புத்தகங்கள் – Must browse Books: Library

சமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:

1. Nudge: Improving Decisions About Health, Wealth, and Happiness: Richard H. Thaler, Cass R. Sunstein

  • மக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு?
  • மோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி?

தொடர்புள்ள வலையகம்: Nudge

2. McMafia: A Journey Through the Global Criminal Underworld: Misha Glenny

  • சிரியானா, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
  • இஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு

தொடர்புள்ள பேட்டி: McMafia: A Journey Through the Global Criminal Underworld by Misha Glenny – Carnegie Endowment for International Peace

3. அ) When Men Become Gods: Mormon Polygamist Warren Jeffs, His Cult of Fear, and the Women Who Fought Back: Stephen Singular

ஆ) Stolen Innocence: My Story of Growing Up in a Polygamous Sect, Becoming a Teenage Bride, and Breaking Free of Warren Jeffs: Elissa Wall, Lisa Pulitzer

இ) Escape: Carolyn Jessop, Laura Palmer

  • அமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி
  • கடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு
  • மனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன?

4. Worst-Case Scenarios: Cass R. Sunstein

  • எம்பி3 பேட்டி: Sunstein on Worst-case Scenarios, EconTalk Permanent Podcast Link: Library of Economics and Liberty
  • உலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் – எவ்வாறு ஒப்பிடலாம்?
  • இந்தியா & ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் – பேராபத்து களங்கள்

5. அ) Freedom From Oil: How the Next President Can End the United States’ Oil Addiction: David Sandalow

ஆ) Over a Barrel: The Costs of U.S. Foreign Oil Dependence: John Duffield

  • உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டும் சார்ந்திருக்கிறது?
  • ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு?
  • சுருக்கமான செயல்திட்டம்: How the Next President Can End Our Oil Addiction
  • பாட்காஸ்ட் பேட்டி: Freedom from Oil: How the Next President Can End the United States’ Oil Addiction – Brookings Institution

6. The Really Inconvenient Truths: Seven Environmental Catastrophes Liberals Don’t Want You to Know About–Because They Helped Cause Them: Iain Murray

  • ஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா?
  • பூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்
  • உணவுத் தட்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் – சாப்பாட்டு பஞ்சம்

7. Invisible Nation: How the Kurds’ Quest for Statehood Is Shaping Iraq and the Middle East: Quil Lawrence

  • குர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை துருக்கி எந்நாளும் விரும்பாது.
  • இரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்

8. அ) Free Ride: John McCain and the Media: David Brock, Paul Waldman

ஆ) Amazon.com: The Real McCain: Why Conservatives Don’t Trust Him and Why Independents Shouldn’t: Cliff Schecter

  • அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்
  • மெக்கெயின் – இடதுசாரியா? மிதவாத வலதுசாரியா? கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு ‘வெளிப்படையானவர்’ போல் வேஷம் கட்டுகிறார்?

9. An Unbroken Agony: Haiti, From Revolution to the Kidnapping of a President: Randall Robinson

  • அமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்
  • சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் – பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்

10. Stuffed and Starved: The Hidden Battle for the World Food System: Raj Patel

  • நவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்
  • அமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது?
  • மொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்

11. Inside the Jihad: My Life with Al Qaeda: Omar Nasiri

  • அல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை

12. Snoop: What Your Stuff Says About You: Sam Gosling

  • அலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது? என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்? என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்
  • காதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு?
  • வலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்

13. The Fate of Africa: A History of Fifty Years of Independence: Martin Meredith

14. Maxims and Reflections (Penguin Classics): Johann Wolfgang von Goethe

  • அந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? சில எடுத்துக்காட்டுகள்:
    • என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு
    • பாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது
    • உங்களைப் பார்த்து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்
  • மேலும்: Johann Wolfgang von Goethe – Wikiquote

15. Weird History 101: John Richard Stephens

  • சரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்

16. அ) The Translator: A Tribesman’s Memoir of Darfur: Daoud Hari

ஆ) They Poured Fire On Us From The Sky: The True Story of Three Lost Boys from Sudan: Alphonsion Deng, Benson Deng, Benjamin Ajak, Judy A. Bernstein

  • சூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்
  • தன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.
  • தனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை

17. Aristotle and an Aardvark Go to Washington: Thomas Cathcart, Daniel Klein

  • அரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.
  • இவர்களின் முந்தைய புத்தகத்தின் ரசிகன் என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.

18. The Logic of Life: The Rational Economics of an Irrational World: Tim Harford

  • ஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்?
  • கால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்?
  • திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன?

19. The Year of Living Biblically: One Man’s Humble Quest to Follow the Bible as Literally as Possible: A. J. Jacobs

  • பைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்
  • பொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா?
  • வாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா?

20. How to Read Literature Like a Professor: Thomas C. Foster

  • இலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா?
  • எந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி?

யாரைக் கொல்கிறார்கள்? – சென்னையில் ஒரு மழைக்காலம்

Madrasil oru Malai Kalam - Gautham Menon, AR Rehman

Thirsha

நினைவாளர் நாள்: Memorial Day கருத்துப்படம்

(th)ink by Keith Kniwght

நன்றி: (Th)ink

விகடன் டாக்கீஸ் ‘வால்மீகி’ – தினமணி விளம்பரம்

Tamil Cinema, Movies, Posters, Banners

Tamil Cinema

Vikatan Movies - Thamizh Films

AntiTerrorism Day: Former prime minister Rajiv Gandhi’s 17th death anniversary

Rajeev Gandhi Death - Memoirs, Anjali, Notes, Advt, Government

ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே – வாழ்வோடு விடையும் இல்லை

‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

முந்தைய சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

அதன் பிறகு வந்த செய்திகள் & கிசுகிசு புனைவுகளின் தொகுப்பு:

1. தசாவதாரம் விழாவில் நடிகர் விஜய் கார் மறிப்பு: “மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்தார்”

2. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் :: Kumudam Welcomes U

`வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு ஃப்ரேமை அழகுபடுத்த ஐந்து நிமிடம்தான் தேவைப்பட்டது. பிறகு அடுத்த ஃப்ரேமிற்குப் போய் விட்டேன். ஆனால் தசாவதாரத்தில் ஒரு ஃப்ரேமில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கும். அதே ஃப்ரேமில் இரண்டு வாரங்கள் கழித்து வேறு கெட்டப்பில் கமல் இருப்பார்.

மீண்டும் அதே ஃப்ரேமில் ஒரு மாதம் கழித்து வேறொரு கெட்டப்பில் கமல் இருப்பார். இந்த எல்லா கெட்டப்பில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் ஏற்றமாதிரி ஒரே லைட்டிங்கை வைக்க வேண்டும். இது ரொம்ப சிக்கலான விஷயம்.

அதேபோல் மேக்கப் போட்டு ஒரு மணி நேரம் மட்டும்தான் மேக்கப் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நேரம் ஆக ஆக மேக்கப் இளக ஆரம்பிக்கும். அதனால் முதலில் உள்ள ஸ்கின் டோன், கலர், எல்லாம் மாறிவிடும். அதற்கேற்றபடி ஒளிப்பதிவு செய்யவேண்டும். இதுபோன்று நிறைய சவால்கள்.

இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலிலான படம். அதற்கான தகுதி இப்படத்தில் எல்லாவிதத்திலும் இருக்கிறது. ஒரு இன்ச் கேமரா ஆங்கிள் மாறினாலும் கூட ஒட்டு மொத்த காட்சியுமே சொதப்பலாகிவிடும். இதனால் பக்காவாக ஸ்டாரி போர்ட் தயார் செய்து ஷூட் செய்தோம். இதைக் கவனிக்கவே எட்டு உதவியாளர்கள் உழைத்தார்கள்.”

3. இது வரை 48 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள ஏரியா வியாபாரம்: Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts – அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா எவ்வளவு? கலைஞர் தொலைக்காட்சி எத்தனை கோடி தரும்??

தொடர்புள்ள விற்பனைப் பதிவுகள்:

அ) உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

ஆ) AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income: “சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி”

இ) Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss: “ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்”

ஈ) Why ‘Sivaji’ is delayed?: “65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது”

உ) ‘தயாரிப்பாளர்களை வாழ விடுங்கள்; நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தக் கூடாது’

ஊ) அதிகாரபூர்வ வருமானமும் ஏய்ப்பு வரி விவரங்களும் :: கொடுப்பது ஒன்று எக்செல் கோப்பில் கோர்ப்பது இன்னொன்று

எ) Kuruvi makes box-office History – Super hit Tamil Cinema of the century: Ilaiya Thalapathi Vijai & Director Tharani: “பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் ‘குருவி’!”

ஏ) சிவாஜி – விற்பனை விவரங்கள்

நேற்றைய விவகாரம்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

இப்பொழுது: அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு; நாளை: பணவீக்கம் கலந்த விலையேற்றம்?

data

நன்றி: Inflation in emerging economies | An old enemy rears its head | Economist.com: “Emerging economies risk repeating the same mistakes that the developed world made in the inflationary 1970s”

The Economist Print Magazine

நன்றி: Global housing markets | Structural cracks | Economist.com: “The pain in Spain falls mainly on Mr Drains”

World Real Estate

நன்றி: House prices | High-rise living | Economist.com

தொடர்புள்ள தொகுப்புகள்:
1. Rankings | Economist.com

2. India’s economy | Articles By Subject | Economist.com

Number of people makes a city expensive

நன்றி: OECD Economic Outlook No. 82, December 2007

India projections in 2007

எழுதாத கதைக்கு யார் ஆசிரியர்?

குறுங்கதை மொழிபெயர்ப்பு « அங்கிங்கெனாதபடி

கிட்டத்தட்ட சித்தார்த்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட கதையை ஒத்த சமீபத்திய வாசிப்பு ஒன்றின் சுருக்கம்…

அந்த எழுத்தாளனை யாருமே சீந்தவில்லை. எவருமே அவன் படைப்பை அச்சேற்றாமல் நிராகரிக்கிறார்கள். விலைமாதுவின் துணையை நாடுகிறான்.

அவளோ அவனின் கதையை புகழ்கிறாள். ‘இன்னும் எழுது’ என்பதுடன் நில்லாமல், அவனுடைய கோழிக் கிறுக்கல்களை தட்டச்சுகிறாள். கோர்வையாகக் கொண்டு வருகிறாள். இவனோ எப்போதும் போதையில் இருப்பதால், எழுதித் தள்ளுவதற்கே நேரம் போதாமல், டைப்ரைட்டிய பக்கங்களை வாசிக்காமல் மேலும் மேலும் எழுதுகிறான்.

புத்தகம் கிட்டத்தட்ட தயாரான நிலையில், பதிப்பாளர்களை சந்திக்க, தன் அண்ணன் வசிக்கும் நகரத்துக்கு செல்கிறான். கதையைப் படிக்கும் அண்ணன், தன் பெயரில் வெளிவருவதை விரும்புகிறான்.

தம்பிக்கு போதையேற்றி, மோசமான விபத்தை உருவாக்குகிறான். தம்பியை எசகுபிசகான நிலையில் புகைப்படமெடுத்து, மிரட்டி தன் பெயரை முதன்மை படைப்பாளியாக சேர்த்துவிட செய்கிறான்.

புத்தகம் வெளியாகிறது. புரட்டி பார்க்கும் தம்பிக்கு அதிர்ச்சி. தலைப்பு மட்டும்தான் தான் வைத்தது. உள்ளே இருப்பதெல்லாம், விலைமாதின் அனுபவங்கள். அவளுடைய பணக்கார வாடிக்கையாளர்கள், அவர்களின் விநோத நடவடிக்கைகள், என்று விரிகிறது.

விலைமாதுவே சொந்தப் பெயரில் வெளியிட முடியாத கதையை, தம்பியிடம் இருந்து அபகரித்து பெயர் போட்டுக் கொண்ட அண்ணனின் நிலையை ஒப்பிடும் கதை.

நிஜமாக எழுதியவருக்கு உண்மைப் பெயரை எடுத்துரைக்க முடியாது. நிஜமாக எழுதியதாக நினைத்தவருக்கும் படைப்புக்கும் தலைப்பு தவிர ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. எழுதியாக சொல்லிக் கொள்பவரும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் கிடைத்த வாய்ப்பை பறித்துக் கொண்டவர்.

இந்தப் புத்தகத்தின் பெயர் தெரியாமல் கதை மட்டுமே என்னுடைய வாசக அனுபவத்தில் தங்கியது மீட்சி.

சுயசரிதை அல்ல

சன் டிவியின் திருவிளையாடலை விட இராமாயணம் சிறுவர்களைக் கவரும் விதமாக இருக்கிறது. மாதுரி தீட்சிட் & சல்மான் கான் மணம் செய்யும் ‘ஹம் ஆப் கே ஹை கௌன்’ போல் ஆற அமர கல்யாணத்தை சொல்லாததால் இருக்கலாம். தினமும் திருவிளையாடல் வந்து அலுப்பூட்டுவதாலும் இருக்கலாம்.

‘இராமருக்கு அப்புறம் சீதாவுடைய மகள்தான் அரசேறுவாள் என்பதாலா?’

‘அடுத்து என்ன நடக்கும்’ என்று பின் கதை சுருக்கமாக தங்கிலீஷில் இராமாயணத்தை விவரித்த போதுதான் மகளிடமிருந்து அந்தக் கேள்வி வந்தது. பரதனுக்கு முடிசூட்டுமாறு ஏன் கைகேயி உசுப்பேற்றப்பட்டாள் என்பதை பரம்பரை வாரிசுகளை கொண்டு விளக்கும்போது கேள்வி எழுப்பினாள். லவ குசா எல்லாம் தொடாமல், மையமாய் தலையை ஆட்டி வைத்தேன்.

Adam at Home - cartoons & Comics

நன்றி: Adam@Home

மனைவியிடம் எத்தனையோ முறை சொல்லியாகி விட்டது. ஆண்கள் முகத்தைப் பார்ப்பதில்லை; முடியையும் பார்ப்பதில்லை என்று. அரக்கர்களின் உயிர்கள் எங்கோ ஏழு கடல் தாண்டி இருக்கும் புறாவின் கண்ணில் இருப்பதாக அம்புலிமாமா கதை சொல்லும். உண்மைதான். புருவத்தை நெறிமுறை செய்தபிறகோ, புதிய காதணியைக் கண்டு கொள்வதிலோ, சமையலில் வித்தியாசம் காட்டியதையோ கண்டுகொள்வதில்தான் தாம்பத்தியத்தின் நாடி இருக்கிறது.

மேற்கண்ட கார்ட்டூன் போல் துப்புகளை சேமித்து ‘கணவன்மாருக்கான டம்மீஸ்’ புத்தகம் தொகுத்தால் ஐ.பி.எல்., என்.பி.ஏ., ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.

தன்னைச் சுற்றி விரிந்து அலையடிக்கும் வாழ்க்கையிலிருந்து சில துளிகளை மட்டுமே அள்ள முடியக்கூடியவன் மனிதன். ஆகவே முடிவில்லாத மர்மங்களின் நடுவே அவன் வாழ்கிறான். அவனுக்கு கிடைக்கும் பிரபஞ்ச அனுபவம் என்பது அந்த மர்மங்களில் இடறி விழுவதேயாகும். அப்போது அவன் ஒரு அதிர்ச்சியையும் கணநேர மனவிரிவையும் அடைகிறான்.அந்தத் தரிசனத்தைக் கொண்டு அவன் ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கிறான். அது அவன் வரைக்கும் சரியானது. அந்த எல்லைக்கு அப்பால் அதற்குப் பொருள் ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மனிதன் இயற்கையின் பெருவிதிகளினால் சதுரங்கக் காயாக ஆடப்பட்டு அதைப் புரிந்துகொள்ள தன் தரிசனத்தால் ஓயாது முயன்றபடி வாழ்ந்து மெல்ல மெல்ல மறைகிறான். – ஜெயமோகன்: “சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

திங்கள் அன்று இரண்டு சோக செய்திகள். முதலில் நண்பரிடமிருந்து சினிமாவில் மட்டுமே பார்க்கும் வியாதி வந்திருப்பதைத் தாங்கி வந்த மின்னஞ்சல். வலைப்பதியவே மனம் ஒப்பவில்லை. ட்விட்டர் மட்டும் செய்து வைத்தேன்.

மாலையில் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்பவருக்கு ட்யூபில் வந்திருந்த கட்டி குறித்து அறிந்ததும் வாழ்வின் நிலையாமை எல்லாம் எட்டிப் பார்த்தது.

என்னால் ஆனது… அலுவலில் தரும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்தேன்.

அலுவலில் சீனாவில் நடந்த நிலநடுக்கத்துக்கு நிதி சேகரித்தார்கள். எவ்வளவு தானம் கொடுக்கிறோமோ, அதை இரட்டிப்பாக்கினார்கள். 50,000+ பலி. தெரிந்தவருக்கு என்றால் மனம் பதை பதைக்கிறது. எங்கோ ஒருவர் என்பதால் எண்ணிக்கையாக போய்விட்டது.

பர்மா சூறாவளி நிவாரணம் குறித்து அலுவலில் மனிதவளத் துறையினரிடம் விசாரித்தேன். எழுபத்தெட்டாயிரமோ, 150,000-ஓ மறைந்த மியான்மர் வாசிகளுக்கு எதுவும் உண்டியல் குலுக்கவில்லையா என்று. நம் நிறுவனத்தில் இருந்து எவரும் வேலையும் செய்யவில்லை; தொண்டு நிறுவனங்களும் தெரியாது என்று தோள்குலுக்கிவிட்டார்கள்.

நாள்தோறும் தனிமடலிலும், பொதுவிலும் அண்ணா பல்கலை சார்ந்த பொறியியல் கல்லூரிகளின் தரப்பட்டியல் குறித்து விசாரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் கின்டர்கார்டன் படிப்பதற்கு எது #157வது சிறந்த பள்ளி என்பதற்கு கூட யுஎஸ் நியூஸ் & வோர்ல்ட் ரிப்பொர்ட், நியுஸ்வீக், டைம் என்று பல பத்திரிகைகள் வரிசைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் ‘கனவுக்கன்னி 2007’ நடத்தும் சன் டிவியும் சரி. ‘அழகிரியா/ஸ்டாலினா/உதயநிதியா?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தும் தினகரனும் சரி… யாரும் பட்டியல் போடுவதில்லை.

  • தேர்ச்சி சதவீதம் என்ன?
  • வளாக வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
  • தங்கும் வசதிகள் எப்படி?
  • சோதனைச்சாலைகள், பயிற்சிக்களங்கள் எங்ஙனம் இருக்கிறது?
  • பலரும் அங்கேயே தங்கிப் படிக்கிறார்களா, மாநகரத்தில் இருந்து வந்து போகிறார்களா?
  • எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது?
  • படித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?
  • எந்தப் படிப்புக்கு எந்தக் கல்லூரி உகந்தது?
  • அங்கே படிக்கும் மாணவர்களுடன் சந்திப்பு, நிறைகுறை பேட்டிகள்
  • ரேகிங், கடுமையான நடைமுறை, கண்டிப்புகள், வசதிகள் குறித்த அலசல்
  • நிர்வாகமே கடைசி வருட தொழிற்சாலை பயிற்சிக்கு உதவுகிறதா?
  • செலவு எவ்வளவு?

தேர்தல் காலத்தில் குமுதமும் விகடனும் முண்டியடித்து, ஒவ்வொரு ஊராக சென்று வாக்கெடுப்பு நடத்தி, லயோலா கல்லூரி கணிப்பில் இன்னார் வெற்றி; என்டிடிவி நடத்திய வோட்டுப்பதிவில் இந்தக் கூட்டணி முன்னணி என்று பறைசாற்றுவது போல் இந்த மார்க்கெடிங் ரிசர்ச்சும் செய்தால், பலருக்கு பயனாக இருக்கும். டிஆர்பி ரேட்டிங் பிராப்திரஸ்து என்று வாழ்த்துவார்கள்.

இந்தப் பதிவில் கூட தசாவதாரம் என்று முணுமுணுக்காவிட்டால், கூகிள் தெய்வம் சீந்தாது என்பது போல் திரைக்கடியில் தெரியும் ஸ்க்ராலில் ஷாரூக்கானை நாயாக்கிய செய்தியை இட்டு நிரப்பி, மாணவர்களுக்கும் தெளிவு பிறந்தால் மகிழ்ச்சி.

jack\'s found a new religion on craigslist

நன்றி: Finding religion – Life – The Phoenix

வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர்.

போர்ஹேவைக் (Jorge Luis Borges) குறித்த பிரம்மராஜனும் சன்னாசியும் சொல்வது போன்ற வாழ்வின் விவரிப்பை பாவண்ணன் தொடர்ந்து நிறைவேற்றுகிறார். ‘If I only had a little humility, I’d be perfect.’ என்னும் டெட் டர்னர் போல் தன்னடக்கமின்றி சொல்லவேண்டுமானால், இப்படி மேற்கோள் காட்டி காட்டியே போர்ஹேயாகும் எண்ணம்தான் இந்த மாதிரி பதிவுகளின் தோற்றுவாய்.

What helped him overcome the block that had prevented him, almost until he was forty, from moving from essays to narrative prose was to pretend that the book he wanted to write had already been written, written by someone else, by an unknown invented author, an author from another language, another culture, and then to describe, summarize or review that hypothetical book.Part of the legend that surrounds Borges is the anecdote that the first, extraordinary story that he wrote using this formula, ‘The Approach to Almotaism’, when it first appeared in the journal Sur, convinced readers that it was a genuine review of a book by an Indian author – Italo Calvino (Why Read the Classics)

பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள் – பாவண்ணன்: தமிழில் இறையடியான். காவ்யா பதிப்பகம்

அன்பை நிராகரிக்கத் தூண்டியது எது? புறக்கணிப்பின் வலியால் உள்ளூர மனம் நொந்திருந்தாலும் அவருடைய கோபத்திலிருந்து மீள்வதற்காக புனைந்துரைத்த ஒரு சின்னப் பொய்யால் பூபாலனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்க பார்வதியைத் தூண்டிய உணர்வு எத்தகையது? நெருங்கிப் பழகியபிறகும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஏன் இப்படி நிராகரிக்கிறார்கள்? நெருக்கத்தின் அனுபவம் ஏன் நிராகரித்தலைத் தடுப்பதில்லை? இந்த உறவு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது?
:::
ஆண்பெண் உறவு போலவே, இந்தியமண்ணில் சாதி அபிமானமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும்புதிர். எல்லாச் சாதியினரிடையேயும் மாற்றுச் சாதியில் தனக்குப் பிடித்தமான இணையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. சாதி என்னும் பேரமைப்பு அத்தகு நிகழ்ச்சிகளை தற்செயல்கள் என்றும் பிறழ்வுகள் என்றும் அடையாளமிட்டு சில காலம் தனித்துவைக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன் மையத்தைநோக்கி இழுத்துக்கொள்கிறது. சாதிக்கலப்பு என்பதை சாதிப் பேரமைப்பின் மையம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நிகழாதவரை அது அனுமதிக்கப்படாத ஒரு விதி. நிகழ்ந்தபிறகு, இணைத்துக்கொள்ளத்தக்க ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான்.
::
மீண்டும் இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.