த்ரிஷாவையும் நயன் தாரா போன்றோரை அழைப்பதை கிண்டல் செய்தது அந்தக் காலம். துரை முருகனாரையும் நக்கீரன் கோபாலையும் அழைப்பதை எண்ணிக் கூனிக் குறுகுவது இக்காலம்.
நடிகைகளைக் கொண்டாடுவதில் நேர்மை இருக்கிறது. பதவியில் இருக்கும் தலைவரை வரவழைப்பதில் டிரம்ப் தனம் இருக்கிறது.
இது டிரம்ப்பிஸ்தான். உண்டியலும் அதிகாரமும் அமெரிக்கா. இலாவணமும் அரசியலும் தமிழர் தேசி?
இன்றைய தேதியில் மாற்று சந்திப்புகள், மாபெரும் ஒருங்கிணைப்புகள், இந்திய கருத்தரங்குகள் நிறைய நடக்கின்றன. வருடந்தோறும் நடக்கும் தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஒரு புறம். அடுத்த ஆண்டு நடக்கப் போகும் ஜெயமோகனின் அமெரிக்க இலக்கிய விழா மாநாடு இன்னொரு புறம். செவ்வியல் நடனம், கர்னாடக சங்கீதம் என பாரம்பரியக் கலைகளுக்கென்றே க்ளீவ்லாண்டில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை.
இந்தியாவில் த.க.இ.பெ அழைக்கும் பேச்சாளர்கள் கூட தமிழர் சந்திப்புக்குப் பொருத்தமானவர்கள்.
அமெரிக்க இந்தியர்/தமிழர் என்று இன்னொரு பட்டியல் போட்டால்… செந்தில் ராமமூர்த்தி கால் பென் பூர்ணா ஜெகன்னாதன் மிண்டி காலிங் கார்த்திக் முரளீதரன் அனுக் அருட்பிரகாசம் வி.வி. கணேசநாதன் எழுத்தாளர் எஸ் சங்கர்
எத்தனை பொருளியல் வல்லுநர்கள்! எம்புட்டு அசல் பேராசியர்கள்!! ரகரகமான சிந்தனையார்கள்!!! புனைவு எழுத்தாளர்கள்… கருத்தாளர்களை விட்டு கிரீடதாரிகளைக் கொண்டு வருவது ஆப்பிள் ஃபோன் இருக்கும் போது ஓப்போ நாடுவது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.
தமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.
அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;
ஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது
இ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது
பெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகைப்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.
மேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது!’ என்பார்.
இத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார்! எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.
பெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.
பத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.
துர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.
இராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.
வீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.
என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.
இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.
இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.
வருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.
‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.
ஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.
அதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.
குறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.
இவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.
நான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.
பெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா?” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.
நாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க! உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு!” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.
புகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்!
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
Laichana Laichana Ithay
Lavangam Lavangam Kaadichana
Inichana Inichana
Vaai Madalil Kadala Thanichanaa
Køzhukana Møzhukana
Nalla Payuthu Payuthu Thalukanaa
Èlachaana Køzhachaana
Rømba Šethuki Šethuki Ozhachana
Nee Šengiskana Ini Un Kiss Thana
Naan Mangøøse Thanaa
Un Kayil Kachakasthana
Irukaana Idupirukaana Illaiyana Illiyana
Un Èdaithaanaa Inba Kadaithanaa
Mel Èdaithandi Kudaithanaa
Ada Ikani Mukani Mugadu
Naan Thutha Naga Thagudu
Un Uthatukul Èthana Uthadu
Onnu Kudu Kudu
Adi Anjana Manjana Mayilu
Nee Kanjan Janga Railu
Un Iduppae Aaram Viralu
Nee Killu Killu
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
====================
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
Dance by youth members from North Carolina, Wisconsin, Connecticut, Virginia, and Maryland performing to parts of various Tamil kuthu songs such as “Sonna Puriyathu,” “Kalasala,” “Kadhal Vandhale,” “Irukaanaa,” “Pidikale,” “Mannarkudi,” and ending with beat segment from “Dia Dole” song. Performed at FeTNA Silver Jubilee Convention at Baltimore, MD.
kallaasala kalasala.. kalaasala kalasala
vadake ketu paaru enna pathi solluvaan
jardha beeda pole en perathaan melluvaan
Vidya Vandana Singing – Nee Ninaindhaal at FETNA 2012
வித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா!
ஆடல் கலையே தேவன் தந்தது
’அது… இது… எது!’ சிவகார்த்திகேயன்
நீயா… நானா! அரட்டை அரங்கம்
பரதநாட்டியம்
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.
வீணை இசை
Dance Program – Nannarae Nannarae
இளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது! இடி இடிக்குது!! வேட்டைக்காரன்!!!
தமிழிசை
FETNA 2012 Charlotte Silambam
மேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae
Thanthana Thana Thanthana…
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
———————————————————————————————————
ஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..
பொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
ஏ சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஏ வேட்டி கட்ட பிடிக்கல
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல
எனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
பிபிசி செய்தி: பினாங் மாநிலத்தில் இந்திய இனத்தவருக்கு சாதகமான முடிவு
மலேசியா வாழ் இந்திய இனத்தவர்களை விட மலாய் இனத்தவர்களுக்கு, பெருஞ்சலுகைகள் வழங்கும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை தாங்கள் இனி மேலும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று மலேசியாவின் பினாங் மாநிலம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் பிரதமர் அப்துல்லாஹ் படாவிக்கும், அவரது ஆளும் கூட்டணிக்கும், பலத்த இழப்புகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள 4 மாநிலங்களில், பினாங்கும் ஒன்று.
வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும், மலாய் இனத்தவருக்கு சாதகமான கொள்கைகளை மலேசியா கடந்த 40 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது. மலேசியா இனப்பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதாக மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் கண்டித்திருக்கிறார்கள்.
மலேசிய அரசு சிறுபான்மைகளுக்கான உரிமை சட்டத்தை அமல் படுத்துகிறதா? தமிழர்களைவிட அதிகமாக உள்ள சீனர்கள் நிலை என்ன? மலேசிய அரசு தன்னனை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு உள்ளதா?
1. இந்தியர்களின் குரலை நசுக்கியவர் சாமிவேலு – மகாதீர் – – மறுமொழியில்: “சாமிவேலு இந்தளவிற்கு வளர்வதற்கும் நம் சமூகத்தை நாசம் செய்வதற்கும் துணை நின்றவர்களில் மகாதிரும் ஒருவர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்! ஏன், 90களில் சீன அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்த போது கூட இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை இரண்டாகவோ மூன்றாகவோ அதிகரிக்கவில்லை?”
2. ஜடாயு ஐயா கக்கும் விசவாயு – மறுமொழியில்: “மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.”
இஸா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டோரை உடனே விடுவிக்க ஆவன செய்யுங்கள்.
இஸா சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுடன் போராடுங்கள்.
மாநில ஆட்சி மன்றத்தில் அனைத்து இனங்களுக்கும் சமவாய்ப்பைக் கொடுங்கள்.
மக்களின் குறைகளை செவி கொடுத்துக் கேளுங்கள். தீர்வு காணுங்கள்.
1957-க்குப் பின்னர் பிறந்த அனைவரும் பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறச்செய்யுங்கள்.
நாட்டு வளம் அனவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இனப்பாகுபாட்டை ஒழியுங்கள். இன ஏளனம் செய்வதை தடுக்க ஆவன செய்யுங்கள்.
விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள், முடிந்தால் விலை குறைப்பை அமல்படுத்துங்கள்.
நாட்டு வளம் விரயமாக்கப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.
மாநில அரசின் கடுப்பாட்டில் உள்ள “டோல்” நிலையங்களை மூடுங்கள்.
4. டிபிசிடி: மலேசியத்தமிழர்களின் மக்கள் சக்தி உணர்ச்சியும், மலேசியத் தேர்தலும்: “மலேசியாவில் கடந்த 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில், பரிசான நேசுனல் என்ற (Barisan Nasional – BN, the National Front) தேதிய முன்னணிக் கூட்டணியே ஆண்டு வந்திருக்கிறது. கிளாந்தான் என்னும் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும், இந்தக் கூட்டணியே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
…
அன்வர் இப்ராகிம் தலைமையில் கெடிலான் (Parti Keadilan Rakyat – PKR, People’s Justice Party) என்ற கட்சி இம்முறை பரிசான் நேசனலின் ஆதிக்கத்தை அசைக்கும் நோக்கோடு, மற்றைய எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருமுனை களமாக மாற்ற முயன்று வருகின்றனர்.”
5. டிபிசிடி: மலேசியத் தமிழர்கள் தடுத்து நிறுத்திய ஒரு தேசிய முன்னனியின் ரோல்லர் கோஸ்ட்டர்: “இந்தத் தேர்தலில், பெரும்பான்மை பெறாவிட்டால், மலேசியாவின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பங்கம் வருமென்று பிராச்சாரம் செய்து வந்தது தேசிய முன்னணி. அரசாங்க இயந்திரம் தேர்தல் வேலைகளுக்கு முடுக்கி விடப்பட்டியிருந்தது. தொகுதிகள் வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.
…
“ஓம் சக்தி” என்ற ம.இ.க வின் தேர்தல் மந்திரத்திற்கு எதிர்ப்பாக “மக்கள் சக்தி” என்று முழங்கிய தமிழர்கள், தங்களது எதிர்ப்பை சனநாயக முறைப்படி காட்டியிருக்கிறார்கள்.”
6. மலேசிய நிலவரம் ஒரு கருப்பு பார்வை: “ஏப்ரலுக்கு மேல் கெ-அடிலான் கட்சியின் ஆலோசகரும் முன்னைய துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவசரம் அவசரமாக இந்த தேர்தலை நடத்துகிறது மலேசிய அரசு.
…
கல்வி, வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்(பூமி புத்ரா) என்ற பெயரில் மலாய்க் காரர்களுக்குத்தான் முன்னுரிமை. காவல், ராணுவம், அரசாங்க நிறுவனங்கள், குடிநுழைவுத்துறை, மின்சாரம், வங்கி என அத்தனை அரசு வேலைகளும் மலாய்க்காரர்களுக்குத்தான். சீனர்கள் அரசையோ அரசு வேலையையோ நம்புவது இல்லை. கையில் வைத்திருக்கும் காசினைக் கொண்டு சொந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் வேலையைத்தான் நம்பி இருக்கின்றனர்.
…
பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக எதிர்க்கட்சித் தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (National Justice Party – PKR), பார்டி இஸ்லாம் மலேசியா (Parti Islam se-Malaysia, or PAS), பார்ட்டி கெ-அடிலான் ரக்யத், Chinese Democratic Action Party (DAP) ஆகிய கட்சிகள் உள்ளன.
ஆளும் கூட்டணிக்கு ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (United Malays National Organization), மலேசிய சீன சங்கம் (Chinese Gerakan party), மலேசிய இந்திய காங்கிரஸ் (Malaysian Indian Congress) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
…
இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், வழக்கறிஞர் மனோகரன், வசந்தகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோர் வெளியே வர முடியாத படிக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
…
மலேசிய தொலைக்காட்சி நடிகை சுஜாதா கொலைக்கு, மஇக தலைவர் சாமிவேலுவின் மகன் வேல்பாரியே காரணம் என்று பலரும் நம்புகின்றனர். தவிர மைக்கா ஹோல்டிங்சில் பணம் போட்ட இந்தியர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் வாயில் வெண்ணெயை தடவி விட்டார் சாமிவேலு.
என்ன நடந்தது? முன்னாடி ஒரேயொரு மாநிலத்தில் மட்டும் ஆளுங்கட்சியாக இருந்த எதிரணியினர், ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாக ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாக்கி எட்டு மாநிலங்களிலும் ஐம்பதாண்டுகளாக ஆண்ட ‘தேசிய முன்னணி’யே மீண்டும் தொடர்கிறது. சென்ற சட்டசபையில் வெறும் பதினெட்டு இடங்களைப் பிடித்திருந்த எதிரணி, பாஜக-வும் விபி சிங்கின் ஜனதா தளமும் கை கோர்த்தது போல் போட்டியிட்டதில் 82 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். ‘ஜன் மோர்ச்சா’ போட்டியிட்டது போல் மத வாத இந்துத்வா சக்திகளுடன் நேரடியாக சங்காத்தம் வைத்துக் கொள்ளவில்லை; ஆனால், மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க விழையும் Parti Islam se-Malaysia, or PAS கட்சியுடன் திரைமறை தொகுதி உடன்பாடு உண்டு.
ஆளுங்கட்சிக்கு தோல்வியா? அப்படித் தோன்றவில்லை. மீசையில் துளியூண்டு மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை. ஆளுங்கட்சிக்குத்தான் பெரும்பான்மையும் கிடைத்திருக்கிறது. இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க விரும்பும் எதிர்க்கட்சிக்கும், ஹின்ட்க்ராஃப்க்கும் ஏழாம் பொருத்தம்; அப்படியிருந்தும் தேர்தலுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, கழுத்தறுக்காமல் இருந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியைப் பார்த்தால் சீட்டுக்கட்டு மாளிகை போல் படுகிறது.
தேர்தலில் போட்டியிட இயலாமல் செய்யப்பட்ட அன்வர் உத்தமரா? பெயரளவில் சுத்தம் என பொருள்படும் பெர்சி (Bersih) கூட்டமைப்பை உருவாக்கினாலும், ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார். மஹாதிருக்கு சரியான விகிதாச்சாரம் கொடுக்காத பிரச்சினையா அல்லது நிஜமாகவே தவறு செய்தவரா என்பது தெரியவில்லை. எப்படியாகினும், தன்னுடைய மகள், மனைவி, ஒன்று விட்ட மச்சினன், ரென்டு விட்ட மைத்துனி என்று பினாமியாக நிற்க வைத்து ஜெயிக்க வைக்கவும் தெரிந்த ஐ.எஸ்.ஓ.9000 அரசியல்வாதி.
ஏன் திடீர் தேர்தல்? பெட்ரோல் விலை எகிறுவதால், பால் முதல் பாதாம் பருப்பு வரை எல்லாவற்றிலும் விலையேற்றம். தேர்தலுக்கு முந்தாநாள் வரை மானியம் கொடுத்து, எண்ணெய் பீப்பாயை தள்ளுபடியில் வழங்கிய அரசாங்கத்தால், இனியும் தாக்குப்பிடிக்க இயலாத நிலை.
அடுத்த, நிதி நிலை பொக்கீட்டில் (பட்ஜெட்) ஆயில் கொள்முதலுக்கான விலைவாசி அதிகரித்ததால் ‘ஏற்றப்படுகிறது’ என்று அறிவிப்பதற்கு முன் எலெக்சன் முடிந்து விட்டது.
அரசு ஊழியர்களுக்கு கொடுத்த போனசும் (முப்பத்தைந்து சதவீதமாம்!) அவர்கள் மனதில் இன்னும் பசுமையாக நிறைந்திருக்கும்போதே தேர்தல் நடந்தேறி இருக்கிறது.
அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கம் நிறைந்து பணப்புழக்கம் குறைந்து recession ஆக ஓடிக்கொன்டிருக்கிறது. இதனால், மலேசிய நாட்டின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விலைவு இனிமேல்தான் தெரிய ஆரம்பிக்கும்; அதற்கு முன் ‘மலேசியா ஒளிர்கிறது’ என்று போர்டு போட்டு தேர்தல்.
சீனர்களுக்குக் கூட இனப்பாகுபாடாமே? மலையாளிகளைப் போல் சாமர்த்தியசாலிகள் எவரும் இல்லை என்பது என்னுடைய பெங்களூர் எண்ணம். அமெரிக்கா வந்தபிறகு தராசுக்கு (பாரிசன் நேசனலுக்கு இதுதான் தேர்தல் சின்னம்) அந்தப் பக்கம் வைக்க சீனர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆளுங்கட்சியின் ஸ்திரத்தன்மையும் மதவாதத்தை பெருமளவில் ஊக்குவிக்காத நிலையும் மேற்கத்திய கொள்கைகளை பின்பற்றி தாராளவாதத்தை முன்னிறுத்துவதும், செல்வந்தர்களான (read capitalists) சீனர்களின் நெஞ்சை நிறைத்தே இருக்கிறது. மலாய் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை குறைத்தால் நல்லதுதான்; அதற்காக பெரும்பான்மை மக்களுடன் விரோதம் பாராட்டக் கூடாது என்று நாணல் போல் வளைகிறார்கள்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde