Tag Archives: Tamil

கோ (Ko) – Subtitles & Captions for the hearing impaired in Tamil Movies

அர்ப்பணிப்பு

நல்ல படத்தை துணையெழுத்து மட்டும் படித்துவிட்டு காட்சியமைப்பையும் நடிகர்களின் உடல்மொழியையும் பின்னணி இசைக்கோப்பையும் தவறவிடுவோம். அந்தளவிற்கு துணையெழுத்துகளில் இலக்கியம் உண்டு. தமிழ்ப்படங்களின் தரமான வசனத்திற்கும், அதை எட்ட வைக்கும் தூரத்தில் வைத்திருக்கும் சப் டைட்டில்காரர்களுக்கும் நன்றி.

என்னுரை

Caption for the hearing impaired என்பதற்கும் Sub-titles என்னும் பிரிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னதில் வீட்டுக் கதவு திறந்தாலும், மங்கல் இசை ஒலித்தாலும், கார்கள் மோதிக் கொண்டாலும் கூட ஒலிக்குறிப்பு போடுவார்கள். பின்னது, எங்கெல்லாம் மொழி இடிக்கிறதோ, அங்கு மட்டும் மாற்றி, துணையெழுத்தாக இடுகிறார்கள்.

ஆக்சன் படத்திற்கு வசனம் எழுதுவது தனிக்கலை. அப்படி நறுக்குத் தெறித்தது போல் எழுதப்பட்ட வரிகளுக்கு மொழிபெயர்ப்பது இன்னொரு கஷ்டமான கலை. அதில் குழுஊக்குறி, உள்ளூர் பாஷை எல்லாவற்றையும் அயல்மொழிக்கு ஏற்ற பதமாக மாற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.

உரிமை துறப்பு:

இதை நான் பார்த்ததே திருட்டி டிவிடி. எனவே, இப்படி எல்லாம் குற்றங்கண்டுபிடிக்க அருகதை இல்லை என்பது உண்மை. எனினும், உலக அரங்கில், ஆஸ்கார் விருதுக்குழுவிற்கும் அர்த்தம் போய்ச்சேர வேண்டும் என்பதைத் தவிர எந்த விதமான கெட்ட எண்ணமும் இல்லை.

அப்படியாக கோ படத்தில் கிடைத்த சில

1. பேனர்கள், அறிவிப்பு பலகை, பதாகை, தோரண எழுத்து எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பது அவசியம். அப்படி பார்த்தால், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அறிமுகத்தில் வரும்

  • ‘அதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுத வரும் தலைவனே!’,
  • ‘அறிவுக் குற்றாலமே’ போன்ற சுவரொட்டிகள் ஆங்கிலமாக்கம் பெறவில்லை.

2. அதே போல் ‘தினக்குரல்’ நாளிதழில் வரும் ‘புகைப்பட புதையல்’ போன்ற தலைப்புச் செய்திகளும் பிறமொழிக் காரருக்கு புரியாது. ‘சிறகுகள்’ துண்டுச்சீட்டு போன்றவையும் அடக்கம்.

3. பிரகாஷ்ராஜ்: கார்-ல போய்கிட்டே பேசலாம்

ஆங்கிலம்: ‘Follow me in the car’

4. டூயட் பாடல்களுக்கு வேண்டாம். ஆனால், அந்த சிறகுகள் தீம் சாங் மட்டுமாவது ஆங்கிலமாக்கம் செய்திருக்க வேண்டும்.

5. Naxels, IAT போன்ற பலுக்கப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

கோ போன்ற நல்ல படங்களுக்கு, அடர்த்தியான வசனங்களும் கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும் காட்சிகளும் அமைந்த வசனங்களுக்கு மொழிமாற்றுவது சாதாரணம் காரியம் அல்ல. செய்தவருக்கு வாழ்த்துகள்.

மகள்

உலகத்தரமும் இந்திய மசாலாவும்

தீபாவளிக்கு வெடி வெடிப்பது போல்… கிறிஸ்துமசுக்கு பரிசு பரிமாற்றம் போல்… ரஜினி சினிமாவை முதல் நாள் பார்ப்பது போல்… சனிக்கிழமைதோறும் கிளாசிக் திரைப்படம் போடுவது வழக்கம். மகளுக்கு உலக சினிமா பரிச்சயத்தை விட, தமிழ் கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாகவே சொல்லிவிடுவது என சபதம்.

‘அன்பே சிவம்’ ஓடுகிறது. குலத்தில் கல்லெறிகிறார். பாலா வருகிறார். மகள் உடனே கேட்கிறாள்: ‘இவளை கல்யாணம் செய்து கொள்ளத்தான் மாதவன் செல்கிறாரா?’

தமிழ் சினிமா இவ்வளவு எளிமையான புரிதலுடன் இயங்குகிறது என்பதை அறிந்து கொண்ட மகிழ்ச்சி அதிர்ச்சியா? அல்லது தென்னகத்தின் ஆஸ்கார் நாயகன் ஆக்கமே ஸ்டீரியோடைப் வார்ப்புருவில் அடைபட்டதை தெரிவித்த வருத்தமா?

“பேசாமல் படம் பாரு”


வீட்டிலிருந்தே வேலை

பி.பி.எஸ். நிகழ்ச்சியின் முன்னோட்டம் டிவியில் ஓடுகிறது. எனக்குப் பிடித்த ஃப்ரன்ட்லைன். அவளுக்குப் பிடிக்காத போஸ்ட் மார்ட்டம்.

டாக்டர் பற்றாக்குறை அறிந்த தகவல். Forensic pathologist கிடைக்காமல் இருப்பது புதிய தகவல்.

‘கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதற்கு பதில் இந்த மாதிரி தொழில் மாத்திக்க ஏதாவது கத்துக்கலாம். புதுசாகத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் இருக்கும்; நிலையான சம்பாத்தியமும் வரும்போலத் தோணுது.”

“என்ன வேணா செய் அப்பா… Snow Dayன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு மட்டும் பொணத்த எடுத்துண்டு வந்துடாதே!”


முந்தைய பதிவு: அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

விகடன் விருதுகள் – 2010

விகடன் அவார்ட்ஸ் 2008

துவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.

அவற்றில் சில:

1. சிறந்த கதை – வசந்தபாலன் :: அங்காடித் தெரு

2. சிறந்த வசனம் – சற்குணம் :: களவாணி

3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்

யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகத்தை நிழ்த்தும் எஸ்.எழில்வேந்தன்

முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்

சிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்

4. சிறந்த நாவல் – மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)

5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)

6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு  (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)

7. சிறந்த மொழிபெயர்ப்பு – ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)

உலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.

பத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.

8. சிறந்த வெளியீடு – தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)

9. சிறந்த பின்னணிப் பாடகர்: பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)

அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

தலைப்பை விட சிறிய பதிவு. மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். அவள் எழுதிய கடிதத்தின் முதல் வரி:

நான் பெபொ த்த டம்ர்ல பனன் ர்கன்

அவள் படித்துக் காட்டியது:

நான் இப்பொழுது இதைத் தமிழில் பண்ணி இருக்கிறேன்.

முந்தைய பதிவுகள்:
1. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?
2. இந்தியாவைப் பற்றி வரைக
3. வெற்றிகரமான நூறாவது நாள்
4. ஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்
5. Dasavatharam – Eight Year old’s Take

Separated at Birth: Venkat spl.

இன்றைய இரட்டையர்களை காட்டிக் கொடுத்தவர்: வெங்கட்

அ) நடிகை த்ரிஷா & கேமரான் டயஸ்


ஆ) பட்டிமன்ற பேச்சாளர் ராஜா & மனோபாலா


இ) எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன் & திலீப் குமார்


முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர் | அரசியல் | Thx to Blogeswari

தமிழ் நூல் பரிந்துரை – 2010

சென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

  1. சடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்
  2. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)
  3. நாத வெளியிலே – இசைஞானி இளையராஜா
  4. சித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)
  5. விகடன் தீபாவளி மலர்
  6. நினைவின் தாழ்வாரங்கள்கலாப்ரியா (சந்தியா வெளியீடு)
  7. சென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)
  8. உறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  9. தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)
  10. இரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  11. கிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)
  12. ஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)
  13. திரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)
  14. மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)
  15. ஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  16. கல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)
  17. உரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  18. கிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)
  19. வ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)
  20. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)
  21. தென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)
  22. மதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)
  23. பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப்பிரியன் (நர்மதா)
  24. எங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)
  25. சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்
  26. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்
  27. கேள்விக்குறி – எஸ்.ராமகிருஷ்ணன்
  28. நீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
  29. சிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்
  30. செல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)
  31. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  32. எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
  33. தனிக்குரல் – ஜெயமோகன்
  34. இசையின் தனிமை – ஷாஜி
  35. பூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.
  36. சினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்
  37. கல்கி வளர்த்த தமிழ்
  38. மாயினி – எஸ்.பொ
  39. ஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி
  40. புறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)
  41. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்
  42. என்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)
  43. உப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)
  44. நீர் பிறக்கும் முன் – இந்திரா
  45. ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு

முந்தைய பதிவுகள் சில:
அ)  புத்தக லிஸ்ட்

ஆ)  2008 – Tamil Books

புத்தகப் பதிவுகள்:

தொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:

  1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
  2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  3. புத்தகக் குறி (மீமீ)
  4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
  5. சென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005
  6. வருட இறுதி: புத்தகங்கள் – 2005

தகதிமிதா – ஜெயா டிவி

கலைஞரைக் குறித்து எழுதினால், அம்மாவை அடுத்து சொல்ல வேண்டும்.

‘தகதிமிதா’ நடன நிகழ்ச்சி. சமீபத்தில் பார்க்கத் துவங்கியுள்ளேன் இப்போதைக்குப் பிடித்திருக்கிறது.

முதல் சுற்றில் தமிழ்ப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். இரண்டாவது சுற்றில் கையில் எதையாவது வைத்து அபிநயம் காண்பிக்கிறார்கள். இறுதியாக, தெலுங்கு அல்லது பிறமொழிப் பாடலுக்கு ஆட்டம்.

நடுவே சுதா சந்திரன் கொஞ்சம் ஆடுகிறார். நடுவரும் அரங்கேறி தன் வித்தையை காண்பிக்கிறார்.

இருப்பதற்குள் இரண்டாம் சுற்றுதான் அலுப்பு தட்டுகிறது. ஒரே விதமான பாவனை வாராவாரம் மறு ஒளிபரப்பு ஆகிறது.

ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை நடுவர் சொல்வதில்லை. நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், சூப்பர் சிங்கர், நாளைய இயக்குநர் மாதிரி போங்கடிப்பதில்லை. ஓரளவு உருப்படியாக பெர்ஃபார்ம் செய்பவரே வெல்கிறார். தயாரிப்பாளரின் ஒன்று விட்ட அத்தை பையன், புகழ்பெற்றவருக்கு தெரிந்தவர் எல்லாம் முதல் பரிசைத் தட்டி செல்வதில்லை போலத் தெரிகிறது.

தொடர்வது தொகுப்பு:

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான

  • பானுப்பிரியா,
  • ஷோபனா,
  • சுகன்யா,
  • விமலா,
  • இந்திரஜா,
  • `அண்ணி’ மாளவிகா,
  • மோகினி

ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

சாஸ்திரிய நடனக்கலையை மையமாக‌க் கொ‌ண்டு அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 400-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

“கலையை நம் வாழ்வில் தினம் பிரதிபலிக்கும் நிகழ்வாகப் பார்க்க வேண்டும்”
– பரத கலைஞர் ராதிகா சுரஜித்

திரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின் இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர்.

வெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.

முதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க.

தங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார்.

அந்த மாதிரி அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.

இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி.

Balaji Santhanam Album: 80s Tamil Cinema Snippets

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.