Tag Archives: பேச்சு

கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன்

உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.


ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.

தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.

பகுதி ஒன்று

* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.

* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.

* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.

* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.

* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.

பகுதி இரண்டு

* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.

* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தற்கால செய்தி: Manushyaputhiran vs Arivumathy on S Ramakrishnan vs Kamalahasan: Marketing Kaliyugam Movie Songs

கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.

Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

முந்தைய விழாவும் வீடியோவும்:
S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

நன்றி சொல்லப்பட்டவர்கள்

1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்

2. யுவன் சந்திரசேகர்

3. பெருமாள் முருகன்

4. தோழர் எஸ் ஏ பெருமாள்

5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி

6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”

7. மகன்கள்

8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ? என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல!’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”

9. வாசகர்கள்

10. அ முத்துலிங்கம்

11. தமிழ் இலக்கியத் தோட்டம்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:

ஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை

* வாழ்ந்த கதையச் சொல்லவா? வீழ்ந்த கதையை சொல்ல்வா? தெரிஞ்ச கதையை சொல்ல்வா? தெரியாத கதையை சொல்ல்வா? நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா? தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல! என்பார்கள்.

* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.

* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்

* (கனடியத் தமிழர்?) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.

* (ஈழம்?) திரும்பி பார்க்க முடியாத இடம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.

* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்?

* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.

* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.

* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

சத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.

Tamil Literary Garden of Toronto, Canada has Honored Tamil Writer S. RAMAKRISHNAN with ‘Lifetime Literary Achievement Award‘ in Tamil for the year 2011, “IYAL VIRUDHU” as pronounced in Tamil, for his life time achievement in literary contribution to the Tamil Literature.

Profile

S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.

He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.

Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.

His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. Now, his web site http://www.sramakrishnan.com serves as a serious literary movement for young readers since it has become an important web site where contemporary literary innovations, world literature and world cinema congregate in a fertile ambience. An inspiring aspect of this site is that it has secured 23 lakh visits from readers all over the world. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.

A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.

His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.

He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.

A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.

The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.

He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like

* Baba,
* Album,
* Chandaikkozhi,
* Unnale Unnale,
* Bhima,
* Dhaam Dhoom,
* Chikku Bukku
* Yuvan Yuvathi
* Modhi Vilaiyadu ,
* Avan Ivan

with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.

Among the many important awards won by him are Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award, Periyar Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.

Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.

Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers







S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

State of the Union – Obama Speech (2010)

1. Bush has a short one. Sarkozy has a long one. Cher does not use hers. What is it?

2. Is it concession speech? 31 million uninsured; 45,000 deaths annually due to lack of health insurance, according to Harvard study. #SOTU

3. Keeping a poker face & sitting with starry eyes (or dismissive toned) for 90 minutes is no easy job. Kudos to Chief Justices, Joint Chiefs.

4. Obama mentions Dick Cheney with ‘schoolyard taunts’. “Let’s put aside the schoolyard taunts about who is tough.” #SOTU

5. Obama to GOP naysayers: “Just saying no to everything might be good for politics; but that is not leadership” is refreshing. #SOTU

6. Last year’s #SOTU – Health, energy, education – the new new deal; This time all of them were there with boldfaced deficit & debt reduction

7. Republicans stiffness with anything Obama is gently chided with mention of ‘not appreciating the speech even when he talks abt Job creation’

8. No axis of evil; no war on terror declaration; not even Islamic terrorism. boring SOTU speech by president is substancy & principled.

தொழில்நுட்பத்தின் சூட்சுமங்களைப் பகிர்ந்த கதை

சென்ற மாதத்தின் கடைசி சனிக்கிழமை எனக்குத் தெரிந்த ஸீக்வல் நுட்பங்களை விளக்கிச் சொல்ல மேடையும் அரங்கம் நிறைந்த ஆடியன்சும் வாய்த்தனர். அவை குறித்த பவர்பாயின்டுகள் அங்கே கிடைக்கும்.

