Category Archives: News

Tamil Websites in Unicode – A List

அவ்வப்போது புதிய விஷயங்கள், கட்டுரைகள், ஆக்கங்களுடன் ஒருங்குறியில் வெளியாகும் வலையகங்களின் தொகுப்பு:

இணைய இதழ்:
வ.ந.கிரிதரன் – பதிவுகள்
வார்த்தை, எனி இந்தியன் – Thinnai
Tamiloviam / தமிழோவியம்
யாஹு குழுமம் – மரத்தடி.காம் (maraththadi.com)
நிலாச்சாரல்
முத்துக்கமலம்
மகளிர் பக்கம் – ஊடறு : பெண்குரல்
எழில்நிலா

இலக்கியம்:
அப்பால் தமிழ்
வார்ப்பு : கவிதை வாராந்தரி – Tamil Poetry Weekly

செய்தி:
சிஃபி – தமிழ்
யாஹு – Welcome to Yahoo! Tamil
தமிழ் – MSN India – Tamil Latest Tamil News, Business, Movies, Music, Cricket and more..
Thatstamil.com – தட்ஸ்தமிழ்.காம்
For the latest on Tamil cinema, general news, views and in-depth analysis in Tamil.- AOL Tamil
வெப் உலகம்.காம் :: வெப்துனியா
சென்னை ஆன்லைன் :: ஆறாம்திணை
adhikaalai.com

அச்சு இதழ்
கீற்று
தமிழக வாராந்தரி: விகடன்
இஸ்லாம், முஸ்லீம்: Welcome to Samarasam.com – Your Fortnightly Tamil Islamic Magazine from IFTchennai.org
தமிழக மாதாந்தரி: காலச்சுவடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – Tamil Nadu Thawheedh Jamaath
அமெரிக்க மாதாந்தரி: தென்றல்
வல்லினம் – காலாண்டிதழ்
மாதமிருமுறை: தென் செய்தி :: பழ நெடுமாறன்
உண்மை – கி வீரமணி
கனடா, ஈழம், இலங்கை: வைகறை

வரலாறு, ஆன்மிகம்:
DREAM LAND – You Have Reached The Right Place To Know About Islam & Tamil Muslims
Welcome to South Indian Social History Research Institute
Varalaaru – Monthly Magazine for Tamil History
Tamil Bible (Holy Bible in Tamil & English) – பரிசுத்த வேதாகமம்
இஸ்லாமிய இணையத்தளம்

வணிகம்:
சென்னை நூலகம்
கணியத்தமிழ்

ஆளுமை:
சுந்தர ராமசாமி
Pa. Raghavan : Home Page : பாரா-பேப்பர்
எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சாரு நிவேதிதா
லேனா தமிழ்வாணன் :: மணிமேகலை பிரசுரம்

நாடு
அமீரகம்: செந்தமிழ் – தமிழ் அறிவியல் இதழ்
மலேசியா இன்று

அரசியல்:
வைகோ :: மதிமுக

நாளிதழ்:
தினமலர்
விடுதலை

இலங்கை, ஈழம்:
வீரகேசரி
தினக்குரல்
ஒரு பேப்பர்
சங்கதி
http://www.pathivu.com/
புதினம்
http://www.tamilwin.com/
http://www.sooriyan.com/
http://www.alaikal.com/news/
நெருடல்
முழக்கம்
தமிழீழம்

தகவல்:
Kalanjiam – Tamil Encylopedia

தொண்டு:
உதவி – உங்கள் உதவியுடன்….

சினிமா, திரைப்படம்:
Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film
விடுப்பு

கணினி:
w3 Tamil
தமிழ்99: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்

புத்தகம்:
காந்தளகம்: தமிழ்நூல்.காம்
எனி இந்தியன்: AnyIndian – An Internet Book Shop for Indian Books
வித்லோகா, நியு ஹொரைசான் மீடியா, கிழக்கு பதிப்பகம், காமதேனு: Kamadenu.com
நியூ புக்லான்டஸ், சென்னை: ::New Book Lands:: (சோதனை ஓட்டத்தில்)

இன்ன பிற:
இணையத்தில் தேனீ :: லியோமோகன்
தமிழ் அமுதம்

கடைசியாக் டிஸ்கியில் ஒன்று:
பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை: தமிழம்.நெட்

தமிழர்களுக்கு பிடிக்காத வார்த்தை? – மன்னிப்பு; பிடித்த வார்த்தை?

பாஸ்டன் பக்கம் பெனின் நாட்டு ராஜா வந்திருந்தார். வழக்கமான அரசுமுறை சந்திப்பு, கொடை ஒதுக்கீடு, இன்பச் சுற்றுலா எல்லாம் முடிந்தவுடன் இன்னொரு காரியம் செய்தார்.

அடிமைத் தொழிலில் ஈடுபட்ட தங்கள் முன்னோர்களுக்காக இந்தத் தலைமுறையினரிடம் ‘மன்னிப்பு’ கோரினார்.

சொகுசாக வந்தோமா…
கேடிலாக் பவனி கொண்டோமா…
என்று விமானம் ஏறி ஊர் போகாமல், ஊடகத்திற்காக காட்சி பொம்மையாக்காமல், உளமார்ந்த வருத்தங்களை நேரில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மாதிரி தமிழ்நாடு/இந்தியாவில் தாங்கள் செய்த தவறுகளுக்காக மேட்டுக்குடியினரின் பிரதிநிதிகளான சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் (இன்ன பிறர்?) தார்மீகப் பொறுப்பேற்று கிஞ்சித்தாவது சஞ்சலப்பட்டிருக்கிறார்களா?

செய்தி:

1. King of Benin to Visit UMass Boston – Arts: “His Majesty is also expected to make a historic public apology for the role played by the dynastic kings of Dahomey in the trans-Atlantic slave trade.”

2. Call from a king – The Boston Globe: “While King Kpoto-Zounme Hakpon III said homelessness and poverty are problems among the people in his West African country of 8 million, the main reason for his visit was to apologize for his ancestor’s role in the trans-Atlantic slave trade.”


அதிகாரபூர்வமாக, சுதந்திரமான இஸ்ரேல் பிறந்து அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்கிறது. அதற்கான கொண்டாட்டங்களுக்கு யூதர்களைக் கொன்று குவித்த முன்னாள் கொடுங்கோலனான ஜெர்மனி நாட்டு அதிபர் அழைக்கப்பட்டார்.

தன்னுடைய பெற்றோர் காலத்தில் செய்த குற்றத்திற்காக இன்னாள் தலைவர் மெர்க்கெல் மன்னிப்பு கோருகிறார்.

செய்தி:

1. Merkel: Germany will always stand with Israel: “The visit by the German chancellor and at least half of her cabinet to Israel was meant to mark the 60th anniversary of the Jewish state, which was born out of the ashes of World War II and the murder of 6 million Jews by the Nazis.

In a first-ever address by a German chancellor to the Israeli parliament, Ms. Merkel, “The Shoah fills us Germans with shame,” she continued, using the Hebrew word for the Holocaust. “I bow to the victims. I bow to all those who helped the survivors.””

2. Merkel: Germans ‘filled with shame’ over Holocaust – USATODAY.com


இன்றைய செய்தி: Muslim Killed For Marrying Hindu

இஸ்லாம் மதத்திற்கு இன்னொரு எண்ணிக்கை கூட்டும் விதமாகத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். பிறக்கும் மக்களும் முஸ்லீமாகவே இருப்பார்கள். மனைவியும் மதம் மாறி விட்டார்.

சாதாரணமாக, இன்னொரு மதத்தை சேர்ந்த பெண் மதம் மாறி மணம் புரிந்தால்தான் வெகுண்டு எழுவார்கள். அதாவது, ஹிந்துப் பெண், கிறித்துப் பையனை கரம் பிடித்தால், இந்துக்களுக்கு ரத்தவெறி பிடிக்கும்.

இங்கு இரு சாராரிடம் இருந்து ‘மன்னிப்பு’ லேது.

1. PUCL : Message: “Mohammad Hanif Shah, 28, who had incurred the wrath of several people two years ago for marrying Hema Bhatnagar, a Hindu who took on the name Heena after marriage and converted to Islam, was shot dead near his residence at Mansore in Madhya Pradesh.”

2. » Muslim man killed for marrying a Hindu girl


தொடர்பில்லாத தசாவதாரம்: Kamal & Dasavatharam Issues – Shaivism, Vaishnavism, Hinduism, Religion, Tamil Cinema, History, Kings


கேள்வி நேரம்:

1. இராக்கிடம் அமெரிக்கா எப்பொழுது மன்னிப்பு கோரும்?

2. மனுநீதி பின்பற்றியவர்கள், தாழ்த்தப்பட்டவருக்கு இன்ன வேலை என்று அனுஷ்டிப்பவர்களிடம் இருந்து அபிஷியலாக உரிமை துறப்பு கோரினால், பாரதிய ஜனதாவிற்கு லாபமா?

3. முன்னாளில் (அதாவது ஏழாம் நூற்றாண்டு வரை) சுபிட்சமாக இருந்த சமணர்களிடமும் பௌத்தர்களிடமும் சைவ/வைணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா, அல்லது தமிழீழத்தில் செய்வதோடு பேலனஸ் ஆகி கூட்டிக் கழித்து விட வேண்டுமா?

4. அன்று நாஜிகள் வதைத்ததற்காக வருந்தும் மெர்கல், இன்று இரான் மீது பொருளாதார நெருக்கடி கொண்டர்ந்து, வருத்தி, பிராயசித்தம் தேடி — நாளைய தலைமுறை ஜெர்மனி ராஜாக்கள் மன்னிப்பு கேட்க வழிகோலுகிறாரா?

கருத்து சுதந்திரமா – லிட்டருக்கு எத்தன ரூபா??

செய்தி: AFP: Rights group highlight threats in Europe on press freedom day | ‘Predators of press freedom’ identified – UPI.com

  1. இஸ்லாமிய போராளிக் குழுக்கள்: ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான்
  2. Ilham Aliev: அஜர்பைஜான்
  3. அலெக்சாந்தர் லுகாஷென்கோ (Alexander Lukashenko): பெலாரஸ்
  4. Than Shwe: பார்மா (மியான்மர்)
  5. Hu Jintao: சீனா
  6. Diego Fernando Murillo Bejarano: கொலம்பியா
  7. ஆயுதந்தாங்கிய கொலம்பிய புரட்சிப் படை (Revolutionary Armed Forces of Colombia (FARC)): கொலம்பியா
  8. ரௌல் காஸ்ட்ரோ: கியூபா
  9. Teodoro Obiang Nguema: மத்தியரேகை கினியா (Equatorial Guinea)
  10. Issaias Afeworki: எரிதிரியா (Eritrea)
  11. Yahya Jammeh: காம்பியா (Gambia)
  12. Ali Khamenei: இரான்
  13. மஹ்மூத் அஹ்மதிநிஜாத் (Mahmoud Ahmadinejad): இரான்
  14. இஸ்ரேல் இராணுவம்: இஸ்ரேல்
  15. Nursultan Nazarbayev: கஜக்ஸ்தான் (Kazakhstan)
  16. Choummaly Sayasone: லாவோஸ்
  17. Muammar Gaddafi: லிபியா
  18. நட்சத்திர காவல் துறை (Star Force Police): மாலத்தீவுகள் (Maldives)
  19. போதை மருந்து கடத்தல் குழுக்கள்: மெக்ஸிகோ
  20. போராளிக் குழுக்கள்: நேபாளம்
  21. அரசு பாதுகாப்பு சேவை (SSS): நைஜீரியா
  22. கிம் ஜாங் இல்: வட கொரியா
  23. பாலசுதீன அதிகார சபை: பாலஸ்தீனம், காசா கரை
  24. பாலஸ்தீன பாதுகாப்பு படை: பாலஸ்தீனம், மேற்கு கரை
  25. விளாதிமிர் புடின்: ருஷியா
  26. Paul Kagame: ருவாண்டா
  27. Abdallah Ibn al-Saud: சவுதி அரேபியா
  28. Mohamed Dhere and Mohamed Warsame Darwish: சோமாலியா
  29. Al-Shabaab: சோமாலியா
  30. ETA: ஸ்பெயின்
  31. வேலுப்பிள்ளை பிரபாகரன் (விடுதலைப் புலிகள், தமிழீழம்): இலங்கை
  32. கோத்தபாயா ராஜபக்சே (Gotabhaya Rajapakse), இராணுவ/பாதுகாப்பு அமைச்சர்: இலங்கை
  33. Bashar el-Assad: சிரியா
  34. Zine el-Abidine Ben Ali: டுனிசியா
  35. Gurbanguly Berdymukhammedov: துருக்மெனிஸ்தான்
  36. Islam Karimov: உஜ்பெகிஸ்தான்
  37. Nong Duc Manh: வியட்நாம்
  38. ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வே

தொடர்புள்ள வரைபடங்கள்: Map of Freedom in the World & freedomhouse.org: Map of Press Freedom

முழுமையாக வாசிக்க: Reporters Without Borders :: Reporters sans frontières – International

முந்தைய பதிவு: இன்றைய உலகம் & சுதந்திரம் & தணிக்கை – சிந்தனை

சரியா? தவறா? – ஆசிரியர் நீச்சலுடை அணியலாமா? கூடாதா?

Tiffany Shepherd

செய்தி: ABC News: Bikini Mate Biology Teacher Cut Loose: “School District Says Unexcused Absences, Not Racy Second Job, Prompted Her Release”

சமீபத்தில் விவாகரத்தானவர். மூன்று குழந்தைகளுக்கு தாய். வாரயிறுதியிலும் வேலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். குறைந்த பட்ச ஊதியமே கிடைக்கும் பள்ளி வேலைக்கு கொசுறாகா, சனி, ஞாயிறுகளில் இன்னொரு ஊழியத்துக்கு சேர்ந்திருக்கிறார்.

மீன்பிடி படகில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் சர்ச்சைக்குள்ளாகி வேலையை இழந்திருக்கிறார். (வழி: Poll: Tiffany Shepherd, a high school teacher, was fired after these pictures surfaced online – sex survey)

தற்போது கீழே இருக்கும் மாயத்தோற்றத்தை பார்க்கவும்:


Whales vs Couple in Intimate Love Position - Sexually Explicit Images

Double Picture Illusion – Optical Illusions Picture: “research has shown that young children cannot identify the intimate couple because they do not have prior memory associated with such a scenario. What they will see, however, is nine (small & black) dolphins in the picture!”

அமெரிக்கா, ஆஸ்திரியா – ஆன்மிகம், ஆண், அப்பியாசம்

ரொம்ப நாளாக வரைவோலையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை; பின்னணி அறியவில்லை என்பது சுணங்கலுக்கு முதல் காரணம். ரொம்ப ஆறிப் போய்க் கொண்டிருக்கிறது/நினைவை விட்டு அகல்கிறது என்பது இன்னொரு காரணம். எனவே, டிராஃப்ட்… அப்படியே…

பிபிசி செய்தி: ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது

ஆஸ்திரியாவில் தனது பெண்ணையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு நிலவறையில் பூட்டி வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எழுபத்தி மூன்று வயதான அந்நபர் தனது பெண் மூலமாக மேலும் ஆறு பெண்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது வயதுகளில் இருக்கும் அப்பெண், தனது தந்தை கடந்த 1984 ம் ஆண்டு தன்னை நிலவறைக்குள் வரவழைத்து தனக்கு போதை வஸ்துகளை கொடுத்து தன்னை அப்போது இருந்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த பெண்ணோடு சேர்த்து ஒரு சில குழந்தைகளும் நிலவறையிலேயே அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காமக் குரூரன் செய்தியை ஜீரணிக்கத் துவங்கியுள்ளனர் ஆஸ்திரிய மக்கள்

ஆஸ்திரிய மக்கள், தங்கள் நாட்டில் நடந்த மிகக் குரூரமான செய்தியை கொஞ்சம் கொஞமாக நம்பத் துவங்கியுள்ளனர்.

73 வயதான ஆண் ஒருவர், தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைத்துவைத்து, அந்த பெண் மூலம் ஏழு குழந்தைகளை பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் படிப்படியாக ஜீரணிக்க முயன்று வருகிறார்கள்.

ஆஸ்திரியா நாட்டில் நிலவறையில் மனிதர்கள் அடைத்து வைக்கப்படும் செய்திகள் வெளியாவது, சமீபத்தில் இது மூன்றாவது முறை. நடாஷா காம்புஷ்ச் என்கிற இளம்பெண், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிலிருந்து வெளியே வந்திருந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், தனது மூன்று பெண்களை ஏழு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்துவைத்திருந்த செய்தி 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.


செய்தி: Foster care could be wrenching for Texas sect children – Yahoo! News

என்.பி.ஆர் ஒலித்தொகுப்பு: Texas Polygamy Case Challenges Religious Thinker : NPR

பலதார திருமணம் குறித்த நியு யார்க் டைம்ஸின் செய்திக் கோர்வை: Polygamy News – The New York Times

மேலும் செய்திகள்:
Texas Polygamy Raid May Pose Risk – New York Times

பிபிசி: BBC NEWS | Americas | More raids on Texas polygamy sect

டைம்:
1. The Texas Polygamist Sect: Uncoupled and Unchartered – TIME

2. Tracing the Polygamists' Family Tree – TIME

விழியம், பேட்டிகள்: Men From Polygamy Sect Speak, Early Show Co-Anchor Maggie Rodriguez Lands Exclusive Interview With 3 From Texas Compound – CBS News

ஒரே வீட்டில் இரு மனைவி இருப்பது அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் சட்டப்படி சரி: A different brand of polygamy – The Denver Post

வ.கே.கே.: ABC News: What's Next in Polygamy Custody Case?

காலங்காலமாக நடப்பதுதான்: Under God: Polygamy and Intrusion in West Texas – On Faith at washingtonpost.com

அடிக்கடி எழும் வினாக்களுக்கான பதில்கள்: 04/26/2008 | What is the FLDS polygamous sect? | Kansas.com

ஆஸ்திரியா குறித்து ஊடகமெங்கும் செய்தி அடிபட்டுக் கொண்டிருக்க, அமெரிக்காவில் இன்றளவிலும் தொடரும் இந்தப் பழக்கவழக்கம் குறித்து யாரும் கண்டுகொள்வதே இல்லையே? டெக்சாஸில் நிச்சயம் தோற்கப் போகும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஒபாமாவும் ஹில்லரியும் கூட இந்த மாதிரி கூத்தை அரசியல் பிரச்சினையாக கையில் எடுக்காதது புரிகிறது. ஆனால், ஊடகங்கள்!?

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு மட்டுமா?

Economist

நன்றி: Rivers and conflict | Streams of blood, or streams of peace | Economist.com: “Talk of thirsty armies marching to battle is surely overdone, but violence and drought can easily go together”

  • உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் எண்ணிக்கை – 263
  • கடந்த ஐம்பந்தாண்டுகளில், நதிநீர் பங்கீட்டுக்காக 400 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
  • பெரும்பாலான நாடுகள் அமைதியாக பிரித்துக் கொண்டாலும், தண்ணீருக்காக 37 வன்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
  • இந்த முப்பத்தேழில், 30 சண்டை இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் நடுவில் மூண்டிருக்கிறது. ஜோர்டான் நதியின் மேற்பாகம் எவருக்கு சொந்தம்?
  • எண்ணெயும் வைரமும்தான் தற்போதைக்கு சர்வாதிகாரிகளின் விருப்பமாக உள்ளன. கோங்கோ (Congo), அங்கோலா (Angola) போன்ற கொடுங்கோல் ஆட்சிநாயகர்களுக்கு தண்ணீரைக் கடத்துவது கஷ்டமான காரியம்.
  • தமிழகப் புலவர்களுக்கு பிடித்த பாடுபொருளான சஹாரா பாலைவனத்திற்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் நைல், நைஜர், வோல்டா, ஜம்பேசி எல்லாமே ஆபத்தான பகுதிகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
  • Global Worldwide water relationsஆனால், உலக வங்கியை நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போல் அல்லாமல் சீனா தன்னிச்சையாக நதிகளை தடுத்தாட்கொண்டு, அணையெழுப்பி, திசைதிருப்பி, இயற்கையை சுதந்திரமாக கட்டுப்படுத்துகின்றது.
  • ருசியாவின் ஆப் (Ob) நதியோடு இணையும் இர்திஷ் (Irtysh) நதியை நிறுத்துவதாகட்டும்; கஜக்ஸ்தானின் பல்காஷ் (Balkhash) ஏரியை நிரப்பும் இலி (Ili) நதியாகட்டும்… யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. (கஜக்ஸ்தான் மக்கள்தொகை: 15 மில்./சைனா: 1300 மில்.)
  • இதே ரீதியில் உலகம் வெம்மை அடைந்து கொண்டிருந்தால் மௌரிடானியா (Mauritania), மாலி, எத்தியிப்போ போன்ற நாடுகளில் தனிநாடு கேட்டுப் போராடுபவர்களின் பிரிவினைவாதம் வலுப்பட்டு கலகம் வெடிக்கலாம். ஆப்பிரிக்காவின் மக்கள் பெருக்கமும் இந்த இனப் போராட்டத்திற்கும் நன்னீர் பற்றாக்குறைக்கும் தூபம் போட்டு சாமரம் வீசுகின்றன.
  • நேபாளத்தில் சமீபத்தில் நடந்த மாவோயிச வெற்றிக்கும், முன்னுமொரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் வளர்ந்ததற்கும் கூட வறட்சிதான் காரணம்.

Hannah Montana & Kamal: Father – Daughter photos

கமல் – சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. – Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…

இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹானா மொன்டானாநாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:
Kamalahasan - Daughter & Father Issues

அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy – BostonHerald.com

அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:
miley cyrus Howard Stern

பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture: vanityfair.com: “Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney.”

