அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா


5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.

அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.

அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.

மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.

இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

சத்யா

8 responses to “அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

  1. //ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். //

    True

  2. // பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார்//…
    Most Americans are not agreeing here. Yesterday’s poll suggests they believe Obama more than McCain ~ 51 to ~ 43.
    As a matter of fact it is the economy that is pushing Obama more to the Presidency!

  3. இளா,
    மெகயின் வந்தால் கஜானாவில் இருந்து நயா பைசா பெயராது என்று அவரே வாக்குமூலம் கொடுக்கிறார்.

  4. தியாகராஜன்,
    இன்றைய நிலையில் ஒபாமா வந்தால் நான்காண்டுகளில் மீண்டும் இன்னொரு (ஜெப்) புஷ் வருவதற்கு வழிவகுப்பார் என்னும் நம்பிக்கையை கொடுப்பார் 😀

  5. //இன்றைய நிலையில் ஒபாமா வந்தால் நான்காண்டுகளில் மீண்டும் இன்னொரு (ஜெப்) புஷ் வருவதற்கு வழிவகுப்பார் என்னும் நம்பிக்கையை கொடுப்பார் //

    மெக்ய்ன்னா அந்த நாலு ஆண்டு கூட வேண்டாம். அடுத்த நாள் முதலே புஷ்தான். மனுசனுக்கு மூச்சுவிட கொஞ்சம் அவகாசம் கொடுங்கப்பா.

    ——————–
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)

  6. சத்யா, பல கருத்துக்களில் உங்களோடு உடன்படுகிறேன். ஆனால் இன்னும் முடிவுசெய்யாத ஒரு நிலையிலேயே இருக்கிறேன்.

  7. செல்வராஜ்,

    உங்களைத்தான் எல்லா ஊடகமும் ‘undecided voter’ என்று தேடிக் கொண்டிருக்கிறதா 🙂

    அமெரிக்க அதிபரின் முக்கிய தேவை: நீதிபதியை பரிந்துரைப்பது
    உபரி வேலை: அமெரிக்காவிற்கு பி.ஆர்.ஓ
    கொசுறு: பொக்கீட்டிற்கு கைநாட்டு; கொள்கையை முன்னிறுத்தி எம்.பிக்களை வற்புறுத்தி புதிய சட்டங்களுக்கு வழிகாட்டுதல்.

    மெகயின் – பிற்போக்குவாதியாக — வன்புணரப்பட்ட பெண்களுக்கும், சுய நிர்ணயத்தை/சுதந்திரத்தை மறுக்கும் நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தில் உட்கார வைத்தல்
    ஒபாமா – அறிவியல் ஆராய்ச்சி ஆகட்டும்; பதின்ம வயதினரின் கர்ப்பம் ஆகட்டும்… கொஞ்சம் இந்தப் பக்கம், கொஞ்சம் அந்தப் பக்கம் என்று திரிசங்குவான பேலன்ஸ் நீதிபதிகள்

    பொக்கீடு – எல்லாம் செனேட்/காங்கிரஸ் கையில்

    உலக அரங்கு – மீண்டும் போர் மிரட்டல் மேக மெகயின் (அல்லது) சாம, தான, பேத, தண்டம் (in that order) புது இரத்தம் ஒபாமா.

    எது உங்கள் தேர்வு?

  8. தறுதலை,

    —-மெக்ய்ன்னா அந்த நாலு ஆண்டு கூட வேண்டாம். அடுத்த நாள் முதலே புஷ்தான். மனுசனுக்கு மூச்சுவிட கொஞ்சம் அவகாசம் கொடுங்கப்பா—-

    மெகயின் சொல்லும் மிகப்பெரிய குற்றச்சாட்டு: ஒபாமா தன்னுடைய கட்சி கொறடா சொல்வது போலவே 98% வாக்களித்திருக்கிறார்.

    “நான் (மெகயின்) அவ்வாறு இல்லை.”

    இந்தக் கூற்றில் ஓரளவு உண்மை உள்ளது.

    * க்வான்டனமோ பே சிறையில் அரக்கத்தனமான விசாரணைகளை எதிர்ப்பது.
    * டிக் சேனி, அப்பா புஷ் போல் எண்ணெய் நிறுவனங்களோடு நெருங்கியத் தொடர்பு (பங்கு முதலீடு) இல்லாதது
    * கட்சிக்காக புஷ்ஷை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலும், கட்சியை மீறி இராக் போன்ற இடங்களில் strategy வகுத்தது.

    எப்படி இருந்தாலும் இந்த புதிய அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகள்தான்.

    அடுத்த நான்காண்டுகளுக்கு ஒபாமா பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், மெகயின் வந்தாலும் புஷ் அளவிற்கு குடிமுழுகாது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.