Tag Archives: SuRa

கல்கி: பொன்னியின் செல்வன் 2

சொல்வனம் தளத்தில் வெளியான “ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனத்தில்” இருந்து:

*

உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார்.

*

சுந்தர ராமசாமியின் அந்த நறுக்: (ப.38)

“திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?

நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.

‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.”

*

அந்த சு.ரா. சிஷ்யன் இன்று சொன்னியின் செல்வன் திரைக்கதையாளர் + வசனகர்த்தா.

காலம்தான் எவ்வளவு பெரிய ஆசான்!?

Jeyamohan’s Reply for always touching Sundara Ramasamy

The premise is this: somebody asks Jeyamohan a question: “Why are you always invoking Sundara Ramasamy in your katturai?” – What would be his reply… You can read it here

என் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:

சுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்?

Jeyamohan_New_Yorker_Cartoon

இரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்? இதெல்லாம் சீடனின் பணியா?

இந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.

எழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

எனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.

இந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.

நான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.
உலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.

இளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.

ஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.

என் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.

இந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.

ஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.

இந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.

இந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. ஆண்களின் கண்கள்…
2. ஏன் விவாதிக்கிறேன்

காலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்

காலச்சுவடு கண்ணனை சந்தித்தது குறித்து எழுதுவதற்காக சேமித்தவை.

காலச்சுவடு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருந்தது. வருடத்திற்கு நான்குமுறை மட்டுமே வரும் சஞ்சிகையில் சமகால விஷயங்கள் ஆறி அவிந்துபோன பிறகுதான் விவாதிக்க இயலும். பின்னர், இரு மாதங்களுக்கொருமுறை வெளியானது.

உலக்த்துத் தமிழர்களை கை கோர்க்கவைத்து, பரஸ்பர அறிமுகத்துடன் நிற்காமல், ஒருசேர திரட்டி ‘தமிழினி 2000’ கொண்டாட்டம். ‘தமிழ் இனி 2000′ என்னும் மாபெரும் திருவிழாவை ஒருங்கிணைத்து காலச்சுவடு சார்பாக நடத்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை.

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அந்த மொழியாக்கத்தை நூலாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு பல வகையில் ஆதரவு தருதல், நிதியுதவி செய்தலை பல்வேறு நாடுகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் அயர்லாந்தும் விதிவிலக்கல்ல.

இதைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டு என்னை ஊக்குவித்தவர் “காலச்சுவடு’ கண்ணன்.

இவரைத் தெரியுமா?: காலச்சுவடு கண்ணன்

எனக்குத் தெரிந்து சிறுபத்திரிகை நடத்துவது என்பதோ, நல்ல இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நடத்துவது என்பதோ தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட ஒரு காலம் உண்டு. பல எழுத்தாளர்கள், தாமே பதிப்பகம் நடத்தி, மனைவி நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டு, விற்பனை ஆகாமல், நூலாம்படை சேர்ந்து, எலிக்கும் கரப்புக்கும் தின்னக்கொடுத்தக் கதைகள் ஏராளம்.

மற்றொரு புறம் தி.நகர் பதிப்பகங்கள் செளகரியமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. என்ன ஒன்று, எழுத்தாளர்களுக்கு மட்டும் ராயல்டி கொடுப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். இல்லை புத்தகம் போட்டுத் தருவதே, அந்த எழுத்தாளருக்கு, பதிப்பகம் செய்யும் மகா கெளரவமாகக் கருதப்படும்.

இப்போதும், பல பழைய இலக்கியவாதிகள், தாம் புத்தகம் போட்டு, பத்திரிகை நடத்தி, இலக்கியச் சேவை செய்ததாகவும், ஆனால், ‘தமிழ் சமூகத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் திருத்தவே முடியாது’ என்றும் சபித்தபடி இருப்பார்கள். இதுபோல் யாராவது பேசத் தொடங்கினாலே நான் மெல்ல அங்கிருந்து விலகிவிடுவேன். கோபம் நெஞ்சு வரை கொப்பளிக்கும்.

உண்மையில், இவர்கள் எல்லாரும் நல்ல புத்தகம்தான் போட்டார்கள். அதில் தவறில்லை. ஆனால், விற்பனை செய்தார்களோ?

எனக்குத் தெரிந்து, விற்பனை என்பதோ, இலக்கியத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பதோ இழுக்கான ஓர் செயல் என்ற எண்ணம் சிறுபத்திரிகை சூழலில் ஆழ ஊன்றிப் போன கருத்து. அதனால்தான், பணம் தரக்கூடிய பெரிய பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதினால், பலரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. சீரழிவுக் கலாச்சாரத்துக்குத் துணை போய் விட்டதாக ஒரு புலம்பல் அல்லது விலக்கல் தலைதூக்கும்.

மற்றொரு பக்கம் வேறொரு நிலை. இன்றைக்கும் தி.நகர் பதிப்பகத்தார்களில் பலர், இலக்கியம் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை. ‘அது படிச்சுட்டு வீசறதுதானே சார்’ என்ற எண்ணத்தோடுதான் புத்தகங்கள் தயாரிக்கிறார்கள். அதனால்தான், சாணிக் காகிதத்துக்கும் கிரிம்வோவுக்கும் நடுவே ஒயிட்ஓ என்றொரு ஜல்லா காகிதத்தை உபயோகிக்கத் தூண்டுகிறது. நாலு தரம் வேகமாகப் பிரித்துப் படித்தால், நிச்சயம் தையல் பிரிந்துகொள்ளும்.

இதுதான் எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் முன்புவரை கூட இருந்த நிலை.

பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. நல்ல இலக்கியத்தையும் அதனைப் படிக்கும் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது காலச்சுவடு. பெரும்பாலும், சிறுபத்திரிகை என்பது 300 முதல் 500 படிகள் வரை அச்சடித்து, வேண்டியவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் அனுப்பிவிட்டு, மிச்சத்தை மூட்டை கட்டி வைத்துக்கொள்வார்கள். அல்லது சில புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வருடமானாலும், பத்திரிகை விற்ற பணத்தை கேட்கவோ, அதற்கான ஒழுங்குமுறையான கணக்கோ வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் (அப்படியே கேட்டாலும் விற்ற பணம் கடைகளில் இருந்து திரும்ப வருவது என்பது குதிரைக்கொம்பு என்பது வேறு விஷயம்!)

புத்தகப் பதிப்புக்கும் இதே நிலைதான்.

எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. ஒழுங்கான கணக்கு வழக்கு, முறையான மார்க்கெட்டிங், விற்பனை முகவர் இல்லாத ஊர்களில் நல்ல வாசகரையோ எழுத்தாளரையோ முகவராக்குவது, மேலும் தொடர்ந்த ஃபாலோஅப். பத்திரிகை, பதிப்பகம் என்பதைத் தொழிலாகப் பார்த்தது காலச்சுவடு. வெறும் ஆர்வம் என்ற நிலைக்கு மேல், அதைத் தொழிலாக நினைத்து அணுகுவது எப்படி என்பதைக் காலச்சுவடுவிடம் இருந்துதான் கற்கவேண்டும்.

அதேபோல், புத்தகத்துக்கு அதற்குண்டான மரியாதையை ஏற்படுத்தித் தந்ததும் காலச்சுவடுதான். நல்ல தாள், அழகான அச்சு, தராமான தயாரிப்பு, கெளரவமான பார்வையை உருவாக்கிக்கொடுத்தது காலச்சுவடு என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.

காலச்சுவடு காட்டிய அந்த பாதைதான், இன்று செழித்துப் பெருகியிருக்கிறது. தமிழினி, சந்தியா பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், மருதா, கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தரமான தயாரிப்பை மேற்கொள்ள, காலச்சுவடே முன்னோடி. தரமான புத்தகங்கள் இன்று அதிகம் விற்பனையாகின்றன என்று ஒவ்வொரு பதிப்பகமும் நல்ல எழுத்தாளர்களைத் தேடிச் சென்று எழுதி வாங்கி வெளியிடுகின்றது.


காலச்சுவடு எந்தத் திசையில் செல்கிறது? – சிங்கப்பூர் காலச்சுவடு வாசகர் சந்திப்பு

கண்ணன்: காலச்சுவடு ஒரு நபர் நடத்திவரும் பத்திரிகையல்ல. ஒரு குழு இருக்கிறது. மாதம் ஒரு தடவை கூட்டம்போட்டு, இதழ் பற்றி விவாதிப்போம். நான் பதிப்பாளர் -ஆசிரியர் என்கிற முறையில் முடிந்த மட்டும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். தலையங்கத்தில் வரும் கருத்துகளை எனது கருத்துகளாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரியர் குழுவின் கருத்துதான் அது. காலச்சுவடு தமிழிலில் பெண் எழுத்தாளர்களுக்குகஙி கொடுக்கக்கூடிய இடம்பற்றிசஙி சொன்னார். அது பெருமளவு உண்மைதான். நிறையபஙி பெண் எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள், சிலர் கவனம் பெற்றிருக்கிறார்கள். உமாமகேஸ்வரியெல்லாம் காலச்சுவடுக்கு முன்பாககஙி கணையாழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள். கனிமொழி காலச்சுவட்டில் எழுதுவதற்கு முன்பே அவரது “கருவறை வாசனை” வெளிவந்துவிட்டது. கனிமொழி 2000க்குப் பிறகுதான் காலச்சுவடுக்கு எழுத ஆரம்பித்தார்கள். திலகபாமாவின் மறுப்புரை காலச்சுவடுக்குக் கிடைத்திருக்கிறது. அனேகமாக, அடுத்த இதழில் வந்துவிடும். திலகபாமா ஏன் அப்படிக் கருதினாரென்று தெரியவில்லை. எடிட் பண்ணாம ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல மாற்றுக்கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பக்க வரையறை என ஒன்று இருக்கிறது. வாசகர் கடிதத்திற்கென்று ஆறேழு பக்கங்கள்தான் ஒதுக்க முடியும். ஆகவே, எல்லாவற்றையும் போடுவது என்பது சாத்தியமேயில்லை. ஆனால் எல்லா இதழ்களிலும் மாற்றுக்கருத்து என்பது பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது.

கண்ணன்: ஒரு பத்திரிக்கையில விமர்சனங்கள் வரும்போது, அதை அந்தச் சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் எந்த அளவு புரிந்துகொள்ள முடியும்னு தெரியலை. விமர்சனங்கள் மூலமா மதிப்பீடுகள் வளருது. அப்புறம் சூழல்ல ண்ஸ்ரீர்ய்ஆக இருக்கிறவங்க, கருத்துகளைப் பரப்புறவங்க, இவங்களைப்பத்தி எல்லாம் விமர்சனங்களும் விவாதங்களும் முக்கியம்.

அசோகமித்திரன் லாபி பண்ணித்தான் பரிசு வாங்கினாரா என்பது முக்கியமில்லை. ஆனால், லாபி பண்ணாம எந்தப் பரிசும் உலகில் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்மறையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளருக்கு அவரது வாசகர்கள் லாபி பண்ணலாம், பதிப்பாளர் லாபி பண்ணலாம், இலக்கிய நிறுவனர்கள், ஊடகங்கள் லாபி பண்ணலாம். ஆனா எதுக்காகப் பண்றோம், யாருக்காகப்பண்றோம், ஏன் பண்றோம்ங்கிறது முக்கியம். ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஜாதிக்காகப் பண்றதுதான் ஆராயப்படவேண்டியது.

அசோகமித்திரன் தமிழ்ல மிக முக்கியமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல கவனம் கிடைச்சுது. மலையாளத்துல சக்கரியா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு முன்னுரையில சொல்லியிருக்காரு, அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல் என்பதை நம்பமுடியவில்லை என்றும், இதன் மூலம் தமிழில் நல்ல எழுத்துகளே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட அசோகமித்திரனுக்குப் பரிசு கிடைத்தபோது, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் சன்டிவியில் அசோகமித்திரனுக்கு “சமூக நோக்கு இல்லை’ என்று பரிசளித்ததைக் கண்டித்துப்பேசினார்கள். அசோகமித்திரனின் எழுத்துக்கு சமூகநோக்கு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் ஏன் ஞானபீடம் வரவில்லை என்பதுதான் கேள்வியா இருக்கு. ஆனா அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி விமர்சனம் வரும்போது அது பெரும் பிரச்சினையைக் கிளப்புவதில்லை. ஏனென்றால், அவர் ஒரு ல்ர்ஜ்ங்ழ்ச்ன்ப் ச்ண்ஞ்ன்ழ்ங் இல்லை. ஆனா வைரமுத்து போன்றவர்களை விம&

காலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு — Andhimazhai – Web Address of Tamils: “காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு”

காலச்சுவடு – சிற்றிதழ் அறிமுகம் 24 :: Andhimazhai – Web Address of Tamils

“தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்”

– சுந்தர ராமசாமி
காலச் சுவடு, ஆண்டுமலர்`91

நவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.

” காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்” என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

அதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.

1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.

எஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.

தமிழினி ’00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.

2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள்” எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.

காலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

தலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.

காலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி:

தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.

எதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.

மரத்தடி.காம்(maraththadi.com) – முதல் அனுபவம்…

காலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.

பாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.

கலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது?
புதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.

சுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை
என்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.

சாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன.
நாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.

-ve:

Tamil | Essay | Neelakandan | Kalachuvadu Kannan | Secularism | Ravikumar: “காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் – நீலகண்டன்”

தமிழின் முதன்மையான முன்னணி கலை-: “இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல் – ஆர்.அபிலாஷ்”

jeyamohan.in » Blog Archive » காலச்சுவடு நூறாவது இதழ்

Tamil-Ini2000-Aaraamthinai

ஷோபாசக்தி » காலச்சுவடும்.. திருமாவும்..

R P ராஜநாயஹம்: HERE IS THE RUB!: “நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. ”

Tamil | Literature | Essay | A.Marx | A.Marx | Kalachuvadu: “தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு – அ.மார்க்ஸ்”

About Us | Kalachuvadu