‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ
கருத்துப் படம்:
கொசுறு படம்:
‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ
கருத்துப் படம்:
கொசுறு படம்:
Posted in குடியரசு-பிறர், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது கருத்து, காமிக்ஸ், கார்ட்டூன், சினிமா, ஜார்ஜ், திரைப்படம், படம், புஷ், மெகயின், விமர்சனம், Blogs, Bush, Cartoons, Comics, Depression, Films, GOP, GWB, Mccain, Recession, Republicans, W
அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’
அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’
இன்னொருவள்: ‘அவ டீச்சர்னு சொன்னியே? க்ளாஸ்ல இருந்திருப்பாளா இருக்கும்?!’
அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’
நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.
கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.
‘நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாக வாழவும் தெரியணும் பாலு’
முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.
1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.
1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ப்ரியா.
1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.
ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.
குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.
லன்ச்-ப்ரேக்.
பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.
‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’
அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.
பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’
குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?
பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?
இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.
சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.
7. தமிழ்ச்சினிமா இசை?
என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.
பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.
வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.
என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.
சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?
காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?
நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.
“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”
“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’
இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.
வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:
குறிச்சொல்லிடப்பட்டது Audio, அனுபவம், இளையராஜா, கமல், சினிமா, சுடர், சொந்தக்கதை, தமிழ், தியேட்டர், திரைப்படம், தொடர், நடிப்பு, நிகழ்வுகள், படம், பட்டியல், பதிவர் வட்டம், மீம், ரஜினி, ஹீரோ, Cinema, Experiences, Films, Life, Movies, Music
இளையராஜா இசையில் கடைசியாக மனதை அள்ளிய பாடல் பெற்ற படம் எது? Cheeni Kum சொல்லக்கூடாது. எனக்கு ‘சேது’. …
இதுதான் என்னுடைய கேள்வி. ட்விட்டரில் வெளியான மற்றவர்களின் எண்ணங்கள்:
neotamizhan @bsubra இளங்காத்து வீசுதே…. பிதாமகன்
spinesurgeon @bsubra உன்னைவிட (விருமாண்டி) . அத்ற்கு முன் எங்கே செல்லும் இந்த பாதை (சேது) …
sivaramang @bsubra ‘kaiyetha kombatho’ from vinodayathra –http://tinyurl.com/5ay368, if tamil katrilvarum&kajuraho from ONOK http://tinyurl.com/644jfh
santhoshguru @bsubra Sihi Gaali from a Kannada movie Aah Dinagalu
paval @bsubra நீ பார்த்த பார்வைக்கு.. (ஹே ராம்!)
neotamizhan @bsubra @paval இசையில் தொடங்குதம்மா…. ஹே ராம்
krgopalan @bsubra எளங்காத்து வீசுதே…! (பிதாமகன்)
sudgopal @bsubra “மயில் போல பொண்ணு ஒண்ணு..” பாரதி
anbudan_BALA @bsubra பாட்டு தொண்டையில நிக்குது, மொட்டையும் ஜானகியும் பாடின பாட்டு, படம்:அவதாரம் …
rarunach @anbudan_BALA Thendral vandhu veesum bodhu?
sureshkannan70 @bsubra //இளையராஜா இசையில் // நினைவிலிருப்பது ” உன்ன விட” (விருமாண்டி) சேதுக்கப்புறம் எதுவுமே பிடிக்கலையே? இணையத்துல உதைக்கப் போறாங்க. …
sureshkannan70 பாலாவிற்கு போட்டிக் கேள்வி: ரகுமானின் இசையில் கடைசியாய் நன்றாக அமைந்திருப்பதாக தோன்றின பாடல் எது? எனக்கு ‘மருதாணி” (சக்கரகட்டி) about 15 hours ago
mohandoss @bsubra எனக்கு விருமாண்டி
sugavasi @bsubra “பிதாமகன்”-ல் “எளங்காத்து வீசுதே”….Loved it. The BGM for the movie was also great. …
nandhakumar @bsubra எனக்கு விருமாண்டியும் ஹேராமில் இசையில் தொடங்குதம்மாவும்தான்… …
ilavanji @bsubra விரு விரு மாண்டி விருமாண்டி!!! 🙂
rozavasanth @bsubra கடைசியாய் எரிச்சலை கிளப்பியது மாயாபஜார், அஜந்தா, க.க.பா., உளியின் ஓசை, தனம் அட எல்லாமே! …
bmurali80 @bsubra ஒரு நாள் ஒரு கனவு – ஃபாசில் படம், இளையராஜா இசையில். 3 பாடல்கள் கிளாஸ்… …
icarusprakash @bsubra : kajuraho kanavile – http://tinyurl.com/6eodmz
sudgopal @bsubra “எனக்குப் பிடித்த பாடல்…” ஜூலி கணபதியையும் சேர்த்துக்கோங்க …
parisalkaaran @bsubra இளையராஜா இசையில்… நீங்க கேட்டதுக்கு என் பதில் இளங்காத்து வீசுதே…. (பிதாமகன்) …
penathalar @bsubra இளங்காத்து வீசுதே. வானவில்லே வானவில்லே
rozavasanth @bsubra சரி, கேள்விக்கான பதில், கடைசியாக மனதை அள்ளியது (சொல்லப்போனால் அழ வைத்தது) ̀அழகி’. …
rozavasanth @donion உங்களுக்கு ஜூலி கணபதியின் இசை பிடிக்கவில்லையா? (பிடித்திருந்ததாக எனக்கு நினைவு, இப்போது சரியாக தெரியவில்லை.) …
icarusprakash @donion we tend to ignore these just becoz the films are bad. I zapped when i saw athu oru… few weeks back in tv about 14 hours ago
icarusprakash @donion even i thought so. but u shud spend some time listening to the BGM scores of julie ganapathy and athu oru kana kalam.
rarunach @bsubra My last ilaiyaraja favorite was “Onna vida” from Virumandi. (Used Imdb for ilaiyaraja’s filmography!). Kaasi, how about you?
thendral @bsubra கடைசியா அவரு இசை அமைத்த படம் எது…? ம்ம்ம் 😉
தென்னக பிலிம்பேர் விருதில் ஜெயப்ரதா காட்சியளித்தார். இந்த வருட ஆரம்பத்தில் புருஷன் போனி கபூர் சமேத ஸ்ரீதேவி தனி ஆவர்த்தனமே ஆடியிருந்தார். அது ஹிந்தி ஃப்லிம்ஃபேர்.
ஆபிதின், சாரு நிவேதிதா, நாகூர் ரூமி எல்லோரும் கலைப்பயணத்தை ஒருங்கேத் துவக்கியவர்கள்.
கஜோலும் ஷில்பா ஷெட்டியும் ஒரே படத்தில் ‘பாசிகர்’ ஆனார்கள்.
இந்த மாதிரி ஒன்றாகத் தோன்றி திசை மாறியவர்களை Knolஇல் துட்டாக ஆக்க எண்ணம்.
பிள்ளையார் சுழித்தேன்.
சரிப்படாமல் போக, ‘உன்னைத்தானே தஞ்சமென்று’ ராதிகா, ‘சங்கீத ஸ்வரங்கள்’ பானுப்ரியா, ‘அதிசய ராகம்’ ஸ்ரீவித்யா, ‘கீழ்வானம் சிவக்கும்’ மேனகா, ‘விழிகள் மேடையாம்’ பூர்ணிமா ஜெயராம், ‘கண்ணின் மணியே’ சுகாசினி, ‘சேலை கட்டும்’ அமலா, ‘தென்றல் வந்து’ ஜெயஸ்ரீ என்று மனங்கவர்ந்த நாயகிகளைக் கொண்டு தொடராக மாற்றப் பார்த்தேன். அதிலும் ட்விட்டர் போல் சுருக்கெழுத்து கவனச்சிதறல்.
எழுதாமல் விட்டதை தூக்கிப் போடாமல் இருக்க Obsessive blogging disorder போய் Blogging Attention Disorder BAD ஆக வந்துவிட்டது.
இன்றும் கஜோல் சூப்பர் ஹீரோயின். ஷில்பா ஷெட்டி அனைத்து உலகத் தொலைக்காட்சிகளிலும் பேட்டியளிப்பவர். ரிச்சர்ட் ஜெருக்கு முத்தம் கொடுத்தால் சர்ச்சை வரவழைப்பவர். Celebrity பிக் பிரதரில் வாகை சூடியவர்.
ஷாரூக் இன்னும் ஹீரோவாகவே தேய்கிறார்.
நடனத்தில் எத்தனைவகைப்படும்? ட்விஸ்ட், வால்ட்ஸ், சல்ஸா, பாங்ரா பலவகைப்படும். இராயர் காபி க்ளபில் இலக்கியம் பயிற்றுவித்தால் கல்லூரி டான்ஸ் க்ளபில் கூடப்படிப்பவரின் இடையைப் பிடிப்பதை பயிற்றுவித்தார்கள். ஷாரூக் மாதிரி கண்ணாடி; ஷில்பா ஷெட்டி மாதிரி சகா. இந்தப் பாட்டில் வரும் ட்விஸ்ட் மட்டும் வரவேயில்லை.
மூதாட்டி ஜெயபிரதாவை பார்த்தவுடன் ‘சலங்கை ஒலி’ தோன்ற; அது ‘வறுமையின் நிறம் சிவப்பு’க்கு இட்டுச்செல்ல; அங்கிருந்து நடிப்பு வராத கேஸ் என்று மார்க் போட்ட கஜோல் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ ஆக தங்கிப் போனதில் தாவி; ஷில்பா ஷெட்டிக்கு கணவன் கிடைப்பானா ஆணாதிக்கமாக; ரோஜா நாயுடு கட்சியில் சேர்ந்து தோற்ற காட்சியை கூகிள் புகைப்படத் தேடலில் துழாவி Knolஇல் நின்றது.
ஒரே சமயத்தில் கமலுடன் ஜோடி கட்டியவர்கள். விகல்பமில்லாமல் ஹிந்திக்கு சென்று தொடை தெரிய கச்சை கட்டியவர்கள். சமகாலத்தினர்.
எல்லோராலும் ஜெயலலிதாவாக முடிவதில்லை.
1. காதல் என்பது போதி மரம் (ஈ)
2. காதல் என்பது பொதுவுடைமை (பாலைவன ரோஜாக்கள்)
3. காதல் என்பது கடவுள் அல்லவா! (ஒரு கல்லூரியின் கதை)
4. காதல் என்பது தூங்கும் மிருகம் (என்னவளே)
5. காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ (ஆறிலிருந்து அறுபது வரை)
6. காதல் என்பதா? காமம் என்பதா?! (ஜெமினி)
7. இதுதான் காதல் என்பதா? (புதிய முகம்)
8. காதல் என்பது வன்முறையா (பாலா)
9. காதல் என்பது இரு மணமுடிச்சு (குஷி)
10. காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது (சின்னத்தம்பி பெரியதம்பி)
11. காதல் என்பது உணர்வின் கவசம் (அகரம்)
12. காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் :: நாளை நமதே
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: திருமுருகன்
ஆண்:
கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க
ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க
கண்ணால காதல் கொடுப்பா
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா
முந்தான தந்தியடிப்பா
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா
பெண்:
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க
…???… கூரைய நம்புங்க
கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க
பிறகு கத்திரியில் …???… வெம்பாதீங்க
சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்
ராமனப் போல் நல்லா நடிப்பான்
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்
ஆண்:
கொளத்துல மீனிருந்தா
கொத்தவரும் கொக்கு வரும்
வெக்கயில தண்ணி கொறஞ்சா
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்
பொம்பளையும் கொக்கு
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு
பெண்:
பொட்டிபணம் உள்ளவரைக்கும்
பொம்பளயக் காலப்பிடிப்பான்
ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்
ஆம்பளதான் பொறுக்கி
இத அறியாதவ சிறுக்கி
ஆண்:
சத்தியமும் செஞ்சு கொடுப்பா
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா
சட்டிப்பானை எல்லாம் மறைப்பா
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா
பெண்:
தாலி தந்த பொம்பளையோட
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்
கோழி கூவும் சாமத்துல
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்
கொரங்கு மனசுக்காரன்
அவன் குடிகெடுப்பதில் சூரன்
ஆண்:
கடலெல்லாம் பொங்கி வரட்டும்
காதல் மட்டும் மூழ்காதப்பா
பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்
மொத்தத்தையும் மூழ்கடிப்பா
பெரிய நடிப்புக்காரி
அவ பேச்சில்லாத லாரி
பெண்:
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் …???…
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்
பாடலைக் கேட்க: Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu
ஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்
தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை
கமல் வருங்காலத்தை புட்டு பிட்டு வைக்கிறார் என்கிறார் ச்றீதர் நாராயன்.
நிஜ செய்தி: BBC NEWS | Entertainment | Singer Winehouse has lung disease
தொடர்புள்ள விமர்சன பின்னூட்டம் #1: Sridhar Narayanan said…:
தொண்டையில் வளர்ந்திருக்கும் புற்று நோயை துப்பாக்கி தோட்டா துளைத்து சரி செய்து விட்டதாக கூட ஒரு காட்சி வருகிறது. There is no magic bullet for cancer என்று புற்றுநோய் மருத்துவர்கள் சாடலாம். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையை விரிவாக்கலாம்.
தொடர்புள்ள அறிவியல் ஆராய்ச்சி #2: Sridhar Narayanan said…: ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.
தொடர்புள்ள ஆன்மிக சொற்பொழிவு மறுமொழி #3: Sridhar Narayanan said…: மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை ‘magic bullet’னால் சரி செய்கிறார்.
அவ்தார் சிங்கும் பாடகர்; ஏமி வைன்ஹவுஸும் பாடகர்!
Aவ்தார் சிங் முதலெழுத்தும் ஏ; Aமி வைன்ஹவுசுக்கும் ஏ!!
அங்கும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் மேடையேறும் வித்தகர்; இங்கும் அரங்கேறுகிறார் ஏமி!!!
வாவ்!!!!
எமக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் ‘கமலின் தொலைநோக்கு பார்வைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்கிறார் ஸ்ரீதர் நாராயண்.
Posted in Cinema, Movies, News, Quotes, Reviews
குறிச்சொல்லிடப்பட்டது உல்டா, கமல், சினிமா, தசாவதாரம், வருங்காலம், Cinema, Correlation, Dasavatharam, Exclusive, Films, Kamal, Kamalahassan, Movies, Satire, Science