கடைசி விவாதம்: யார் வென்றார்கள்?


ஜான் மெகயினுக்கும் பராக் ஒபாமாவிற்கும் இடையே மூன்றாவது தருக்கம் நடந்தேறியது.

உங்கள் கருத்து என்ன?

2 responses to “கடைசி விவாதம்: யார் வென்றார்கள்?

  1. From http://tamil.webdunia.com/newsworld/news/international/0810/16/1081016018_1.htm

    நான் அதிபர் புஷ் அல்ல: மெக்கெய்ன்!

    அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, நான் அதிபர் புஷ் அல்ல என்று மெக்கெய்ன் அதிரடியாகக் கூறியுள்ளார்.

    அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஆகியோர் ஒரே மேடையில் 3வது மற்றும் இறுதி விவாதம் நடந்தது.

    இந்த விவாதத்தின் போது பேசிய ஒபாமா,

    “நீங்கள் (அமெரிக்க மக்கள்) மெக்கெய்னுக்கு வாக்களித்தால், அது கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் புஷ்ஷின் பிரபலமற்ற கொள்கைகளுக்கு அளிக்கக் கூடிய வாக்காக இருக்கும்,”

    என்று வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய மெக்கெய்ன்,

    “நான் அதிபர் புஷ் அல்ல, நீங்கள் (ஒபாமா) அதிபர் புஷ்ஷை எதிர்த்துப் போட்டியிட நினைத்தால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அமெரிக்காவையும் அதன் பொருளாதாரத்தையும் புதிய பாதையில் நடத்திச் செல்வதே எனது குறிக்கோள்,”

    என்று பதில் வாதம் செய்தார்.

bsubra -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.