Tag Archives: Cinema

Avatar: அவதார்

1. அமெரிக்கா வந்த புதுசு. ஜேம்ஸ் கேமரான் குறித்து தெரியாத வயசு. கூடவே நாலஞ்சு பொண்ணுங்க வேற கூப்பிடறாங்க. டிக்கெட் எளிதாக கிடைத்துவிடுகிறது. ‘டைடானிக்’ மட்டும் மூழ்கவில்லை. வலைப்பதியாத அந்தக் காலத்திலேயே படம்  பார்த்தபிறகு எழும் இயலாமை ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ பார்த்த எஃபக்ட் கொடுத்தது.

அந்தப் படத்திலாவது பிறந்த மேனி கேட் வின்ஸ்லட் ஆறுதல். அதுவும் இங்கே லேது. மிஷேல் ரோட்ரிக்ஸ் இருந்தும் அவதாரில் ஏமாற்றம்.

2. தமிழருக்கு லாஜிக் ஓட்டை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், சிம்பு படமாக இருக்க வேண்டும் அல்லது ‘சிவாஜி’யாக இருக்க வேண்டும்.

3. கடவுள் என்றாலே லேட்டாகத்தான் வருவார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன் அனைத்தையும் இழந்தாலும் ஹீரோ என்றறியப்படுவது போல்  ஈவா தெய்வமும் வெகு தாமதமாக, தன்னை வணங்கும் கூட்டம் பஸ்மமான பிறகே தலை நீட்டுகிறது.

4. ஜூராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார். ஜுமாஞ்சியில் பார்த்த இரணகளம். ஆவியோடு பேசும் Defending Your Life. அவியல் பிடிக்கும்தான். அவதார் அவியல் அல்ல; ஆட்டோவில் கொட்டிப்போன கேரியர் சாப்பாடு.

5. அமரும் இடத்தில் கூட அதிர்வு கொடுக்கும் 3டி நுட்பம் வெகு அபாரம். தூக்கம் எட்டிப்பார்த்தால், எழுப்பிவிடுகிறது.

6. நாவிக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? அஜீரணம் உண்டாகுமா? ரத்தம் ஒரே நிறமா? அபான வாயு காமெடி எல்லாம் கிடைக்குமா?

7. ஜேம்சுக்கு படம் எடுக்கத் தெரியாவிட்டாலும் சந்தையாக்கத்தில் கெட்டி. இவருடன் எந்தப் படமும் போட்டி போடாமல் இருப்பது உபரி. உலகவெம்மை ஆதரவாளர்களும், இராக் ஆக்கிரமிப்பு அசூயைக்காரர்களும், அமெரிக்கன் காப்பாற்றுவான் வலதுசாரிகளும் தங்கள் கொள்கை, இலட்சியங்களுடன் பிணைத்துப் பார்க்க வைக்கும் மார்க்கெடிங் மாயாஜாலத்துக்கு ஜெய் ஹோ!

8. புத்தம்புது பூமி வேண்டும்! நானும் நாவியாக மாறி இளவரசியுடன் ஜொள்ளு விட்டு, பொருளாதார வீக்கம் கவலை மறந்து, நாளொரு சி#ம், பொழுதொரு Perlம் கற்காமல், குதிரையில் பறந்து… பறந்து…

9. வாடகை வீட்டை காலி பண்ண சொன்னால், ஜாகையை மாற்றுவீர்களா? இல்லையா? நாவிக்கள் கூட வேற மரம் பார்த்து குடிபோயிருக்கலாம் என்று இயக்குநர் எண்ண வைக்கிறார்.

10. வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ பார்க்குமளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்று தோணவைத்தது எது? நமீதாவா? அய்யனாரின் இரானியப் பட விமர்சனங்களா? வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா? எது…

சில பார்வைகள்:

  1. தமிழ்ஹிந்து » திரைப்பார்வை: அவதார்
  2. jeyamohan.in » Blog Archive » அவதார் – ஒரு வாக்குமூலம்
  3. ஏன் இப்படி…!: அவதார் – இது சினிமா மட்டுமல்ல!
  4. Op-Ed Columnist – The Messiah Complex – NYTimes.com
  5. IdlyVadai – இட்லிவடை: அவதார் – விமர்சனம்
  6. அதிஷா: ஆ… அவதார்!
  7. Cameron’s Avatar: The emerging zeitgeist? :: Vijayvaani.com
  8. ‘Avatar’ team brought in UC Riverside professor to dig in the dirt of Pandora | Hero Complex | Los Angeles Times
  9. இளையதளபதியின் அவதார்…அவதார் படத்தில் விஜய் நடித்திருந்தால்….
  10. கணேஷின் பக்கங்கள்!: இவள மாதிரி பொண்ணு பாரும்மா?

Vijay & Anushka in Vettiakkaaran: Karikalan Kaala Pola

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

Vijay’s Vettaikaaran: Nan Adicha Thanga mata

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்புப் புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ

ஏய் வாழு வாழு வாழ விடு
வாழும் போதே வானைத் தொடு

வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கூடு

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கும் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழாதே
வீண் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே
தீயோர் சொல் கேட்காதே

ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ

En Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா – வேட்டைக்காரன்

என் உச்சி மண்டையில சுர்ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ங்குது
டர்ங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்

கை தொடும் தூரம் காச்சவளே
சக்கரையால செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே
சுந்தரியே

தாவணி தாண்டி பாத்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
சந்திரனே

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்ரு

மீயா மீயா பூனை
நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை
நீ மயக்குற மச்சான

வில்லு கட்ட மீசை
என் மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆசை
உன் கிட்ட வந்து பேச

மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஒவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே

உள்ளங்கையா நீ இருந்தா
ரேகையாக நான் இருப்பேன்
ஆயிலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பனே

என்னுச்சி மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்
உன்னை நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்ர்
கிட்ட நீ வந்தால் விர்ர்ர்ர்ர்ர்
டர்ர்ர்ர்ர்ர்ர்

அஞ்சு மணி பஸ்
நான் அதை உட்டா மிஸ்
நான் ஆத்தா வுட்ட புஸ்
ஒரே ஒரு கிஸ்
நீ ஒத்துக்கிட்டா யெஸ்

கம்மாங்கரை காடு
நீ சுட்ட கருவாடு
பந்திய நீ போடு
நான் வாரேன் பசியோடு

மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஏய் அப்பாவியா மூஞ்சிய வெச்சு
அங்க இங்க கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்கரியேடா

துப்பாக்கியா மூக்கை வச்சு
தோட்டா போல மூச்ச விட்டு
நீய்ம் என்னை சுட்டு தள்ள பாக்கரியேடி

Puli Urumudhu: Vijay’s Vettai Kaaran

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வரதப் பாத்து

கொல நடுங்குது குல நடுங்குது
துடிதுடிக்குது துடிதுடிக்குது

நில குலையுது நெல குலையுது
வேட்டைக்காரன் வரதைப் பார்த்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க

பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

வரான் பாரு வேட்டைக்காரன்

யார் இவன் யார் இவன் யாரிவன்
அந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்

இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்

இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப்போடு போடு அடிய போடு
டக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா
போடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்

சினத்துக்கு திறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை இங்கு எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு போடு அடிய போடு

Microsoft Excel நாமாவளி

அசல்: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

சி ஷார்ப்பு, டாட் நெட்டு, ஏயெஸ்ப்பி, ஜாவா, பீன்சு, அபாச்சி, லீனக்ஸு, சீக்வலு, ஆரக்கிளு, டிபீட்டூ, வெப்ஸ்பியரு, டிப்கோ, சாப்பு, பீப்பிள்சாஃப்டு, பாஸ்கல், பியெச்பி, பெர்ல், ஐஐஎஸ்ஸு, பிஸ்டாக்கு, அஷூரு, கோ, எர்லாங்கு, அடோபு, ப்ளாசு, அஜாக்சு, எச்டியெமலு, எக்செமல்லு, அதா, சி, போர்ட்ரானு, அசெம்பிளி, வோர்டு, யூனிக்சு, கோபாலு, ட்விட்டரு, பேஸ்புக்கு, பயர்பாக்சு, சிப்ளசுபிளஸு, 68330, 8085…

இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு

நினைத்தாலே இனிக்கும்

காலம் கலிகாலம். அமெரிக்கா செல்வது அமிஞ்சிகரைக்கு செல்வதைவிட எளிதாகிவிட்ட காலம். கல்யாணத்தை கான்டிராக்டரிடம் விடுவது மாதிரி மொத்த குத்தகைக்கு எல்லா சாமான், செட், சூட், டை, சூட்கேசு வாங்கிக் கொடுத்து மெட்ரோ பார்க் சீஸன் டிக்கெட்டும் கொடுத்து அனுப்பும் இன்ஃபோசிஸ்கள் பெருகி களிக்கும் காலம்.

நான் சொல்லப் போகும் சம்பவம் சற்றே ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்த விஷயங்கள். ஹாலிவுட்டில் ஃப்ளாஷ்பேக்கிற்கு இடமில்லை. இது ஹாலிவுட் இல்லை என்பதால், கறுப்பு-வெள்ளை காலத்திற்கு மெதுவாக பின்னோக்கி செல்லலாம்.

எஞ்சினியரிங்கில் கூடப் படித்த நந்தினிக்கு இடம் கிடைத்த கல்லூரியிலேயே எனக்கும் சீட் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அன்டார்டிகாவின் குளிருக்கு அசராதவர் கூட இருப்பார்கள்; நந்தினி சைக்கிள் ஓட்டும் அழகில் மயங்காதவர் இலர். ஷாம்பூ விளம்பரம் போல் கேசவர்த்தினி போடாத தலைவிரி கோலத்தைத் தவிர்த்துவிட்டால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். என் கற்பனைக்கு கூந்தல் தடையாக இருந்தது இல்லை. முடியை எல்லாம் எவர் கவனிப்பார்கள்!?

‘காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி; அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ‘. கண்ணதாசன் சொன்னதற்கேற்ப அந்த நாளும் வந்தது.

“ரேகாவிற்கு 37ஈ கொடுத்துட்டாங்க. நீ அங்கே உட்கார முடியுமா?”

‘பஞ்சுப் பொதிகளாம் மேகங்களை எடுத்து நெய்தலாடை தரவா’ என்று சங்கம் கலந்த மு. மேத்தா (அந்தக் காலத்தில் நா முத்துக்குமார் இல்லை) எனக்குள் எட்டிப் பார்த்த போது ரியலிஸத்திற்கு இட்டு வந்தாள் நந்தினி.

“சாரி சார்! இந்த இருக்கைக்கு சிக்கன்தான் சொல்லியிருக்காங்க.” ஏவிஎமெல், ஏவிஎம்எல் என்று ஒரே சீட்டை நான்கு தடவை லுஃப்தான்ஸாவைக் கூப்பிட்டு ஊர்ஜிதம் செய்ததற்கு ரேகாவிற்கு ஏவிஎம்எல் ப்ராப்திரஸ்து. எனக்கு சேவற்கொடியோனே நேரில் பிரத்யட்சமஸ்து. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி; பசி வந்திட பறவையும் உள்ளே போகும் – இது விமான மொழி.

கார் எவ்வளவு வேகமாக ஓடினாலும் குடிக்கிற பெட்ரோலைக் குடிக்கத்தான் செய்யும். பிரியமானவளின் பெட்டி என்றாலும் கனக்கத்தான் செய்யும். பிரயத்தனப்படாமல் எடுக்க பிரயத்தனப்பட்டு, மிகுந்த பிரயாசையுடன் சூட்கேசுகள் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டது.

“கேர்ள்சுக்கு பார்த்திருந்த அபார்ட்மென்ட் காலியாகல. பிஎச்டி பண்ணுறேன்னுட்டு அங்கே இருக்கறவங்க, அப்படியே கன்டினியூ செய்யறாங்க. உங்க வீட்டுலதான் மூணு ரூம் இருக்கே. ஒரு ரூமை ரேகாவிற்கும் நந்தினிக்கும் அலாட் செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் வேற இடம் பார்த்துடலாம்.”

காதில் ஜிகிர்தண்டா பாய்ந்தது. புதிய பூமியில் பக்கத்து பக்கத்து அறை. காலையில் காபியுடன் எழுப்பி விடுவாள். ஞாயிறு க்ரிப்டிக் குறுக்கெழுத்து போட்டி போடுவோம். ஃபீனிக்சில் இறங்கிய முகூர்த்தம்; ஃபீனிக்ஸ் பறவையாக கற்பனை பறந்தது.

கம்ப்யூட்டரில் பவர்பாயின்ட் இருப்பதால் மட்டும் அருமையான மேடைப்பேச்சு அமைந்து விடாது. ஒரே வீட்டில் நந்தினியுடன் இருப்பதால் மட்டும் நேசம் மலர்ந்து விடாது என்று ஜெட்-லாக் வரவழைத்த விழிப்புமற்ற உறக்கமுமற்ற அசமஞ்ச நிலை உணர்த்தியது. சுயம்வரத்திற்கு தயாராகும் சிப்பாய்களின் மனநிலையில் சமையலறையில் நுழைந்தோம். அம்மாவிடம் கற்றுக்கொண்ட நாற்பது நாள் சமையலை சரி பார்க்கும் பலிபீடத்திற்கு காஸ் ஏற்ற தீப்பெட்டி தேடல் துவங்கியது.

‘அமெரிக்காவில் ஏதுடா கரண்ட் கட்? ஹோம்லைட் இங்கேயே இருக்கட்டும்!’ அசரீரியாக அம்மாவின் குரல்.

‘சென்னைக்கு சென்று எடுத்து வந்து விடலாம்?’ உள்ளூர ஹோம் சிக்னெஸ்.

நாங்கள் தம் அடிக்காத மார்ல்போரோ மாந்தர்கள். எவரிடமும் கையில் வத்திப்பெட்டி இல்லை. நந்தினிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்காது என்னும் அபார நம்பிக்கையும் இருந்ததால், அவளை எழுப்ப மனம் ஒப்பவில்லை. இந்தியாவில் எங்கு சுற்றுலா சென்றாலும் கேன்டில் லைட் உணவிற்காகவோ, அல்லது அந்த உணவை சமைப்பதற்காகவோ மெழுகுவர்த்தியும் சீட்டா ஃபைட்டும் தற்காலத்தின் ப்லூடூத்தும் செல்பேசியும் போல் இணைபிரியாமல் வந்து கொண்டிருக்கும்.

முண்டா பனியனும் லுங்கி சகிதமாக பக்கத்து வீட்டு சீனியர் மச்சான்கள் கதவைத் தட்டினோம்.

“கேஸைத் திறந்தாலே பத்திக்குமே!” அவர்களின் 340வது இ-மெயிலின் 16வது ஷரத்தில் இதைக் குறிப்பிட்டார்கள். கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் கைக்கடிகாரம், தானாக தன் நேரத்தை மாற்றிக் கொள்வதில்லை. எவராவது, ‘இதுதானம்மா… நீ காட்ட வேண்டிய டைம்’ என்று முள்ளை உள்ளூருக்கு ஏற்ப திருப்பி வைத்தால், சரியானபடி வேலை செய்யும். நாங்கள் கடிகாரமாக கிடைத்த தகவலை கிரகித்துக் கொண்டு, திரும்பினோம்.

“எங்கே போயிட்டீங்க… இந்தாங்க டீ!” நந்தினி நீட்டினாள்.

Party with Superstar Rajinikanth: 80s Actor, Actress Alumini Meet

Balaji Santhanam Album: 80s Tamil Cinema Snippets

ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம்

முந்தைய பதிவுகள்:

1. Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs

2. உன்னைப் போல் ஒருவன் :: முன்னோட்டம்
Unnai-Pol-Oruvan-Covers-Wrappers-CD-Music-Listing
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த விமர்சனம் எழுதுவதற்கு மூன்று காரணம்.

  1. வாரிசு: இரா முருகனோ மனுஷ்யபுத்திரனோ இன்னாரின் மகன் என்பதால் வசனம் எழுதும் வாய்ப்பையோ, தயாரிப்பாளரின் வழித்தோன்றல் என்பதால் பாடலை கவிதையாக்கும் இடத்தையோ அடையவில்லை. கார்த்திக்ராஜாவால் கூட முடியலியே!
  2. சுரேஷ் கண்ணன்: ரகுமானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்குள் எழுந்தது. அப்படியா 😯
  3. முதன்முதலாக: ஹிந்தியில் நாயகி வேடம். தமிழ் & தெலுங்கில் இசையமைப்பாளர் என்று அறிமுகமாகும் சுருதிஹாசனுக்கு வரவேற்பு.

Recession காரணமா என்று தெரியல. இந்த ஆல்பம் மனநிலையை சோகமுறச் செய்கிறது. இளையராஜாவிற்குப் பிறகு ஏ ஆர் ரெஹ்மானின் மலரோடு மலரின்று மரித்தாளும் (அல்லது மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாளும் போது – மணி ரத்னத்தின் மும்பை) போன்றவற்றிற்கு பிறகு நெகிழ்ச்சியுற மட்டும் வைக்காமல், யூத்துக்குப் பிடித்த புத்திசையாக வந்திருக்கிறது.

டைட்டில் சாங்கான ‘உன்னைப் போல் ஒருவன்’ எல்லாம் இசைத்தட்டு கொண்டு நல்ல 50,000 டாலர் ஸ்பீக்கர்+ஆம்ப் சங்கதி கொண்ட சவுண்ட்ப்ரூஃப் வீட்டில் கேட்கவேண்டும். கணினியில் மின்னஞ்சலுக்கு ஒரு காது, காதில் கேட்கும் கமல் குரலுக்கு இன்னொரு காது என்பது ஆகாது. ஆனால், அப்படிக் கேட்டால் போரடிக்கிறது.

சோறு தின்ற பிறகு ஊக்கமுற கடைசியாக ரிப்பீட்டில் ஓட்டியது ‘ஜெகடம் ஜெகடம் ஜெகடம் ஜெகட ஜெகட ஜெகட ஜெகடம்’. நாடோடிகள் அலுத்த பிறகு கமலின் ‘அல்லா ஜானே’ இப்போது கை கொடுக்கிறார். அதுவும் பாடலின் இறுதில் ஓலமிட்டு அழும் குரல்களின் சங்கமிப்பில், புரியாத ஸ்பெக்கை நாலு முறை திட்டிக் கொண்டே, உரத்தப் படித்தால் மண்டையில் ஏறுவது சிறப்பம்சம். மொத்தத்தில் எது #1 என்றால், அது கமல்தான்.

கம்பேர் செய்தே பழக்கமாகியதால் பெண்குரலில் வரும் அல்லா ஜானே காதிலேயே விழமாட்டேங்குது. இருவத்திமூன்று முறை முழுக்க பாடியதாக playcount சொன்னாலும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் பழுதோ என்று யோசிக்க வைக்கிறது.

வரிகள் எல்லாம் தனித்து, துருத்தி நிற்காதவாறு இசை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரிகம். சொல்லப் போனால், பாதி (என்பது பொய்; அனைத்து ஆங்கில) பாப் பாடல்களிலும் கவிதையை இதுகாறும் நான் கவனித்ததில்லை. ஷநாயா ட்வெயினோலானிஸ் மாரிசட்டோ… என்ன மாதிரி ஆடை போட்டிருக்கிறார், ஒரே வரியே மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறதா என்பது மட்டுமே என் லட்சியம். இந்த டெக்னிக்கை ஓரளவு விஜய் ஆன்டனி செய்து வருகிறார். அவர் வாழ்க.

மும்பை (இல்லே… பாம்பே) ஜெயஸ்ரீ அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி பாடுகிறார் என்று குற்றம் சொல்லும் தொனியில் சில ‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிசை விமர்சனம் படித்தேன். அதே போல், கமல்ஹாஸன், நாகூர் ஹனீஃபா மாதிரி தேவையின்றி குரல் மாற்றிப் பாடியிருக்கிறார் என்று ‘ஏன் இந்த வீண் ஆசை? எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம்?’ என்னும் வேறு இசை ரிவ்யூக்களும் கண்ணில் பட்டது.

ஒரே மாதிரி பாடுவது ரொம்ப சிரமம். இப்போ சம்பந்தமில்லாம உவமை போட்டுக்கலாம். டென்டுல்கர் அதே சென்சுரியத்தான் ஒவ்வொரு தடவையும் அடிக்கிறார். அதற்காக, போன சதம் மாதிரியே எதற்கு மீண்டும் சதம்? இந்த வாட்டி திலீப் தோஷி மாதிரி சூனியம் போடுங்க என்றா சொல்ல முடியும்?

டூயட் இல்லை. ஆதவனின் ‘டமக்கு தமக்கு’, நினைத்தாலே இனிக்கும் ‘அல்லா’, கண்டேன் காதலை ‘சுத்துது சுத்துது’ போன்ற குத்து கூட மிஸ்ஸிங். ஆனால், ராப் உண்டு. சுருதியை ‘வானம் எல்லை என்பது இன்று இல்லை’ இனிமையை நினைத்து மகிழ, ப்ளேஸி நடுவே புகுந்து கலாய்க்கிறார்.

அந்தக் காலத்தில் பாடல் திருடு போயிடுமோ என்று பயந்து குருகுக போன்ற முத்திரைப் பெயர்களை உள்ளே போட்டு பாடல் எழுதினார்கள். ப்லேசியும் அந்தப் பாரம்பரியத்தில் நாலு வார்த்தையில் மூன்று வார்த்தை தன் பெயர்ச்சொல்லை ஏற்ற இறக்கமில்லாமல் உச்சரித்து நிலை நாட்டுகிறார். வேண்டிய பாடலை மட்டும் தரவிறக்குவது வசதி. வேண்டிய பாட்டில் வேண்டாத இடங்களை எடிட் செய்யும் வசதியும் நாளடைவில் சுளுவானால் அதை விட வசதி.

ப்ளேசியைக் கேட்பதற்கு மனத்தடை உள்ளவர்களுக்காக பம்பாய் ஜெயஸ்ரீயுடன் கமல். ‘நிலை வருமா’ ரொம்ப நாளுக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடியது. எது என்றும் இனியது என்றால், அது இதுதான்.

சாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா‘வை விமர்சிக்க வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான் குப்பை என்றோ, புரியலை பட்டயமோ தரவேண்டும் என்பது திண்ணம். அப்படியிருக்க ஓரளவு மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல் கொடுத்தவருக்கு பாராட்டுகள் மட்டுமே சொல்லி செல்ல வேண்டும்.

தொடர்புடைய பதிவு: Song of the Day: allah jaanE from unnai pol oruvan.