Tag Archives: Ponniyin Selvan

கல்கி: பொன்னியின் செல்வன் 2

சொல்வனம் தளத்தில் வெளியான “ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனத்தில்” இருந்து:

*

உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார்.

*

சுந்தர ராமசாமியின் அந்த நறுக்: (ப.38)

“திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?

நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.

‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.”

*

அந்த சு.ரா. சிஷ்யன் இன்று சொன்னியின் செல்வன் திரைக்கதையாளர் + வசனகர்த்தா.

காலம்தான் எவ்வளவு பெரிய ஆசான்!?

அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன?

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.

எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.

எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?

(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)

  1. ஔவையார் / சந்திரலேகா
  2. சம்சாரம் அது மின்சாரம்
  3. கல்யாணப் பரிசு
  4. சிவகவி
  5. சிந்து பைரவி
  6. மனோகரா
  7. உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
  8. திருவிளையாடல் / ஆதிபராசக்தி
  9. திரிசூலம் / ஊட்டி வரை உறவு
  10. பொன்னியின் செல்வன் 1

அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்

திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்

உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.

அளத்தலும் ஆவணங்களும்

தஞ்சாவூருக்கு 1919ல் கல்கி போயிருக்கிறார். அதைப் பற்றி அன்றைய ஆனந்த விகடனில் அவருடைய பிரத்தியேக நடையில் கட்டுரை எழுதுகிறார்.

அந்த மாதிரி அன்றைய காலகட்டத்தை உணர்த்தத்தான் மணி ரத்னம் & கோ பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

  • கோயில் நிர்வாகம் எப்படி இருந்தது?
  • கல்கி ரா கிருஷ்ணமூர்த்திக்கு இந்த பிரும்மாண்டமான கற்பனை கலந்த சரித்திர நாவல் எவ்வாறு உருவானது?
  • ராஜ ராஜ சோழன் படம் எடுக்க இதுதான் காரணமா?
  • நூறாண்டுகளுக்கு முன் ஆலயமும் அதன் பராமரிப்பும் எங்ஙனம் இருந்தது?

இந்தக் கேள்விகளுக்கு விடையத் தேட #PS1 எடுத்திருக்கிறார்கள் – நான்காம் காரணம்.

அந்தக் கட்டுரைக்கான இணைப்பு :

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே !?

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்-பாகம் 3 : மூன்றாம் பாகம் : கொலை வாள்

21. “நீயும் ஒரு தாயா?”

https://amarkkalam.forumta.net/t20358-3

சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி கூறினார்:-

“மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனார் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இராவணேசுவரனுடைய மூல பல சைன்யத்தைப் போல் இரட்டை மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்டலத்து மாபெரும் சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் குருஷேத்திர யுத்தத்தைப் போன்ற மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர் பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர், – சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை – ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார்.

*

https://www.chennailibrary.com/kalki/kalki.html

சரி… அதிருக்கட்டும். பெயரிலேயே முக்குலத்தோர் வைத்திருக்கும் வந்தியத்தேவரை உங்களுக்குத் தெரியும். அவரின் காதல் கதைக்கு எது மூலம்?

மன்னரின் மகள் குந்தவையை எப்படி கவர்ந்தார். அதற்கு நீங்கள் 1948ல் அவர் எழுதிய விதைக்கு வரணும்:

https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D

*

“காதறாக் கள்ளன்” சிறுகதை

இந்தச் சமயத்தில் கோழிகூவாப் புத்தூர் கருடாசலத்தேவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். கருடாசலத்தேவர் ஒரு காலத்தில் தில்லைமுத்துத்தேவரைப் போலவே செல்வாக்கு வாய்ந்தவராயிருந்தார். ஆனால் வயது காரணமாக அவர் உடம்பு தளர்ந்து போயிருந்தது. அதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் ஏற்பட்டு அவர் மனம் இடிந்து போயிருந்தது. முக்கியமாக ஐந்து வருஷத்துக்கு முன்னால் அவருக்கும் அவருடைய ஏக புதல்வனுக்கும் சண்டை உண்டாகி பையன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அற்ப விஷயத்தில் மன வேற்றுமை உண்டாயிற்று. தந்தை, மகன் இருவரும் பிடிவாதக்காரர்களாதலால் அந்த வேற்றுமை முற்றி விபரீதமாகி விட்டது. குடி மயக்கத்திலிருந்த கருடாசலத்தேவர் சொன்னபடி மகன் ஏதோ செய்யவில்லை என்பதற்காக நாலு பேர் இருக்கும்போது அவன் மீது செருப்பை விட்டெறிந்தார். ரோஸக்காரனாகிய மகன் “இனி உங்கள் முகத்தில் விழிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து கிளம்பிப் போனவன் தான்; திரும்பி வரவே இல்லை.

அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும் ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன் கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும் தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான். அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம் போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான். “உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள். மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!” என்றான்.

“என்னுடைய ஜமீனில் பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே” என்றார் கருடாசலத்தேவர், “அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?” என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான்.

*