2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.
அம்ஷன் குமார் எடுத்த மணக்கால் எஸ் ரங்கராஜனின் ஆவணப்படம் பார்த்தேன்.
புகழுடன் பாடும் காலத்தில் எந்தவித ரெகார்டிங்கும் செய்யக்கூடாது என்பவரின் வாழ்க்கையை பதிவதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. கர்னாடக சங்கீதத்தின் நுட்பங்களை அறியாதவரும் பாடகரின் திறனை அறிந்துகொள்ளும் விதமாக இருந்தது.
இந்துஸ்தானி இசையின் நுட்பங்களை நுழைப்பது ஆகட்டும், ஒரே பாடலை தனது பாணியில் வித்தியாசமாவது இருக்கட்டும்… சாஸ்திரீய சங்கீதத்திற்கு லெக்சர் – டெமான்ஸ்ட்ரேஷன் இல்லாமல் அனுபவிப்பது எனக்கு சாத்தியம் இல்லை.
நல்ல வேளை… இவர் இன்னும் தமிழ் சினிமா இயக்குநர் ஆகவில்லை. அதுவே கோடம்பாக்கத்திற்கு பூஸ்ட். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் கருத்து கந்தசாமி படம்.
வொயிட் பேர்ட்
முரளி
இருபத்தியாறு நடிகர்கள்; மூன்று கேமிராக்கள்; ஒரு கிரேன் – என்றெல்லாம் பணத்தை வீணடிக்காத என்.ஆர்.ஐ தேஸி மக்களின் அத்யந்தமே தனி ரகம். இந்தப் படம் அமெரிக்காவில் வாழும் பேச்சிலரின் கதை. Very promising and raw talent.
முட்டாசுபட்டி
ராம் – ICANS
’நாளைய இயக்குநர்’ ரகம். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ரகம். சிரித்து வயிறு வலிக்கக் கூடிய ரகம். ஸ்க்ரிப்ட்டும் காஸ்டிங்கும் சரியா இருந்தா, எவ்வளவு சிறுத்தாலும், காரம் குறையாதுனு உணர்த்தற ரகம்.
ப்ராஜெக்ட் ஐஷு
அருண்குமார்
காதலை விட்டால் வேற எதுவுமே இன்றைய விஸ்காம் மாணவர்களுக்கு சிக்கவில்லை என்பது கொடூரம். அதனினும் கொடூரம் ஊடல். எஸ்.ஆர்.எம்., லயோலா போன்ற லட்சக்கணக்கான விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களின் யூ ட்யூப் காதலில் இது பர்வாயில் வகை.
பண்னையாரும் பத்மினியும்
அருண் குமார்
கடைசியாக கார் நடித்து நான் பார்த்த படம் – ரஜினியின் ‘படிக்காதவன்’. தண்ணியடித்துவிட்டு தொட்டால் லஷ்மி ஓடமாட்டாள். இங்கே பத்மினி. அமர்க்களம்.
இலக்கணப் பிழை
சரத் ஜோதி
இவர் இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லையா? சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார்! அட்டகாசம்.
அன்பில் அவன்
ரஷிதா & சுரேகா
டம்ளர் விளிம்பில் எறும்பைப் பார்த்திருப்பீர்கள். குவளையின் ஓரங்களில் இருக்கும் பழரசம் அப்போதுதான் எறும்புக்குக் கிடைக்கும். பேலன்ஸ் தவறினால் ஜூஸுக்குள் சமாதி. இந்தப் பக்கம் விழுந்தால், உணவுக்கு முற்றுப்புள்ளி. சிறுவர்களை நடிக்க வைப்பது அப்படிப்பட்ட காரியம். கொஞ்சம் ஜாஸ்தி போனால் பல்லிளிக்கும்; அடக்கி வாசித்தால், போரடிக்கும். இரண்டுக்கும் நடுவே இங்கே…
’நியூ’ ரூம்மேட் 2303
WTH முரளி
அமெரிக்காவில் அறைத்தோழர் கிடைப்பதற்கு அல்லாடுகிற கதை. நல்ல காமெடியாக வந்திருக்க வேண்டியது. இன்னும் நிறைய சிரமங்களை இயல்பாகக் கொண்டு வந்திருக்கலாம். இவங்க இன்னும் நியூ ஜெர்சியிலா இருக்கிறார்கள்?
துரு
கார்த்திக் சுப்பராஜ்
கலைஞர் டிவி ஆரம்பித்ததிலேயே நடந்த மிக உருப்படியான காரியம். ஓவியர் மதன் + இயக்குநர் பிரதாப் போத்தன் & கீர்த்தி இணைந்து ஒருங்கிணைக்கும் ‘நாளைய இயக்குனர்’. சொல்லப்போனால் விழியங்களின் பொற்காலமாக, குறும்படங்கள், சற்றே பெரிய டிவி படங்கள், சினிமாஸ்கோப்பிற்கு சரிப்படாத களம் கொண்ட லோ பட்ஜெட் படங்கள் என்று சன்/விஜய்/ராஜ்/ஜெயா/மக்கள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட சமயத்தில் ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே வருவதுதான் ஆச்சரியம் கலந்த குறைப்பாடு.
போஸ்ட் மேன்
மனோகர்
நல்ல கேமிராமேன்; குறும்படத்திற்கு மீறிய பட்ஜெட்; உருக வைக்கும் காட்சிகள்; நம்பக்கூடிய கதை… எல்லாம் இருந்தும் ஒரு படம் ஓடாமல் டப்பாவிற்குள் முடங்குவதற்கு என்ன காரணம்? இந்தப் படமும் ஃபெயில் ஆவதற்கு அதுதான் காரணம்.
தி சவுண்ட் மெஷின்
Prize-Winner: Propeller TV Best Short Film Competition Shortlisted: Friends of the Earth Short Film Competition
Screened at Hull International Film Festival 2009
மொழியே தேவையில்லாத குறும்படம்
ஸ்னாப்
வெறும் ஐநூறு டாலருக்குள் எடுக்கப்பட்டது. டயலாக் எதுவுமே தேவையில்லாத இன்னொரு காட்சியாக்கம்.
இணைய நண்பர்கள் இணைந்து எடுத்த படம். புக் கிரிக்கெட் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் களமிறங்கி இருக்கிறது.
‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்னும் பாலாஜி மனோகரன்.தமிழோவியம்.காம் எடிட்டர், வலையக நிர்வாகம், அரங்கேற்றங்களுக்கு கேமிரா படப்பிடிப்பு என்றிருந்த கணேஷ் சந்திரா. ஒரு கை விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை கொண்ட திறன்மிக்க இணைய கதாசிரியர்களுள் துள்ளலும் தனித்துவமும் நிறைந்த புனைவுகளைப் பதிவில் இடும் ஒருபக்கம் ஸ்ரீதர். நியூ ஜெர்சி டிராமா குழு மேடையேற்றும் எல்லா நாடகத்திலும் முக்கிய கதாபத்திரமோ, முக்கால் நிமிட வேடமோ… நினைவில் நிற்க வைக்கும் மோகன்.
முதலில் பிடித்தவை
கனவு காண்பவரின் உச்சரிப்பு; இயல்பான முகசேஷ்டை
இம்புட்டு பெரிய கதையை ஒப்பிப்பது போல் இல்லாமல், சுவாரசியமாக்கிய நிமித்தகாரன்
மிரட்சியும் மிளிர்வும் கொண்ட கனவு தேவதை
நேர்த்தியான எடிட்டிங்
அந்தப் பழைய ஓலைச்சுவடி போன்ற புத்தகம்
ஒளிப்படங்களை வைத்து யட்சிணியைக் காட்சியாக்கிய விதம்
குழப்பமில்லாத, எளிதில் புரியக்கூடிய சிம்பிளான படமாக்கம்
சில ஒப்பீடு
ஓவியம் என்டெர்டெயின்மென்ட்ஸ் குழுவினர், கலைஞர் டிவி ‘நாளைய இயக்குநர்‘ பார்க்கலாம்.
‘இன்செப்சன்‘ படம் வெளியாவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை! இம்ப்ரெசிவ்
ராமேஸ்வரம் கோவில் மண்டபம் போன்ற புகழ்பெற்ற புகைப்படத்திற்கு பதிலாக அரிதான படம் போட்டிருக்கலாம்.
கடைசியாக குறை
த்ரில்லருக்கு இசை அதிர வேண்டியதுதான். மோகனின் வசனத்தையும் கேட்க விட்டிருக்கலாம்.
Show but Not Tell என்போம். அதற்கு இன்னும் பெரிய பட்ஜெட் தேவையாக இருக்கலாம். இது விஷுவல் கம்யூனிகேசன் அல்லவா?
விமர்சகர் அவுரங்கசீப்: முயற்சிக்கு வாழ்த்து. நாஞ்சில் சம்பத் சொற்பொழிவுக்கு நிகரான நீளம் கொண்ட வசனங்கள் மட்டும் சற்று பிரச்னையாக உள்ளன. கதையை அப்படியே படமாக்கியதுபோல் உள்ளது. இடையே திரைக்கதை என்று ஒன்று உள்ளதை நினைவில் இருத்தியிருக்கலாம். இயக்குநர் இந்தியா வந்தால் சின்னத்திரைகளில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தோன்றுகிறது.
எழுத்தாளர் என் சொக்கன்: இந்தக் கதையை ஏற்கெனவே படித்தேனா என்பது நினைவில்லை, ஆனால் படமாகப் பார்க்க நன்றாக இருந்தது.
12 நிமிடப் படத்தில் 11 நிமிடங்கள் ஒரே ரூம், வெறும் டயலாக், அதைச் சுவாரஸ்யமாகக் காட்டுவது சுலபமில்லை, அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
கடைசி நிமிட ட்விஸ்ட்மட்டும் கொஞ்சம் குமுதம் ஒரு பக்கச் சிறுகதைபோலப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிற சாத்தியம் உள்ளது 🙂
அதேபோல், அந்தக் கடைசி நிமிடத்தில் பேசும் பெண்ணுக்கு டப்பிங் வேறு யாராவது பேசியிருக்கலாம். உணர்ச்சியே இல்லாத குரல்.
இறுதிப்போட்டி மட்டும் பார்த்தேன். வருங்காலத்தின் முக்கிய இயக்குநராகக் கூடிய ஆறு பேரின் படங்களில் இரண்டுதான் தேறும்.
ஷங்கர், பிரதாப் போத்தனை வழிமொழிந்து மதனும் ‘ஆடு புலி ஆட்டம்‘, ‘நீர்‘ எல்லாம் நன்றாக இருக்கிறது என்றார்கள். Either they have lost their taste buds or their compensation makes them talk like desis behaving at NRI clients.
கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தேங்கார் ஸ்ரீனிவாசன் நாயகனாக வரும் எழுபதுகளை நினைவூட்டியது ‘ஆடு புலி ஆட்டம்‘. இந்த மாதிரி கொடுமை இயக்குநர் நாளை வரப்போகிறார் என்பதே பத்து பியர் அருந்த வைக்கும்.
தெருவெங்கும் கோவிந்தா போட்டு உருள்வது போல் கையில் இலங்கை குண்டுவெடிப்பு அனுதாப உண்டியல் குலுக்கியது ‘நீர்‘. அண்ணனுக்கும் தம்பிக்கும் இருக்கும் சகோதர பாசத்தை பாசமல்ர் பீம்சிங் பாதம் தொட்டு ரீமேக் செய்திருந்தார்.
‘மிட்டாய் வீடு’ தேவலாம். சரியான சிக் ஃப்ளிக். ஜூனியர் பாலச்சந்தர் மாதிரி மனதைத் தொட்டார். விஜய் பட டைரக்டராவது லட்சியமாகக் கொண்டவர் போல… நடுநடுவே சூப்பர் ஸ்டார் படம் வேறு போடுகிறார்.
முதல் வார விமர்சனங்களை சுரேஷ் கண்ணன்ஒரு கை பார்த்துவிட்டார்.
இந்த வாரம் கச்சத்தீவு கண்ணீர் என்றால், சென்ற வாரம் பார்வையற்றோர் வைத்து சென்டிமென்ட்.
எல்லாப் படங்களையும் ஏற்கனவே பார்த்த மாதிரி வேறு இருந்து தொலைக்கிறது. ‘துரு‘ மிக நன்றாக இருந்தது என்றார்கள். பார்க்க வேண்டும்.
நளன் & பாலாஜி தேவலாம். பின்னவர் ‘மொழி’ மாதிரி பிரகாஷ்ராஜ் காவியங்களும் முன்னவர் கிரேசி மோகன் துணையுடனும் உலா வரவும், மற்றவர்கள் எல்லாம் ‘சென்னை சில்க்’சுக்கும் சந்தூர்க்கும் விளம்பரம் இயக்கப் போகவும் அனுப்பிவைத்து எம்மை இரட்சிக்க எல்லாம் வல்ல கலைஞரிடம் விண்ணப்பிக்கிறேன்.
இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.
இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.
குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:
சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.
இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.
சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde