Tag Archives: அறிமுகம்

Vaishnavist Thiruppathy Tour Guide: 108 Divya Desam Book by Ponnammal

Thanks: Kalki Book Reviews

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal

ஆடிஸி: Odyssey: ஓர் அறிமுகம்

ஆடிசியை ஏன் கிளாசிக் என்கிறோம்? சிறிய அறிமுகம் + பார்வை + விமர்சனம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற மாதிரி ஆடிசி அமைந்திருக்கிறது. ’சிவாஜி’யில் ரோபோ ரஜினி செய்கிற சாகசம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஓடிசி பிடிக்கும்.

இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. சொந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவனை, விநோதமான மிருகங்களும் வித்தியாசமான (மாற்றுத் திறனாளி?) மனிதர்களும் தடுத்து, படுத்துகிறார்கள்.

புருஷனாக சண்டைக்குப் போயாகி விட்டது. கணவனாகத் திரும்ப விரும்புகிறான். மகனுக்கு தந்தையாக வாழ, இல்லம் சேரப் போகிறான்.

வலைப்பதிவில் கூட நினைவலைகள் புகழ் பெற்றது. ஆட்டோகிராப் படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் போல் பழையதை அசை போடுவதன் சுகத்தை ஆடிசி சொல்கிறது.

மகாபாரதம் போல் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். தூக்கம் வராத இரவுகளில் குழந்தைகளுக்கு வாசிக்கலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல் நடுநடுவில் இருந்து வாசிக்கலாம்.

’ஆடிசி’ சொல் ஆங்கிலத்தில் அன்றாட வாழ்வில் பயன்படும் வார்த்தை.

“ஆமெரிக்காவிற்கு எப்படி வந்தீங்க?”

“அது ஒரு ஆடிஸி!”

“வலைப்பதிவில் தமிழ் உண்டா?”

“இப்படிக் கேட்டுட்டீங்களே… தமிழ்ப்பதிவுகள் மிகப் பெரிய ஆடிசி மேற்கொண்டுள்ளது.”

இங்கே இராமாயணமு மகாபாரதமும். கிரேக்கத்தில் ஹோமருக்கு இலியாட் & ஆடிஸி. இரு கதைகளும் பின்னிப் பிணைந்தவை. டுரோஜன் போரை இலியாட் சொல்கிறது. சண்டை முடிந்தவுடன் ஓடிஸி தொடங்குகிறது.

இலங்கைக்கு செல்லும் அனுமான் போல் வழியெங்கும் பிரச்சினைகள்:

  • கடுமையான புயல் காற்று
  • சிதறிக் கிடக்கும் பாறைகள் கை கோர்த்து படகை அழிக்க நினைப்பது
  • சுழிப் போட்டு பாதையை சுழல வைக்கும் கடல்
  • மனிதர்களைப் பன்றியாக மாற்றும் அழகி
  • பாடலில் மயங்க வைக்கும் பாடகி
  • தாமரையை உண்ணும் (பாரதீய ஜனதா?) போதைப் பிரியர்கள்

ஹீரோ இப்படி இடாகா (சொந்த) ஊர் வர கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, இடாகா-வில் மனைவியையும் அவனுடைய நிலத்தையும் அபகரிக்க அண்டை வீட்டார் விழைகிறார்கள். “உன் கணவன் செத்துப் போய்ட்டான். என்னக் கட்டிக்க” என்னும் மிராசுதாரர்களிடமிருந்து, தன் அம்மாவை, மகன் காப்பாற்றி வருவது இன்னொரு இழை.

மனைவி பெனலொப்பி இருபதாண்டுகளாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கிறாள். போருக்கு பத்தாண்டுகள். ஊர் திரும்ப இன்னொரு பத்தாண்டுகள். ஓடீஸஸ் உயிரோடு இருக்கின்றானா என்பது கூட அறியாத பயம் கலந்த சோகம் கொண்டவள் பெனொலப்பீ.

இருபதாண்டுகள் கழித்து வரும் ஆடவனை, எப்படி தன்னுடைய கணவன் என்று பெனலொப்பி கண்டுபிடிக்கிறாள்? குடும்பப் பாடல் கிடையாது. மரபணு சோதனை இல்லை. ‘தாலி கட்டியவனைத் தெரியாதா?’ என்னும் லாஜிக் சறுக்கல் லேது. எப்படி? நீங்களேப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.

ஓடீசஸ்

ஒடீஸசிடம் எந்த அற்புத சக்தியும் கிடையாது. பத்து பேர குத்த மாட்டான். ஒரே சமயத்தில் இருபது பேரோடு சிலம்பம் ஆட மாட்டான். பறக்க மாட்டான். குண்டுகளைக் கையால் தடுக்க மாட்டான். ஆனால், புத்திசாலி. மகா புத்திசாலி. சூட்சும புத்தி கொண்டவன். தன் அறிவைக் குறித்து பெருமிதம் கொண்டவன். கடுமையான விசுவாசம் கொண்டவன். நாட்டிற்கும் வீட்டிற்கும் நாய் போன்ற நன்றி உடையவன். இவன் என் ஹீரோ.

டேவிடும் கொலியாத்தும் கதைக்கு முன்னோடியாக சைக்ளோப்ஸ். கொஞ்சம் ராமனின் வாலி. நிறைய கும்பகர்ணன். அப்படியே துணைக்கு சிந்துபாத்தின் பூத பிசாசுகளையும் சேர்த்தால், நமக்கு பாலிஃபீமஸ் கிடைக்கிறார். இன்றைய பிரகாஷ்ராஜ் வில்லன்களின் கொள்ளுத் தாத்தா.

சைக்ளாப்சுக்கு நாகரிகம் தெரியவில்லை. பழங்குடி எனலாம். இவனின் தந்தை பாஸீடான். பாஸிடானுக்கு கோபம் வருகிறது. தன் மகனை, சைக்ளாப்சைக் கொலை செய்த ஓடீசஸ் மேல் கோபம் வருகிறது. பாஸீடான் கடல்களின் அரசன். வாயு பகவான். வருண தெய்வம். புயல் சின்னம் ஏற்றுகிறான்.

அம்மா செண்டிமெண்ட்டும் ஓடிசியில் உண்டு. “உன் விதியை அறியும் ஆசை, என் அன்பின் உத்வேகம் – இவைதான் இறந்திருக்கின்றன்” என்கிறாள். பாதாள லோகம், கனவு உலகம் எல்லாம் வருகிறது.

ஹோமர்

இவ்வளவு கிளைக் கதைகள், இத்தனை கதாபாத்திரங்கள் – அத்தனையும் ஒருவரா எழுதியிருக்கிறார்? வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது போல், கம்பரின், வால்மீகியின், துளசிதாசரின் இராமாயணம் போல் ஹோமரின் இலியாடும் ஒடிசியும் ஒற்றை ஆள் எழுதியது அல்ல. காலங்காலமாக வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுப்பு. நாட்டிற்கேற்ப, பாஷைக்கேற்ப, பண்பாட்டிற்கேற்ப மாற்றங்கண்ட தொகுப்பு.

ராப்சோட்ஸ் எனப்படும் (ராப்சடி.காம் இங்கிருந்துதான் வந்தது 🙂 ஏதன்ஸ் நாடகக் கலைஞர்களால் கூத்தாக்கம் செய்யப்பட்ட கதை. போருக்குச் சென்ற அலெக்சாந்தர் கையோடு எடுத்து வந்திருக்கிறார். பைபிளுக்கு அடுத்தபடியாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒடிசியை நாடி இருக்கிறார். லாரென்ஸ் ஆஃப் அரேபியா மேற்கோள் காட்டுகிறார்.

இலக்கியம்

ஒடிசியின் காட்சிகள் ஓவியத்தில் இடம்பிடித்திருக்கிறது. டாண்டே போன்றவர்களிடம் கதாபாத்திரமாக உலா வருகிறது. டென்னிசனின் கவிதையில் தோன்றுகிறது. ஜாகுலின் கென்னடி ஒனாசிஸ் தகனத்தில் அஞ்சலிப் பாடலாக ஒலிக்கிறது. பெனலப்பியை மையமாக வைத்து மார்கரெட் ஆட்வுட் நாவல் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்சும் ‘யூலிசிஸ்’ (ஓடீசஸுக்கு இத்தாலியப் பேர்) கொடுக்கிறார். டெரக் வால்காட்டின் ஓமராஸ் கவிதை; ஃபிரான்ஸ் காஃப்கா… ஸ்டீவன் ஸ்பீல்பெகின் ஈ.டி… பட்டியல் நீளம்.

போரில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மனித மாண்புகள் இருக்குமா? உயிரைக் கொன்று குவித்த இராணுவ வீரர், சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பில் இயங்க இயலுமா? எதிரி எங்கே இருப்பார் என்றறியாத வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் யுத்தகளத்தில் பணியாற்றியவரால், சகஜநிலைக்கு மீள முடியுமா? யாரை நம்புவது? இயல்பாக உறக்கம் கூட வராத கொலைக்களம் போல் இல்லமும் ஆகிப் போவதை ஓடிஸஸ் மூலமாக உணரலாம்.

‘யார் இவர்’ என்று அறிந்து கொள்வதன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புத்தகத்தை காவியம் என்று அழைக்கும் தகுதியும் அதிகரிக்கிறது. ஆடிசி மனிதத்தை சொல்கிறது. ஆடிசி யார் என்று இன்னும் இன்றும் தேடுகிறோம்.

புத்தக தினம்

“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” – நியு யார்க் டைம்ஸ் விமர்சனம்

மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.

ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.

இந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்?

சினிமாவிற்கு ஐஎம்டிபி என்றால், நூல்களுக்கு கம்ப்ளீட் ரிவ்யூ.

அவர்கள் மூலமாகக் கிடைத்த பரிந்துரைதான் இன்றைய பதிவுக்கான மேட்டர்: How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard

நல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால்? (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட்டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).

புத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.

இது அவரின் கணக்கு வழக்கு:
Books he has started but not finished

  • The Man Without Qualities, Robert Musil
  • Ulysses, James Joyce

Books he has only heard others talk about

  • The Aeneid, Virgil
  • Oliver Twist, Charles Dickens

Books he has read but forgotten

  • The Interpretation of Dreams, Sigmund Freud
  • Steppenwolf, Hermann Hesse

Books about which he admits he knows nothing

  • Rhetoric, Aristotle
  • Mémoires, Joachim du Bellay

நானும் போட்டுப் பார்த்தால்…
கேள்விப்பட்டது

கேள்வி கூடப் படாதது

  • விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  • கடல்புறா – சாண்டில்யன்
  • பாழி – கோணங்கி

மேலோட்டப் பார்வை இட்டது

  • குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
  • பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
  • ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

மறக்கப்பட்டது

  • கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
  • பொன்னியின் செல்வன் – கல்கி
  • காதலெனும் தீவினிலே – எஸ்.ஏ.பி.
  • முகமது பின் துக்ளக் – சோ

இந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.

வாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.

முடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:

இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா?

நீதி
நல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.
Happy to onlook - Cartoons, Comics

இளவரசு அறிமுகமான படம் எது?

விடை தெரிந்துகொள்வது எளிதுதான் 🙂

ட்ரிவியாபேட்டைக்கு சமர்ப்பணம்.

தொடர்புடைய சுட்டி: திரைப்படம்.காம்

இன்று வந்த ஸ்பாம்

ParasparFund.In பரஸ்பரநிதி ParasparFund.Com

நிதி நிறுவனங்கள் எல்லாம் தெரியாத ஆள் அழைத்தால் வாங்க மனம் ஒப்புமா? இந்த மாதிரி எரிதம் அஞ்சல் அனுப்புவது அச்சமே தரும்; முதலீடுகளைப் பெற்று கொடுக்காது.

தான் யார் என்ற குட்டி சுய அறிமுகம்; அதன் பிறகு எவ்வாறு இந்த அஞ்சல்பெட்டி அனுப்பலில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்னும் குறிப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை 😦

இன்று மின்மடல் திருடும் நிறுவனம், நாளைக்கு மொத்தமாக பிறவற்றையும் அபேஸ் செய்யுமோ என்னும் பயம் வரும்.

தினமணி – 2007 தமிழ் பத்திரிகை தீபாவளி மலர்கள்: அறிமுகம்

2007 Diwali Malar Deepavali Magazine Specials Dinamani