Tag Archives: Tamil

புத்தக லிஸ்ட்

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) –  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40

    பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…

    Separated at Birth: Kishore vs Nana Patekar

    முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம்

    பழைய நெனப்புதான் பேராண்டி: அன்றும் இன்றும்

    ‘காதலிக்க நேரமில்லை’, ‘அதே கண்கள்’, ‘பறக்கும் பாவை’, ‘சிவந்த மண்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காஞ்சனா

    Separated at Birth: Asokamitran & Naresh Gupta

    முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி

    ஆதவன்

    நன்றி: சந்தோஷ் குரு :: கசாகூளம்

    எழுத்து விமர்சகர்:

    • என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.
    • என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே?
    • முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது.
    • ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு – சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு – இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன்.

    வாசகர்: அபிமானி

    • பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள்.
    • எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.

    சகா: அறிந்தவர்களும் தெரிந்தவர்களும்

    • ‘ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?

    அங்கீகாரம்: வெகுசன ரசனை: பிரபல ஊடகமும் சிறுபத்திரிகையும்

    • பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது.

    புனைவு எழுத்தாளர்: கதைசொல்லி

    • என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன்.
    • ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது.
    • இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய ‘தான்’ அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா?
    • எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.

    சமூக சித்திரம்: நடுத்தர வர்க்கம்

    • பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
    • ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம்.
    • ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள்

    ஏன் எழுதுகிறேன்? எப்பொழுது வரை ஆக்கங்கள் தோன்றும்?

    • ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

    எழுத்தினால் ஆய பயன்? கதை என்ன கிழிக்கப் போகிறது? ஏன் படிக்கிறீர்கள்?

    • நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் – அதிக பட்சமாக – கொள்ளவேண்டும்.

    காகித மலர்கள்

    • இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் – வாழ்வின் பிரும்மாண்டத்தையும் ‘வெல்ல முடியாத தன்மை’ யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் – இது எழுதப்பட்டிருக்கிறது.

    ஆதவனாகிய நான்

    • இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது.
    • எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல.

    திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்

    Separated at Birth

    தேவதர்ஷினி & Erinn Hayes

    முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு

    தேவதச்சன் கவிதை – உயிர்மை

    வானவில்கள்

    அது
    நிறங்கள் அடர்த்தியாகிக்
    கொண்டுவரும் வானவில். என்
    வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
    தொடங்கியது
    “எவ்வளவு பெரிய வில். உள்ளே
    வந்தால் வீடு
    உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
    உறவினர்கள்
    “வில்லும் உடைந்துதானே
    போகும்” என்கிறார்கள்
    நண்பர்கள்
    கண்ணில் வழிந்தோடு
    குமிழிகளில்
    தானே வளர்கிறது
    சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
    தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
    வளைந்திருக்கும்
    வானவில்லுக்குள்ளே
    இருக்கிறது என் ஊர்.
    ஊருக்குள்ளே இருக்கிறது
    என் வீடு,
    எப்போதும்
    கதவுகள் மூடியிருக்கும்
    என் சின்னஞ்சிறிய வீடு

    கல் எறிதல்
    ஆளாளுக்கு கல் எடுத்து
    எறிந்தனர். என் கையிலும்
    ஒன்றைத் திணித்தனர்

    உள்ளங்கையை விரித்து
    மலைத்தொடர் வடிவத்தில்
    இருந்த கல்லைப் பார்த்தேன்

    உற்று நோக்கினேன்
    உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
    மலைத்தொடர் மறைந்தது

    வெறுங்கையை வேகமாக
    வீசினேன்.
    விடைபெறும் முகமாகவும்
    என்னையும்
    தூக்கிச் செல்லேன் என்று
    இறைஞ்சும் விதமாகவும்.

    மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

    நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

    மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

    :::

    சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

    அதே சமயம்

    • நாளிதழ்கள்,
    • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
    • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
    • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
    • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
    • நாடகங்கள் மலையாளம்.
    • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
    • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

    ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

    ‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

    சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

    பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

    அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

    அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

    :::

    மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

    பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

    தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.

    2008 – Tamil Books

    சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.

    படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.

    வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

    ‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்

    தொடர்புள்ள சில:

    1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு
    2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி
    3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை
    4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
    5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி
    6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி
    7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி
    8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
    9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி
    10. சாருநிவேதிதா ராஸ லீலா – உயிர்மை
    11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு
    12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை
    13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி
    14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி
    15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு
    16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
    17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை
    18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்
    19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்
    20. வாஸவேச்வரம்: கிருத்திகா
    21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்
    22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு
    23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்
    24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை
    25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை
    26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை
    27. நிழல்வெளிக்கதைகள்: ஜெயமோகன்
    28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்
    29. நவீனன் டைரி: நகுலன்
    30. நினைவுப் பாதை: நகுலன்
    31. இவர்கள்: நகுலன்
    32. வாக்குமூலம்: நகுலன்
    33. கூகை: சோ தர்மன்
    34. தூர்வை: சோ தர்மன்
    35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்
    36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்
    37. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை
    38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்
    39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்
    40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை
    41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை
    42. ஒற்றன்: அசோகமித்திரன்

    விகடன் அவார்ட்ஸ் 2008

    நன்றி: Twitter / nklraja
    வெளியான இதழ்: ஆனந்த விகடன்
    தொடர்புள்ள விருது: நிலாரசிகன் கவிதைகள்..: நிலா விருதுகள் 2008

    இலக்கியம்

    சிறந்த நாவல்: காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
    சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு (வா.மு.கோ.மு)

    சிறந்த கவிதை தொகுப்பு: தண்ணீர் சிற்பம் (சி.மோகன்)
    சிறந்த கட்டுரை தொகுப்பு: குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் (லஷ்மி மணிவண்ணன்)

    சிறந்த வெளியீடு: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கவிதாசரண் வெளியீடு)
    சிறந்த சிறுபத்திரிக்கை: தலித் முரசு (ஆசிரியர்: புனித பாண்டியன்)


    திரைப்படம்

    சிறந்த இயக்குநர்: மிஸ்கின் (அஞ்சாதே)
    சிறந்த படம்: அஞ்சாதே
    சிறந்த தயாரிப்பு: மோஸர் பேயர் (பூ)

    சிறந்த நடிகை: பார்வதி (பூ)
    சிறந்த நடிகர்: கமலஹாஸன் (தசாவதாரம்)

    சிறந்த புதுமுக நடிகர்: சசிகுமார் (சுப்ரமண்யபுரம்)
    சிறந்த புதுமுக நடிகை: ருக்மணி விஜயகுமார் (பொம்மலாட்டம்)

    சிறந்த குண நடிகர்: ராமு (பூ)
    சிறந்த குண நடிகை: ரம்யா நம்பீஸன் (ராமன் தேடிய சீதை)

    சிறந்த நகை நடிகர்: நாசர் (பொய் சொல்ல போறோம்)
    சிறந்த நகை நடிகை: சரண்யா மோகன் (யாரடி நீ மோகினி)

    சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (தாம் தூம், வாரணம் ஆயிரம்)
    சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)

    சிறந்த பின்னணி பாடகர்: ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும்)
    சிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (முகுந்தா முகுந்தா)

    சிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (வாரணம் ஆயிரம்)
    சிறந்த படத்தொகுப்பு: பிரவீன் ஸ்ரீகாந்த் (சரோஜா)

    சிறந்த கதை: ச.தமிழ்செல்வன்: (பூ)
    சிறந்த திரைக்கதை ஆசிரியர்: கமலஹாஸன் (தசாவதாரம்)
    சிறந்த வசனம் : சி.பி.நாராயணன், ஆர். சுப்ரமணியன் (அபியும் நானும்)

    சிறந்த சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன் (பீமா)
    சிறந்த நடன இயக்குநர்: தினா (கத்தாழ கண்ணாலே)
    சிறந்த ஒப்பனை: பானு, யோகேஷ், வித்யாதர் (வாரணம் ஆயிரம்)

    சிறந்த கலை இயக்கம்: தோட்டா தரணி , எம். பிரபாகரன், சமீர் சந்தா (தசாவதாரம்)
    சிறந்த ஆடை வடிவமைப்பு: நளினி ஸ்ரீராம் (வாரணம் ஆயிரம்)


    சிறந்த விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்
    சிறந்த விளையாட்டு வீராங்கனை: இளவழகி (கேரம்)

    சிறந்த பயிற்சியாளர்: ஃப்ராங்க் (உயரம் தாண்டுதல்)


    தொலைக்காட்சி

    சிறந்த சேனல்: விஜய் டிவி
    சிறந்த டிவி நிகழ்ச்சி: மானாட மயிலாட

    சிறந்த தொகுப்பாளர்: கோபிநாத் (நீயா நானா)
    சிறந்த தொகுப்பாளினி: சின்மயி (சூப்பர் சிங்கர் – விஜய் டிவி)

    சிறந்த நெடுந்தொடர்: திருமதி. செல்வம் (சன் டிவி)


    வானொலி

    சிறந்த பண்பலை: ஹெலோ FM

    சிறந்த பண்பலை தொகுப்பாளர்: அஜய் (ரேடியோ மிர்ச்சி)
    சிறந்த பண்பலை தொகுபாளினி: ஒஃபீலியா (பிக் FM)


    இன்ன பிற
    சிறந்த விளம்பரம்: மேக்ஸ் நியூயார்க் லைஃப்
    சிறந்த மோட்டார் பைக்: யமஹா RI5
    சிறந்த கார்: நியூ ஹோண்டா சிடி
    சிறந்த செல்பேசி: ஆப்பிள் 3ஜி ஐபோன்