நீங்களும் இவ்வாறு உங்களுக்குத் தெரிந்த வித்தையை உள்ளூர் கேம்ப்பில் பகிர்ந்து மகிழ வேண்டும்.

ஏன்?

1. பணம் முதலீடு செய்தால் பெருகலாம். கல்வி சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு பெருகும். ஒழுங்காய்ப் புரியும்.

2. லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்கிங் தளங்களில், உங்களின் ப்ரசன்டேஷன் பேசப்பட வேண்டும். விஷயம் தெரிந்தவர் என்ற கெத்து கிடைக்கும்.

3. சொல்லிக் கொடுப்பதற்காக அமேசான் போன்ற நிறுவனங்களின் அன்பளிப்பு வரப்பெறுவோம்.

4. கோர்வையாக விளக்குவதும், சுவாரசியமாக நகைச்சுவை தெளித்துப் பேசவும், கடினமான டெக்னாலஜியை சுளுவாக எடுத்து வைக்கவும், இதை விட வசதியான இடம் கிடைக்காது.

இனி… எப்படி தயார் செய்வது?

1. உங்களுக்குத் தெரிந்து நுட்பமாக இருக்கட்டும். நீங்கள் வேலை செய்த மொழியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். லேட்டஸ்ட் என்பதை விட அகலமும், ஆழமும் அறிந்த தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுங்கள்.

2. அடுத்தது: இந்த நுட்பத்தை மற்றவர் அறிவதால் என்ன பயன்? எவருக்கு இது கவர்ச்சியாக அமையும்? யாருக்கு சொல்லித் தந்தால் முக்கியம்?

3. இனிமேல் ஈஸி. ஸ்லைடுகள் ஏற்கனவே எவராவது போட்டிருப்பார். அதை கூகிள் கொண்டு எடுக்கவும். எட்டு டெக்குகள் எடுத்து, அவற்றுள் அலசி, ஆராய்ந்து, ஒருங்கிணைத்து உங்களுடையதை தயார் செய்யவும் – ஒரு நாள் வேலை இது.

4. முக்கிய கட்டம்: டெமோ காட்டுவது. இதற்கான மென்பொருளை உங்கள் மடிக்கணினியில் நிறுவவும். சாம்பிள் நிரலிகளை பொறுத்தவும். எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று தலை முதல் வால் வரை நடத்திப் பார்க்கவும். அவற்றை எழுதி வைத்துக் கொள்ளவும் – அடுத்த நாளுக்கான வேலை.

5. கடைசி கட்டம்: பவர்பாயிண்ட்டை முழுக்க சொல்லி பார்க்கவும். ஒரு மணி நேர வகுப்பு என்றால், முக்கால் மணி நேரமாவது உங்கள் பேச்சு இருக்க வேண்டும். – எட்டு மணி நேர உழைப்பு தேவை

6. கட்டாங்கடைசி: உங்களின் பயிற்சி முழுக்க கேட்டும் பார்வையாளருக்கு எதுவும் புரியவில்லை என்றால், எதை மட்டும் முக்கியமாகக் கருதி, மனதில் இருத்த வேண்டும்? தடாலடியான முன்னேற்றம் காண்பது எப்படி? உங்களை எப்படி அணுகுவது (மின்னஞ்சல் முகவரி இன்ன பிற).

என்னுடைய டேட்டா கேம்ப் அனுபவங்கள்:

1. உள்ளூர்காரர்களுக்கு ஜோக் கொண்ட விவரிப்பு முக்கியம். இந்தியாகாரங்களுக்கு (அதாவது… காரியஸ்தர்களுக்கு) விஷயம் முக்கியம். இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முயன்றேன். (எ-டு: ‘நீங்க இப்ப கத்துண்டது எல்லாமே ரத்திக்குப் போயாச்சு. எல்லாரும் க்ளௌடுக்கு மாறிட்டாங்க! இனிமே ஸீக்குவல் வெறுங்குப்பையாக்கும்.)

2. ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இரண்டு வகுப்புகள் என்றால் காலையில் ஒன்று; மாலையில் ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக வேண்டவே வேண்டாம்.

3. கேள்விகளை தைரியமாக எதிர்கொள்ளவும். எதிராளிக்கு விஷயம் தெரியாது. கூகிள் எல்லாம் கையில் கிடையாது. மைக்கோ  உங்கள் பிடியில். நீங்கள் சொல்லும் பதில்தான் அதாரிட்டி. எனவே, நிச்சயம் அதிரடியாக வேதவாக்கு அருளுங்கள்.

4. நன்றாக எடுத்தால், நிறைய சந்தேகங்கள் வரும். எளிமையாக வைத்துக் கொண்டேன். கேள்வி நிறைய வந்தது.

5. பதிவுக்கு காமென்ட் வருவது போல், ‘ரொம்ப நன்றாக இருந்தது’ என்று நாலு பேர் நடைபாதையில் நிறுத்தி நன்றி சொன்னபோது, சும்மா… ஜிவ்வென்றிருந்தது.

அமெரிக்காவில் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM

சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

ஒபாமா: பன்முகம்

வெறும் வார்த்தைகள் போதுமா? ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்:

நன்றி: Neoformix – Discovering and Illustrating Patterns in Data: Obama Victory Speech | Obama Word Portrait | Obama Word Portrait II | Colored Word Portraits | President Obama

வடை ஒரு அணா

சந்திரகாசி(அ.தி.மு.க.): கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் ரூ.100 கோடியில் நூலகம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.100 கோடியில் நூலகம் என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த ஆண்டு நிதியில் இருந்து கட்டப்படுகிறது.

அமைச்சர் அன்பழகன்: வடை ஒரு அணா, காராபூந்தி ஒரு அணா என்றால் எந்த அணாவுக்கு வடை, எந்த அணாவுக்கு காராபூந்தி என்று கேட்பது போல உள்ளது. நிதி ஒதுக்கீடு ஒன்று தான்.

சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில்

ரிடையர்மென்ட் சபா தேர்தல்

Cartoon Mathy Dinamani Rajya Saba MP Selectionராஜ்ய சபா என்றழைக்கப்படும் இடத்திற்கு செல்ல கீழ்க்கண்டவற்றில் இரண்டு தகுதி தேவை:

  1. தற்போது மத்திய அமைச்சராக இருக்க வேண்டும். (பிரதம மந்திரியாக இருத்தல் நலம்.)
  2. முன்னாள் மாநில முதல்வராக இருக்க வேண்டும்.
  3. கலாட்டா செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  4. அகவை முப்பதே போதுமென்றாலும், எழுபதைத் தாண்டியிருத்தல் நலம். (தற்போதைய சராசரியான 61.8 ஆக இருந்தாலும் போஸ் ஸிஸ்டம் திருகியாவது கூச்சல் போட வல்லமை கொண்டிருக்க வேண்டும்.)
  5. பொதுத் தேர்தலில் தோற்றிருக்க வேண்டும்.
  6. சினிமாவில் தோன்றியிருந்தால் நலம்.
  7. கட்சித் தலைவரின் குழவியாக இருத்தல் இன்னும் நலம். அட்லீஸ்ட், வளர்ப்புக் குழவியாகவது இருக்க வேண்டும்.
  8. தப்பித்தவறி தூக்கக் கலக்கத்தில் பேச அழைத்துவிட்டால், நேற்று படித்த ஜோக் மடலை சபாவில் பகிரத் தெரியவேண்டும். (Email Forwards « Flyswatting….)
  9. என்னை மாதிரி எதுவுமே நடக்க மாட்டேங்குதே என்று புலம்பல் எழும்பினால், ‘நீங்க தேர்வாகாமல் இருப்பதினால்தான்’ என்று திசைதிருப்பும் பழிபோடும் அரசியல் வித்தகராக இருக்கவேண்டும். (So, who’s to blame for what happened to Scarlett Keeling? – Ambika Soni & Shantaram Laxman Naik blamed the ghastly crime on the victim’s folks)