Monthly Archives: பிப்ரவரி 2013

சுயமனை புகுதல்: செய்தொழில் ஆக்கமும் தன்வினை ஊக்கமும்

எது வேலை செய்யாவிட்டாலும், யாரையாவது அழைத்து சரி செய்வது பால்ய கால வழக்கம். ஃப்யூஸ் போய் விட்டதா… எலெக்ட்ரீஷீயனை கூப்பிடு. மோட்டார் ஓடவில்லையா… ரிப்பேர் செய்பவர் வீடு வரை சென்று கையோடு அழைத்து வா.

இப்படி வளர்ந்தவனை, லைட் பல்ப் மாற்றுவது; உடைந்ததை சரி செய்வது என்று ஹாஸ்டல் வாசம் கொஞ்சமாக மாற்றியது. அமெரிக்கா வாசம் இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கிறது.

கொஞ்சம் மாற்றியதற்கு அடையாளமாக பாத்ரூம் சிக்கல்களை சீர் செய்து, அதன் ஆய பயனைக் கண்டு பெருமிதமும் பெற ஆரம்பித்திருக்கிறேன்: Unclog a Stopped Bath Drain – Lowe’s Creative Ideas

ஒரு மணி நேரத்திற்கான சாஃப்ட்வேர் எஞ்ஜினீயர் சம்பளமும் தச்சர் சம்பளமும் கிட்டத்தட்ட சமம். என்னுடைய சனி, ஞாயிறுகளை சும்மா கழித்துக் கொண்டு வீணாக்காமல், நாலு காசு சேமிக்க வேண்டுமானால், நானே ப்ளம்பர் ஆகவும், நானே மர வேலை செய்பவன் ஆகவும் மாறுவதுதான் ஆக்கபூர்வமான செயல்.

இந்த மாதிரி அமெரிக்காவும் வரும் ஒவ்வொருவம் அமெரிக்கக் கலாச்சாரத்திற்கு மாறுவதற்கு பெயர் ‘மெல்டிங் பாட்’ – கலந்துருகும் கலயம்.

இதற்காகவே ஹோம் டிப்போவும் லோவ்சும் வாரயிறுதிகளில் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள். முற்றிலும் இலவசமாக. அதற்கு எல்லாம் போய் ’இயல், இசை, நாடகம் எல்லாம் அறிய வைத்தாய்… தேவீ’ என்று அறிவிப்பதற்கு பதில் சோபாவில் பஜ்ஜியும் தொலைக்காட்சியில் ‘கண்ணா லட்டு திங்க ஆசை’யும் பார்ப்பதற்கும் அமெரிக்காவில் பெயர் உண்டு – சாலட் பார் (பழ/காய்கறிக் கலவை சந்தை)

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.

நாட்டு வளம்: பனை மரத்தின் பயன்: இலங்கையும் தமிழ்நாடும்

சாப்பாட்டு நிகழ்ச்சியைக் கூட புதிய தலைமுறை டிவியின் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ செய்முறை விளக்கமாக சுருக்காமல், ‘நீங்கள் கேட்ட பாடல்’ விஜயசாரதி போல் தகவல் அடுக்கும் சாதனமாக மாற்றி இருக்கிறது.

சமீபத்தில் கலிஃபோர்னியா சென்று வந்ததில் இருந்து பனை மரம் மீது பாசம் கலந்த ஆர்வம் தொற்றிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் சமீபத்தில் ’சோற்று சரித்திர’த்தத்தை பனை மர ஸ்பெஷலாக்கி இருந்தார்கள்.

பனம்பழ புட்டு, வீட்டுக்கு மேலே பனை ஓலை, பனங்கிழங்கு ஃப்ரை என்று இத்தனை உபயோகங்களை ஆதிகாலத்தி தமிழர் கண்டு பிடித்திருக்கிறாள்! மரமாக வளர வைத்து பயன்படுத்துகிறாள். குட்டிச் செடியாகவே எடுத்தும் உபயோகிக்கிறாள்.

இன்றைய சமூகம் இணையத்தைக் கொண்டு சின்ன சின்ன சேவைகளை அறிமுகம் செய்வது போல் அன்றைய நாகரிகம் இயற்கைப் பொருள்களை வைத்து புதுப் புது பயன்களை கண்டுபிடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

கூடவே நன்றாக தின்றும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

போப் ராஜினாமா: என்னுள்ளே ஏதோ

நாம் ஒவ்வொருவரும் தனித் தனி நாடு. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை பல உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளன. நம்முடைய சோத்தாங்கையில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கும் பீச்சாங்கை பாக்டீரியாக்களுக்கும் மாமன், மச்சான் உறவு கூட இல்லை. இரண்டுமே வெவ்வேறு நுண்ணுயிரி இனங்களைச் சேர்ந்தவை.

அப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த அறிவியல் கட்டுரை. The Teeming Metropolis of You | CAA

தூய பிரதேசங்களில் சௌகரியமாக வளர்ந்தவர் துணிச்சலான காரியங்களில் பயப்படாமல் இறங்குவதற்கும், சராசரியான மனிதர்கள் செட்டில்ட் வாழ்க்கைக்கு பிரியப்படுவதற்கும் கூட நமக்குள்ளே குடித்தனம் செய்யும் உயிரிகள் காரணம்.

உடலையும் சிந்தனையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டின் மருத்துவ சாதனையாக சொன்னால்… என்னுள்ளே இருக்கும் கோடிக்கணக்கான உயிரினங்களின் தொகுப்புதான் நான் என்றும் என்னுடைய செயல்பாடுகள் என்றும் அறிவது இக்கால கண்டுபிடிப்பு.

Susan Cooper’s The Boggart: Monsters and Interesting Life

சிறுவர்களுக்காக சூசன் கூப்பர் எழுதிய ‘தி பொகார்ட்’ நாவலின் சில பகுதிகளை வாசித்தேன்.

விட்டலாச்சார்யா உதவியுடன் குட்டிப் பிசாசுகளை முதன் முதலாக பார்த்தபோதே பாசமும் சிரிப்பும் வந்தது. அதன் பிறகு ஹாரி பாட்டரில் கண்டிப்பும் விஷமும் கொண்ட குட்டி சாத்தான்கள் அறிமுகம். நடுவே ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ல் வில்லத்தனமும் பச்சோந்தி குணமும் கொண்ட குள்ள பூதங்கள்.

Susan Cooper’s The Boggart – விஷமத்தனமான பூதம். வீட்டில் வைத்த பொருள்களை இடம் மாற்றி வைக்கிறது. தினமும் காலையில் சவரம்; அப்புறம் கடியாரம் கட்டுதல் என்று ஓடும் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. ஒரு நாள் போல் அடுத்த நாள் இல்லை. வரிசைக்கிரமமான மியூசியம் போன்ற இல்லத்த கலைத்துப் போடுகிறது.

பொருள்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறோம். மற்றவர்களின் உதவியை நாடுகிறோம்.

இன்று காலை வாசித்த Why You Love That Ikea Table, Even If It’s Crooked விஷயமும் இதோடு ஒத்துப் போனது. நானே சிரம்ப்பட்டு செய்தால், அந்த மேஜை மிகவும் ரசிக்கிறது. எவருக்கோ காசு எறிந்து செய்து முடித்தால், அத்தனை வாஞ்சையுடன் அந்த நாற்காலியை தடவித் தடவி பயன்படுத்துவதில்லை.

Morals from Children Movie: The Odd Life of Timothy Green

‘தி ஆட் லைஃப் ஆஃப் டிமொத்தி க்ரீன்’ பார்த்தேன். சிறுவர்களுக்கான படம். பெண்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.

படத்தின் ‘அறமாக’ இவற்றை பட்டியலிடலாம்.

* நம் குழந்தை இப்படித்தான் இருக்கணும்னு நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதனுடனேயே நின்றுவிடும்.

* தத்து எடுத்துக் கொள்; குறைகளுடன் வாழ ஏற்றுக் கொள்.

* செட்டில் ஆகாதே; தரையில் இருந்து கொண்டே நட்சத்திரங்களை பறிக்க ஒவ்வொரு நொடியும் முயல்!

என்னுடைய பையன் கிரிக்கெட்டில் நல்லா ஆடணும், சுவாரசியமாப் பேசணும், என்றெல்லாம் புகுத்தாமல், அவனுடைய வாழ்க்கையை அவனே வாழட்டும் என்பது மைய சித்தாந்தம். அப்படி எல்லாம் வாழவிடுகிறோம் என்பது அமெரிக்கர்களின் நோக்க உலகாயதம். சினிமாக்களிலாவது இப்படி நம்பிக்கையும் நல்ல விஷயங்களையும் தொடர்ச்சியாக முன்வைப்பது அவர்களின் கற்பனை வேதாந்தம்.

கிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்

கோடை காலத்தின் மதியங்களில் வீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.

“ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டா? போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா?”

“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா?”

“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா?

“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே? அதைப் பற்றி பேசலாமா?”

ஸ்தோத்திரம்

What does the Bible say about snake handling? Should we be handling snakes in church?:

I said, ‘I don’t think you are qualified to speak to me about Jesus‘. They looked very astonished and asked, ‘Why not’? ‘Because’, I said, ‘you have no faith’. ‘Our faith in Jesus is as strong as a rock’ they insisted. ‘I don’t think it is’ I said with a smile. ‘Please open your Bible and read the Gospel of Mark, chapter 16, verse 16, 17 and 18′ I said and while they flicked through their Bibles I went quickly inside and came out again.

One of them found the passage and I asked him to read it out loud. It said, ‘He who believes and is baptized will be saved but he who does not believe shall be condemned. And these signs will follow those who believe in my name. They shall cast out devils, they shall speak in tongues, they will handle snakes and if they drink poison it will not hurt them and they will lay hands on the sick and they will recover’.

When he finished I said, ‘In that passage Jesus says that if you have real faith you will be able to drink poison and not die’. I took a bottle of Lankem from behind my back, held it up and said, ‘Here is some poison. Demonstrate to me the strength of your faith and I will listen to anything you have to say about Jesus’.

You should have seen the looks on their faces! They didn’t know what to say. ‘What’s the problem’? I asked. ‘Is your faith not strong enough’? They hesitated for a few moments and then one of them replied, ‘The Bible also says that we must not test God‘. ‘I’m not testing God’, I said, ‘I’m testing you. You love to witness for Jesus and now is your big opportunity’.

It is describing something that will occur, not commanding that something should occur. An example of this is the Apostle Paul inActs 28:3-5: “Paul gathered a pile of brushwood and, as he put it on the fire, a viper, driven out by the heat, fastened itself on his hand … But Paul shook the snake off into the fire and suffered no ill effects.” Notice that Paul did not seek out to handle a snake. The snake bit Paul, but God protected Paul from the effects of the snake bite. Mark 16:17-18 is saying that if you are faithfully serving God in the spread of the gospel, He can protect you from anything that may cross your path.

 

வரலாறு, சலங்கை ஒலி, சந்திரமுகி & காதலன்

கல்லூரி காலத்தில் வந்த ‘ஹம் ஹே ரஹி பியார் கே’ இந்திப் படத்தில் தென்னிந்திய நடன கலைஞர் சந்திரன், நடன கலைஞராகவே நடித்திருப்பார். இவர் சுதா சந்திரனின் அப்பா.

கிட்டத்தட்ட ‘விஸ்வரூபம்’ கமல் போலவே நளினமான அபிநயங்கள் மிகுந்த கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார்கள். அவருக்கு ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும். அவரின் கை முத்திரைகளும் முகபாவங்களும் பிடிக்காததால் வீட்டை விட்டு ஹீரோயின் ஓடுவதில் கதை துவங்கும்.

இருபதாண்டுகள் கழித்தும் பரதநாட்டியம் கற்ற ஆண்களை இப்படித்தான் தமிழ் சினிமா வரையறுக்கிறது. அழகான நாயகி, சாஸ்திரீய கலை கற்றவனின் நடை, உடை பாவனைகளை வெறுப்பாள் என்று சொல்கிறது.