சுருக்கமான பின்னணி:

  • ஹானா மொன்டானா‘ பார்த்திரா விட்டால், பள்ளியில் புழு போல் பார்க்கப்படுவதாக என்னுடைய எட்டு வயது மகள் பயப்படும் அளவு புகழ்பெற்ற பதின்ம வயதினருக்கான தொடர்.
  • வழக்கம் போல் இனக்கவர்ச்சி (டேட்டிங்), பாடல் ரசனை, ஆசிரியர் ரகளை என்று டிஸ்னித்தனமாக இருக்கும். அதாவது, தமிழ் கதாநாயகி பாஷையில் சொன்னால், ‘கவர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் இடையே உள்ள லஷ்மண் ரேகா’வைத் தாண்டாமல் தொட்டுச் செல்லும்.
  • விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா… நானா‘ போலும் இல்லாமல், சன் தொலைக்காட்சியின் ஜோடிப் பெருத்தம் போலும் இல்லாமல், அதையும் தாண்டி குடும்ப அடிதடிகளை அரங்கேற்றி தற்கொலைகள், மன நல பாதிப்புகள் வரை சம்பந்தப்பட்டவரை இட்டுச் செல்லும் ருசிகரமான நிஜ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் ‘ஹோவர்ட் ஸ்டெர்ன்‘ (Howard Stern).
  • “The picture disturbs me. It looks like his daughter is his girlfriend. He’s trying to be hot” என்று திருபாட்காஸ்ட் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிந்தனைவயப்படும் நேரம்:

  • அப்பாவையும் பொண்ணையும் ஃப்ராய்ட்தனமாக பார்ப்பது உலகளாவியது.
  • மகள் நட்சத்திரமாகி விட்டால், ஆதுரமாக புகைப்படம் எடுப்பது உகந்தது அல்ல.
  • புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்பினால், பதிவிட சங்கதி கிடைக்கும்.

Cartoons Comics

    Bhajji – Sreesanth row: How to market sports to Men?

    ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது.

    போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும்.

    அமெரிக்காவில் இதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நியு யார்க் யாங்கீஸுக்கும் பாஸ்டன் ரெட் சாக்ஸுக்கும் ஆகவே ஆகாது.

    நியூ யார்க் தோற்க வேண்டும் என்பதற்காக ‘செய்வினை’ வைப்பார்கள். பாஸ்டன் பேஸ்பால் வீரரின் சட்டையை விளையாட்டு அரங்கத்துக்குள் புதைத்து வைப்பார்கள். சென்ற வருடம் யாங்க்கீஸ் தோற்றதற்கு காரணம் தேடுபவர்கள் அந்த ‘மந்திரித்த டி-சர்ட்’டை தோண்டி கண்டுபிடித்து வழக்கு தொடுக்கும் நாடகம் எல்லாம் நடக்கும்.

    (கடைசியாக அந்த சட்டை $175,100 டாலருக்கு நன்கொடை அமைப்புக்காக ஏலத்தில் விலை போனது நல்ல விசயம்).

    இன்று பாஸ்டனுக்கு விளையாடும் வீரர், நாளை நடக்கும் ஏல பேரத்தில் நியூ யார்க்கிற்கு செல்வது சகஜமாக நிகழ்ந்தேறினாலும், இதே மாதிரி அண்டை நகரங்களுக்குள் தீராப்பகை இருப்பது போல் பாவ்லா காட்டி ரசிகர்களை முறுக்கேற்றுவார்கள்.

    கபில் தேவுக்கு அழத் தெரியவில்லை என்றால், ஹர்பஜன் சிங்குக்கு அறையத் தெரியவில்லை.

    இணையத்தில் பதினாலு தடவை ஃபார்வர்ட் மடலாக படித்த நகைச்சுவையை சொல்லும் ‘அசத்த/கலக்கப் போவது யாரு‘ நபருக்கு ‘டைமிங்’ முக்கியம். இந்த மாதிரி உணர்ச்சிகரமான உச்சகட்டத்திற்கும் ‘டைமிங்’ அதி முக்கியம்.

    ஸ்ரீசாந்த் பவுன்சர் போட்டவுடன் ‘திமிரு’ தருண் கோபி எழுதிய இலக்கியத்தரமான டயலாக் ஆன ‘டேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்’ என்று கோபமாக அறைந்தால், அதற்கு பெயர் டைமிங். தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பும்.

    செய்தி:

    மொஹாலி போட்டி முடிந்ததும் வரிசையாக பஞ்சாப் அணி வீரர்கள் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார் ஹர்பஜன் சிங். 3-வது வீரராக ஸ்ரீசாந்த் நின்றுள்ளார். அவரிடம் கைகொடுப்பதற்குப் பதிலாக ஓங்கி அறைந்துள்ளார். ஹர்பஜனைத் தொடர்ந்து வந்துகொண்டி ருந்த அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், அதைக் கண்டு கொள் ளாமல் மற்ற வீரர்களிடம் கைகொடுப்பதில் கவனம் செலுத்தி யுள்ளார்.

    மும்பை அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்துக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங்கை தடுக்கத் தவறியதால் அவருக்குத் இந்தத் தண்டனை.

    நேற்றைய கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியில் கூட கைகலப்பு அரங்கேறியது. ஒரு தலை பட்சமாக பாஸ்டன் செல்டிக்ஸ்‘ அணியே வென்று கொண்டிருக்க ஆட்டத்தை விறுவிறுப்பாக்க என்.பி.ஏ. (நேஷனல் பாஸ்கெட்பால் அஸோசியேஷன்) நினைத்தது.

    முதலில் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டனர். எதிரணியின் அராஜகமான செயல்களுக்கு விசிலடித்து குற்றங்கண்டு பிடிக்க வேண்டிய தருணங்களில் கண்டுங்காணாமல் விட்டுக் கொடுத்தும், ‘மாமியார் கை பட்டா குத்தம்’ என்பது போல் பாஸ்டன் லேசாக எதிரணியினர் மேல் உரசினாலும், ‘ஃபவுல்’ என்று ஊக்கப்படுத்தி, பார்வையாளர்களை உசுப்பேத்தினர்.

    ‘அதாவது நாலு பேருக்கு நல்லதுன்னா’ என்பது போல் நாற்பது பார்வையாளர்களுக்கு கோபம் பொங்கி வர வேண்டும். வந்தது.

    அடுத்தது, சண்டக்கோழியாக வளர்த்துவிடப்பட்டிருக்கும் ஒருவர் மேல் ‘Foul’ முழங்கியவுடன், ‘அவன்தான் தவறு செய்தான்’ என்பது அப்பட்டமாக தெரிகிறதே என்று சிலுப்பிக் கொண்டு எழ ஆட்டம் சூடு பிடித்தது.

    இதைத்தான் லால்சந்த் ராஜ்புத் + ஹர்பஜன் சிங் + ச்ரீசாந்த் (& நடுவர்(கள்)) செய்யத்தவறி விட்டனர்.

    ஆட்டம் ஆரம்பத்தில் ‘முக அழகிரி + தயாநிதி மாறன்’ மாதிரி நட்போடு உரசவேண்டும். நடுவே கருத்துக்கணிப்பு மாதிரி பொறி பறக்க வேண்டும். கடைசியில் அப்பாவியாக மூன்று பேரைப் போட்டுத் தள்ளிவிட்டு நாடகத்தை முழுமையாக்க வேண்டும்.

    இதற்காகத்தான் நடிகர்களை கிரிக்கெட் அணிகளின் தூதுவர்களாக நியமிப்பது வசதிப்படும். பெங்களூர் அணிக்கு த்ரிஷாவை தூதுவராக ஆக்கியிருந்தால் ‘சபாஷ்! சரியானப் போட்டி’ என்று எல்லாரும் உற்சாகமடைந்திருப்பார்கள்.

    நிஜ களவீரர்களுக்கு பதில் ‘த்ரிஷா – நயந்தாரா இடையே சௌரிப்பிடி சண்டை’ என்று காண கண்கோடி வேண்டும் காட்சிக்காக முந்தின நாளே நுழைவதற்கு க்யூ வரிசையில் காத்திருப்பார்கள்.

    ஆனால், ஹர்பஜன்/ஸ்ரீசாந்த் என்று நாடகத்தனமாக, கொல்கத்தாவின் ஷாரூக் கானுக்கும் மும்பை அம்பானிக்கும் வாள் சண்டை என்றால் எவர் நம்புவார்கள்?

    தொடர்புள்ள நகைச்சுவைகள்

    அங்கே டி ஆர் பாலு; இங்கே டிமாஸி

    அங்கே…

    1. டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – ஜெயலலிதா
    2. டி.ஆர்.பாலு – 100% guilt, 0% regret !
    3. மன்மோகன் சிங் இது நியாயமா?:

    தனது மகன் நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்குமாறு டி.ஆர். பாலு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் வழியாக எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    இங்கே…
    Just the ticket for brokers – The Boston Globe: “They hire an associate of DiMasi, watch scalping bill pass the House”

    ரஜினி படம் வெளியான அன்று நூறு ரூபாய் நுழைவுச்சீட்டு, ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். அந்த மாதிரி உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சிகள் ‘அரங்கு நிறை‘ந்து விட்டால், ப்ளாக்கில் விற்பார்கள். இந்த மாதிரி விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ‘மறு-விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்காது’ என்று அனேகமாக அறுதியிட்டு சொல்லும் நிலையில், சபாநாயகர் திடீரென்று தன் ஆதரவை மாற்றிக் கொண்டு, கள்ளச்சந்தை, கவுண்டரிலேயே சந்தைப்படுத்தல் என்று எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

    250,000 டாலர் கிடைத்தால் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

    இந்த மாதிரி வாக்களிப்பது சட்டப்படி குற்றம் கிடையாது. காசுக்காக சட்டமன்ற உறுப்பினர்களை ‘லாபி‘ செய்வதற்கு நடைமுறைகளை வழிவகுத்திருக்கிறார்கள்.

    இப்போதைய பிரச்சினை: ஐயாயிரம் அமெரிக்க வெள்ளிக்கு மேல் லாபியிஸ்ட்களிடம் பெற்றுக் கொண்டால், வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அவ்வாறு செயல்படாமல் 250,000 ‘ஊக்கத்தொகை’ வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சர்ச்சை கிளப்பியிருக்கிறது.

    அவனவன மகனுக்கு மந்திரி பதவி கேட்கும் காலத்தில், டியார் பாலு பெட்ரோல் பங்க் கேட்டது குற்றமா?

    நியு யார்க் டைம்ஸ் – செய்தி, கட்டுரை

    1. Inmate Count in U.S. Dwarfs Other Nations’ – By ADAM LIPTAK: The U.S. has less than 5 percent of the world’s population but almost a quarter of its prisoners.

    2. The Accidental Rebel – By PAUL AUSTER: மூவ் ஆன்.ஆர்க் அடுத்த இராக் போராட்டத்தை துவங்கியிருக்கிறது. ஹில்லரி க்ளின்டனோ இரானை ரெண்டு சாத்து சாத்தி மூலையில் உட்கார வைக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்த சமயத்தில் இந்த மாதிரி எழுச்சி ஒன்றில் பங்கு கொண்டவரின் நினைவலை.

    3. China May Give Up Attempt to Send Arms to Zimbabwe – New York Times: ஜிம்பாப்வேயில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. முன்னாள் பண்ணையார் இங்கிலாந்து தொடங்கி அனைத்து மேற்கத்திய உலகமும் கர்ம சிரத்தையாக செய்திகளைப் பின் தொடர்கின்றன. சீனாவில் இருந்து அன்புடன் அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் திருப்பி அனுப்பப்பட்ட காதை.

    4. Europe Turns Back to Coal, Raising Climate Fears – By ELISABETH ROSENTHAL: எல்லோரும் அணுசக்திக்கு மாறினால், இத்தாலி சரித்திரத்தை புரட்டிப் போட்டு, நிலக்கரிக்கு மாறுகிறது. தொடர்பான விரிவான ஆராய்ச்சி.

    5. Cruel and Unusual History – By GILBERT KING: இந்தியாவைப் போல் ‘ஆயுள் தண்டனை’ என்றால் நன்னடத்தை எல்லாம் கூட்டிக் கழித்து ஏழாண்டுகளில் விடுதலை கிடைக்காது. சாகும் வரை சிறைவாசம் இருந்தாலும் அமெரிக்க உச்சநீதிமன்றம் மரண தண்டனையை நேசிக்கிறது. க்ரீன் மைலில் காட்சியாக்கப்பட்டது எல்லாம் நிஜமாகவே நடந்தேறியிருக்கிறது என்று விவரிக்கும் பதிவு. (ஐந்தாண்டுகள் முன்பு பதிந்தது – Points to ponder against Capital Punishment)

    அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் சார்பு நிலை குறித்த நச் காட்சி (நன்றி: ஏபிசி டிவி – பாஸ்டன் லீகல்)

    6. He Wrote 200,000 Books (but Computers Did Some of the Work) – By NOAM COHEN: பொதுவில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அறுபது/எழுபது கணினிகளின் துணையுடன் நூற்றைம்பது பக்க புத்தகங்களைக் கோர்த்து, மின்வடிவில் அனுப்பி வைக்கும் பேராசிரியர் குறித்த அறிமுகம்.

    7. High School Project on Genocide Was a Portent of Real-Life Events – By SAMUEL G. FREEDMAN: பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்போம்; சரித்திரக் கேள்விகளுக்கு பதில் சொல்வோம். இந்தப் பள்ளியின் ஆசிரியரோ சமகால செய்திகளையும் வராலாறையும் கோர்த்து வினாத் தொடுத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். இந்த மாதம் ‘இனப்படுகொலைகளை நினைவுகூறும் மாதம்‘. நியு யார்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்ட ஆசிரியரும் யுகோஸ்லேவியா, கெமர் ரூஜ் (சிவப்பு கம்போடியா) எல்லாம் பாடசாலையில் அறிமுகப்படுத்தினாலும் ஈழத்தை கண்டுகொள்ளவில்லை.