Carnatic Music Appreciation for Classical lovers


பாரம்பரிய கர்நாடக இசையைப் புரிந்து கொண்டு மகிழ்வது எப்படி?

Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-music-Singers-Carnatic-Classicalகர்நாடக இசையில் ஈர்ப்புத் தன்மை, தாளகதி, ஆன்மிக மற்றும் வாழ்வியல் பற்றிச் சொல்லும் சுவாரசியங்கள், இசை ரசிகர்களை ஒரு உன்னத உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், அந்த கருநாடக இசையில் நுணுக்கங்கள், அழகுகள், மற்றும் அதன் ஆழங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அது மேலும் ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

இந்தப் பயிற்சி முகாம் கர்னாடக இசையைக் கற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அதை நீங்கள் அழகாக ரசிக்கலாம் என்று சொல்லித்தரப் போகிறது. கருனாடக இசை உலகப் பயணத்தை மேலும் பயன் உள்ளதாக ஆக்கும்.

கர்நாடக இசையின் அடிப்படை, கச்சேரியின் வழிமுறைகள், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் பற்றிய குறிப்புகள், வயலின், Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-musicமிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்கள் பற்றிய அறிமுகம், பல்வேறு இசை வடிவங்கள் பற்றிய விளக்கங்கள், ராகம், தாளம், பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் பல்வேறு இராகங்களை அடையாளம் காண பயன்படும் வழிமுறைகள் ஆகியவை அறிமுகம் செய்கிறார்கள்.

துவக்க கருத்தரங்கு, ஒலிநாடாக்கள் மூலம் இசையின் நிதர்சன உண்மைகளை அறிமுகப்படுத்துதல், விளக்க உரையோடு கூடிய செயல்முறை விளக்கங்கள், நேர்முக உரையாடல்கள், Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-music-Singers-Carnatic-Classical-Veenaகலந்துரையாடல்கள், கேள்வி – பதில், பவர்பாயின்ட் கோப்புகள், இப்படி எத்தனையோ வழிமுறைகளில் அதிரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.

இசை பயிலும் இளம் தலைமுறையும் இசை ரசிகர்களும் கற்றுக்கொள்ள மயிலாப்பூரில் பயிற்சி முகாம் நடத்துகிறார் டாக்டர் ராதா பாஸ்கர் (எம்.ஏ., பிஎச்.டி (இசை), ஜர்னலிசம் டிப்ளொமா.

ஜூன் 22 முதல் ஜூன் 26, 2009 வரை
இடம்: பாரதிய வித்யா பவன்
நேரம்: மாலை 6:15 மணி முதல் 8:15 மணி வரை
கட்டணம்: ரூ. 500/-
முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 10
பணம் / காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
சமுத்ரா,
புதிய எண் 26, இராம தெரு
நுங்கம்பாக்கம், சென்னை – 34

நான் சென்ற கருத்தரங்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை:

