Daily Archives: மே 17, 2007

Observability: Addlepations

-/பெயரிலி.

 • கிள்ளிவிட்டு, கிள்ளுப்பட்டவனுக்கு நோ முண்ணாணூடாகத் தெறிக்கமுன்னாலேயே, கிள்ளியன் “ஐயோ ஐயோ” என்று கத்தினால், வந்து உதைப்பதுதான் கருத்துச்சுதந்திரமோ? அடித்தவனை விட்டுவிட்டு, அடிபட்டவனுக்கு அறிவுரை செய்வதே வலையிலே வழக்கமாகிவிட்டது சாமி.
 • பாதுகாப்பாக nightwatchman ஆட்டம் ஆடுவது கருத்துச்சுதந்திரமல்ல; கருத்துச்சுதந்திரமாகக் காட்டிக்கொள்வது.
 • வங்கி நிலுவை, வீட்டுத்தட்டுமுட்டுச்சாமான் விபரம், கடைசியாக உள்ளாடை தோய்த்த தினம் பற்றிய எல்லா விபரங்களும் திரட்டி திரட்டி எதிர்க்கட்சித்தலைவரிடம் கொடுக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது.
 • இப்படியான செய்திகள் கருத்தளவிலே ஒருவரிலே தாக்கமேற்படுத்தும் நோக்குடன் வருவனவல்ல, அடிமனத்திலே தானாகவே மனிதரின் இயல்பான பய & பாதுகாப்பின்னை போன்ற உணர்வுகளைத் தாக்கிக் கருத்தினைப் பதியவைக்கும் நோக்கிலே வருவன.
 • பெரும்பாலான பதிவர்களுக்கு நல்ல ஜெர்ரி ஸ்பிரிங்கர் ஷோ இருந்தால் போதும். இரசித்துக்கொண்டே, பெண்ணியம், பேச்சுச்சுதந்திரம், தலித்தியம், திராவிடம், பார்ப்பனியம், தேசியம், தமிழியம் கூழ் குடித்துக்கொண்டு களி/ழித்துக்கொண்டிருப்பார்கள்.
 • எல்லாம் கடைசியிலே அரசியல்வாதிகளைத் திட்டுவதுபோல, கருத்துச்சுதந்திரம், பெண்ணியம், நாட்ஸியம், பாசிசம், கொட்ஸிலாஸியம், கொம்பேறிமூக்கனிஸம் என்பதாக ஒடுங்கி நொருங்கிப்போகின்றது.
 •  அவர்களிலே பெரும்பாலோனோருக்குக் கருத்து முக்கியமில்லை; தன் கருத்தினை எத்தனை பேர் கேட்கின்றார்கள் என்பதுதான் முக்கியம். தமிழ்மணம் போனால், தேன்கூடு, தேன்கூடு போனால், தமிழ்வெளி, தமிழ்வெளிக்கு மாற்று… இப்படியாகவே எத்தனை திரட்டிகளிலே பெயர்களைக் கொடுத்து எத்தனை பேர் உள்ளே வருகின்றார்கள் என்பதே முக்கியமாகின்றது.
 •  தீ என்றாலே சுடுகின்றது என்கிறீர்கள்; அடுத்த நிமிஷமே தீயே சுட்டால், சுகித்திரு என்று வேதாள வேதாந்தம் அடுத்தவனுக்கு இலவச சப்ளை வேறேயா?
 •  பெரிய மனுசனாவதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியமே வலையிலே எல்லோரோடும் விழுந்து விழுந்து பேசுவதோ அல்லது ஒருத்தரோடுமே பேசாமலே இருப்பதோதான்.
 • அடிக்குறவுங்களுக்கு அடிவாங்குகிறவனை முன்ன பின்ன தெரியுமா இல்லே சொல்லிக்குடுத்ததை வெச்சுத்தான் ஆளைப்பத்தின அபிப்பிராயமா என்று யோசிச்சு பாருங்களேம்பா? சரி அடிக்கத்தான் ஆயத்தமென்றாலும், அடிக்க முன்னாடி ரெண்டு பக்க நியாயத்தை கேட்டுட்டு அடிக்குறதுதான் நியாயமா, இல்லை அக்கா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு ஒருத்தனைப் பிடித்து சாத்துவது நியாயமா?
 •  நாங்கள்ன்னா நான் மட்டுந்தேன்

‘Sivaji – The Boss’ Punch Dialogues

சிவாஜி பன்ச் டயலாக் என்று கிசுகிசுப்பவை

1. நல்லவன்னு சொல்ற அளவுக்கு நான் ரொம்ப கெட்டவனும் இல்ல..
ரொம்பக் கெட்டவன்னு சொல்றதுக்கு நான் ரொம்ப நல்லவனும் இல்ல!

2. தோக்கோஜி… நான்தான் சிவாஜி

3. நான் பார்க்கதான் சாஃப்ட்வேர்
எறங்குனா மவனே ஹார்ட்வேர்

4. நான் நெனச்சா அது நடந்த மாதிரி
நான் நடந்தா அது ஜெயிச்ச மாதிரி!

5. நான் 1 செண்டிமீட்டர் தூரத்துக்கு நல்லவன்!
ஏன்னா… 20 கிலோமீட்டர் நீளத்துல கெட்டவன்!!

6. உனக்கு ஆண்டவன் வெக்கறாண்டா டேட்டு;
அன்னிக்கு சிவாஜி வெக்கறான் பார் வேட்டு!

7. நான் நல்லவனுக்கு சாமி!
நயவஞ்சகனுக்கு சுனாமி!

8. விட்டுக்கொடுத்தவன் என்னைக்கும் கெட்டதில்ல…
கெட்டவன் என்னிக்கும் விட்டுக்கொடுத்ததில்லை

9. சொல்லி அடிக்கிறவன் வீரன்
சொல்லாம அடிக்கிறவன் கோழை
நான் சொல்லவும் மாட்டேன்; அடிக்கவும் மாட்டேன்!
ஆனா… கொன்னுடுவேன்.

10. நல்லவனுக்கு நான் தருமன்;
கெட்டவனுக்கு நான் எமதர்மண்டா!