1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா?
எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் போனதான் மிச்சம்! நல்ல மற்றும் புதிய அனுபவம்!
நிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது! என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது!
2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா? புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா? அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது?
எனக்கு ஆசைதான்! ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது! அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை! அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.
கேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்? ஏன்?
கேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை? அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா?
கேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா?
3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை? எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்?
அவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு!
4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா? எவ்வாறு சமாளித்தீர்கள்?
அரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது!
5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா? இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா? இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா? அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா?
2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம்! அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு!
ஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை! மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்!
மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா
//என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது!//
என்னதான் நிறமும் இனமும் எங்களுக்கு பொருட்டில்லை என்று வாய் கிழிந்தாலும், ஒபாமாவை ஒப்ப இந்த மாதிரி நபர்களுக்கு முடியவில்லை. அமெரிக்காவின் நிஜ முகம் ஒரு வெள்ளையரது இல்லை என இவர்களுக்கு நிரூபிப்பதற்காகவே ஒபாமா வரவேண்டும். என் சக ஊழியர்கள் அவர்களின் பெற்றோர்களின் ஒபாமா குறித்த கருத்துக்களை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
*ஒபாமா படத்தை பார்த்ததினால்தான் கதவு சாத்தப்பட்டது என்பது என்ன நிச்சயம்..? *
கொஞ்சம் கூட சிந்தனை பண்ணாமல் கற்பிதம் செய்து கொள்வது ரொம்ப சுலபம். இது மாதிரி, இந்த கையில் ஆறு அந்த கையில்
ஆறு என பல கற்பிதங்கள் பண்ணிக் கொள்ளலாம். நானாய் இருந்தால், அந்த வீட்டிலிருந்த நபருக்கு முக்கியமாக வேலை இருந்திருக்கலாம், அடிக்கடி அழைப்பு மணி கேட்டு எரிச்சல் அதிகமாய் இருந்திருக்கலாம் என்பன போன்று கற்பிதம் செய்து கொள்வேன். அல்லது 1க்கு போற அவசரமாய் கூட இருக்கலாம், 2க்கு போக முடியாததும் இருக்கலாம். வாக்கு வேண்டுகிற தன்னார்வலர்கள் முன்னமே பேசி சொல்லிவிட்டா
சென்றார்கள்..?
மற்றும் என்னை பொறுத்தவரை, ” என் வீடு என்பது எனது சாம்ராஜ்யம்-கண்டவனும் அதாவது முன்பின் தெரியாதவர்கள் வந்து நிற்கும் போது, நின்று நிதானமாக பேசணும் “என்று அந்த முன்பின் தெரியாத – நாசூக்கு, இங்கிதம் பவுண்ட் என்ன விலை என கேட்பவர்கள்” எதிர்பார்க்க கூடாது..
(ஜெஹொவா (உ)விட்னஸ் மற்றும் LDS மதப்பிராசரர்களுக்கு பல தடவைகள் கதவைக் கூட திறப்பதில்லை நாங்கள்)
நிற்க.
பாலாஜி, நான் நேற்றே வாக்களித்துவிட்டேன். பிறகு எழுதுவேன்.