  1. கீர்த்தனாவுக்கும், கிருதிக்கும் என்ன வித்தியாசம்? (பெண்கள் பெயர் அல்ல) எதை பஜனையாகப் பாடலாம்; எதுப் பாடுவது சுலபமானது; மும்மூர்த்திகள் எதை இயற்றினார்கள்?
  2. பல்லவி, அனுபல்லவி, சரணம்: எத்தனை சரணம் வரும்? (அந்தக் கால எமெஸ்விக்கு மூன்று, இளையராஜா கலத்தில் ரெண்டு என்று சொல்லக்கூடாது)
  3. சம்ஷ்டி சரணம் என்றால் என்ன?
  4. தியாகராஜர், சாமா சாஸ்திரி, ஊத்துக்காடு, ஸ்வாதித் திருநாள் போன்றவர்களின் முத்திரை என்ன? (முத்திரை இப்போது குத்திடு தப்பாது’ பாட ஆரம்பிக்க வேண்டாம்; அந்தக் காலத்திலேயே பாடலைத் திருடி பெயர் மாற்றி சொந்தப் பதிவாக்கும் வழக்கம் இருந்திருக்கும்!?)
  5. கானங்களை கிரமமாகப் பாட வேண்டிய சாஸ்திரம்.
  6. சிட்டேஸ்வரம்: Interview with Kousalya Sivakumar :: சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டதாரியான கெளசல்யா சிவகுமார் – ஆன்மீக இசைபேரூரை: “‘கமலாம்பாள் நவாவர்ண கீர்த்திகள்’ என்பதில் வேதாந்த தத்துவங்கள் நிறைய கொண்டவை. பல ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியது. சாதாரணமாக எல்லோராலும் எடுத்து அதை சொல்ல முடியாது. சமஸ்கிருதத்தில் ‘புஷ்யம்’ என்று சொல்வார்கள். அதாவது மறைமுக அர்த்தங்கள் எல்லாம் நிறைய அதில் உள்ளது. இப்படிப்பட்டவையை என்னை பிரித்து விளக்கமாக சொல்ல சொன்னார்.”
  7. ஸ்வர சாகித்ய உருப்படி: இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்-Ilayaraja’s Musical Confusions-Rajalakshmi « meetchi quarterly: “How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன.”
  8. மத்தியமகலா சாஹித்யம்: Lyrics or sahitya has always been the effective means to communicate man
  9. சொல்கட்டு சுவரம்: 6IndianMusic : Solkattu
  10. சொற்கட்டு சாகித்யம்: Amazon.com: Solkattu Manual: An Introduction to the Rhythmic Language of South Indian Music: David P. Nelson: Books
  11. ஸ்வர அக்ஷரம்: ‘ஏபிசி நீ வாசி’ இல்லையாம்.
  12. யதி: கவிதைக்குயில் ராகினியின் இசைப்பயணம் :: தாளத்தின் 10 உயிர் நிலைகள். | யதி
  13. யமகம்: கிருதியை அலங்கரிக்கும் அணிகள் (யமகம் – ஒரு சொல்லோ சொற்றொடரோ நான்கு அடிகளிலும் எதுகையாக வெவ்வேறு பொருளில் வருவது)
  14. மணிப்பிரவாள க்ருதி: Muthuswamy Dikshitar
  15. சங்கதி: இசையும் இறைவனும் – பறவையின் தடங்கள் :: நாகூர் ரூமி
  16. ஆவர்த்தனம் தனி

8 responses to “Carnatic Music Appreciation for Classical lovers

  1. கலக்கல் பாபா! நிறைய சுட்டிகளை அள்ளித்தெளித்து விட்டீர்கள். SM Krishna மட்டுமே நானறிந்த வரையில் Appreciation of Carnatic Music என்ற இசைத்தட்டு வெளியிட்டுள்ளார், நீங்கள் கூறியிருப்பதை பார்த்தால் இவர்களும் இவ்வாறு ஒன்றை வெளியிடலாம் போல. அதைப்போல எதாவது கிடைத்தால் தெரியப்படுத்துங்கள், வாங்கியும் வாருங்கள், வாங்க நான் தயார்!

    நன்றி!

    • டைனோ,
      இந்த மாதிரி நிறைய பேர் எம்பி3 இன்ன பிற வெளியிட்டுள்ளார்கள். நேரடியாக கற்றுக்கொள்வது/கேட்பது போல் இவை அவ்வளவு பயனாக இல்லை. நானும் வாங்கி வைத்து, அவை உறங்கிக் கொண்டிருக்கின்றன.

      ஜாவா/சி# ட்ரெயினிங்கில் கற்றுவிட்டு அலுவலிலோ அகஸ்மாத்தாகவோ பயன்படுத்தாமல் இருப்பது போல் மழுங்கிப் போகவும் வாய்ப்பு உண்டு?

      நிச்சயாமாய் வேண்டுமென்றால் சொல்லுங்க… ஜூலையில் ஜெர்சிப் பக்கம் வருவேன். 🙂

  2. யாரு எஸ்.எம்.கிருஷ்ணாவா..? அவ்வ்வ்வ்வ்….

  3. ச்சை! TM Krishnaன்னு அடிக்க வந்து SM ஆயிடுச்சு. உங்க நகைச்சுவையை ரசிச்சேன் வசந்த குமார் 🙂

  4. கர்நாடக சங்கீதம் போன்ற நுண்கலைகளை பற்றி எழுதுவதுற்குள் -`தாவு` தீர்ந்துவிடும் என்பதை பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.

    அழகியல் சமாசாரங்களை ஆய்வு செய்வது மட்டுமே சுலபமானதாகப்படுகின்றது.

    என் வலைதளத்தில் சிலவற்றை முயற்சி செய்துள்ளேன். முடியும்போது படிக்கவும்.

  5. பிங்குபாக்: ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம் « Snap Judgment

  6. பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.