மீனா: வேதனை. அவமானம், வெட்கம்!
பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?
மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.
மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?
பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்)
மீனா கடுப்பாகிறார்
மீனா: என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!
ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.
மீனா: என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?
Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.
மீனா: யோவ்! என்னா? விளயாட்டா இருக்கா? வந்ததில் இருந்து பார்க்கிறேன்… சும்மா தும்மிக்கினே இருக்கே!
ரஜினி அப்பாவியாய் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.
மீனா: யோவ்… உன்னத்தான் சொல்றேன்.
காந்திமதி: ரெங்கநாயகி… வேண்டாம்! பேசாமல் இரு.
மீனா: நீங்க சும்மா இருங்க அக்கா! அப்பத்திலிருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன். தும்மிக்கிட்டே இருக்கியே!? என்ன நெனச்சுட்டு இருக்கே உன் மனசில்?
ரஜினி: ஏம்ப்பா… நாட்டில மனுசன் தும்மினாக் கூடவா தப்பு?
மக்கள்: கோரஸாக அதானே?!
மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!
ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.
எச்ச எச்ச எச்ச எச்சா… கச்சச்ச கச்சகச்சா
(ரஜினியின் தோழர்) ரமேஷ்கன்னா: இது வசனம்… முத்து… தூள் கிளப்புமா! ஆ… அக்காங்… நீயும் பேசறியே!?
மீனா: யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!
ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.
மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?
ர.கன்னா: யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?
ரஜினி: என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!
ர.கன்னா: சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!
மீனா: யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…
கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…
ரஜினி: ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?
கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே
ரஜினி: அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…
ர.கன்னா: ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்
ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.
மேடையில் ஏற்றப்பட்ட ரஜினி: ஏம்ப்பா சுடுது!!
ரஜினி: உங்க பாட்டுக்கு ஏத்திவிட்டீங்க… இவங்களையெல்லாம் எப்படிம்மா மேய்க்கிறது?
மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…
ரஜினி: எசமான்…??
சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.
ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!
அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!
மீனா: எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?
ரஜினி: அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…
மீனா: டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?
ரஜினி: வம்புக்கு நான் இழுக்கல
மீனா: என்ன… திமிரா?
ரஜினி: அது எனக்கில்ல
மீனா: பின்ன எனக்கா?
ரஜினி: அப்படீன்னு நான் சொல்லல
மீனா: யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?
பொதுவாக என் மனசுத் தங்கம்… ஒலிக்கிறது.
கண்டு ரசிக்க:
மீனா:ரஜினி:
பின்னிட்டீங்க .. குறிச்சொல்லுக்கும் சேர்த்து 🙂
ட்ரிங்கு ட்ரிங்காலே போடு ட்ரிங்கு ட்ரிங்காலே
சந்தை பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு
அல்டாப்பு ராணி ஆகாச வாணி
உல்ட்டாவா போனா பொல்லாத தேனி
இரவும் பகலும் எதுவும் கிடைக்கும் ? பஜாரு
பம்பாயி வாலா ஜிகிரி தோச்த்து போடு
பஞ்சாபி லாலா படா ஜோரு
சந்தை பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு
பட்டா கத்தி இங்கு கிடைக்கும்
கத்திகுத்தும் தினம் நடக்கும்
டிங்க்சரும் வாங்கலாம் ஜிஞரும் அடிக்கலாம்
எல்லாமே ஏமாத்து தான்
ஏமாந்தா பம்மாத்து தான்
வெளியில இருக்கு பஜாரு
ஒழுங்க மனசு மஜாரு
? திருட்டு உஷாரு
நடக்குது சூபர் பஜாரு..
பம்பாயி வாலா ஜிகிரி தோச்த்து போடு
பஞ்சாபி லாலா படா ஜோரு
சந்தை பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு
? தான் இங்கே ஜொலிக்கும்
? ஜூட்டு தான்
ஜெயிச்சாலே சல்யூட்டு தான்
தோத்தாலும் கவ்வாது தான்
அடிக்கவும் ஒருத்தன் வந்தாச்சு
அணைக்கவும் ஒருத்தன் உண்டாச்சி
துணிஞ்சவன் ஜெயிச்சி நின்னாச்சி
ஜெயிச்சவன் தலைவன் என்றாச்சி
இந்தமாதிரி சினிமால்லாம் எங்கே போச்சு இப்போ?
கமலா