Thanks to Blogeswari
Hindi TV actor Karan Patel and TM Krishna
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர் | அரசியல்
Thanks to Blogeswari
Hindi TV actor Karan Patel and TM Krishna
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர் | அரசியல்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Ayaz memon, ஆயாஸ் மேனன், ஒற்றுமை, கரன் படேல், சந்தோஷ் சிவன், ஜேகப், ஜேக்கப், டி எம் க்ரிஷ்ணா, டியெம் கிருஷ்ணா, நரேஷ் கோயல், ப்ளாகேஸ்வரி, முகம், Blogeswari, Chef Jacob, Cool, Faces, Images, Karan Patel, Names, Naresh Goyal, People, Persons, Photos, Pictures, Santosh Sivan, Separated at Birth, Similar, T M Krishna
மதியம் பதினொன்றே முக்கால்.
‘இன்று எங்கே சாப்பிடலாம்?’
‘மினர்வா போகலாமா?’
‘சரி’
நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.
‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’
கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.
‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’
இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.
வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.
அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.
இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.
‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’
‘இராவணன்?’
‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’
மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.
‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’
“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’
‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’
‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’
இந்த முறை அவள் ம்ம்ம்ம்.
‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’
‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’
தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது America, ஆமிர், இந்தி, இந்தியா, உணவகம், கஜினி, கலாச்சாரம், குந்தர் கிராஸ், சாப்பாடு, சினிமா, ஜெமோ, ஜெயமோகன், டிவி, தமிழ், தெலுங்கு, தொலைக்காட்சி, படம், பாடல், யூ ட்யூப், ரெஸ்டாரென்ட், Cinema, Culture, desi, Eat, Eatery, Films, India, Jeyamohan, Movies, Oskar Matzerath, Songs, TV, US, USA, Watch
ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்
இராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:
கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.
நூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.
ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.
ச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:
சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.
இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.
// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //
அன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது! பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.
short cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.
என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .
ட்விட்டரில் நான் கருதியது:
கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா
அதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்து விடுவோம்:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்
பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.
தொடர்புள்ள பதிவுகள் இரண்டு:
1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்
2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா
3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)
4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, ஆய்வு, ஆர் பொன்னம்மாள், எழுத்தாளர், கண்காட்சி, சரித்திரம், சென்னை, சோழன், நூல், புக்ஸ், புத்தகம், முதல், ராஜ ராஜ சோழர், ராஜராஜன், வரலாறு, Book Fair, Books, Cholan, Cholar, Chozha, Chozhan, madras, Ponammal, Ponnamal, Ponnammal, Publishers, Rajarajan, Rajarajar, Research, Thiru Arasu, Thiruvarasu, Vanathi, Vanathy, Varalaaru, Writers
| சாரு நிவேதிதா | கமல்ஹாசன் |
|---|---|
| வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் | தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார் |
| பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். | பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார். |
| 35 ஆண்டுகளாக எழுதுகிறார் | 50 ஆண்டுகளாக கலைச்சேவை |
| எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். | சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது. |
| சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். | ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா |
| சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். | கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார். |
| மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது | ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம் |
| அமரந்தா, அவந்திகா | வாணி, சரிகா |
| நடிகர் | திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர் |
| சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். | மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு. |
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, ஒப்பீடு, கமலஹாஸன், கமல், கமல்ஹாசன், சாரு, சாரு நிவேதிதா, சினிமா, திரைப்படம், Charu, Charu Nivedhitha, Cinema, Films, Kamal, Kamalahassan, Movies, Saru Nivethitha, Writers
இந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.
படத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’
பிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”
என்ன கதை?
காந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்?
ஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டால் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).
இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.
இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.
தவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.
கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.
அரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.
எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.
நடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.
சூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.
இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.
திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.
தொடர்புள்ள பதிவுகள்:
1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation
2. சந்திரமுகி க(வ)லையா?
விமர்சனம்:
1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்
2. ஆதிமூலகிருஷ்ணன்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 1947, அமெரிக்கா, அரசியல், ஆர்ஜிவி, இந்தியா, இந்திரா, இந்துத்துவம், இஸ்லாம், காங்கிரசு, காந்தி, குறியீடு, சஞ்சய், சினிமா, சீனா, சூர்யா, சோனியா, நேரு, பாகிஸ்தான், பாக், பாஜக, பிரிவினை, போராட்டம், மவுன்ட்பேட்டன், ரத்த சரித்திரம், ராஜீவ், ராம் கோபால் வர்மா, ருசியா, BJP, Cinema, Congress, Films, Gandhi, Mahatma, Movies, Symbols, US
ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.
எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:
1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?
2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?
3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?
தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?
வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:
காடு – 7
பின் தொடரும் நிழலின் குரல் – 4
விஷ்ணுபுரம் – 3
சங்கச் சித்திரங்கள் – 3
இன்றைய காந்தி – 3
பனிமனிதன் – 2
ஏழாம் உலகம் – 2
நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2
ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2
சிறுகதைத் தொகுப்பு – 2
கொற்றவை
பத்ம வியூகம்
இலக்கிய முன்னோடிகள் வரிசை
நாவல் கோட்பாடு
ஊமைச்செந்நாய் (மத்தகம்)
கொற்றவை – 6
விஷ்ணுபுரம் – 4
ரப்பர் – 2
சங்க சித்திரங்கள்
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
பின் தொடரும் நிழலின் குரல்
காடு
ஏழாம் உலகம்
குறுநாவல் தொகுப்பு
ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3
அனல்காற்று – 2
வாழ்விலே ஒருமுறை – 2
சங்கச் சித்திரங்கள் – 2
ஏழாம் உலகம் – 2
காடு
கன்னியாகுமரி
நிகழ்தல்
ஊமை செந்நாய் தொகுப்பு
நிழல் வெளி கதைகள்
நினைவின் நதியில்
இன்றைய காந்தி
தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்
சங்கச் சித்திரங்கள்
இலக்கிய விமர்சனம் தொகுப்பு
ஏழாம் உலகம்
கொற்றவை
விஷ்ணுபுரம்
உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது எழுத்தாளர், எழுத்து, ஓட்டு, கதை, கருத்துக் கணிப்பு, காப்பியம், காவியம், கொற்றவை, சிறுகதை, ஜெமோ, ஜெயமோகன், நாவல், நூல், புத்தகம், புனைவு, முக்கியம், வாக்கெடுப்பு, வாசகர், வாசிப்பு, விஷ்ணுபுரம், Jayamohan, Jeyamogan, Jeyamohan
பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?
எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’
வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.
அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.
‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.
நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.
சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.
‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.
சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.
‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.
சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.
“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”
இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது உரை, எழுத்தாளர், கவர்ச்சி, காமம், சந்திப்பு, சாரு, சாரு நிவேதிதா, செக்ஸ், சென்னை, தமிழ், நித்தி, நித்யானந்தா, நிவேதிதா, புத்தகம், ரஞ்சிதா, ராசலீலா, ராஸ லீலா, Charu, Charu Nivethitha, Saru Nivethitha
The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

The Blog-Health-o-Meter™ reads Wow.
The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 160,000 times in 2010. If it were an exhibit at The Louvre Museum, it would take 7 days for that many people to see it.
In 2010, there were 39 new posts, growing the total archive of this blog to 4509 posts. There were 50 pictures uploaded, taking up a total of 13mb. That’s about 4 pictures per month.
The busiest day of the year was June 16th with 961 views. The most popular post that day was ரஜினியின் எந்திரன்- தி ரோபோ .
The top referring sites in 2010 were digg.com, snapjudge.blogspot.com, iphone5g.net, who-will-win-fifa-worldcup-2010.com, and legal5ounds.com.
Some visitors came searching, mostly for எந்திரன் தி ரோபோ, பலான படங்கள், பொது அறிவு வினா விடை, யூ ட்யூப், and பலான.
These are the posts and pages that got the most views in 2010.
ரஜினியின் எந்திரன்- தி ரோபோ July 2009
51 comments
யூ ட்யூப் x பலான படம் – தீவினையின் தோற்றுவாய் எது? April 2008
4 comments
செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள் August 2009
20 comments
வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள் March 2009
8 comments
செத்தான் பிரபாகரன் September 2009
53 comments
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2010, Blogs, Cinema, Endhiran, Films, Google Reader, Google Search, Movies, Rajini, Rajni, Robot, Shankar, Stats, Summary, Tamil Blogs, Tools, Visitors, Wordpress, WordPress.com, Year in Review
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் நம் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்
ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
ஆசை மட்டும் போவதில்லை
அடிக்கும் பணம் ஓடிவிடும் பதவி விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?
சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தாலும் சொத்து சுகம் தேவையிங்கே
ஆட்சி விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே
பா.ம.க. மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சாலும் நாற்காலி சுகம் போல் ஏதுமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமுண்டு
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Bribes, Corruptions, DMK, Kalainjar, Kanimoli, Kanimozhi, Karunanidhi, Kickbacks, Ministers, Raja, Rasa, Scandals, Spectrum, Tamil Nadu, Tamil people, Tamilnadu, TN