இந்தப் படத்தை சமீபத்தில் சன் டிவியில் போட்டிருந்தார்கள். பார்த்த பலரும், வேண்டிய அளவு பயமுறுத்தியிருந்ததால், மிகக் குறைந்த எதிர்பார்ப்புடனே பார்க்க ஆரம்பித்தேன்.
கேர்ஃப்ரீ வாங்குவதகு கூச்சப்படும் கல்லூரி மாணவி எண்பதுகளுக்கு முந்தைய எஃபெக்டை கொடுத்தது. மற்றபடிக்கு முதல் பாதி தேவலாம். இரண்டாம் பாதி போகப் போக நெளிய வைத்து, இறுதிக்காட்சியில் இது வரை பார்த்தவர்கள் படித்து படித்து சொல்லியிருந்த எச்சரிக்கைகளை உறுதியாக்கியது.
தமண்ணாவை மொத்தமாக வில்லியாகவே நடமாட விட்டிருக்கலாம். கடைசியில் தியாகி ஆக்குவது ஹீரோ மேல் பரிதாபம் வரவைக்காமல், இலியானாவையும் கோமாளியாக சித்தரித்தது.
‘ஆதிவாசி’ பாடலில் பூச்சிகளை எல்லாம் தொப்புளில் ஊறவிடுவது தமிழகத்தில் காவேரி போன்ற கற்பனை.
சராசரி மாணவனை சாதனை மாணவனாக்குவதை ‘காதலன்‘ சொல்லியது. ரவியின் முந்தைய படம் செவன் ஜி, பத்ரி போன்ற வெற்றி பெறக்கூடிய ஃபார்முலாதான். காதலுக்காக போட்டியில் கலந்து கொள்வது; வீழ்ந்து கொண்டிருப்பவன் உந்தப்படுவது என்று ரொம்ப சுவையான, நிச்சயம் வென்றிருக்கக் கூடிய சமாச்சாரங்கள்.
கூடவே இலியானா, தமண்ணா.
கதையே இல்லாமல் ‘எனக்கு 20; உனக்கு 18’ கொடுத்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இனிமேல் இந்த மாதிரி திரைக்கதைகளை சொதப்பாமல் சொல்லத் தெரிந்து கொண்டால், அப்பா ஏ ஏம் ரதனத்திற்கு ‘பீமா’ கடனை மீட்கலாம்.
தொடர்புடைய தமிழோவியம் விமர்சனம்: KD / கேடி










