பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்! அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!! டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.
மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?
அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது. பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது. ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.
இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு. நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.
புலம்பல் போதும்.
இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள். தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.
நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி. பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.
சரி…. நாடகம் எப்படி?
இரமணன் எழுதிவிட்டார். இணையத்திலும் கிடைக்கிறது.
அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”
இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி. தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள். அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா! அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!? அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!
இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள். வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள். இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.
அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள். ’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.
’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம். பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம். ’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.
சொல்வனம் இதழின் 326வது வெளியீட்டில் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ மூன்றாம் பகுதி வந்திருக்கிறது.
#solvanam பத்திரிகைக்கு நன்றி
ஒரு நாடகம். ஒரு உயர்தனிச் செம்மல் (வார்த்தை உதவி பி.ஏ.கே அவர்கள்) ஒரு பரிந்துரை.
இவை மூன்றுமே ஆழமாகவும் இந்திய தத்துவத்துடனும் வாத்தியார்களின் துணை கொண்டும் எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு எழுத வேண்டும் என்று 326 குறிப்புகள் வரைவோலையாகக் கிடப்பில் இருக்கிறது.
சொ.வ. இதழில் இதை விட மூன்று முக்கியமான ஆக்கங்களும் வெளிவந்துள்ளன: 1. டொரொண்டோ வெங்கட்ரமணன் எழுதிய இருளையும் ஒளியையும் வென்றவன் – ஆதி பகவன் மாதிரி பத்ரியும் வெங்கட்டும்: அவர்கள் முதற்றே பதிவுலகு 2. நிர்மல் எழுதிய பொற்குகை ரகசியம் – சிறுகதைத் தொகுப்பு: வாசிப்பு அனுபவம் – ஆங்கில விஷயங்களுக்கு சாட்ஜிபிடி இருக்கிறது. தமிழ் நூலுக்கு விமர்சனம்/அறிமுகம் கொடுப்பதற்கு சுய சரக்கு தேவை. 3. சிறுகதை சிறப்பிதழ்
ஹாலிவுட்டில் சமீபத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடைபெற்று சமாதானம் ஆகி முடிவுக்கு வந்தது. அதற்கு பல மூல காரணங்கள் இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த காரணம்:
“புஷ்கர் – காய்த்ரி” போன்று சுழல், வதந்தி போன்ற குறுந்தொடர்களைத் துவக்குபவர்கள், அந்தத் தொடரின் கடைசி பாகம் வரை, உறுதுணையாக கவனம் செலுத்தி, திரைக்கதைக்கு பக்கபலமாக நின்று; இறுதியாக வெளியிடப்படும் பிரதியிலும் — தங்களின் முத்திரை பங்களிப்பை நல்குவார்கள்.
இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. எனினும் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது.
துவக்கம் அமர்க்களமாக இருக்கும். அதன் பிறகு, அடுத்தடுத்து சில பளிச். பின்… எப்படி தொடர்வது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “பாதாள் லோக்” (Paatal Lok – அமேசான் ப்ரைம்) எப்படி முடிப்பது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “ஹ்யுமன்” (Human – டிஸ்னி+ / ஹாட்ஸ்டார்)
எனினும், பெரும்பாலானவை முதல் பகுதியை ஒட்டியே செல்லும். சடாரென்று திசை திரும்பாது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயக்குநரால் கொணரப்பட்டாலும் அந்தத் தொடரிழை அறாது தொடரும்.
இதற்கு சிறந்த உதாரணம் – பஞ்சாயத் (Panchayat – அமேசான் ப்ரைம்)
உங்கள் மனதில் ”சேக்ரெட் கேம்ஸ்” (Sacred Games – நெட்ஃப்ளிக்ஸ்) நிழலாடுவதை உணர்கிறேன். அது எல்லாத் தொடருக்கும் பாட்டி. அதைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அந்தத் தொடர் ஒரு தனித்துவமான முயற்சி. அது இந்திய மக்களை, பெருங்கூட்டத்தை, பார்வையாளர்களைச் சென்றடடைந்ததா என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு செட்ஃப்ளிக்ஸும் விழித்துக் கொண்டுவிட்டது.
இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் டிவியில் வரும் நெடுந்தொடர் எல்லாமே ஒரே வார்ப்புரு — பழைய சோற்றில் ஒரே மாதிரியான சோடையான வடகறி சம்பவங்களைக் கொண்டு காய்கறியாக நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எவ்விதச் சுவையும் ரசனையும் இல்லாமல் உவ்வேக் என ஓட வைக்கிறார்கள்.
ஆனால், அமேசான் ப்ரைம் ஒவ்வொரு சீரியலிலும் “அட… பேஷ்!” போட வைக்கிறார்கள். காதல், இந்துஸ்தானி, நிஜ நாடக ரியாலிடி டிவி என அரைத்த மாவாகும் அபாயம் இருந்தாலும் ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) எட்டிப் பார்த்த போதெல்லாம் புன்முறுவலையும் துருபத் ஆலாபனையையும் கவனிக்க வைத்தது.
இவ்வளவு பீடிகை எதற்கு?
பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ‘குட்நைட்’ மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், “மத்தகம்” – நெட்ஃப்ளிக்ஸ் தொடர் போன்று பல்லிளிக்கும் பித்தளையாகாமல், பிரைம் டிவி தொடர் போல் ஜொலிக்கிறது.
இதில் வரும் கதாபாத்திரங்களை ரொம்ப நாளாக பார்த்து வருகிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் வில்லன்களாக. பா. ரஞ்சித் படங்களில் கதாபாத்திரங்களாக. மேலும் வடசென்னை மண்ணின் மணம் கமழும் படங்களில் நாயகர்களாக. மத்தகம் தொடரில் இவ்வளவு அதிகமாக தேய்வழக்காகி விட்டவர்களை புத்தம்புதிய முலாம் பூசி ஒவ்வொருவருக்கும் முன் கதை சுருக்கம் கொடுத்து, பொருத்தமான முகவெட்டும் உடல்மொழியும் ஆடை அணிகலனும் போட்டு நம்ப வைக்கும் திருப்பங்களில் உபயோகிக்கிறார்கள்.
இளவரசு, வடிவுக்கரசி, டிடி திவ்யதர்ஷினி, நந்தினி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் என பல தெரிந்த முகங்கள். பொருந்தி நடிக்கிறார்கள். இனி இவர்களில் சிலரை, ‘மத்தக’த்தில் நடித்தாரே என்று சொல்லும் அளவு இயல்பாக வந்து போகிறார்கள்.
வெப் சீரீஸுக்கேயுரிய இழுவைகள் உண்டு. தமிழ் சினிமாவுக்கேயுரிய மாறா குணச்சித்திரங்கள் உண்டு. இருந்தாலும், இவர்களின் இருளுலுக்கிற்குள் எழுத்தின் வழியாக சென்றவர்கள் குறைவு. பா. ராகவனின்ஓரிரண்டு நாவல்களில் சற்றே உள்நுழையலாம். அதன் பிறகு இந்தத் தொடர்.
சரி… ‘விக்ரம் – வேதா’வை எதற்கு இதில் இழித்தேன்? அந்தப் படத்தின் பாணியில் இரண்டு முக்கிய நபர்கள். இருரையும் நேர் எதிராக நிறுத்தி அவர்களுக்கிடையிலான திருடன் – போலீஸ் கதை அமைத்து, இருவருக்கும் சரியான போட்டியாக அமைத்தது இந்த ‘மத்தக’த்தை ரசிக்க வைக்கிறது.
நாயகர் காவல்துறை அதிகாரிக்கு மனைவி மேல் பெரிதாக பாசம் இல்லை. அல்லது, மனைவியாகி விட்டார் என்பதால் குடும்பத்தில் ஏற்படும் அசுவாரசியம் எனலாம். இன்னொரு பக்கம் வில்லனுக்கு காதலி மட்டுமே இலட்சியம். அவளுடன் அமைதியாக வாழ்வதிலே நாட்டம். உருகோ உருகு என்று பாசமழையைக் கொட்டுகிறார்.
இந்த மாதிரி முரண்கள் நிறைந்த நிழலுலகத் தொடர். பாரதிராஜா முடிவிற்குள் அகப்படாமல் இருப்பாராக என எல்லாம்வல்ல பாடிகாட் முனியை வேண்டுகிறேன்.
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
Laichana Laichana Ithay
Lavangam Lavangam Kaadichana
Inichana Inichana
Vaai Madalil Kadala Thanichanaa
Køzhukana Møzhukana
Nalla Payuthu Payuthu Thalukanaa
Èlachaana Køzhachaana
Rømba Šethuki Šethuki Ozhachana
Nee Šengiskana Ini Un Kiss Thana
Naan Mangøøse Thanaa
Un Kayil Kachakasthana
Irukaana Idupirukaana Illaiyana Illiyana
Un Èdaithaanaa Inba Kadaithanaa
Mel Èdaithandi Kudaithanaa
Ada Ikani Mukani Mugadu
Naan Thutha Naga Thagudu
Un Uthatukul Èthana Uthadu
Onnu Kudu Kudu
Adi Anjana Manjana Mayilu
Nee Kanjan Janga Railu
Un Iduppae Aaram Viralu
Nee Killu Killu
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
====================
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
Dance by youth members from North Carolina, Wisconsin, Connecticut, Virginia, and Maryland performing to parts of various Tamil kuthu songs such as “Sonna Puriyathu,” “Kalasala,” “Kadhal Vandhale,” “Irukaanaa,” “Pidikale,” “Mannarkudi,” and ending with beat segment from “Dia Dole” song. Performed at FeTNA Silver Jubilee Convention at Baltimore, MD.
kallaasala kalasala.. kalaasala kalasala
vadake ketu paaru enna pathi solluvaan
jardha beeda pole en perathaan melluvaan
Vidya Vandana Singing – Nee Ninaindhaal at FETNA 2012
வித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா!
ஆடல் கலையே தேவன் தந்தது
’அது… இது… எது!’ சிவகார்த்திகேயன்
நீயா… நானா! அரட்டை அரங்கம்
பரதநாட்டியம்
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.
வீணை இசை
Dance Program – Nannarae Nannarae
இளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது! இடி இடிக்குது!! வேட்டைக்காரன்!!!
தமிழிசை
FETNA 2012 Charlotte Silambam
மேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae
Thanthana Thana Thanthana…
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
———————————————————————————————————
ஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..
பொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
ஏ சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஏ வேட்டி கட்ட பிடிக்கல
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல
எனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
Based on the research and analysis of Lalitha Ram: Author: “Isai Ulaga Ilavarasar GNB”
“The best respect to a Guru is to follow his style in total; The best tribute to a Guru is to embellish a style of your own. My dear boy, I am proud… you are… indeed your own.” – Shri GNB ro Shri. SKR
Tanjore S. Kalyanaraman: The Sunaadha Vinodhan (A Documentary on The Legend Thanjaavur Ess Kalyanaraman)
தஞ்சை எஸ் கல்யாண ராமன்
Celebrities include
Dr. M. Balamuralikrishna
Shri T.K. Govinda Rao,
Shri P.S.Narayanaswamy,
Madurai Shri T.N. Seshagopalan,
Trichur Shri V. Ramachandran,
Shri Sanjay Subrahmaniam,
Smt. Gayathri Girish,
Smt. Anuradha Sriram,
Lalgudi Shri G. Jayaraman,
Shri M.S. Gopalakrishnan,
Shri M. Chandrasekharan,
Smt. T. Rukmini,
Kum. A. Kanyakumari,
Nagai Shri Muralidharan,
Lalgudi Shri G.J.R. Krishnan,
Shri V. Sanjeev,
Umayalpuram Shri K. Sivaraman,
Guruvayur Shri Dorai,
Mannargudi Shri A. Easwaran,
Karaikudi Shri R. Mani,
Srimushnam Shri V. Raja Rao,
Tiruvarur Shri Bhakthavatsalam,
Shri N. Ramani,
Smt. Muthu Meenakshi,
HMV Shri Raghu,
Shri N. V. Subramaniam,
Nadopasana Shri Srinivasan,
Shanthi Arts Shri Ramabhadran,
Krishna Gana Sabha Shri Y. Prabhu,
Smt. Subbalakshmi Swaminathan,
Smt. Brinda Venkataramanan,
Smt. Bhushany Kalyanaraman,
Smt.S.Mathangi,
Smt. Visalakshi Suryanarayana
சுநாத விநோதன்: தஞ்சாவூர் எஸ் கல்யாணராமன்
Thanjai S Kalyana Raman: A Performer of delight for the Musicians: Documentary
பென்னி தயால் பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ரவியைப் போல் மெச்சியிருப்பீர்கள். அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா?
மெகா டிவி புண்ணியத்தில் ‘சங்கர்ஷ் 2010’ நிகழ்ச்சியில் பார்த்தேன். கொண்டாட்டமாக ஆடினார்; உற்சாகமாக ‘ஊலலா’ ரீங்காரித்தார்; இளமைத் துள்ளலுக்கு definition கேட்டால் உத்தரவாதமாக பென்னியை சொல்லலாம்.
Infectious enthusiasm என்பார்கள். ‘வேதம் புதிது’ அமலாவின் ஜாக்கெட்டுக்குள் நுழைந்த மீன் என்பேன். அமலாவின் நளினம்; மீனின் லாவகம் – இரண்டும் குழையும் குரலுடன்,மேடையில் நடனமாடியது.
கர்னாடக சங்கீதம் பதினைந்து வருடம்; தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி வாசம்; அபு தாபி வளர்ப்பு; இவையெல்லாம் போதாதென்று பரதநாட்டியமும் பயின்றுவிட்டார்.
ஹிந்தியிலும் கொஞ்சுகிறார். சின்னச் சின்ன ஆசையில் துவங்கி, ‘ஒமானப் பெண்’ண்ணிற்கு சிரமமில்லாமல் பாய்கிறார். சகாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்கிறார்.
ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் எல்லாம் ஸோ நைன்ட்டீஸ்… பென்னி இஸ் இன்!
‘தகதிமிதா’ நடன நிகழ்ச்சி. சமீபத்தில் பார்க்கத் துவங்கியுள்ளேன் இப்போதைக்குப் பிடித்திருக்கிறது.
முதல் சுற்றில் தமிழ்ப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். இரண்டாவது சுற்றில் கையில் எதையாவது வைத்து அபிநயம் காண்பிக்கிறார்கள். இறுதியாக, தெலுங்கு அல்லது பிறமொழிப் பாடலுக்கு ஆட்டம்.
நடுவே சுதா சந்திரன் கொஞ்சம் ஆடுகிறார். நடுவரும் அரங்கேறி தன் வித்தையை காண்பிக்கிறார்.
இருப்பதற்குள் இரண்டாம் சுற்றுதான் அலுப்பு தட்டுகிறது. ஒரே விதமான பாவனை வாராவாரம் மறு ஒளிபரப்பு ஆகிறது.
ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை நடுவர் சொல்வதில்லை. நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், சூப்பர் சிங்கர், நாளைய இயக்குநர் மாதிரி போங்கடிப்பதில்லை. ஓரளவு உருப்படியாக பெர்ஃபார்ம் செய்பவரே வெல்கிறார். தயாரிப்பாளரின் ஒன்று விட்ட அத்தை பையன், புகழ்பெற்றவருக்கு தெரிந்தவர் எல்லாம் முதல் பரிசைத் தட்டி செல்வதில்லை போலத் தெரிகிறது.
தொடர்வது தொகுப்பு:
இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான
பானுப்பிரியா,
ஷோபனா,
சுகன்யா,
விமலா,
இந்திரஜா,
`அண்ணி’ மாளவிகா,
மோகினி
ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.
திரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின் இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர்.
வெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.
முதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க.
தங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார்.
அந்த மாதிரி அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.
‘இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி.
பாரம்பரிய கர்நாடக இசையைப் புரிந்து கொண்டு மகிழ்வது எப்படி?
கர்நாடக இசையில் ஈர்ப்புத் தன்மை, தாளகதி, ஆன்மிக மற்றும் வாழ்வியல் பற்றிச் சொல்லும் சுவாரசியங்கள், இசை ரசிகர்களை ஒரு உன்னத உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், அந்த கருநாடக இசையில் நுணுக்கங்கள், அழகுகள், மற்றும் அதன் ஆழங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அது மேலும் ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
இந்தப் பயிற்சி முகாம் கர்னாடக இசையைக் கற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அதை நீங்கள் அழகாக ரசிக்கலாம் என்று சொல்லித்தரப் போகிறது. கருனாடக இசை உலகப் பயணத்தை மேலும் பயன் உள்ளதாக ஆக்கும்.
கர்நாடக இசையின் அடிப்படை, கச்சேரியின் வழிமுறைகள், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் பற்றிய குறிப்புகள், வயலின், மிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்கள் பற்றிய அறிமுகம், பல்வேறு இசை வடிவங்கள் பற்றிய விளக்கங்கள், ராகம், தாளம், பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் பல்வேறு இராகங்களை அடையாளம் காண பயன்படும் வழிமுறைகள் ஆகியவை அறிமுகம் செய்கிறார்கள்.
துவக்க கருத்தரங்கு, ஒலிநாடாக்கள் மூலம் இசையின் நிதர்சன உண்மைகளை அறிமுகப்படுத்துதல், விளக்க உரையோடு கூடிய செயல்முறை விளக்கங்கள், நேர்முக உரையாடல்கள், கலந்துரையாடல்கள், கேள்வி – பதில், பவர்பாயின்ட் கோப்புகள், இப்படி எத்தனையோ வழிமுறைகளில் அதிரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.
இசை பயிலும் இளம் தலைமுறையும் இசை ரசிகர்களும் கற்றுக்கொள்ள மயிலாப்பூரில் பயிற்சி முகாம் நடத்துகிறார் டாக்டர் ராதா பாஸ்கர்(எம்.ஏ., பிஎச்.டி (இசை), ஜர்னலிசம் டிப்ளொமா.
ஜூன் 22 முதல் ஜூன் 26, 2009 வரை இடம்: பாரதிய வித்யா பவன் நேரம்: மாலை 6:15 மணி முதல் 8:15 மணி வரை கட்டணம்: ரூ. 500/-
முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 10
பணம் / காசோலை அனுப்ப வேண்டிய முகவரி: சமுத்ரா,
புதிய எண் 26, இராம தெரு
நுங்கம்பாக்கம், சென்னை – 34
நான் சென்ற கருத்தரங்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை:
கீர்த்தனாவுக்கும், கிருதிக்கும் என்ன வித்தியாசம்? (பெண்கள் பெயர் அல்ல) எதை பஜனையாகப் பாடலாம்; எதுப் பாடுவது சுலபமானது; மும்மூர்த்திகள் எதை இயற்றினார்கள்?
பல்லவி, அனுபல்லவி, சரணம்: எத்தனை சரணம் வரும்? (அந்தக் கால எமெஸ்விக்கு மூன்று, இளையராஜா கலத்தில் ரெண்டு என்று சொல்லக்கூடாது)
சம்ஷ்டி சரணம் என்றால் என்ன?
தியாகராஜர், சாமா சாஸ்திரி, ஊத்துக்காடு, ஸ்வாதித் திருநாள் போன்றவர்களின் முத்திரை என்ன? (‘முத்திரை இப்போது குத்திடு தப்பாது’ பாட ஆரம்பிக்க வேண்டாம்; அந்தக் காலத்திலேயே பாடலைத் திருடி பெயர் மாற்றி சொந்தப் பதிவாக்கும் வழக்கம் இருந்திருக்கும்!?)
சிட்டேஸ்வரம்: Interview with Kousalya Sivakumar :: சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டதாரியான கெளசல்யா சிவகுமார் – ஆன்மீக இசைபேரூரை: “‘கமலாம்பாள் நவாவர்ண கீர்த்திகள்’ என்பதில் வேதாந்த தத்துவங்கள் நிறைய கொண்டவை. பல ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியது. சாதாரணமாக எல்லோராலும் எடுத்து அதை சொல்ல முடியாது. சமஸ்கிருதத்தில் ‘புஷ்யம்’ என்று சொல்வார்கள். அதாவது மறைமுக அர்த்தங்கள் எல்லாம் நிறைய அதில் உள்ளது. இப்படிப்பட்டவையை என்னை பிரித்து விளக்கமாக சொல்ல சொன்னார்.”
அழிந்து போகும் பழங்கால கலைவடிவம்: முப்பாட்டனுக்கு முந்தைய காலத்து பழக்கம். தேவதாசியர்கள் அபிநயித்து நடத்திக் காட்டிய கலை வடிவம். இன்று முனைவர்களும் பேராசிரியர்களும் நாடக ஆர்வலர்களும் வைணவப் பெருந்தகைகளும் ஒன்று சேர்ந்து மறுபடி மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
நடனம் + இசை + செவ்வியல்: எண்பது வயது தேவதாசியிடம் இருந்து செவிவழிப் பாடல்களை செம்மையாக்கி, விடிய விடிய பன்னிரெண்டு மணி நேர கூத்து வடிவத்தை இரண்டு மணித்துளிகளாக சுருக்கி, பொருத்தமான அரங்க வல்லுநர்களைக் கோர்த்து, நடிக்க வைத்து, முற்றிலும் இலவசமாக பரவசமாக்கினார்கள்.
தேவதாசி + பெண்ணியம்: ஆண் வேடத்தையும் பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாயக நம்படுவானுக்கும் நாராயணனுக்கும் நம்பிக்கும் பெண்களே ஹீரோவாக வேடம் கட்டுகிறார்கள். வாழ்வில் அனுதினமும் அரக்கர்களை தரிசிப்பதால், வில்லன் பிரும்ம ராக்கதனுக்கு, அசல் ஆண் அரங்கேறுகிறார்.
விஐபி: ‘கண்டு கொண்டேன்’² வில்லி அனிதா ரத்னம், கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துசாமி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, நாடகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த பேராசிரியர் ராமானுஐன், இராமானுஜர் ஆவணப்படம் உண்டாக்கிய அண்ணாமலை, ‘சென்னைஆன்லைன்.காம்’ அண்ணாகண்ணன் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரிவாக கானா பிரபா மாதிரி அளவளாவ ஆசை மட்டுமே; சரக்கில்லை.
நாடக விமர்சனம்: நடுவில் ஜெட்-லாக் பழிபோடலினாலோ அல்லது ‘அகோ வாரும் பிள்ளாய்’ உரையாடலினாலோ அல்லது ஒரே மாதிரி அபிநயப் பாடல்களினாலோ கொஞ்சமாய் கண் சொருகியது உண்மை.
எது தூள் + ரசனை ஜோர்?
ஜனரஞ்சகமாக பல்வேறு கதாபாத்திர அறிமுகங்கள் எவ்வாறி மேடை ஏறும், எங்ங்னம் கொணரப்படும் என்பதை சொன்னார்கள்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde