தனது மகன் நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்குமாறு டி.ஆர். பாலு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் வழியாக எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ரஜினி படம் வெளியான அன்று நூறு ரூபாய் நுழைவுச்சீட்டு, ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். அந்த மாதிரி உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சிகள் ‘அரங்கு நிறை‘ந்து விட்டால், ப்ளாக்கில் விற்பார்கள். இந்த மாதிரி விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
‘மறு-விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்காது’ என்று அனேகமாக அறுதியிட்டு சொல்லும் நிலையில், சபாநாயகர் திடீரென்று தன் ஆதரவை மாற்றிக் கொண்டு, கள்ளச்சந்தை, கவுண்டரிலேயே சந்தைப்படுத்தல் என்று எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
250,000 டாலர் கிடைத்தால் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டாமா?
இந்த மாதிரி வாக்களிப்பது சட்டப்படி குற்றம் கிடையாது. காசுக்காக சட்டமன்ற உறுப்பினர்களை ‘லாபி‘ செய்வதற்கு நடைமுறைகளை வழிவகுத்திருக்கிறார்கள்.
இப்போதைய பிரச்சினை: ஐயாயிரம் அமெரிக்க வெள்ளிக்கு மேல் லாபியிஸ்ட்களிடம் பெற்றுக் கொண்டால், வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அவ்வாறு செயல்படாமல் 250,000 ‘ஊக்கத்தொகை’ வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சர்ச்சை கிளப்பியிருக்கிறது.
அவனவன மகனுக்கு மந்திரி பதவி கேட்கும் காலத்தில், டியார் பாலு பெட்ரோல் பங்க் கேட்டது குற்றமா?
இந்த வாரம் முழுக்க சில சுவாரசியமான சமீபத்திய புத்தக (விமர்சனங்கள்) குறித்த பதிவுகள்.
அஹ்மது ஓமர் சயீத் ஷேக் ரொம்ப சமத்து. லண்டன் மின்வண்டி தடத்துக்குள் தடுக்கி விழுந்த முகந்தெரியாத சகபயணியை, குருதிப்புனலில் ட்ரெயினுக்கு முன் கமல் குதிப்பது போல், பாய்ந்து, கை கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்.
ஆனால், அவரே 1994- இல் பிணைக்கைதியை பிடித்து, கப்பம் கட்டாவிட்டால் தலையை சீவிடுவேன் என்று யூ ட்யூபியவர்.
மேலே குறிப்பிடப்பட்ட பிணை உயிர் பிழைத்துவிட்டார். ஏஞ்சலினா ஜோலி நாயகியாக நடித்து திரைப்படமும் ஆன டேனியல் பேர்ல் தப்பவில்லை. அவரை கடத்தியவர்களில் முக்கிய குற்றவாளியாக ஒமார் சையது இருக்கிறார்.
சக ஹிருதயருக்காக உயிரைப் பணயம் வைத்தவர்; மேற்கத்திய உலகில் குப்பை கொட்டியவர்; நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. எங்கே, எப்படி, எவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதி ஆகிறார்?
‘சாது மிரண்டால்’ என்கிறார் மார்க் சேஜ்மென்.
கலகக்காரர்கள் எப்போதும் ஒத்துழையாமை என்று முழங்கி தலைமைக்குக் கட்டுப்பணியாமல் சிதறுண்டு போகிறார்கள். அகமதுவைப் போல் இலட்சிய நோக்கோடு சட்டத்திற்குக் கட்டுப்பட்டு புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள்தான் தீவிரவாத இயக்கங்களுக்குத் தேவை.
பாலஸ்தீனம் பக்கம் முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் எட்டிப்பார்த்தாலே ஜாதிபிரஷ்டம்;
இராக் மட்டுமல்ல… இரானும் நிர்மூலம் என்று அறைகூவும் இன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்கள்
இஸ்லாமுக்கு எதிராக உலகமே திரண்டிருக்கிறது என்று எண்ண காரணங்கள் ஸஹஸ் ர கோடி இருக்கிறது.
அல் க்வெய்தாவுக்கு உள்ளே நுழைவதற்கு புனிதப்பலி தேவைப்படுகிறது. தங்கள் உண்மையான நேசவெறியர்கள் என்றுணர்த்த காவு கொடுக்கிறார்கள். தலைவர் யாரென்று தெரியாது. ஆனால், அந்த தெரியாத அரூபத்துக்கு காணிக்கை தேவை.
தலை பத்து பயங்கரவாதிப் பட்டியல் வெளியிட்டு, ஹீரோக்களை உருவாகும் வேலையை அமெரிக்கா நிறுத்துதல்
ஏதாவது குறுக்கு சந்து ரவுடியைப் போட்டுத் தள்ளினால் கூட, கொன்டலீசா ரைஸ் ஆரம்பித்து அடிப்பொடி வரை ‘ஊடகவியலாளர் சந்திப்பு’ என்று பிரஸ்தாபித்து வெறுப்பை உமிழும் பிரச்சாரப் போக்குகளுக்கும் முற்றும் போடுதல்
3. China May Give Up Attempt to Send Arms to Zimbabwe – New York Times: ஜிம்பாப்வேயில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. முன்னாள் பண்ணையார் இங்கிலாந்து தொடங்கி அனைத்து மேற்கத்திய உலகமும் கர்ம சிரத்தையாக செய்திகளைப் பின் தொடர்கின்றன. சீனாவில் இருந்து அன்புடன் அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் திருப்பி அனுப்பப்பட்ட காதை.
5. Cruel and Unusual History – By GILBERT KING: இந்தியாவைப் போல் ‘ஆயுள் தண்டனை’ என்றால் நன்னடத்தை எல்லாம் கூட்டிக் கழித்து ஏழாண்டுகளில் விடுதலை கிடைக்காது. சாகும் வரை சிறைவாசம் இருந்தாலும் அமெரிக்க உச்சநீதிமன்றம் மரண தண்டனையை நேசிக்கிறது. க்ரீன் மைலில் காட்சியாக்கப்பட்டது எல்லாம் நிஜமாகவே நடந்தேறியிருக்கிறது என்று விவரிக்கும் பதிவு. (ஐந்தாண்டுகள் முன்பு பதிந்தது – Points to ponder against Capital Punishment)
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் சார்பு நிலை குறித்த நச் காட்சி (நன்றி: ஏபிசி டிவி – பாஸ்டன்லீகல்)
7. High School Project on Genocide Was a Portent of Real-Life Events – By SAMUEL G. FREEDMAN: பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்போம்; சரித்திரக் கேள்விகளுக்கு பதில் சொல்வோம். இந்தப் பள்ளியின் ஆசிரியரோ சமகால செய்திகளையும் வராலாறையும் கோர்த்து வினாத் தொடுத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். இந்த மாதம் ‘இனப்படுகொலைகளை நினைவுகூறும் மாதம்‘. நியு யார்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்ட ஆசிரியரும் யுகோஸ்லேவியா, கெமர் ரூஜ் (சிவப்பு கம்போடியா) எல்லாம் பாடசாலையில் அறிமுகப்படுத்தினாலும் ஈழத்தை கண்டுகொள்ளவில்லை.
4. தசாவதாரத்தைப் பார்த்து சுசி கணேசனின் கந்தசாமியில் இன்னொரு முகப்பூச்சு கூட்டப்படுமா?
5. துணை நடிகர்கள் எல்லாரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பாடல் காட்சியில் பற்பல பிரபு தேவாக்கள் விதவிதமாக நடனமாடுவார்கள். அது போல் தொலைக்காட்சித் தொடரில் இளவரசு, பாஸ்கர் போன்றோர் தொலைந்து போனதால், தற்செயலாக தசாவதாரம் எடுக்கிறாரா கமல்?
6. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்! அந்தக் கால பாடல் காட்சிகளில் ஒரே ஃப்ரேமில் இருபது தடவை கமல் முகம் வந்திருக்கிறதே… அதுவும் சாதனைதானே?
கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. காதில்விழும் சொல்லாக இருந்த நிலை மாறிக் கண்ணில்படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்துகொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகரப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடுகூடிய முகத்தையும் கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி பத்துத் தடவையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
என்று அர்ச்சிக்கும் அ ராமசாமி தொடங்கி தமிப்பதிவர்கள் வரை ‘மிகை நாடும் கலை’ப் பார்வை தர இன்னொரு வாய்ப்பு தந்திடுகிறாரா?
8. கமல், தசாவதாரம், ஹிந்தி ஆஸ்கர் (ரவிச்சந்திரன் அல்ல) விருது – கேள்வி தொடுக்கவும்
9. முத்தம், பாமரர், சி சென்டர், வெற்றி – வழக்கமான சர்ச்சை வரவைக்கவும்
10. ஜெமினி கணேசன் & கே ஆர் விஜயா நடித்து கேயெஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் – சிறுகுறிப்பு வரைக.
படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே ‘தசாவதாரம்.’ இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!
படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.
சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.
முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,
‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது’
என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.
இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.
கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.
படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள். மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.
படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.
கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.
படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். “எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு” என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.
“எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்” என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. “கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்.” நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை.
கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.
கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.
இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற… கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது.
உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.
‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’
பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை!
சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.
மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!
வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!
‘‘உடல் பூமிக்கு போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்’’
‘‘கடவுளும் கந்த சாமியும்
பேசிக் கொள்ளும் மொழி இசை’’
‘‘வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்’’
போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.
படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:
‘‘உலக நாயகனே… கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’
ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?
ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.
“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” – நியு யார்க் டைம்ஸ் விமர்சனம்
மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.
ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.
இந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்?
நல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால்? (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட்டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).
புத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.
இது அவரின் கணக்கு வழக்கு: Books he has started but not finished
இந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.
வாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.
முடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:
இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா?
நீதி
நல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.
Her Perfect Insult offers step-by-step instructions for doling out sophisticatedly and obscurely worded wounding slights to everyone from “Persons Who Erroneously Believe Themselves to Be Better Than You” to your own family.
தொடர்பில்லாத இடுகை:
வேதசகாயகுமாரின் கதை உண்மையில் சுந்தர ராமசாமி, பிரமிள்,நகுலன் வகையறா நடுவே நாய்களை உருவகமாக்கி நடந்து வந்த ஒரு நெடுங்கால வசையிலக்கிய மரபின் நீட்சி. அதில் சுந்தர ராமசாமி ,நகுலன், பிரமிள் எழுதிய பல கவிதை மற்றும் கட்டுரைகளின் நுண்ணிய உள்ளர்த்தங்கள் உண்டு. வேதசகாயகுமார் அந்த வசையிலக்கியங்கள் வெளியான கொல்லிப்பாவை முதலிய இதழ்கள் வழியாக வளர்ந்தவர். அவ்விலக்கிய மரபில் நம்பிக்கை உடையவர்.
:::
வசையிலக்கியம் இல்லாத மொழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில வசையிலக்கிய மரபில் பேரிலக்கியங்கள் உண்டு. தமிழில் பிரமிளும் நகுலனும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். அவை பூடகமானவை. அதேபோலவே வேதசகாய குமாரின் கதையும் பூடகமானதே.
வேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. – பஸ்க்கால்
இணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.
முதலில் + கள்:
1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில் பிரதானமாகக் காட்சியளிக்கிறது.
2. ஒவ்வொரு பக்கமாக புரட்டி என்ன இருக்கு என்று தேடாமல் உள்ளடக்கம் உடனே கிடைக்கிறது.
ஒரேயொரு இடர்ப்பாடு: கட்டுரை/கதைகளின் முடிவில் ஏதாவது விநோத சின்னம் இட்டு (§ ♦) ‘முடிஞ்சுடுத்துப்பா’ என்று பாமரர்களுக்கு உணர்த்தியிருக்கலாம்.
பொருளடக்கம்:
1. கேள்வி – பதில்: ஜெயகாந்தன் – 8/10
கேள்விகள் தூள் ரகம். பதில்கள் மாட்டிக் கொள்ளாத பப்படம்.
2. தலாய் லாமா நோபல் பரிசு பேச்சு: துகாராம் – வாசிக்கவில்லை
ஆங்கிலத்தில் கிடைக்கிறதை, அணுகக்கூடிய ஆங்கில நடையில் கிடைத்தால், அசல் மொழிபெயர்ப்பையே வாசித்துவிடுவது பிடித்திருக்கிறது.
3. ஐயம் இட்டு உண்: நாஞ்சில் நாடன் – வாசிக்கவில்லை
படித்துவிட்டு வருகிறேன்
4. சினிமா: செழியன் – வாசிக்க இயலவில்லை (0/10)
‘நிழல்‘ என்னும் சுவாரசியமான பத்திரிகையில் கூட இந்த மாதிரி ‘well left’ என்னும் டெஸ்ட் மேட்ச் ரம்பங்கள் வந்துவிடுவதுண்டு.
5. மன்மதன்: அ முத்துலிங்கம் – 10/10
நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #1
6. Pygmies – சேதுபதி அருணாசலம் – 10/10
அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தவழுகிறதே… இன்னொரு செழியனோ என்னும் பயத்துடன் அணுகினாலும், சொந்த அனுபவத்தை வைத்து இயல்பான மொழியில் அச்சுறுத்தாத அறிமுகம்.
7. சிறுகதை: எஸ் ராமகிருஷ்ணன் – 10/10
என்னாமா எழுதறாரு… (இணையத்தில்) புனைவு எழுதறவங்க எல்லாரும் ஒரு தபா இந்த மாதிரி கதைங்களப் படிச்சுட்டு கற்பனை குதிரையத் தட்டணும். இவரோடதுக்கு மட்டும் படமெல்லாம் படா ஜோரு. மத்ததுக்கெல்லாமும் இப்படி வரஞ்சிருந்தா தூக்கியிருக்கும்!
8. மலேசியா: ரெ கார்த்திகேசு – 6/10
மலேசியாவின் வரலாறு முழுமையாகக் கிடைக்கிறது. கட்டுரையில் துளி அவசரம் எட்டிப் பார்த்து, சமீபத்திய தேர்தல் முடிவு அலசலுக்கு முழுமையான தெளிவு கிடைக்காமல் பறக்கிறது. நூறு, நூற்றைம்பது ஆண்டு சரித்திரப் பின்னணி தேவைதான் என்றாலும், அதற்குரிய விலாவாரியான சித்தரிப்பு கொடுத்திருக்கலாம்; அல்லது இரண்டு/மூன்று மாதமாக தொடராக முழுமையாக்கி இருக்கலாம்.
9. பாவண்ணன் சிறுகதை – என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்; ஏமாற்றி இருக்க மாட்டார். இனிமேல்தான் படிக்க வேண்டும்.
10. வ ஸ்ரீநிவாசன் கட்டுரை – 10/10
மிக மிக எதார்த்தமான பேச்சுவழக்கு நடை அள்ளிக் கொண்டு போகிறது. தி ஹிந்துவில் ஆரம்பித்து, புது தில்லி வாசத்தைத் நினைவலையாக்கி, சுஜாதாவையும் பேருக்கு தொட்டுக் கொண்டு, புத்தக முன்னுரைகளை காலை வாரி, கத்தாழக் கண்ணால என்று பாப் கல்ச்சரையும் விடவில்லை.
11. Pascal – நாகரத்தினம் கிருஷ்ணா: 8/10
விக்கிப்பிடியா போன்ற பற்றற்ற நடைக்கும் ப்ராடிஜி போன்ற தகவல் சார்ந்த புத்தக வாசத்திற்கும் இடையிலேயான மணம்.
12. (அ) கவிதை – தமிழச்சி தங்கபாண்டியன்: 5/10
செட் தோசை
ஆ) சல்மா: 5/10
கொத்து பரோட்டா
இ) நிர்மலா: 7/10
டாப்பிங் இல்லாத ஊத்தப்பம்
ஈ) பி கே சிவகுமார்: 5/10
Appetizer Platter
உ) வ ஐ ச ஜெயபாலன்: வாசிக்கவில்லை
ஊ) ஹரன் பிரசன்னா: 10/10
கதை நேரம் & நாம் இரண்டுமே தூள் ரகம்
13. புலம்பல்/விண்ணப்பம்: லதா ராமகிருஷ்ணன் – 10/10
நியாயமான கோரிக்கை. ஆனால், சீனாவிற்கெதிராக போராட்டம் நடத்துவது போல் பயனில ஆகாமல் இருக்க வேண்டும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde