இழப்புகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள 4 மாநிலங்களில், பினாங்கும் ஒன்று.

வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும், மலாய் இனத்தவருக்கு சாதகமான கொள்கைகளை மலேசியா கடந்த 40 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது. மலேசியா இனப்பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதாக மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் கண்டித்திருக்கிறார்கள்.


கொஞ்சமாய் பேக்கிரவுண்ட், நடப்புகள், அலசல்:

1. இங்கே ஆரம்பிக்கவும்: TBCD பார்வை : ‘மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !’- உன்மை என்ன…?: பின்னூட்டத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடையும் கிடைக்கும்:

மலேசிய அரசு சிறுபான்மைகளுக்கான உரிமை சட்டத்தை அமல் படுத்துகிறதா? தமிழர்களைவிட அதிகமாக உள்ள சீனர்கள் நிலை என்ன? மலேசிய அரசு தன்னனை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு உள்ளதா?

2. அடுத்ததாக: மலேசிய தமிழர்கள் மலேசிய அரசிடம் வைத்த கோரிக்கைகள் என்ன..?

3. மேலும் மேலும் பின்னணி: THe WoRLD oF .:: MyFriend: “மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்”


இனி சில தமிழ்ப்பதிவுகள்:

1. இந்தியர்களின் குரலை நசுக்கியவர் சாமிவேலு – மகாதீர் – மறுமொழியில்: “சாமிவேலு இந்தளவிற்கு வளர்வதற்கும் நம் சமூகத்தை நாசம் செய்வதற்கும் துணை நின்றவர்களில் மகாதிரும் ஒருவர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்! ஏன், 90களில் சீன அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்த போது கூட இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை இரண்டாகவோ மூன்றாகவோ அதிகரிக்கவில்லை?”

2. ஜடாயு ஐயா கக்கும் விசவாயுமறுமொழியில்: “மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.”

3. இந்தியர்களுக்கு அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் – 128 அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளின் கோரிக்கைமறுமொழியில்

  • இஸா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டோரை உடனே விடுவிக்க ஆவன செய்யுங்கள்.
  • இஸா சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுடன் போராடுங்கள்.
  • மாநில ஆட்சி மன்றத்தில் அனைத்து இனங்களுக்கும் சமவாய்ப்பைக் கொடுங்கள்.
  • மக்களின் குறைகளை செவி கொடுத்துக் கேளுங்கள். தீர்வு காணுங்கள்.
  • 1957-க்குப் பின்னர் பிறந்த அனைவரும் பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறச்செய்யுங்கள்.
  • நாட்டு வளம் அனவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
  • இனப்பாகுபாட்டை ஒழியுங்கள். இன ஏளனம் செய்வதை தடுக்க ஆவன செய்யுங்கள்.
  • விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள், முடிந்தால் விலை குறைப்பை அமல்படுத்துங்கள்.
  • நாட்டு வளம் விரயமாக்கப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.
  • மாநில அரசின் கடுப்பாட்டில் உள்ள “டோல்” நிலையங்களை மூடுங்கள்.

4. டிபிசிடி: மலேசியத்தமிழர்களின் மக்கள் சக்தி உணர்ச்சியும், மலேசியத் தேர்தலும்: “மலேசியாவில் கடந்த 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில், பரிசான நேசுனல் என்ற (Barisan Nasional – BN, the National Front) தேதிய முன்னணிக் கூட்டணியே ஆண்டு வந்திருக்கிறது. கிளாந்தான் என்னும் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும், இந்தக் கூட்டணியே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.

அன்வர் இப்ராகிம் தலைமையில் கெடிலான் (Parti Keadilan Rakyat – PKR, People’s Justice Party) என்ற கட்சி இம்முறை பரிசான் நேசனலின் ஆதிக்கத்தை அசைக்கும் நோக்கோடு, மற்றைய எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருமுனை களமாக மாற்ற முயன்று வருகின்றனர்.”

