சிறுவர்களுக்காக சூசன் கூப்பர் எழுதிய ‘தி பொகார்ட்’ நாவலின் சில பகுதிகளை வாசித்தேன்.
விட்டலாச்சார்யா உதவியுடன் குட்டிப் பிசாசுகளை முதன் முதலாக பார்த்தபோதே பாசமும் சிரிப்பும் வந்தது. அதன் பிறகு ஹாரி பாட்டரில் கண்டிப்பும் விஷமும் கொண்ட குட்டி சாத்தான்கள் அறிமுகம். நடுவே ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ல் வில்லத்தனமும் பச்சோந்தி குணமும் கொண்ட குள்ள பூதங்கள்.
Susan Cooper’s The Boggart – விஷமத்தனமான பூதம். வீட்டில் வைத்த பொருள்களை இடம் மாற்றி வைக்கிறது. தினமும் காலையில் சவரம்; அப்புறம் கடியாரம் கட்டுதல் என்று ஓடும் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. ஒரு நாள் போல் அடுத்த நாள் இல்லை. வரிசைக்கிரமமான மியூசியம் போன்ற இல்லத்த கலைத்துப் போடுகிறது.
பொருள்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறோம். மற்றவர்களின் உதவியை நாடுகிறோம்.
இன்று காலை வாசித்த Why You Love That Ikea Table, Even If It’s Crooked விஷயமும் இதோடு ஒத்துப் போனது. நானே சிரம்ப்பட்டு செய்தால், அந்த மேஜை மிகவும் ரசிக்கிறது. எவருக்கோ காசு எறிந்து செய்து முடித்தால், அத்தனை வாஞ்சையுடன் அந்த நாற்காலியை தடவித் தடவி பயன்படுத்துவதில்லை.