டைட்டசுக்கு ஏழு வயது. அவனது எல்லைகள், கோர்மெங்காஸ்ட்டுக்குள் அடங்கும். அவன் நிழல்களில் உயிர்ப்பால் அருந்தினான்; தாய்ப்பால் போல் சடங்கு வலைகளும் அவனுக்கு புகட்டப்பட்டது: அவனது காதுகளுக்கு – எதிரொலி; அவன் கண்களுக்கு – கல்லினால் ஆன இடர்ப்பின்னல் தளம்: எனினும் அவனுடைய உடலுக்குள் பிறிதொன்று நுழைக்கப்பட்டது – அவனின் நிழலாகவுள்ள மரபுடைமை எச்சம் தவிர. எல்லாவற்றுக்கும் முதன்மையாக, அவன் ஒரு சிறு குழந்தை.
ஒரு சடங்கு, எப்போதும் வகுக்கப்பட்டதை விட மிகவும் கட்டாயமானது, கடுமையான பற்றுக்கோடுண்ட கும்மிருளை எதிர்த்துப் போராடுகிறது. இரத்த சடங்கு; குதித்து கொப்புளிக்கும் இரத்தத்தின் சடங்கு. உணர்வின் இந்த விரைவுகள் அவரது முன்னோர்களுக்கான பூர்வஜென்மக் கடனில்லை, ஆனால் கள்ளமில்லாத புரவலர்களுக்கு, கிரேதாயுக துவாபரயுக உலகின் ஆழமான குழந்தைப் பருவத்தினருக்காக…
பிரகாசமான இரத்தத்தின் பரிசு. ‘அழுகை’ என்று முணுமுணுக்கும்போது சிரிக்கும் இரத்தம். சீரே சட்டங்கள் வளைந்துகொடுக்கும் போது துக்கப்படுகிற இரத்தத்தின் ‘மகிழ்ச்சி!’ பெரிய நிழல்களில் சிறிய புரட்சி!
Titus the seventy-seventh. Heir to a crumbling summit: to a sea of nettles: to an empire of red rust: to rituals’ footprints ankle-deep in stone. Gormenghast.
இதன் குறியீட்டில் நான் ஏன் அக்கறை எடுக்கிறேன்? கோட்டையின் இதயம் ஒலிக்கிறதா இல்லையா என்று நான் கவலைப்படுவது எதற்காக? எப்படியிருந்தாலும் நான் தெளிவாக விரும்பவில்லை! அவர்கள் எப்போதும் சொன்னதைச் செய்தால் யார் வேண்டுமானாலும் ஆரோக்கியமாக முடியும். நான் வாழ விரும்புகிறேன்! பார்க்க முடியவில்லையா? ஓ, பார்க்க முடியவில்லையா? நான் நானாக இருக்க விரும்புகிறேன்; என்னை ஆளாக்க, அசல் நபராக்க மாறுகிறேன்; குறியீடாக முற்றுப்பெற மாட்டேன்.
அவர் தனது வலதுபுறத்தில் இருண்ட விளிம்பை விட பயந்திருந்தார், ஏனென்றால் தனது இருப்பிடத்தின் மீதிருந்த ஒரே பிடிப்பு அது மட்டும்தான்; ஆனால் இப்போது அவர் அதை தீய திட்டத்தின் ஒரு பகுதியாக உணர்ந்தார்.
அவர் கவனித்தபோது பயம் அவர் மீது வளர்ந்தது. அவர் ஒரு சிறுவனை விட ஒரு மானாக வளர்ந்து உருமாறிவிட்டார்; ஆனால் அவரது அனைத்து வேகத்திற்கும் அவர் பயணக் கலையில் புதியவராக இருந்தார் – பாசி-பாய்ச்சல் மூலம் – திடீரென்று, அவர் காற்றில் இருந்தபோது, அவரது கைகள் இருபுறமும் நீட்டின போது, அந்தரத்தில் சமநிலையை எட்டிய சமயம், அவர் ஒரு உயிரினத்தின் ஒரு நொடியின் மிகச்சிறந்த பகுதியைப் பார்த்தார்.
தன்னைப் போலவே, அது காற்றின் நடுவே இருந்தது, அதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. உருவில் பெரிதாக இருந்தாலும் டைட்டஸ் அடர்த்திக் குறைவாகக் கட்டைமக்கப்பட்டு இருந்தது. இந்த உயிரினம் நேர்த்தியாக மெல்லியதாக இருந்தது. அது ஒரு இறகு போல தங்கக் காற்று வழியாக மிதந்தது; மென்மையான உடலின் பக்கவாட்டில் மெல்லிய கைகள், தலை சற்று விலகி, ஒரு தலையணையில் இருப்பது போல் சிறிது சாய்ந்தது.
டைட்டஸ் இப்போது தான் தூங்கிக்கொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்: அவர் தன் கனவின் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தார்: அவரது பயமானது கொடுங்கனவு: அவர் இப்போது பார்த்தது இறந்த ஆவியுருத் தோற்றத்தைத் தவிர வேறில்லை; அது அவரை பேயாட்டமாக வேட்டையாடிய போதிலும், புகையாக மறையப்போகும் இரவை விரைவாகப் பின்தொடர்ந்து வரப்போகும் நம்பிக்கையற்ற அபத்தத்தை அவர் அறிந்திருந்தார்.
I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno. —W. G. Sebald, The Rings of Saturn
செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?
அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.
செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.
“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.”
கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்
செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.
“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.”
When you turn the corner
And you run into yourself
Then you know that you have turned
All the corners that are left.
–Langston Hughes, poet and novelist (1 Feb 1902-1967)
he Miriam and Ira D. Wallach Division of Art, Prints and Photographs: Art & Architecture Collection, The New York Public Library. (1858). Barber shaving a man’s head bald, one onlooker, white building in the background Retrieved from http://digitalcollections.nypl.org/items/1e520e70-8a8e-0131-2755-58d385a7bbd0
சந்துமுக்கில் திரும்பும்போது
என் மீதே மோதிக்கொண்டேன்
இப்பொழுது புரிகிறது, திரும்பிவிட்டேன்
இனி எந்த மூலையும் பாக்கி வைக்கவில்லை.
அறிதிற மங்கல் (cognitive dissonance) என்றால் என்ன? நினைப்பது ஒன்று; ஆனால், வெளிப்படையாக சொல்வதோ இன்னொன்று என்று செயல்படும்போது வாய்க்கும் தொண்டைக்கும் நடுவே இடறும் அசௌகரியம் – இதுவே உள்ளொன்று நம்பிக்கை வைத்து புறமொன்று அரசியல் சரிநிலையாகப் பேசும் அவலத்தை நினைத்து கூனிக் குறுகுதல் எனலாம்.
ஒரு உதாரணம் பார்ப்போம். உங்களுக்கு அவசரமாக ஒரு போராட்டத்திற்குச் செல்ல வேண்டும். அது லஞ்சத்தையும் ஊழலையும் தட்டிக் கேட்கும் அறவழிப் போராட்டம். செல்லும் வழியில் ஆட்டோ பிடிக்கிறீர்கள். அவரோ மீட்டருக்கு மேல் பத்தோ இருபதோ கேட்கிறார். சரியான நேரத்தில் நீங்கள் செல்லாவிட்டால், போராட்டம் ஒழுங்காக நடக்காது. ஆட்டோக்காரர் செய்வதும் அக்கிரமமே. அவரைத் தட்டிக் கேட்டு, புகைப்படம் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அப்போதைக்கு ‘ஆட்டோ டிரைவரும் பொதுஜனம்தானே!’ என்று சமரசம் செய்து, அவரின் அடாவடியை அமைதியாக ஒப்புக்கொண்டு, கையூட்டு தருவது அறிதிற மங்கல்.
அறிவாற்றல் என்றால் கற்றுக் கொள்ளும் திறனும், அவ்வாறு கற்பதினால் நம் பார்வைகளைக் காலப்போக்கில் மாற்றிக்கொள்ளும் திறனும் எனலாம்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் வெகு சிறப்பாக செயலாற்றியவர்களைப் பார்த்தால், பெரும்பாலானோர் திறந்த சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடதுசாரி, வலதுசாரி வித்தியாசம் இல்லாமல் திறந்த மனதிற்கும் செயலூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
ஆபிரஹாம் லிங்கனை எடுத்துக் கொள்ளுங்கள்: கறுப்பர்களைக் கொத்தடிமையாக வைத்திருப்பதற்கு ஆதரவாக தன் அரசியல் பயணத்தைத் துவங்கியவர், பிற்காலத்தில் அவர்களின் விடுதலைக்கும் குடியுரிமைக்கும் மிகப் பெரிய போராளியாக மாறினார்.
அடுத்தது எஃப்.டி.ஆர். எனப்படும் ஃப்ராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்: பட்ஜெட்டை சமன் செய்வேன் என்றும், பற்றாக்குறையைப் போக்குவேன் என்றும் வாக்குறுதி கொடுத்து ஜெயித்தவர். தலைவரான பிற்பாடு, அவருடைய புது ஒப்பந்தம் மூலமாக பற்றுக்கணக்கை பன்மடங்கு ஊதிப் பெருக்கினார்.
“I have forced myself to contradict myself, in order to avoid conforming to my own taste.”
– Marcel Duchamp
“நானே எனக்கு நண்பனில்லையே…
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே!”
– வைரமுத்து
கார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.
பார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை? மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன? இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா?
இயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா? அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா?
பார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்?
இந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.
நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.
நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.
நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
என் குறிப்புகள்
இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.
ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.
மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.
அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?
ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.
ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.
பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.
கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்
ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.
ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.
முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.
ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.
முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.
அயலாக்கம் x கிளைத் துவக்கம்
1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.
புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.
இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.
நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…
இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.
முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்
ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.
ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.
இதில் என்ன வசதி?
அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.
ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.
இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.
மேகம் – கிளவுட்
2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.
இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.
விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.
என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.
எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.
நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.
அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.
எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.
கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.
அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.
சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.
இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.
அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.
இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.
இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)
சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.
ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.
முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.
வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.
என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.
எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.
பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.
அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?
இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?
அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.
750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.
ரகசிய அளிப்பான் x திறமூல கணினி
ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?
தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.
ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?
2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.
அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.
அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.
தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.
அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.
ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?
அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?
இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)
நல்ல படத்தை துணையெழுத்து மட்டும் படித்துவிட்டு காட்சியமைப்பையும் நடிகர்களின் உடல்மொழியையும் பின்னணி இசைக்கோப்பையும் தவறவிடுவோம். அந்தளவிற்கு துணையெழுத்துகளில் இலக்கியம் உண்டு. தமிழ்ப்படங்களின் தரமான வசனத்திற்கும், அதை எட்ட வைக்கும் தூரத்தில் வைத்திருக்கும் சப் டைட்டில்காரர்களுக்கும் நன்றி.
என்னுரை
Caption for the hearing impaired என்பதற்கும் Sub-titles என்னும் பிரிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னதில் வீட்டுக் கதவு திறந்தாலும், மங்கல் இசை ஒலித்தாலும், கார்கள் மோதிக் கொண்டாலும் கூட ஒலிக்குறிப்பு போடுவார்கள். பின்னது, எங்கெல்லாம் மொழி இடிக்கிறதோ, அங்கு மட்டும் மாற்றி, துணையெழுத்தாக இடுகிறார்கள்.
ஆக்சன் படத்திற்கு வசனம் எழுதுவது தனிக்கலை. அப்படி நறுக்குத் தெறித்தது போல் எழுதப்பட்ட வரிகளுக்கு மொழிபெயர்ப்பது இன்னொரு கஷ்டமான கலை. அதில் குழுஊக்குறி, உள்ளூர் பாஷை எல்லாவற்றையும் அயல்மொழிக்கு ஏற்ற பதமாக மாற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.
உரிமை துறப்பு:
இதை நான் பார்த்ததே திருட்டி டிவிடி. எனவே, இப்படி எல்லாம் குற்றங்கண்டுபிடிக்க அருகதை இல்லை என்பது உண்மை. எனினும், உலக அரங்கில், ஆஸ்கார் விருதுக்குழுவிற்கும் அர்த்தம் போய்ச்சேர வேண்டும் என்பதைத் தவிர எந்த விதமான கெட்ட எண்ணமும் இல்லை.
அப்படியாக கோ படத்தில் கிடைத்த சில
1. பேனர்கள், அறிவிப்பு பலகை, பதாகை, தோரண எழுத்து எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பது அவசியம். அப்படி பார்த்தால், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அறிமுகத்தில் வரும்
‘அதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுத வரும் தலைவனே!’,
‘அறிவுக் குற்றாலமே’ போன்ற சுவரொட்டிகள் ஆங்கிலமாக்கம் பெறவில்லை.
2. அதே போல் ‘தினக்குரல்’ நாளிதழில் வரும் ‘புகைப்பட புதையல்’ போன்ற தலைப்புச் செய்திகளும் பிறமொழிக் காரருக்கு புரியாது. ‘சிறகுகள்’ துண்டுச்சீட்டு போன்றவையும் அடக்கம்.
3. பிரகாஷ்ராஜ்: கார்-ல போய்கிட்டே பேசலாம்
ஆங்கிலம்: ‘Follow me in the car’
4. டூயட் பாடல்களுக்கு வேண்டாம். ஆனால், அந்த சிறகுகள் தீம் சாங் மட்டுமாவது ஆங்கிலமாக்கம் செய்திருக்க வேண்டும்.
5. Naxels, IAT போன்ற பலுக்கப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
கோ போன்ற நல்ல படங்களுக்கு, அடர்த்தியான வசனங்களும் கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும் காட்சிகளும் அமைந்த வசனங்களுக்கு மொழிமாற்றுவது சாதாரணம் காரியம் அல்ல. செய்தவருக்கு வாழ்த்துகள்.
நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன்.
புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது — நீயும் வாயேன்
oOo
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்
அதன் அம்மாவின் பக்கத்தில்
நின்றுகொண்டிருக்கிறது – ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது
தடுக்கி விசுகிறது
அதிக நேரம் ஆகாது — நீயும் வாயேன்
– ஆகஸ்ட் 1975
அசல்:
The Pasture by Robert Frost
I’m going out to clean the pasture spring;
I’ll only stop to rake the leaves away
(And wait to watch the water clear, I may):
I sha’n’t be gone long.—You come too.
I’m going out to fetch the little calf
That’s standing by the mother. It’s so young,
It totters when she licks it with her tongue.
I sha’n’t be gone long.—You come too.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde