Category Archives: Observations

Prejudiced generalizations: Gangs, drugs, violence & suicides

(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா

தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe – 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி? ஏது நீதி?’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.

நண்பரின் மடலில் இருந்து…

நான் வந்த பாதை எனக்கு நினைவிருக்காது, தடயங்களைப் பலநேரம் அழித்து விடுவேன். நான் தொடர்ந்து முன்னேறுவதாகவும், பின்னே விடப்பட்டவை அவ்வளவு போதாதவை என்பதும் ஒரு conceit.

ஆனால் பல நேரம் நான் முன்னே எழுதியவை இப்போது கருதுபவற்றை விட மேலானதாகக் கண்டிருக்கிறேன்.

இருந்த போதும் வாழ்க்கைச் சாரம் என்றெடுத்தால் நிச்சயமாக இப்போது எனக்கிருக்கும் அறிவு / புரிதல் முன்னெப்போதையும் விட மேலான தளத்தில் இருக்கிறது என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

இந்தப் புரிதல் எவ்வளவு உருப்படியானது என்பதில்தான் ஐயம். மேஜையில் ஒரு வண்டி புத்தகங்கள். அவற்றில் பலர் சிறந்த எழுத்தாளர்கள். இவர்களோடுதான் ஒப்பீடு என்பதால் தினம் தாழ்வு மனப்பான்மை வராமல் இருப்பதே பெரும் பாடாக இருக்கிறது.

Parents worry a lot – Agrarian Society, Educational Qualifications, Entrepreneurial Dreams

புதிய பெற்றோர்கள் (நதியின் கரையில்) ::  பாவண்ணன்
புதிய பார்வை – ஏப்ரல் 16-30, 2007

கனவுகளை யாரும் ஊட்டிவிட முடியாது. அவை தானாகவே ஊறிவரவேண்டும் என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். கனவை வரித்துக் கொள்கிறவர்களுக்கு அதை அடையத் தேவையான திட்டங்களும் உழைப்பும் தாமாவே வடிவமுறுகின்றன.

பழைய பெற்றோர்களையும் புதிய பெற்றோர்களையும் ஒப்பிட்டு என் மனம் தானகவே ஓர் உரையாடலில் இறங்கியது.

விவசாயச் சமூகத்தை சேர்ந்த பழைய பெற்றோர்களின் வாழ்வில் கல்வி குறுக்கிட்டு சற்றே தடுமாற்றத்தில் ஆழ்த்தியதைப் போல, கல்விச் சமூகத்தைச் சேர்ந்த புதிய பெற்றோர்களின் வாழ்வில் கனவுகள் குறுக்கிட்டு தடுமாற வைப்பதாகத் தோன்றியது.

Quotable quotes – Observations on Tamil Nadu Politics (Author unknown)

ஒன்று கவனித்தீர்களா? தமிழ் நாட்டில் இவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு விழா அல்லது ஏதாவது ஒரு பெருத்த கலவரத்தை எப்பொழுதும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். மக்கள் எதைப் பற்றி பேசுவார்கள்?

பொன் விழா, பிறந்த நாள் விழா, சங்கமம் விழா, தினகரன் எரிப்பு, தயாநிதி, கனிமொழி எம் பி ஆனது…

ஆக மொத்தத்தில் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையான பிரச்சினைகளும் ஆட்சியின் திறமையின்மையும் தந்திரமாகப் பின்னால் தள்ளப் பட்டு விடுகிறது. இது போன்ற விழாக்களையும் மக்களைத் திசை திருப்பும் நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஒரு ஸ்டிராடஜியாகவே செய்கிறார்கள். இப்பொழுது தி மு க முழு மூச்சாக டி வி நடத்தப் போகிறார்களாம், இவர்கள் என்றைக்கு அரசாங்கம் நடத்தப் போகிறார்கள் ?

அடுத்து மதுரை தேர்தல் அப்புறம் இன்னொரு விழா இப்படியாகவே தமிழ் நாட்டில் பொழுது கழிகிறது.

Thamizmanam Introductions – Observations for Life: Tamil bloggers perceptions

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « நட்சத்திரம் – காசி

வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கும், விரும்பிய துறை அறிவுக்கும் தேவைப்படுவதைத் தவிர பெரிதாக வாசித்ததில்லை.
மொழி ஒரு மனிதருக்குக் கருவி மட்டுமில்லை, அது ஒரு சமுதாய அடையாளம் என்ற நம்பிக்கை. எந்த ஒரு மொழியும் இன்னொருமொழியை விட சிறந்ததில்லை என்பதும், அதே சமயம் தாய்மொழியை உதாசீனப்படுத்தும் சமுதாயம் தலைநிமிர்ந்து வளருவது கடினம் என்பதும் கூட நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளே தமிழில் இணைய எழுத்துக்கள், கணினி நுட்பங்கள் வளரவேண்டும் என்று ஆசைப்படவும், அதற்கு ஆன பங்களிப்பைச் செய்யவும் தூண்டுகோலாய் இருக்கின்றன.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « “வற்றாயிருப்பு” சுந்தர்

தொழில் : உண்மையைச் சொன்னால் நிறைய பொய் சொல்லி வாடிக்கையாளர்களிடம் ‘சேவை’யை விற்று வருவாயீட்டும் பொட்டி தட்டும் தொழில்! ‘விற்பனை’ என்ற பெயரில் பில் கேட்ஸின் பவர் பாயிண்ட்டை வைத்துக்கொண்டு படம் போட்டு நான் செய்யும் அநியாயங்களுக்கு எனக்கு விமோசனமே கிடைகாது என்று தெரிந்தாலும், I love my job!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « Chameleon – பச்சோந்தி

நான் ஒரு திரிலோக சஞ்சாரி.
நான் சஞ்சரிக்கும் மூவுலகங்கள்.

1.பாதாள உலகம்
தொழிலாளி, அதிகாரி, முதலாளி.

2. பூவுலகம்
கைநாட்டு, பட்டதாரி, முனைவர்.

3. தேவ உலகம்
குழந்தைகள், பெரியோர், முதியோர்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « ROSAVASANTH

உலகத்தின் எந்த பகுதியிலும் காணவியலாத வகையில், போலித்தனத்தை வாழ்வின் அத்தனை தளங்களிலும் பேணுவதாக (இன்னமும்) நினைக்கும் சென்னைக்கு, அதன் போலித்தனத்தை எதிர் கொள்வதிலிருந்து எல்லா வகையிலும் தப்ப விரும்பிய மனநிலையை, காலத்தின் போக்கில் தாக்குபிடிக்கும் அளவிற்கு கரைத்துக் கொண்டு, மிக விரும்பி மிகுந்த மனத் தெளிவுடன் இங்கே வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளேன்.

ரோஸாவசந்த் என்ற பெயரை மிக எதேச்சையாக திண்ணை விவாதகளத்தில் எழுத (குறிப்பாக சின்னக் கருப்பன் அவர்களுக்கு ஒரு எதிர்வினை வைக்க) தீர்மானித்த தருணத்தில் தேர்ந்தெடுத்தேன். ஒரு எதிர்வினையாக மட்டுமே, இணையம் அளிக்கும் வசதி மற்றும் சுதந்திரத்தினால் எழுதத் தொடங்கினேன். எழுதியதில் பெரும் விழுக்காடு எதிர் வினைகளாகவும், போலமிக்ஸாகவும் இருப்பதை ஒப்புகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. சுயநினைவுடன், அதற்கான தேவை கருதி அதன் எல்லைகளை கணக்கில் கொண்டே, வாய்திருக்கும் வசதிகொண்டு, முடிந்தவரை அதை செய்வதாக நினைக்கிறேன்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « பொடிச்சி

வலைப்பதிவுகளின் வருகை தணிக்கையற்ற (சுயதணிக்கைகளைத் தவிர) விவாதங்களிற்கு வழிவிட்டிருக்கிறது. பெரும்பான்மைக் குரல்களுக்குள் சக்திவாய்ந்த மாற்றூடகம் என்ற வகையில் தடைகளற்று எழுதுவது பிடித்திருக்கிறது (சிலவேளை அலுப்படித்தாலும்). எல்லாவற்றிலும் விட, நான் வாழ நேர்கிற இந்த உலகில் எதிர்கொள்கிற அத்தனை முரண்பாடுகள் குறித்தும் — பல சமயங்களில் எழுதுவது தவிர வேறு வழியில்லாததால் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « அசுரன்

இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும், புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து ஆரம்பித்தது.

சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும் ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « இலவசக்கொத்தனார்

ஆதங்கம் : இன்று வலைப்பதிவுகள் மூலம் எவ்வளவோ சாதிக்க இருக்க, மீண்டும் மீண்டும் இங்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் தனிமனிதத் தாக்குதல்களும்தான். எவ்வளவுதான் ஒதுங்கிப் போனாலும் மீண்டும் மீண்டும் இதே நடப்பதால் சில சமயங்களில் நாமும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிவிடும் வீக்னெஸ்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « கைப்புள்ள

எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். கண்காட்சியில் வண்ண விளக்குகளையும் விதவிதமான விளையாட்டு பொம்மைகளையும் கண்டு அதிசயித்து வாய் பிளந்து நிற்கும் ஒரு சிறுவனைப் போன்றே அமைந்துள்ளது இது வரையிலான என் பயணம். அப்பயணத்தில் நான் மிகவும் ரசித்து வாய் பிளந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு கருவியாகவே என் வலைப்பூவைக் காணுகிறேன்.

Observability: Addlepations

-/பெயரிலி.

 • கிள்ளிவிட்டு, கிள்ளுப்பட்டவனுக்கு நோ முண்ணாணூடாகத் தெறிக்கமுன்னாலேயே, கிள்ளியன் “ஐயோ ஐயோ” என்று கத்தினால், வந்து உதைப்பதுதான் கருத்துச்சுதந்திரமோ? அடித்தவனை விட்டுவிட்டு, அடிபட்டவனுக்கு அறிவுரை செய்வதே வலையிலே வழக்கமாகிவிட்டது சாமி.
 • பாதுகாப்பாக nightwatchman ஆட்டம் ஆடுவது கருத்துச்சுதந்திரமல்ல; கருத்துச்சுதந்திரமாகக் காட்டிக்கொள்வது.
 • வங்கி நிலுவை, வீட்டுத்தட்டுமுட்டுச்சாமான் விபரம், கடைசியாக உள்ளாடை தோய்த்த தினம் பற்றிய எல்லா விபரங்களும் திரட்டி திரட்டி எதிர்க்கட்சித்தலைவரிடம் கொடுக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது.
 • இப்படியான செய்திகள் கருத்தளவிலே ஒருவரிலே தாக்கமேற்படுத்தும் நோக்குடன் வருவனவல்ல, அடிமனத்திலே தானாகவே மனிதரின் இயல்பான பய & பாதுகாப்பின்னை போன்ற உணர்வுகளைத் தாக்கிக் கருத்தினைப் பதியவைக்கும் நோக்கிலே வருவன.
 • பெரும்பாலான பதிவர்களுக்கு நல்ல ஜெர்ரி ஸ்பிரிங்கர் ஷோ இருந்தால் போதும். இரசித்துக்கொண்டே, பெண்ணியம், பேச்சுச்சுதந்திரம், தலித்தியம், திராவிடம், பார்ப்பனியம், தேசியம், தமிழியம் கூழ் குடித்துக்கொண்டு களி/ழித்துக்கொண்டிருப்பார்கள்.
 • எல்லாம் கடைசியிலே அரசியல்வாதிகளைத் திட்டுவதுபோல, கருத்துச்சுதந்திரம், பெண்ணியம், நாட்ஸியம், பாசிசம், கொட்ஸிலாஸியம், கொம்பேறிமூக்கனிஸம் என்பதாக ஒடுங்கி நொருங்கிப்போகின்றது.
 •  அவர்களிலே பெரும்பாலோனோருக்குக் கருத்து முக்கியமில்லை; தன் கருத்தினை எத்தனை பேர் கேட்கின்றார்கள் என்பதுதான் முக்கியம். தமிழ்மணம் போனால், தேன்கூடு, தேன்கூடு போனால், தமிழ்வெளி, தமிழ்வெளிக்கு மாற்று… இப்படியாகவே எத்தனை திரட்டிகளிலே பெயர்களைக் கொடுத்து எத்தனை பேர் உள்ளே வருகின்றார்கள் என்பதே முக்கியமாகின்றது.
 •  தீ என்றாலே சுடுகின்றது என்கிறீர்கள்; அடுத்த நிமிஷமே தீயே சுட்டால், சுகித்திரு என்று வேதாள வேதாந்தம் அடுத்தவனுக்கு இலவச சப்ளை வேறேயா?
 •  பெரிய மனுசனாவதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியமே வலையிலே எல்லோரோடும் விழுந்து விழுந்து பேசுவதோ அல்லது ஒருத்தரோடுமே பேசாமலே இருப்பதோதான்.
 • அடிக்குறவுங்களுக்கு அடிவாங்குகிறவனை முன்ன பின்ன தெரியுமா இல்லே சொல்லிக்குடுத்ததை வெச்சுத்தான் ஆளைப்பத்தின அபிப்பிராயமா என்று யோசிச்சு பாருங்களேம்பா? சரி அடிக்கத்தான் ஆயத்தமென்றாலும், அடிக்க முன்னாடி ரெண்டு பக்க நியாயத்தை கேட்டுட்டு அடிக்குறதுதான் நியாயமா, இல்லை அக்கா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு ஒருத்தனைப் பிடித்து சாத்துவது நியாயமா?
 •  நாங்கள்ன்னா நான் மட்டுந்தேன்

Reservations, Creamy Layer – Thoughts, Observations, Personal Experiences, Analysis

பாலாஜியின் பதிவில் இருந்து:

முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கிட்டு வரது இந்த க்ரீமி லேயர் கூட்டம் தான். அது பார்த்தனா OC சீட் இருந்தா OCல எடுக்கும் இல்லைனா BCல எடுக்கும். இப்ப அதை தூக்கி OCல மட்டும் தான் நீ எடுக்கனும்னு சொல்லிட்டா ரெண்டு பேருக்கும் செம சண்டையா இருக்கும் இல்ல.

இப்ப

 1. 295 எடுத்த ஒரு BC பையன் இருக்கான்.
 2. அவனுக்கு அடுத்து 294.98 எடுத்த FC பையன் நிக்கறான்.

இப்ப அண்ணா யுனிவர்சிட்டில BCல ஒரு சீட் இருக்கு PSGல ஒரு சீட் இருக்குனு வை. இந்த் Creamy layer பிரிக்கலைனா அந்த BC பையன்

 • அண்ணா யுனிவர்சிட்டில BC கோட்டால எடுக்கனும்னா எடுக்கலாம்.
 • இல்லைனா OCல எடுக்கலாம்.

ஆனா Creamy layer பிரிச்சிட்டானு வை அவன் கண்டிப்பா OCல தான் எடுப்பான்.

G.Ragavan:

 • இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்..அது செயல்படுத்தப்படும் முறையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது.
 • கிரீமி லேயர் என்பது கண்டிப்பாக அவசியம். அதைச் செயல்படுத்த வேண்டும்.

வெட்டிப்பயல்:

//சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்… கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?//

இந்த லாஜிக் தப்பு…

அந்த லேயர கண்டுபிடிக்கறதால FCக்கு ஆப்பு தானே தவிர அவர்களுக்கும் எதுவும் பெருசா நல்லதாக போறதில்லை.

Anonymous:

 • தொழிற்கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்ற ஒரு விஷயத்தை மட்டும் முன்வைத்து இந்த க்ரீமி லேயர் வாதம் வைக்கப்படுகிறது என்று அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் –
 • இட ஒதுக்கீட்டை சுத்தமாகத் துடைத்து எறிவதற்காக ஊடகங்களாலும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் குழுக்களாலும் வைக்கப்படும் திட்டத்தின் முதல் படி மட்டுமே இது.
 • வி.ஏ.ஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பியூன்கள், வங்கி மேனேஜர்கள், கிளர்க்குகள், பள்ளிக்கூட வாத்தியார்கள், எம்.எல்.ஏக்கள் (ரிசர்வ் தொகுதிகள்), பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று இட ஒதுக்கீட்டால் பயனடைபவர்களை, இஞ்சினியர் டாக்டர்களைத் தாண்டியும் பாருங்கள் – சமமான பிரதிநிதித்துவம் தற்போது இருக்கிறதென்றால் இட ஒதுக்கீட்டால் வந்ததுதான்.

பொன்ஸ்~~Poorna:
எப்படி க்ரீமிலேயரை நடைமுறைப்படுத்தி லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரன் ஆக்காமல் தடுக்க முடியும்?

செய்தி :

‘பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.

Affirmative Action & India’s Reservations:

இனம், மொழி போன்றவற்றுடன் கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:

 1. பள்ளியில் கிடைத்த கிரேட்ஜி.பி.ஏ.
 2. SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்
 3. பெற்றோர் கல்லூரியில் படித்தவர்களா?
 4. விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்
 5. எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்?
 6. எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…?)
 7. தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு
 8. பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்?
 9. கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்
 10. கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்
 11. ரெஃபரன்ஸ் – (பரிந்துரை – சிபாரிசுக் கடிதம்) எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார்? அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார்? அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா?
 12. எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்?
 13. எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார்? அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்?

இவை அனைத்தும் முக்கியம். இட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.

ஆதிக்க வெறி, ஐஐடி மற்றும் ஆங்கில அனானி – ஜெகத்

அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. மக்கட்தொகையில் 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருந்த சமூகம் கல்லூரிகளில் 71 விழுக்காடு இடங்களைப் பெற்றிருந்தது. அன்றும் சில மேதாவிகள் இதற்கு “திறமையை” காரணமாகச் சொல்லியிருப்பார்கள். சில சாதிகள் இயல்பிலேயே அறிவாளிகள் என்றும் வேறு சில சாதிகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் நம்பப்பட்டக் காலம் அது.

சரி, மீதி 29% இடங்கள் யாருக்குப் போயிருக்கக் கூடும்? அந்தக் காலத்தில் இந்தியக் கல்லூரிகளில் படித்தவர்களிடையே ஆங்கிலேயர்களின் வாரிசுகளும், ஆங்கிலோ இந்தியர்களும் உண்டு. அக்கால தமிழ் சமூகத்தைப் பற்றிய நம் அறிவை வைத்து நோக்குகையில் எஞ்சியுள்ள இடங்களில் பெரும்பாலானவற்றை இதர ‘உயர்’ சாதியினர் (முதலியார், வெள்ளாளர், நாயுடு..) கைப்பற்றியிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். மக்கட்தொகையில் 85% இருக்கும் மற்ற பின்தங்கிய சாதியினர் (நாடார், தேவர், வன்னியர், மீனவர், தலித்துக்கள்..) முற்றிலும் “திறந்த போட்டி” நிலவிய அக்காலத்தில் கல்லூரிகளில் 10% இடங்களைக் கூட பெற்றிருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது.

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம் –

இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், ‘டி’ கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா?

– ஏன் வேண்டும் இடஒதுக்கீடு – கட்டுரைகளின் தொகுப்பு

27%, பந்த் பற்றி – ஞாநி

2. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப்பதவிகள் (அமைச்சர், ஐ.ஏ.எஸ் முதல் அர்ச்சகர் வரை), வணிகம், தொழில் முதலியவற்றில் பங்கு ஒவ்வொருசாதிக்கும் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட வேண்டும்.

4. ஒவ்வொரு சாதியிலும் (ஓப்பன் கோட்டா உட்பட) கிரீமிலேயர் எனப்படும் வசதியானவர்களின் பங்கு இப்போது கல்வியிலும் வேலைகளிலும் எவ்வளவு என்று கணக்கிடப்பட வேண்டும். சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்குள் அந்தந்தச் சாதியில் வசதி யற்றோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.

5. அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில், தனியார் துறையிலேயே வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சாதிகளின் பங்கு எல்லாத் துறைகளிலும் கணக் கிடப்பட வேண்டும்.

6. பொது ஒதுக்கீட்டுக்கான சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் என்ற ஐந்து பிரிவுக்குள் எல்லாச் சாதிகளும் வந்துவிடும் என்பதால், சாதி பெயரிட்ட கம்யூனிட்டி சான்றிதழ்களை ரத்து செய்து, அவற்றுக்குப் பதிலாக மேற்படி ஐந்து பிரிவுகளை மட்டுமே சான்றிதழில் குறிப்பிடும் முறையைக் கொண்டுவரவேண்டும். தொலைநோக்கில் சாதியை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை களில் இதுவும் ஒன்று. கலப்பு மணம் செய்து குடும்பத்துக்குள் சாதியை ஒழிப்போரை ஆறாவது பிரிவாக ஆக்கலாம். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம்.

 • Thinnai – முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள் :: சின்னக்கருப்பன்

Caste Admissions Quota reservation wiki TN colleges education Performance

Reservation in India

Admission Data from http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm

Community Population (in Tamil Nadu only) Population % (in Tamil Nadu only) Reserved Seats(%) (in Tamil Nadu only) Seats secured in OC (in Tamil Nadu only) % in OC (in Tamil Nadu only) +/- Over Population in OC (in Tamil Nadu only) % in Total (in Tamil Nadu only) +/- Over Population in Total (in Tamil Nadu only)
BC 2,87,93,980 46.14% 425(30%) 321 74.65% (+)28.51 52.72% (+)6.58
MBC/DC 1,30,24,065 20.86% 285(20%) 57 13.25% (-)7.61 24.16% (+)3.30
SC 1,18,57,504 19.00% 260(18%) 14 3.25% (-)15.75 19.36% (+)1.36
ST 6,51,321 1.04% 15(1%) 0 0% (-)1.04 1.06% (+)0.02%
Forward Castes 80,78,809 12.95% 0(0%) 38 8.83% (-)4.12% 2.68% (-)10.27%
Total 6,24,05,679 100.00% 100% 430 100% 100% 100% 100%

Medical admissions reserved seats caste quota