Daily Archives: மே 7, 2007

New Environment – Adapt your Head

new_yorker_hairstyles Cartoon

Salma – Sila Kavithaigal

சல்மா தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தொடங்கிய தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களில் ஒருவர். காலச்சுவடு வெளியீடாக ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதை நூலும் உயிர்மை வெளியீடாக ‘பச்சை தேவதை’ என்ற கவிதை நூலும் உட்பட மூன்று கவிதைத் தொகுப்புகளும் சமீபத்தில் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்று ஒரு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சல்மா சிறுகதைகளும் எழுதுகிறார்.

ஏராளமான எதிர்ப்புகளுக்கிடையே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் கவுன்சிலராக இருந்தவர். பொது நூலகங்களுக்குச் சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் நூல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

பயண நேரம் – சல்மா

பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்

சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட

மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்

பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு

முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க

ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.

பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்

சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்

Continue reading

Tamil Poet Salma Interview – Thozhiyar/Chandravathana

தோழியர்எழுதியவர்: சந்திரவதனா (ஜேர்மனி)

இப்பதிவு எழுதப்பட்ட தேதி: Wednesday, June 9th, 2004 நேரம்: 8:23 am
பிரிவு: நேர்காணல்.

கவிஞர் சல்மா – நேர்காணல்


ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார்.

சில கதைகளும் எழுதியுள்ள இவர் இப்போது ஒரு நாவல் எழுதியுள்ளார். “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற அந்த நாவல் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வர உள்ளது. உதவி ஆசிரியர் பெ. அய்யனார் துவரங்குறிச்சியில் சல்மாவின் வீட்டில் அவரை சந்தித்து உரையாடினார். கவிதை, வாழ்க்கை, அவரது இலங்கைப் பயணம் என்று பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கியமான பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. “பல ஆண்டுகளுக்கு முன்பு நகுலனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்து “புதிய பார்வை” இதழுக்காக நேர்கண்டபோது எனக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை சல்மாவுடன் உரையாடியபோது உணர்ந்தேன்.” என்கிறார் அய்யனார்.
“எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்.”
“பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்”
“ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்
பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது”

நேர்காணல் – கவிஞர் சல்மா

சந்திப்பு – பெ.அய்யனார்

இஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?

Continue reading