சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி


Capital Eye – Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash):

விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம்.

எவருக்கும் பெரும்பான்மை இல்லாத, இந்த நேரத்தில் பெரிய பிரதிநிதிகள் (‘பெ.பி.’) எனப்படும் சூப்பர்டெலகேட்ஸை இருவரும் மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். ;பொன் மகள் வந்தாள்’ மழையாக இதுவரை கொட்டப்பட்ட நிதி – $904,200

பராக் ஒபாமாவின் பங்கு – $698,200
ஹில்லரி க்ளின்டனின் பங்கு- $205,500

மொத்த பெரிய பிரதிநிதிகள் – 800 (கிட்டத்தட்ட)
முடிவு வெளிப்படுத்தாதவர்கள் – 400 (கிட்டத்தட்ட)

ஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 82
இவர்களில் ஒபாமாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 35 (43 சதவீதம்)
ஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 52 (தேர்தல் நிதி பெற முடியாது)

ஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 109
இவர்களில் ஹில்லரியிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 13 (12 சதவீதம்)
ஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 128 (தேர்தல் நிதி பெற முடியாது)

இன்னும் முடிவை அறிவிக்காத 52 ‘பெ.பி.’களுக்கு ஒபாமாவின் அன்பளிப்பு – $363,900
இன்னும் முடிவை அறிவிக்காத 15 ‘பெ.பி.’களுக்கு ஹில்லரியின் அன்பளிப்பு – $88,000

இருவரிடமிருந்தும் பணத்தைப் பெற்றவர்களின் எண்ணிக்கை – 8
இவர்களில் ஹில்லரியை ஆதரிப்பதாக அறிவித்தவர்கள் – 7

மாஸசூஸட்ஸ் செனேட்டர் டெட் கென்னடி மட்டும் ஒபாமாவிற்கு ஆதரவளிக்கிறார்.
இவருக்கு ஹில்லரி கொடுத்த தேர்தல் நிதி – $10,000
ஒபாமா வழங்கிய தேர்தல் நிதி – $4,200

கடைசியாக, ஹில்லாரியின் 2006 செனேட் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒபாமா வழங்கிய நிதி – $4,200

ஆதாரம்:

1. விரிவான கணக்குப் பட்டியல்: Capital Eye: Superdelegates

2. எந்த பெரிய பிரதிநிதி, எவரை ஆதரிக்கிறார்? 2008 Democratic Convention Watch: Superdelegate Endorsement List

2 responses to “சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி

  1. /// இன்னும் முடிவை அறிவிக்காத 52 ‘பெ.பி.’களுக்கு ஒபாமாவின் அன்பளிப்பு – $363,900
    இன்னும் முடிவை அறிவிக்காத 15 ‘பெ.பி.’களுக்கு ஒபாமாவின் அன்பளிப்பு – $88,000///

    அட அட.. சீக்கிரமே ஜோதியில் கலந்து விட்டாரா???

  2. ஊப்ஸ்… காபி / பேஸ்ட் தவறு.. திருத்தி விட்டேன்

    நன்றிகள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.