Monthly Archives: மே 2009

விரோதி வருஷத்திய ப்ரஹ்மோத்ஸவம்

வைகாசி மாதம் 15ஆம் தேதி (மே 29, 2009) வெள்ளிக்கிழமை :: நாச்சியார் திருக்கோலம்

யாளி வாகனம்

நாச்சியார் திருக்கோலம்

நான்காம் நாள் திருவிழாப் புகைப்படங்கள் :: Srinivasar Temple Brammotsavam: Sesha Vaganam

நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் கிளி ஏந்தி, கால்களை மடித்த நிலையில் மாலையிலே, பராங்குச நாயகியாய் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.

Srinivasar Temple Brammotsavam: Sesha Vaganam

Day 3 :: அனுமந்த வாகனம்: ஸ்ரீநிவாசர் வைகாசி விழா

மாலை: சந்திர பிரபை

If Research Papers had a Comment Section

If-research-papers-journals-had-comment-section-PHD-Comics-Cartoons

Thanks: PHD Comics: OMG! ROTFL!!

வணக்கம் – அனலேந்தி

இட்லி கிடைக்கும் என்றால்
இருபது வரியில் கவிதை…
கிட்னிபீஸ் கறியென்றால்
கால்பக்கம் சின்னக்கதை…

சிக்கன், மட்டன் பிரியாணியா?
சிக்கிவிடும் சிறுகதை…
சொக்க வைக்கும் விருந்தா?
நிற்க வைப்பேன் காவியம்…

நூறு ரூபாய் நோட்டுக்கு
ஆறுவகைப் பாட்டுண்டு…
ஊறுகாயும் குவார்ட்டருமென்றால்
ஊடுகட்டி அடிப்பேன் இலக்கியம்…

பெட்டி நிறைய ‘கட்டா’?
தொட்டு விடுவேன் எழுத்துச் சிகரம்!
சட்டென்று சொல்லி விடுங்கள்
சரக்கு எது வேண்டுமென்று!

எட்டுத்திக்கும் எகிறிவரும்
என்னறிவுப் பெட்டகத்தை
துட்டுகுவித்து வாய்கவரும்
தரகர்களுக்கு என்வணக்கம்.

பதவிசான குளிர்காரில்
பவனிவரும் பிரமுகருக்கு
தொட்டுவிடும் கால்வணக்கம்!

வெளியான இதழ்: கல்வெட்டு பேசுகிறது
அக்டோபர் – 2008
ஆசிரியர்: சொர்ணபாரதி

சென்னை மெரினா ராஜாங்கம் – IV

ஊக்கம் கொடுத்த பதிவு: பா ராகவன் பேப்பர் » நடந்த கதை

Posters-Marina-Beach-Chennai-Madras-Sightseeing-Child-Laborசென்னை எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் முன்பெல்லாம் மணல் இருக்கும். இப்பொழுது சிறிய மீன்களும், செதில்களும், இருக்கின்றன. மணல் வீட்டுக்கு பதிலாக leftover மீன் குழம்பு வைத்து சிறார் விளையாடுவார்.

காலையில் தெரிந்த முகத்தினரின் அணிவகுப்பு சொல்ப அதிகம். தாமதமான ஏழரைக்குக் கூட சாருஹாஸன், செய்தி வாசிப்பாளர், நெடுந்தொடர் தம்பதியினர் கூட்டம்.

கூட்டுத்தொழுகை, பிரார்த்தனை க்ளப், அரசியல் பேச்சுக்கு வரும் லாரிக் கூட்டம் போல் ஒரு சேர உடற்பயிற்சி பாவ்லா காட்டுவது தமிழருக்கு மனமகிழ்வு தருகிறது. முகமன் கூறிக்கொள்கிறார்கள். சேர்ந்து இளநீர் சாப்பிடுகிறார்கள். நேற்றைய செய்தியைத் தாங்கிய ‘தி ஹிந்து’வை உரையாடி மகிழ்கிறார்கள்.

ஃபேஸ்புக், ட்விட்டர், குறுஞ்செய்தி என்று குறுகி, தொடர்பை கைவிட்ட தலைமுறை அல்ல அவர்கள். கூட்டுப்புழு சமுதாயத்தில் நேரடி சந்திப்பை மதிப்பவர்கள்.

Parthasarathy-Temple-Triplicane-Entrance-Railway-Station-Chennai-Beach-Mareenaமதியம் மனமகிழ் மன்றத்தில் கேரம், மாலை கன்ட்ரி க்ளபில் ஐபிஎல்லுடன் ராயல் சேலஞ்சர் என்று வழக்கப்படுத்திக் கொண்ட உயர்வட்ட கூட்டம். காலையில் ஐஸ் ஹவுசில் இருந்து லைட் ஹவுஸ் வரை நடந்துவிட்டு பதநீர், இளநீர், வறுகடலை, தர்பூசணி, கிர்னிப்பழம் என்று அப்பிடைசர் அருந்தி, ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் மசாலா தோசையும் பூரி மசாலாவும் அடித்து துவம்சிப்பவர்கள்.

பாரம்பரிய லுங்கி முதல் மாறனின் அதிகாரபூர்வ ஆடையான பருத்தி அரைக்கால் சட்டை வரை எல்லாவிதமும் பார்க்கக் கிடைக்கிறது. தொடையோடு இறுக்கமான ஷார்ட்ஸ், டெரிலின் ஷர்ட் + முழுக்கால் சட்டை என்று டை கட்டாத குறையோடு தங்கள் நாகரிக அனுபவத்தை பறை சாற்றுபவர் அன்றாட வரவு போல் அத்யந்தமாக சூரிய நமஸ்காரம் செய்கிறார். குர்தி & நீல ஜீன்ஸ் அணியும் ஒருத்தரே ஒருத்தரும் வந்திருந்தார்.

Classical-Tamil-Research-Scholars-Institute-Languagesபெண்களுக்கு 33% சதம் வேண்டாம். 3% கூட தேறமாட்டார்கள். ஓடுபவர்கள் 1%. ஓடுபவர்களை விட குதிரை போலீஸ் அதிகம். பீச் ரோடில் இருந்தே பார்த்தசாரதி அழைக்கிறார். கூடிய சீக்கிரமே மேல்மருவத்தூர் சக்தி பீடம் பிரான்ச், சத்யசாய்பாபா சத்சங், காஞ்சி ஜெயேந்திரர் மட கிளை எல்லாம் அலங்கார வளைவுடன் அரோகரா போட வைக்கலாம்.

தம்பதியினருக்கு பாந்தமான இடம். பிரச்சினைகளை மனம்விட்டு பேச காலைப் புத்துணர்ச்சியுடன் தனிமையும் கிடைக்கும் இடம். கூட்டுக் குடும்பத்திலிருந்து தப்பிக்க தினசரி தேனிலவு தரும் தலம். நிறைய நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்ட மாதிரிதான் தெரிகிறது.

அமெரிக்காவின் கடற்கரையை எதிர்நோக்கும் சாலைகளில் பல்வேறு பொருளை விற்கும் பேரங்காடி வணி வர்த்தக மையங்கள் நிறைத்திருக்கும். இல்லையென்றால் விநோதமான வடிவமைப்புடன் ஏதாவது பெருநிறுவனம் 99 வருட குத்தகை எடுத்து 98வது மாடியில் போர்ட் மீட்டிங் நடத்திக் கொண்டிருக்கும். அதுவும் லேது என்றால், மடோனாவும் மரியா கரேவும் குடித்தனம் செய்யாமல் காலியாகப் பூட்டி வைத்திருக்கும் மாட மாளிகை அமைந்திருக்கும். இங்கே அரசினர் கட்டிடங்கள், முக ஸ்டாலின் புகுந்து தடுத்தாட்கொண்ட இராணி மேரி கல்லூரி, மாணவர்களே பூட்டிக் கொள்ளும் பிரெசிடன்சி காலேஜ். தொட்டுக்க அரசினர் முன்மாதிரி (மாடல்) மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

கோவிலுக்கு சென்றால் இதே நடை பயிலலாம். இன்னும் உக்கிரமாக, வேகமாக புண்ணியம் வரவழைக்கும் வீரியத்துடன் சுழலலாம். ஆனால், சுலோகமோ, நாமாவளியோ முணுமுணுக்க வேண்டும். நாலாவது வெளிப்பிரகார சுற்றுக்குப் பின் ‘என்ன வேண்டுதலோ?’ என்று மூணாம் வீட்டு பச்ச கேட் மாமி கண்ணால் விசாரிப்பாள். எட்டாவது சுற்று முடிந்தவுடன் ‘என்னடீயம்மா பிரச்சினை?’ என்று நேரடியாகவே பிக்கல் பிடுங்குவாள்.

பீச்சில் அதெல்லாம் கிடைக்கமாட்டாது.

சென்னையின் முக்கிய சாலைகளில் நடக்க இயலவில்லை. எப்பொழுதுமே பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தராத நகரம். நடராசா சர்வீஸில் செல்பவர்களை கீழே வீழ்த்துவது இருசக்கர வாகனவோட்டிகளின் முக்கிய கடமை. இப்பொழுது அது நாற்சக்கர காலம். ஹோண்டா சிடியும் டொயோட்டா இன்னோவாவும் ஸ்கோடாவும் முட்டி மோதி விளையாடும் 99.999% ஸிக்ஸ் ஸிக்மா சென்னையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் மெரினா வாக்கிங்.

அனுமந்த வாகனம்: ஸ்ரீநிவாசர் வைகாசி விழா

தங்க கருட வாஹனம் :: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கருடோத்ஸவம்

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கருடோத்ஸவம்

சூரியப் பிரபை :: Srinivasa Perumal Brahmotsavam: Day 2

Wanted Thangaraj: Movie Promo Still

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த கதை: India Films to Indie Movies – Meme

திரைப்படத்தின் புகைப்படம்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா - குழந்தைகள் ஆண்டு - இயக்குநர் ஹரிஹரன்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா – குழந்தைகள் ஆண்டு – இயக்குநர் ஹரிஹரன்

H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே