சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:
நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’
முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்
தொடர்புள்ள பேட்டி & சுட்டி:
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி
ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .
ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.
சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .
A Muttulingam « Tamil Archives
A Muttulingam is free! But, why? « Snap Judgment
கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”
சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.
1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.
இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.
‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.
அறிமுக கட்டுரை இல்லை; சுலபமாக இரு மடங்காவது பெரிதாக இருந்திருக்கலாம் என்ற வருத்தத்தை தவிர ரொம்ப நிறைவாக இருந்தது.
//சமநிலைக்குக் கொணர்ந்து வெளி வெயில் நிலையை மறக்கடித்து, புதுச்சூழலுக்கு இட்டுச் செல்லும். முத்துலிங்கம் எழுத்து ஏசி எழுத்து//
உஸ் அப்பா! ஜெமோ, அ.மு மத்தியில உட்கார்ந்திருந்தீங்கன்னா சொன்னீங்க. சரிதான்
//எழுத்தாளரை முழுவதுமாக வாசித்துவிட்டால் அவரைப் புரிந்து கொள்வோம் என்றில்லை//
😦 அப்ப, ஜெமோவைப் புரிந்து கொள்ளவே முடியாது 😉
//“தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன்//
தடாலடியேதான்!!
கிரி, உங்கள் மறுமொழி உற்சாகம் அளிக்கிறது 🙂 நன்றிகள் பல!
neotamizhan
@snapjudge கட்டுரை நல்லா இருக்கு பாலாஜி.good one.//சிலர் அதன் மேற்சென்று காப்பியம் படைப்பார்கள்.//:)) நெசமாவே கொற்றவை ரொம்ப நல்ல நாவலுங்க.2:25 AM Aug 7th from Tweetie in reply to snapjudge
vettipaiyal
@snapjudge – அருமை… மீண்டும் பயணித்தது போல் இருந்தது… @dynobuoy : எனக்கு தெரிஞ்சி இது தான் அவரோட எளிமையான கட்டுரை :)7:05 PM Aug 6th from web
ஒரு பக்கம்
orupakkam@snapjudge நல்லாருக்கு. உஙள் பாணியில் முன்பின்னாக விவரித்து, சரியான anectedotes உடன் முத்தாய்ப்பாக முடித்திருக்கிறீர்கள். )6:29 PM Aug 6th from web in reply to snapjudge
KSRK
@snapjudge ma.mu. ERittingaLE :-)4:39 PM Aug 6th from TwitterFon in reply to snapjudge
.:dYNo:.
dynobuoy@snapjudge >எளிமை வெல்லும்<இப்படி சொன்னவரையே ஏய்க்கறாப்புல இருக்கு கட்டுரை. ஏன் இப்படி சரியாக பிசையாத சப்பாத்தி மாவு மாதிரி இருக்கு கட்டுரை?3:55 PM Aug 6th from twhirl in reply to snapjudge
elavasam
elavasam@snapjudge பொஸ்ரன், சித்திக்கவேயில்லை என்றெல்லாம் எழுதிவிட்டு டொரெண்டோ என எழுதி எஅகுஇ என்றுவிட்டீரே! :)3:30 PM Aug 6th from twhirl in reply to snapjudge
பிங்குபாக்: வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன் « Snap Judgment