5. டிபிசிடி: மலேசியத் தமிழர்கள் தடுத்து நிறுத்திய ஒரு தேசிய முன்னனியின் ரோல்லர் கோஸ்ட்டர்: “இந்தத் தேர்தலில், பெரும்பான்மை பெறாவிட்டால், மலேசியாவின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பங்கம் வருமென்று பிராச்சாரம் செய்து வந்தது தேசிய முன்னணி. அரசாங்க இயந்திரம் தேர்தல் வேலைகளுக்கு முடுக்கி விடப்பட்டியிருந்தது. தொகுதிகள் வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.

“ஓம் சக்தி” என்ற ம.இ.க வின் தேர்தல் மந்திரத்திற்கு எதிர்ப்பாக “மக்கள் சக்தி” என்று முழங்கிய தமிழர்கள், தங்களது எதிர்ப்பை சனநாயக முறைப்படி காட்டியிருக்கிறார்கள்.”


6. மலேசிய நிலவரம் ஒரு கருப்பு பார்வை: “ஏப்ரலுக்கு மேல் கெ-அடிலான் கட்சியின் ஆலோசகரும் முன்னைய துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவசரம் அவசரமாக இந்த தேர்தலை நடத்துகிறது மலேசிய அரசு.

கல்வி, வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்(பூமி புத்ரா) என்ற பெயரில் மலாய்க் காரர்களுக்குத்தான் முன்னுரிமை. காவல், ராணுவம், அரசாங்க நிறுவனங்கள், குடிநுழைவுத்துறை, மின்சாரம், வங்கி என அத்தனை அரசு வேலைகளும் மலாய்க்காரர்களுக்குத்தான். சீனர்கள் அரசையோ அரசு வேலையையோ நம்புவது இல்லை. கையில் வைத்திருக்கும் காசினைக் கொண்டு சொந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் வேலையைத்தான் நம்பி இருக்கின்றனர்.

பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக எதிர்க்கட்சித் தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (National Justice Party – PKR), பார்டி இஸ்லாம் மலேசியா (Parti Islam se-Malaysia, or PAS), பார்ட்டி கெ-அடிலான் ரக்யத், Chinese Democratic Action Party (DAP) ஆகிய கட்சிகள் உள்ளன.

ஆளும் கூட்டணிக்கு ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (United Malays National Organization), மலேசிய சீன சங்கம் (Chinese Gerakan party), மலேசிய இந்திய காங்கிரஸ் (Malaysian Indian Congress) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், வழக்கறிஞர் மனோகரன், வசந்தகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோர் வெளியே வர முடியாத படிக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய தொலைக்காட்சி நடிகை சுஜாதா கொலைக்கு, மஇக தலைவர் சாமிவேலுவின் மகன் வேல்பாரியே காரணம் என்று பலரும் நம்புகின்றனர். தவிர மைக்கா ஹோல்டிங்சில் பணம் போட்ட இந்தியர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் வாயில் வெண்ணெயை தடவி விட்டார் சாமிவேலு.

நன்றி: விடாது கருப்பு


7. மலேசியாவில் மத சுதந்திரம்: Religion in Malaysia | Lina Joy’s despair | Economist.com: A legal blow to religious freedom

8. இஸ்லாமிய ஷரியத் சட்டமா? ஜனநாயகமா? BBC NEWS | Asia-Pacific | Malaysian voters wooed with Islam: “Voting and religion – Islamic credentials play a major role in the election campaign”

9. இட ஒதுக்கீடு கொள்கை ஏன் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடாது? Pro-Malay Malaise – WSJ.com: Affirmative action policies are holding the country back.


செய்திகள்:

1. Malaysia’s Maturing Democracy – WSJ.com: Even Malays reject the status quo and vote for change.

2. Malaysia’s Governing Coalition Suffers a Setback – New York Times

3. Malaysia Opposition Takes Aim At Affirmative Action – New York Times

4. மலேஷியத் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை மீண்டும் கைப்பற்றினாலும் தேசிய முன்னணிக்கு பின்னடைவு

5. மலேசியாவில் மீண்டும் தமிழர்கள் போராட்டம்

6. மலேசியாவில் இந்திய வம்சாவளி அரசியல்வாதி படுகொலை

7. Facing Malaysia’s Racial Issues – பத்தித் தொகுப்பு


நடுவில் என்னுடைய ரெண்டணா:

  • என்ன நடந்தது? முன்னாடி ஒரேயொரு மாநிலத்தில் மட்டும் ஆளுங்கட்சியாக இருந்த எதிரணியினர், ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாக ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாக்கி எட்டு மாநிலங்களிலும் ஐம்பதாண்டுகளாக ஆண்ட ‘தேசிய முன்னணி’யே மீண்டும் தொடர்கிறது. சென்ற சட்டசபையில் வெறும் பதினெட்டு இடங்களைப் பிடித்திருந்த எதிரணி, பாஜக-வும் விபி சிங்கின் ஜனதா தளமும் கை கோர்த்தது போல் போட்டியிட்டதில் 82 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். ‘ஜன் மோர்ச்சா’ போட்டியிட்டது போல் மத வாத இந்துத்வா சக்திகளுடன் நேரடியாக சங்காத்தம் வைத்துக் கொள்ளவில்லை; ஆனால், மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க விழையும் Parti Islam se-Malaysia, or PAS கட்சியுடன் திரைமறை தொகுதி உடன்பாடு உண்டு.
  • ஆளுங்கட்சிக்கு தோல்வியா? அப்படித் தோன்றவில்லை. மீசையில் துளியூண்டு மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை. ஆளுங்கட்சிக்குத்தான் பெரும்பான்மையும் கிடைத்திருக்கிறது. இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க விரும்பும் எதிர்க்கட்சிக்கும், ஹின்ட்க்ராஃப்க்கும் ஏழாம் பொருத்தம்; அப்படியிருந்தும் தேர்தலுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, கழுத்தறுக்காமல் இருந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியைப் பார்த்தால் சீட்டுக்கட்டு மாளிகை போல் படுகிறது.
  • தேர்தலில் போட்டியிட இயலாமல் செய்யப்பட்ட அன்வர் உத்தமரா? பெயரளவில் சுத்தம் என பொருள்படும் பெர்சி (Bersih) கூட்டமைப்பை உருவாக்கினாலும், ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார். மஹாதிருக்கு சரியான விகிதாச்சாரம் கொடுக்காத பிரச்சினையா அல்லது நிஜமாகவே தவறு செய்தவரா என்பது தெரியவில்லை. எப்படியாகினும், தன்னுடைய மகள், மனைவி, ஒன்று விட்ட மச்சினன், ரென்டு விட்ட மைத்துனி என்று பினாமியாக நிற்க வைத்து ஜெயிக்க வைக்கவும் தெரிந்த ஐ.எஸ்.ஓ.9000 அரசியல்வாதி.
  • ஏன் திடீர் தேர்தல்? பெட்ரோல் விலை எகிறுவதால், பால் முதல் பாதாம் பருப்பு வரை எல்லாவற்றிலும் விலையேற்றம். தேர்தலுக்கு முந்தாநாள் வரை மானியம் கொடுத்து, எண்ணெய் பீப்பாயை தள்ளுபடியில் வழங்கிய அரசாங்கத்தால், இனியும் தாக்குப்பிடிக்க இயலாத நிலை.
    1. அடுத்த, நிதி நிலை பொக்கீட்டில் (பட்ஜெட்) ஆயில் கொள்முதலுக்கான விலைவாசி அதிகரித்ததால் ‘ஏற்றப்படுகிறது’ என்று அறிவிப்பதற்கு முன் எலெக்சன் முடிந்து விட்டது.
    2. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த போனசும் (முப்பத்தைந்து சதவீதமாம்!) அவர்கள் மனதில் இன்னும் பசுமையாக நிறைந்திருக்கும்போதே தேர்தல் நடந்தேறி இருக்கிறது.
    3. அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கம் நிறைந்து பணப்புழக்கம் குறைந்து recession ஆக ஓடிக்கொன்டிருக்கிறது. இதனால், மலேசிய நாட்டின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விலைவு இனிமேல்தான் தெரிய ஆரம்பிக்கும்; அதற்கு முன் ‘மலேசியா ஒளிர்கிறது’ என்று போர்டு போட்டு தேர்தல்.

Share capital per head of Population in Malaysia

  • சீனர்களுக்குக் கூட இனப்பாகுபாடாமே? மலையாளிகளைப் போல் சாமர்த்தியசாலிகள் எவரும் இல்லை என்பது என்னுடைய பெங்களூர் எண்ணம். அமெரிக்கா வந்தபிறகு தராசுக்கு (பாரிசன் நேசனலுக்கு இதுதான் தேர்தல் சின்னம்) அந்தப் பக்கம் வைக்க சீனர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆளுங்கட்சியின் ஸ்திரத்தன்மையும் மதவாதத்தை பெருமளவில் ஊக்குவிக்காத நிலையும் மேற்கத்திய கொள்கைகளை பின்பற்றி தாராளவாதத்தை முன்னிறுத்துவதும், செல்வந்தர்களான (read capitalists) சீனர்களின் நெஞ்சை நிறைத்தே இருக்கிறது. மலாய் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை குறைத்தால் நல்லதுதான்; அதற்காக பெரும்பான்மை மக்களுடன் விரோதம் பாராட்டக் கூடாது என்று நாணல் போல் வளைகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

1. ஜடாயு எண்ணங்கள்: “மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!”

2. இன்றைய தலையங்கங்கள் – மார்ச் 11

3. My Nose: “கிழட்டு அனுபவங்கள்(10) – மலேசியா ராஜசேகரன்”


மலேசிய வலையகங்கள்:

1. மலேசியா இன்று :: Malaysia Indru

2. “ஓலைச்சுவடி”

3. VanakkamMalaysia.com

4. Malaysia Nanban5. The Star Online

6. The New Straits Times Online

7. hindraf.org | Hindu Rights Action Force; makkal sakthi here, makkal sakthi now!

8. Malaysia Votes (wordpress mirror)


தொடர்புள்ள வலையகங்கள்:

1. Economist.com | Country Briefings: Malaysia

2. Malaysia News – Breaking World Malaysia News – The New York Times

கம்யூனிசத்துக்கு ஸ்டாலின்; கமர்ஷியலிசத்துக்கு சுகார்தோ

வியட்நாம் என்றவுடன் அமெரிக்கா கால் நுழைத்து இலங்கையில் ஐபிகேஎஃப் போல் மூக்குடைபட்டதும், நாபாம் தெளித்து அழித்ததும், நேற்றைய ஜனாதிபதியாக விரும்பிய ஜான் கெர்ரியை ‘ஸ்விஃப்ட் போட்‘டியதும், இன்றைய ஜனாதிபதியாக விரும்பும் ஜான் மெக்கெயினின் சிறைக்கால அனுபவமும் அவரவரின் கொள்கை சார்ந்து நினைவுக்கு வரும்.

ஆனால், இந்தோனேசியா என்றவுடன் சுனாமிப் பேரலையோ, நைக்கியின் குழந்தைத் தொழிலாளர்களோ, பாலி தீவிரவாதத் தாக்குதலோ, பஞ்சசீல கொள்கையோதான் நினைவுக்கு வருகிறது.

கம்போடியா, வியத்னாம் மாதிரி மூக்குடைபடாமல் சாணக்கியத்தனமாக வென்ற நாடுகளில் இந்தோனேசியா குறிப்பிடத்தக்கது. கத்தியின்றி, ரத்தமின்றி கரன்சி கொடுத்து அமெரிக்க பாக்கெட்டுக்குள் வீழ்ந்த நாடு.

இந்தியாவில் பாதி சைஸ். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிகச் சரியாக 17,508 தீவுகள்.

இத்தனை தீவுகள் இருக்கிறதே… இன்னொன்றையும் சேர்த்துக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் கிழக்கு திமோரையும் கையகப்படுத்தினார் தற்போது இறைவனடி சேர்ந்துள்ள சுகார்தோ.

சுகார்டோ எத்தனை பேரை தீர்த்துக் கட்டினார் என்றால் யாரிடம் கணக்கு கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஐந்து லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை சொல்கிறார்கள். சுகர்னோ, சுகார்தோ போன்ற இந்தோனேஷியாவின் தலைவர்களிடம் கேட்டால் நாட்டின் 24 கோடியில் ஒரு சதவீதம் சவமானதற்கு ‘இத்தனை ஃபீலிங்கா?’ என்று அழிச்சாட்டியமாக லுக் விடுவார்கள்.

பள்ளிப்படிப்பை முடித்திராததால் அவரிடம் கொள்ளையடித்த பணத்துக்கு சரியான அக்கவுண்டிங் தாக்கலாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவை விட அதிக அளவு சேர்த்து அகில லோகத்தின் தலை பத்து பணக்காரராக, இந்தோனேசியாவுக்கேற்ற எள்ளுருண்டையாக பதினைந்தில் இருந்து முப்பத்தைந்து பில்லியன் (இந்திய ரூபாயில் இன்றைய மதிப்பில் 100000,00,00,000 கிட்டத்தட்ட 100,000 கோடி ருப்பீஸ்) சேவிங்ஸ் கணக்காகியுள்ளது.

உலகின் அதிகமான இஸ்லாமியர் மக்கட் தொகையை கொண்டநாடு இந்தோனேசியா. ஆயினும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்களும் உண்டு. மதச்சார்பற்ற ஒரு நாடாக இந்தோனேசியா விளங்குவது பிடிக்காத ஒசாமா பின் லாடனின் அன்பர்கள் சில மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நவீன இந்தோனேசியாவை நிறுவிய-நிறுவன அதிபர் சுகர்ணோ. 1967-ம் ஆண்டு அதிபர் சுகர்ணோவை நீக்கி விட்டு இராணுவத் தலைவர் சுகார்டோ பதவிக்கு வந்தார். சுமார் 32 ஆண்டுக்காலம் முஷாரஃப்கரம் கொண்டு மக்களை அடக்கி ஆண்டார். ருவாண்டா, இடி அமீன், ஸ்லொபதன் மிலோசெவிச் காட்டிய பாதையில் இவர் ஜனநாயக முறைப்படி கட்சி துவங்கி, கோல்கார் கட்சி என்று நாமகரணமிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று யாருமே இல்லாத பெருமை கொன்டவர் சுகார்தோ. யாராவது கொடி தூக்கினால், கம்யூனிசம் பேசினால், எம்-16 வெட்டு ஒன்று, தாழப் பறந்து பறந்தடிக்கும் விமானம் இரண்டு என்று மும்முரமாக குடியரசைத் தழைத்தோங்க செய்தவர்.

சதாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு போல் 1975ல் கிழக்கு டிமோர் பக்கம் இவரது பராக்கிரமம் திரும்பியது. குவைத் மாதிரி இல்லாமல் அமெரிக்காவின் ராஷ்டிரபதி ஜெரால்ட் ஃபோர்ட்- இன் பரிபூரண அனுக்கிரகம் இந்தோனேசியா பக்கம் இருந்தது. கடாரம் வென்ற சுகர்னோ என்று அதன் பிறகு வந்த கார்ட்டர், ரொனால்ட் ரீகன், பில் க்ளின்டன், அப்பா புஷ் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளால் கொண்டாடப்பட்டார்.

கிழக்குத் டிமோர் போரில் கிளர்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை மட்டுமே கொன்று, மீதம் உள்ள ஐந்து லட்சம் தைமூரியர்களை விட்டுவைத்து தன்னுடைய ஜீவகாருண்யத்தை பறைசாற்றி, மனிதர்குல மாவிளக்கு பட்டம் பெற்றார்.

அம்மையாருக்கு உடன்பிறவா சகோதரி, முன்னாள் கலைஞருக்கு சன் டிவி பிரதர்ஸ் போல் கல்லாவை கவனிக்க அவர் மனைவி மேடம் டியன் என்றழைக்கப்படும் சிதி ஹர்தினா (Siti Hartinah Suharto) — உறுதுணையாக கையூட்டுக்கு சிங்கிள் விண்டோவாக திகழ்ந்து பிசினஸ் சூழலை எளிதாக்கினார்.

தற்போதைய இந்தியாவின் ப. சிதம்பரம் போல் பொருளாதாரம் துள்ளி குதித்து விளையாடும் வரை மக்கள் அவர் பக்கம் சிக்கென பிடித்திருந்தார்கள். ‘நீயுமுன்றன் பைநாகப்பாய் சுருட்டிக்கொள்‘ என்று அமெரிக்க வர்த்தகர்கள் ஆசியாவை விட்டு மூட்டை கட்ட, வந்தது சனி.

என்றேனும் மாற்றம் வந்தே தீரும் என்கிற நிலையில் சுகார்டோ பதவி விலகினார். என்றாலும் சீனாவின் மாவோ, கம்போடியாவின் பொல் பொட், பிலிப்பைன்சின் ஃபெர்டினான்ட் மார்கோஸ் போல் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கி ரசிகர் மன்றக் கண்மணிகள் நெஞ்சத்தில் நீங்காத தலைவனாகி இருக்கிறார்.

இந்தோனேசியாவின் சாலைகள் சுகர்தோவின் மகள் சிதி ஹரிதயந்தி ருக்மண (Siti Hardiyanti Rukmana) பெயருக்கு பட்டா போடப்பட்டு, சுங்கவரி அத்தனையும் அவருக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு மகனுக்கு இந்தோனேசியாவின் எண்ணெய்க்கிணறுகளும் பெட்ரோல் ஊற்றுக்களும் முழுக்க சொந்தமாக்கப்பட, இன்னொரு மகனுக்கு டிவி, கார், கொக்கோ, தேக்கு, சேமநல பாதுகாப்பு முதல் ஆணுறை நிறுவனங்கள் என்று தொண்ணூறு ஸ்தாபனங்களுக்கு அதிபதியாக்கி நிறைந்த வாழ்வையும் வளத்தையும் வழங்கியிருக்கிறார்.

அவரின் நல்லெண்ணத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கிட்டத்தட்ட இருபது சதவிகித அரசுத்துறை ஒப்பந்தங்கள் மற்றவர்களுக்காக விட்டுகொடுக்கப்பட்டிருப்பதை சொல்லலாம்.

வாரிசு அரசியலை மறக்காத மக்களாக இந்தோனேசியர்களும் சுகார்னோவின் இரண்டாவது மகளான மேகாவதி சுகர்ணோபுத்ரி கட்சியை ஆதரித்து தேர்தலில் வெல்லவைத்து கோலோச்ச வைத்தார்கள். கட்டாங்கடைசியாக இவரின் ஆட்சிக்காலத்தில்தான் ஐ.நா.வின் கட்டபஞ்சாயத்தால் இந்தோனேசியாவின் ஒரு பகுதியான கிழக்கு தைமூர் தனிநாடாக மாறியது. இதை மேகாவதி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு.அண்டைநாடுகளின் மலேசிய மஹாதிர் முகமது, சிங்கை லீ க்வான் போல் சுரண்டல் பெருச்சாளித்தனமற்ற பொருள்முதல்வாதம் பின்பற்றாமல், சிலியில் அல்லக்கையாக இருந்த அக்ஸ்டோ பினோச்சே போல், பரம சௌக்கியமாக வாழ்ந்து கல்யாண சாவு பெற்றிருக்கும் சுகார்தோ நினைவாக பழமாகிப் போன பழமொழி:

அரசன் அன்று கொல்வான்;
அமெரிக்கன் யாருக்கும் தெரியாமல் சப்ளை செய்வான்!


Suharto Indonesia—————————————————————————————————-

தொடர்புடைய இடுகைகளில் குறிப்பிடத்தக்க சில:

உதவியவை:

  1. Varaidhal – Special
  2. Indonesia – Wikipedia, the free encyclopedia
  3. Economist.com | Country Briefings: Indonesia
  4. Indonesia : Country Studies – Federal Research Division, Library of Congress
  5. BBC NEWS | Asia-Pacific | Country profiles | Country profile: Indonesia

கொடுங்கோலன்:

  1. Democracy Now! | Former Indonesian Dictator, U.S. Ally & Mass Murderer, Suharto, 86, Dies
  2. Democracy Now! | The Democrats & Suharto: Bill Clinton & Richard Holbrooke Questioned on Their Support for Brutal Indonesian Dictatorship
  3. Democracy Now! | Massacre: The Story of East Timor
  4. News and Comment: Suharto Dead. Six Billion Alive. Time for a Little Reform.

Economists with GunsAuthoritarian Development and U.S.-Indonesian Relations, 1960-1968

Bradley R. Simpson
Forthcoming: Available in MarchBuy this book
 

—————————————————————————————–
வாழ்விக்க வந்த வள்ளல்:

  1. Suharto’s Indonesia – WSJ.com
  2. Suharto’s Legacy – WSJ.com

ரெண்டுங்கெட்டான்:

  1. NPR: Indonesia’s Suharto Left Iron-Fisted Legacy
  2. Suharto News – The New York Times