ஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்


இன்றைய செய்திகளில், அலசல்களில் –

எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு.

ப்ராட்லி விளைவு (Bradley effect) –

1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

ஆளவந்தான் படப் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

வைரமுத்துவும், கமலும் மற்றும் ஒபாமாவும் மன்னிக்க.

கறுப்பு பாதி வெள்ளை பாதி
கலந்து செய்த கலவை நான்!

வெளியே தெளிவு உள்ளே கவலை
தோற்க இயலா நிலையில் நான்!

நிறவெறி கொன்று நிறவெறி கொன்று
தேர்தலில் வெல்லப் பார்க்கின்றேன்!

ஆனால்
ப்ராட்லி கண்டு தூக்கம் இழந்து
தோல்வி பயம் வருகிறதே!

அமேரிக்காவே! அமேரிக்காவே!
எனக்கே ஒட்டு தருவாயா?
நிறவெறி கொன்று மெக்கெய்ன் தோற்று
என்னை வெல்லச் செய்வாயா?

-இது போதுமென்று நிறுத்திக் கொள்கிறேன்.

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்!

வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்!

மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்!

ஆனால்……….
கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே!

நந்த குமாரா! நந்த குமாரா!
நாளை மிருகம் கொள்வாயா?
மிருகம் கொன்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?

3 responses to “ஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்

  1. படம் : கந்தன் கருணை
    பாடல் : கண்ணதாசன்
    இசை : கே.வி.எம்.
    பாடகி : பி சுசிலா

    (அமெரிக்கா ஒபாமாவை நோக்கி பாடுகிறது)

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – நான்
    வாக்களித்தேன் உன்னை மணப்பதற்கு

    புஷ் இராக் முரசொலிக்க
    புவி நின்றாங்கே வெம்மையாக
    கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் – அந்த
    கனவுகள் நனவாக கணிப்பு தந்தாய்

    உலகில் நான் தனித்திருந்தேன்
    பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
    துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்.. தோழி..
    தூக்கத்தின் கனவென்றுதான் உரைத்தாள்

    அஞ்சேல் என நீ பெயர் கொண்டாய்
    சொல்வேல் கொண்டு நீ தரணி வென்றாய்
    கொள்கை கொண்டு நீ குடியரசு வென்றாய் –
    நம்பிக்கை விதை கொண்டு நீ எனை வென்றாய்

    அசல்/நன்றி: Melody Queen P. Susheela – Tamil Song Lyrics

  2. பாட்டும் கூத்துமா கலக்கல்!! 🙂

  3. சாரா பேலினை ப் பார்த்து இந்த பாடல் பாடலாம்:

    ராணி மகா ராணி
    ராஜ்ஜியத்தின் உதவி(?) ராணி
    வேக வேகமாக வந்த நாகரீக ராணி

    GOP யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
    அழகு பொம்மை போல வந்து கொலு இருக்கும் ராணி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.