Daily Archives: மே 11, 2007

வட்டார வாரிசுகளுக்கு பதவிகள் கூடாது – அன்பழகன்

செய்தி: சிந்தாநதி (வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்)
உணர்வு: சென்ஷி
உல்டாக்கம்: அடியேன்

சென்னை வாரிசு, மதுரை வாரிசு, கோவை வாரிசு, நெல்லை வாரிசு என வாரிசை வட்டார அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டார ஆதிக்கத்தைக் கொண்டு பதவிகளை நியமிக்கவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், பாசத்தை வெளியிட அமைச்சர் பதவி போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழ்நாட்டில் பதவிகள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக கொடுக்கப்படும் பதவிகளில் வட்டார ஆதிக்கம் அதிகம் தலை தூக்குகின்றன.

இப்படி கொடுப்பதால் வாரிசு பலவாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் வாரிசு சிறந்த வாரிசு என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதே நல்ல வாரிசு என்ற நிலையும் ஏற்படலாம்.

சென்னை வாரிசு, மதுரை வாரிசு, கோவை வாரிசு, நெல்லை வாரிசு என தமிழ்நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் உறவுகளைக் கொண்டு பதவி அமைக்கக் கூடாது. அதுபோன்ற வட்டார உறவுகள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழ்நாட்டில், குழப்பமில்லாமல் அரியணைக்கட்டிலில் ஏற்ற வேண்டும்.

வாரிசு இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.

வாரிசு படங்களிலேயே சுவாரசியமான படம் எது என்றால் அது ‘அக்னி நட்சத்திரம்’தான். அந்தப் படத்தை வாரிசுத் தாத்தா கருணாநிதி ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களை செயலாக்கினார்.

அதை நிகழ்வுக்கு கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார்! நேரு, ஜார்ஜ் புஷ்ஷைக் காட்டிலும் மக்களை இந்த நிகழ்வு மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த பதவி அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.