’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை
கவிப்பேரரசு வைரமுத்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)
இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது appreciation, Authors, Awards, ஆக்கம், இயல், உயிர்மை, எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், கனடா, கவிஞர், படைப்பு, பேச்சு, மனுஷ்யபுத்திரன், ரஜினி, வைரமுத்து, Canada, Chennai, EssRaa, Events, Felicitation, Fiction, Functions, Iyal, kavi perarasu, Kaviyarasu, Lit, Literarture, Literary, madras, Maushyaputhiran, Rajini, Rajnikanth, Ramkrishnan, S Ramakrishnan, Shorts, Speech, SR, Story, Tales, Tamil, Uyirmmai, Vairamuthu, VM, Writers
நாற்பது வயதை எட்டிப்பார்ப்பவரின் ஞாபகத்தின் படி எந்தப் பாடல்கள் கொசுவர்த்தியை மீட்டும்? சிதறலாய் ஒரு பத்து
1. ராக்கம்மா கையத் தட்டு: தளபதி
மணி ரத்னம் இரண்டாம் பட்சம்; ரஜினி மூன்றாம் பட்சம்; இளையராஜா #1
2. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா: இந்தியன்
ரஜினிகாந்த் முதலாம் இடத்தில் வந்தால், கமல்ஹாசன் கூடவே வரவேண்டுமே!
3. மலர்களே மலர்களே: லவ் பேர்ட்ஸ்
மாற்றிய சட்டை அனைத்தும் பிரபு தேவாவிற்கா அல்லது அடுத்த படத்திற்கா என்னும் உண்மை தெரிஞ்சாகணும்.
4. ராஜ ராஜ சோழன் நான்: ரெட்டை வால் குருவி
அர்ச்சனாவின் ரவிக் புடைவையின் அன்னியோன்யமோ; ராதிகாவின் ஆரத்தழுவலோ!
5. மன்றம் வந்த தென்றலுக்கு: மௌன ராகம்
நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வண்டவாளங்களை இரண்டு சரணங்களில் சுருக்கும் அழகு.
6. இந்த வாழ்வே மாயம்: வாழ்வே மாயம்
கமலுக்கென்று நிறைய பாடல்கள் இருக்கின்றன; ‘அந்தி மழை’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, அண்ணாத்தே ஆடுறார்…
7. தோல்வி நிலையென நினைத்தால்: ஜெய்சங்கர்
பாடலுக்கேற்ற காட்சியமைப்பு; கடவுளை தரிசித்தது போன்ற உத்வேக எழுப்புதல்.
8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: திருடா திருடா
வைரமுத்து மாயாஜாலம்; ரெஹ்மானின் இளமை; திரைப்படத்தின் பசுமை
9. தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு: அவள் ஒரு தொடர்கதை
கண்ணதாசன் அருமை தெரியாத காலம்; பாலச்சந்தர் குன்சாக புரிந்த நேரம்; பெண்ணுரிமை புரிந்ததாக மயங்கிய சமயம்.
10. டேக் இட் ஈசி ஊர்வசி: காதலன்
சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்
கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்: ஒரு தலை ராகம்
நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 80, 90, ARR, இசையமைப்பாளர், இளையராஜா, சங்கர், சினிமா, டிஆர், திரைப்படம், படம், பாடலாசிரியர், பாடல், ரஹ்மான், ராஜா, ராஜேந்தர், ரெகுமான், ரெஹ்மான், வரி, வாலி, விஸ்வநாதன், வைரமுத்து, ஷங்கர், Cinema, Films, Ilaiyaraja, IR, Kannadasan, Lyrics, Mani Ratnam, MSV, Music, Raja, Rehman, Shankar, Songs, T Rajendar, TR, Vairamuthu, Vali
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actors, Alumni, annual, BE, Btech, Buzz, Cinema, Colleges, Convocation, Days, Engg, Engineering, Films, Graduation, Hero, Honorary, Lecture, Lyricists, Manikandan, Movies, President, Sairam, Speech, Srikanth, Stage, Study, University, Vairamuthu
இணையத்தில் கண்டது:
அ) Mohamed Hashmath – Yesterday 11:35 AM (edited Yesterday 11:36 AM)
உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாட்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல் ஃபோனில் காதலித்துப்பார்
உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்ட் காள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Missed Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Missed Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல் போனில் காதலித்துப்பார்
கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஆகணுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்
ஏர்டெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சைக்காரனாவாய் இல்லை கடன்காரனாவாய்
இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்..
அசல்
உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்…
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்…
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்…
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது ஃபோன், உல்டா, ஏர்டெல், ஐபோன், கவிதை, கவிப்பேரரசு, காதலர் தினம், காதலித்துப் பார், சமூகம், சும்மா, செல்பேசி, ஜாலி, தொலைபேசி, நக்கல், நையாண்டி, நோக்கியா, பாடல், லவ், வாழ்க்கை, வைரமுத்து, Cellphone love, Ulta, Vairamuthu
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: திருமுருகன்
ஆண்:
கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க
ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க
கண்ணால காதல் கொடுப்பா
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா
முந்தான தந்தியடிப்பா
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா
பெண்:
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க
…???… கூரைய நம்புங்க
கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க
பிறகு கத்திரியில் …???… வெம்பாதீங்க
சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்
ராமனப் போல் நல்லா நடிப்பான்
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்
ஆண்:
கொளத்துல மீனிருந்தா
கொத்தவரும் கொக்கு வரும்
வெக்கயில தண்ணி கொறஞ்சா
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்
பொம்பளையும் கொக்கு
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு
பெண்:
பொட்டிபணம் உள்ளவரைக்கும்
பொம்பளயக் காலப்பிடிப்பான்
ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்
ஆம்பளதான் பொறுக்கி
இத அறியாதவ சிறுக்கி
ஆண்:
சத்தியமும் செஞ்சு கொடுப்பா
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா
சட்டிப்பானை எல்லாம் மறைப்பா
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா
பெண்:
தாலி தந்த பொம்பளையோட
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்
கோழி கூவும் சாமத்துல
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்
கொரங்கு மனசுக்காரன்
அவன் குடிகெடுப்பதில் சூரன்
ஆண்:
கடலெல்லாம் பொங்கி வரட்டும்
காதல் மட்டும் மூழ்காதப்பா
பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்
மொத்தத்தையும் மூழ்கடிப்பா
பெரிய நடிப்புக்காரி
அவ பேச்சில்லாத லாரி
பெண்:
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் …???…
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்
பாடலைக் கேட்க: Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu
ஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்
தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை