Tag Archives: Collections

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது

பழசு: That Old Feeling: Isn't It Rahmantic? – TIME: “A.R. Rahman is not just India’s most prominent movie songwriter — in a land of a billion people where movie music truly is popular music — but, by some computations, the best-selling recording artist in history. His scores have sold more albums than Elvis or the Beatles or all the Jacksons: perhaps 150 million, maybe more.”

“Before coming, I was excited and terrified. The last time I felt like that was during my marriage. There’s a dialogue from a Hindi film called “Mere paas ma hai,” which means “I have nothing but I have a mother,” so mother’s here, her blessings are there with me. I am grateful for her to have come all the way. And I want to thank the Academy for being so kind, all the jury members. I want to thank Sam Schwartz, I/D PR, all the crew of Slumdog, Mr. Gulzar, Raqueeb Alam, Blaaze, my musicians in Chennai and Mumbai. And I want to tell something in Tamil, which says, which I normally say after every award which is ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ — “God is great.” Thank you”

“I just want to thank again the whole crew of SLUMDOG MILLIONAIRE, especially Danny Boyle for giving such a great opportunity. And the whole, all the people from Mumbai. The essence of the film which is about optimism and the power of hope in the lives, and all my life I had a choice of hate and love. I chose love and I’m here. God bless”

தொடர்புள்ள பதிவுகள்:

1. Pa. Raghavan | writerpara.com » பா ராகவன் » உலகை வென்ற இசை: அப்போது சொன்ன ‘எல்லா புகழும் இறைவனுக்கே’வைத்தான் இப்போதும் ரஹ்மான் சொன்னார். ஆஸ்கர் மேடையில் அபூர்வமாக ஒலித்த தமிழ்க்குரல். (இது எல்லா முஸ்லிம்களும் சொல்வது. நல்லது எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்பது வழக்கம். அதன் தமிழாக்கமே இது.) ஒன்றல்ல, இரண்டு விருதுகள். மணி ரத்னத்தைப் போலவே ஸ்லம் டாக் மில்லியனரின் இயக்குநர் டேனி பாயில் (Danny Boyle) ரஹ்மான் வாழ்வில் மறக்க முடியாத மனிதராகிப் போனார்.

2. jeyamohan.in » ஜெயமோகன் » ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி: ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்

3. ஷாஜி சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை : முறையாக இசை பயின்றாலும்கூட திலீப் இசைத்துறைக்கு வர விரும்பவில்லை. ஒரு மின்பொறியாளராக வரவேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. ”அப்போது நான் இசைமீது வெறியோடு இருக்கவில்லை. எனக்கு தொழில்நுட்பத்திலேயே ஆர்வமிருந்தது. குழந்தையாக இருந்தபோது எனக்கு சோறுபோடும் தொழிலாக மட்டுமே இசையை நினைத்தேன். அது என் அப்பாவின் அன்றாட வேலை. எனக்கு அதில் தனியான ஆர்வமேதும் இருக்கவில்லை” அவர் சொன்னார்.

திலீபின் இசையார்வம் அவரது தந்தை வாங்கிவைத்திருந்த யூனி வோக்ஸ், க்ளாவியோலின் போன்ற மின்னணு இசை கருவிகளைச் சார்ந்து வளர்ந்தது. அக்காலங்களில் மின்னணு இசைக்கருவிகள் இந்திய இசையில் மிகமிகக் குறைவு. ”என்னால் அந்த கருவிகளில் இருந்து கண்ணை விலக்க முடிந்ததில்லை. தடைசெய்யபப்ட்ட அபூர்வமான விளையாட்டுப்பொருட்களாக அவை எனக்குத் தோன்றின” திலீப் தன் நாளின் பெரும்பகுதியை அக்கருவிகளில் விளையாடுவதில் செலவழித்தார், அதுவே அவரது எதிர்காலத்தை வடிவமைத்தது.

4. Shaji Chennai: A R Rahman: From R K Sekhar to Oscar: It was his jingle composed for advertising Allwyn Trendy wrist watches in 1987 that won Dileep recognition as composer in his own individual capacity. He became a full-time composer of advertisement jingles. He composed music for three hundred advertisements in five years. His jingles became famous. He later commented: “Composing music for jingles created awareness in me about the precision in music. In the few seconds given to us we have to create a mood and convey a message as well. Jingles taught me discipline in music.” The signature tune of Asianet was also composed by him.

5. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்: எஸ். ராமகிருஷ்ணன்: RAMAKRISHNAN ::: “அவர் எதையும் உடனே மறுப்பதில்லை, மாறாக அவர் தான் யோசிப்பதாக சொல்கிறார். அது போலவே தனது இசை மற்றும் தான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றி அதிகம் விவாதிப்பதுமில்லை.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே தமிழில் சொல்லிய நிமிசம் என்னை அறியாமல் கண்கள் ததும்ப துவங்கியது. அது ரஹ்மான் வாங்கிய விருது மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக இந்திய சினிமா கண்டு கொண்டிருந்த கனவை ரஹ்மான் நிறைவேற்றி காட்டியுள்ளார் என்ற உச்ச சந்தோஷத்தின் வெளிப்பாடு. ”

6. LOSHAN – லோஷன்: எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..:

பீ.சுசீலா(கண்ணுக்கு மையழகு)
டி.கே.கலா(குளிச்சா குத்தாலம்)
கல்யாணி மேனன்(முத்து படப்பாடல்)
சீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)
டி.எல்.மகராஜன்(நீ கட்டும் சேலை)
M.S.விஸ்வநாதன் (மழைத்துளி மழைத்துளி)

7. ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ ஆர் ரஹ்மான் :: கோவி லெனின் – நக்கீரன்: ரங்கீலா உள்ளிட்ட நேரடி இந்திப்படங்களுக்கு அவர் இசையமைத்த விதமும், வந்தேமாதரத்திற்கு புதிய இசைவடிவம் கொடுத்து அதனை இந்தியாவின் இரண்டாவது தேசியகீதமாக்கிய திறமையும் அவரது புகழை உயர்த்தின. ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.

8. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: 81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது “ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை” என்று வருத்தப்பட்டார். “ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது ‘Gandhi My Father’ திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை”

9. கணேசன் செந்தில்குமரன் : கணேஷின் பக்கங்கள்!: ஏ.ஆர்.ரகுமான்-ப‌ரவசம்: “எதில் லைவ்வாக போடுகிறார்கள் என்று தேடிய போது StarMovies ல் ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் ஏதாவது சினிமா விழாக்களில், இங்க்லீஷில் பேசுவதை ஸ்டைலாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஸ்ரேயாக்களுக்கும், த்ரிஷாக்களுக்கும் கொடுத்த மூக்குடைப்பு.

10. ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர். :: படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: ரகுமான் இந்திய தேசியத்தினது ஒதுக்கல்களை விமர்சித்தோ அல்லது பாரம்பரிய இந்திய இசைக்கூறுகளை முன்னிறுத்தியோ தனது இசைப்பயணத்தை தொடர்ந்திருந்தால் இந்நிலையை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவ்வாறே மாயா அருள்பிரகாசம் தீவிரவாத எதிர் நிலைப்பாட்டை எடுத்தவாறு புலிகளை விமர்சித்திருந்தால் அவருக்கு இந்நேரம் ஒச்கார் கிடைத்திருக்கக் கூடும். ஆளும் வர்க்கங்கள் சில அளவீடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் திருப்தி செய்பவர்களுக்கு மாத்திரமே வளர்ச்சி, புகழ், விருது எல்லாம் சுலபமானவை. மாயாவிற்கான வாய்ப்பு அவரது அரசியல் நிலப்பாடால் தகர்ந்து போயிருக்கலாம் என்பதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ரகுமானது அரசியல் நிலைப்பாடற்ற நிலையைக் கண்டு சந்தோசப்படுவதா என்பது அவரவர் நிலைப்பாடு.

இந்தியர்கள் பெரிய அளவில் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாக முற்றுமுழுதாக மாறிப்போன இந்தியர்களே.

11. குசும்பு: ஆஸ்கார் A.R. ரஹ்மான் விருதும் என் வருத்தமும்!!!: A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி—–> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி

12. குமரன் குடில்: ஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்சியின் குரலும் 🙂: எஸ்.ஜே.சூர்யா

ரொம்ப மகிழ்ச்சி. நான் ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

என்னை யாரும் மறந்திடாதிங்க. நானும் டைரக்டர் தான்… டைரக்டர் தான்… ஆமா, சொல்லிட்டேன்.

ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்

mana-pirigai-novel-fiction-tamil-literature-jayanthi-shankar1. மனப்பிரிகை (நாவல்)

அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள்.

அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்னதான் நடந்தது?

நிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.

பக்கம்- 275 :: சந்தியா பதிப்பகம்


thirai-kadalodi-jeyanthy-sankar-books2. திரைகடலோடி (சிறுகதைகள்)

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து: ‘இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள்.

கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.’

பக்கம் – 130 :: மதி நிலையம் வெளியீடு


meen-kulam-chinese-shorts-children-jayanthy-sankar3. மீன் குளம்

(சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)

அரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம், டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33 சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம் நிறைந்த கதைகள்.

பக்கம் – 160 :: மதி நிலையம் வெளியீடு

Tamil Websites in Unicode – A List

அவ்வப்போது புதிய விஷயங்கள், கட்டுரைகள், ஆக்கங்களுடன் ஒருங்குறியில் வெளியாகும் வலையகங்களின் தொகுப்பு:

இணைய இதழ்:
வ.ந.கிரிதரன் – பதிவுகள்
வார்த்தை, எனி இந்தியன் – Thinnai
Tamiloviam / தமிழோவியம்
யாஹு குழுமம் – மரத்தடி.காம் (maraththadi.com)
நிலாச்சாரல்
முத்துக்கமலம்
மகளிர் பக்கம் – ஊடறு : பெண்குரல்
எழில்நிலா

இலக்கியம்:
அப்பால் தமிழ்
வார்ப்பு : கவிதை வாராந்தரி – Tamil Poetry Weekly

செய்தி:
சிஃபி – தமிழ்
யாஹு – Welcome to Yahoo! Tamil
தமிழ் – MSN India – Tamil Latest Tamil News, Business, Movies, Music, Cricket and more..
Thatstamil.com – தட்ஸ்தமிழ்.காம்
For the latest on Tamil cinema, general news, views and in-depth analysis in Tamil.- AOL Tamil
வெப் உலகம்.காம் :: வெப்துனியா
சென்னை ஆன்லைன் :: ஆறாம்திணை
adhikaalai.com

அச்சு இதழ்
கீற்று
தமிழக வாராந்தரி: விகடன்
இஸ்லாம், முஸ்லீம்: Welcome to Samarasam.com – Your Fortnightly Tamil Islamic Magazine from IFTchennai.org
தமிழக மாதாந்தரி: காலச்சுவடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – Tamil Nadu Thawheedh Jamaath
அமெரிக்க மாதாந்தரி: தென்றல்
வல்லினம் – காலாண்டிதழ்
மாதமிருமுறை: தென் செய்தி :: பழ நெடுமாறன்
உண்மை – கி வீரமணி
கனடா, ஈழம், இலங்கை: வைகறை

வரலாறு, ஆன்மிகம்:
DREAM LAND – You Have Reached The Right Place To Know About Islam & Tamil Muslims
Welcome to South Indian Social History Research Institute
Varalaaru – Monthly Magazine for Tamil History
Tamil Bible (Holy Bible in Tamil & English) – பரிசுத்த வேதாகமம்
இஸ்லாமிய இணையத்தளம்

வணிகம்:
சென்னை நூலகம்
கணியத்தமிழ்

ஆளுமை:
சுந்தர ராமசாமி
Pa. Raghavan : Home Page : பாரா-பேப்பர்
எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சாரு நிவேதிதா
லேனா தமிழ்வாணன் :: மணிமேகலை பிரசுரம்

நாடு
அமீரகம்: செந்தமிழ் – தமிழ் அறிவியல் இதழ்
மலேசியா இன்று

அரசியல்:
வைகோ :: மதிமுக

நாளிதழ்:
தினமலர்
விடுதலை

இலங்கை, ஈழம்:
வீரகேசரி
தினக்குரல்
ஒரு பேப்பர்
சங்கதி
http://www.pathivu.com/
புதினம்
http://www.tamilwin.com/
http://www.sooriyan.com/
http://www.alaikal.com/news/
நெருடல்
முழக்கம்
தமிழீழம்

தகவல்:
Kalanjiam – Tamil Encylopedia

தொண்டு:
உதவி – உங்கள் உதவியுடன்….

சினிமா, திரைப்படம்:
Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film
விடுப்பு

கணினி:
w3 Tamil
தமிழ்99: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்

புத்தகம்:
காந்தளகம்: தமிழ்நூல்.காம்
எனி இந்தியன்: AnyIndian – An Internet Book Shop for Indian Books
வித்லோகா, நியு ஹொரைசான் மீடியா, கிழக்கு பதிப்பகம், காமதேனு: Kamadenu.com
நியூ புக்லான்டஸ், சென்னை: ::New Book Lands:: (சோதனை ஓட்டத்தில்)

இன்ன பிற:
இணையத்தில் தேனீ :: லியோமோகன்
தமிழ் அமுதம்

கடைசியாக் டிஸ்கியில் ஒன்று:
பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை: தமிழம்.நெட்